In இந்தி சொந்தக் கதை டெல்லி

'மென்டாலிட்டி' மாற்றப்படுமா?

ஒரு மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலைப் பார்ப்பதால் 'மென்டாலிட்டி' மாற்றப்படுமா?

இந்தக் கேள்விக்கு நேரடியாக வருமுன்னர், நான் டெல்லிக்கு சென்ற பொழுது எப்படியிருந்தேன் என்பதைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். அது ஒரு கல்லூரி வகுப்பு நாள் தமிழாசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார், அப்படியானால் இரண்டாம் ஆண்டாக இருக்கவேண்டும். அவர் பெயர் 'கோடையிடி' கோபாலகிருஷ்ணன், தமிழில் டாக்டரேட் வாங்கியவர்(அவர் சொன்னது உண்மையென்னும் பட்சத்தில் இன்னும் பலர் வாங்க பேப்பர் எழுதிக்கொடுப்பவர்.) திருச்சி பட்டிமன்றங்களில் நீங்கள் சர்வசாதாரணமாய் கேள்விப் பட்டிருக்கக்கூடிய ஒருவர்.

எடுத்துக்கொண்டிருந்த பாடம், "தமிழர்களின் வீரம்" உதாரணம் சொல்லிக்கொண்டிருந்தது கம்பராமாயணத்தின் ராமனைப் பற்றி, கொஞ்சமும் கவலைப்படாமல் நான் கேட்டேன் 'சார் தமிழனுக்கும் ராமனுக்கும் என்ன தொடர்பு' என்று. இது உண்மை நடந்தந்து. அப்பொழுதெல்லாம் பட்டிமன்றங்களில் பேசிக்கொண்டிருந்தவன். பாரதிதாசனின் 'தென் திசையைப் பார்க்கின்றேன்' என்ற பாடலின் மொத்த வரிகளையும் சொல்லி வேறேதொபாடலில் வரும், 'மறைந்திருந்து அம்பெய்திய ராமனின் வீரத்தைப் பாரட்டுவதால் தான் நாம் கோழைகளாகிவிட்டோம்' என்று வரும் பாடல் வரிகளையும் சொல்லி ராமனின் வீரத்தை எப்படி தமிழனின் வீரத்துக்கு மதிப்பிடலாம் என்று கேட்டேன்.

நான் அந்தக் காலத்தில் ரொம்ப 'ரா'வானவன். அதற்கு அந்த ஆசிரியர் சொன்ன பதில் ஒருபக்கம் இருக்கட்டும் இன்று இதே போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படுமானால் 'முகத்தில் ஒரு அலட்சிய புன்னகை' ஏற்படுமே ஒழிய நிச்சயம் எதிர்த்து கேட்டிருக்க மாட்டேன். இது உண்மை, அந்த நிகழ்ச்சியால் நான் இழந்தது அதிகம் அந்த பேராசிரியர், வெளியில் என்னைத் தட்டிக் கொடுத்து தம்பி நீ இதை என்னிடம் தனியில் கேட்டிருக்கணும் உன்னை பெரிய அளவில் பட்டிமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருப்பேன், அற்ப சந்தோஷத்துக்காக ஸ்டூடண்ஸ் மத்தியில் பெயர் எடுப்பதற்காக அங்கே சொல்லி ஒரு நல்ல வாய்ப்பை இழந்திட்ட' இதுவும் அவர் சொன்னது. உண்மை சுட்டது என்னை அவர் என்னிடம் பேசிய இந்த வார்த்தைகள் மாணவர்களிடம் பரப்பட்டது, அவர் தமிழில் பாடம் எடுக்க முடியாத அளவிற்கு நான் பிரிபேர் செய்து வந்து தமிழில் கேள்விகள் கேட்பேன்.

நல்ல வேடிக்கையாய் இருக்கும், இருவரும் பாடல்களால் சண்டை போட்டவாரு இருப்போம். ஆனால் இன்று வேதனையாக இருக்கிறது, நான் இழந்தது என் கண்ணில் தெரிகிறது.(இதற்கும் காரணம் டெல்லிதான்.)

நான் இப்படிப்பட்டவனாய்த் தன் டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஏறினேன், 'ரா'வாக, என்னை ஒரு பொரடக்ட் ஆக மாற்றியது டெல்லி, மற்றும் டெல்லி வாழ் உறவினர்கள், அந்த பழக்கவழக்கங்கள்.

அதுவரைக்கும் அடுப்பாங்கரைப் பக்கமே போகாத எனக்கு நான் சாப்பிட்ட தட்டை கழுவக் கூட கற்றுக்கொடுத்தது டெல்லிதான், ருசியில்லாத சாப்பாடாயிருந்தாலும் சாப்பிட்டால் தான் உயிர் வாழமுழியும் என்ற வாழ்க்கையின் ரகசியம் சொல்லித்தந்தும் டெல்லிதான். மனிதர்களிடம் பழகுவதற்கும் ஒரு பிரச்சனையை அணுகும் விதத்தை சொல்லித்தந்ததும் டெல்லிதான்.

ரோட்டில் சிகரெட் குடிக்கும் பெண்ணை உங்களால் மரியாதையாய் பார்க்க முடியுமா? புருஷனுடன் சேர்ந்து போட்டிப்போட்டுக்கொண்டு தண்ணியடிக்கும் ஒரு கொலிக்கை தப்பான பார்வையில்லாம் பார்க்க முடியுமா? மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் அய்யர் பார்த்துட்டு அந்தப் பெண் 'தேவிடியா' இல்லைன்னு வாதாட முடியுமா? இது எல்லாம் நடந்தது எனக்கு. நான் ஒன்றும் சினிமாவில் வருவது போல ஒரு பாடலில் மாறிவிடவில்லை நிச்சயமாய். அடிபட்டு உதைபட்டு, பித்துபிடித்தவைப் போல் அலைந்து திரிந்து எனக்கு வாக்கப்பட்டுது இவைகள். இன்னும் இவைகள் பலருக்கு தவறானவைகளாக இருக்கமுடியும் தான்.

டெல்லி ஒரு வித்தியாசமான நகரம், கேளிக்கைகள் நிறைந்தது, வெகுசுலபமாக பெண்டாளும் வாய்ப்பு கிடைக்கும் ஒரு ஊர் தான். தனிமனித உரிமைகள் என்ற ஒரு விஷயம் எனக்கும் அடிமுதல் கற்பிக்கப்பட்ட ஊர். புருஷன் பெண்டாட்டி இடையே கூட இந்த உரிமைகளை எதிபார்க்கும் மக்கள் இருக்கும் ஊர். என் அம்மா அப்பாவை, அம்மா அப்பாவாகத்தான் எனக்குத் தெரியும். அவர்களையும் கணவன் மனைவியாக அறிமுகம் செய்து வைத்த ஊர். என் அப்பாவிடம் அம்மாவைப் பற்றி இருக்கும் 'பொசசிவ்நஸ்' புரிய வைத்த ஊர். அவர்களுடைய தனிமனித உரிமைகளில் தலையிடுவதை சுத்தமாக விரும்பாத பல மனிதர்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நான் அவர்களுடைய உறவினனாக இருந்த பொழுதிலும் பல விஷயங்களில் என் தலையீட்டைக் கூட விரும்ப மாட்டார்கள் தான்.

இதை புரிந்து கொள்வது கஷ்டம், என் மாமா, என் அத்தை என்பதே கிடையாத ஒரு ஊரில் என் தமிழன் என்பதை தேடிக்கொள்வதை என்னவென்று சொல்வது. டெல்லி மாதிரியான ஒரு நகரத்தில் பெரிய வேலையில், அரை லட்சம்(நன்றி குழலி) மேல் மாத சம்பளம் வாங்குபவர்கள் கூட சனிக்கிழமைகளில் வேலை பார்க்கவேண்டியிருக்கும். அவர்களை பொறுத்தவரை மீதமுள்ள விடுமுறையை கொஞ்சமும் பாழாக்க விரும்பமாட்டார்கள் அது என்னவாக இருந்தாலும். நாம் சென்று 'நான் டெல்லிக்கு வந்து ஒரு மாசம் கூட ஆகலை, இந்தியும் அவ்வளவா தெரியாது, இங்கிலீஷும் மெதுவடை(நன்றி 'செந்தழல்' ரவி) மாதிரி, நார்த் டெல்லியில் இன்டர்வியூ இருக்கு கொஞ்சம் வந்து உதவ முடியுமா?' என்பது போன்ற கேள்விகள் டெல்லியில் முட்டாள்த்தனமானவை தான். கையில் மேப்பைக் கொடுத்து வண்டி நம்பர்களை கொடுத்து, என்ன பேசவேண்டும் எப்படி பேசவேண்டும் என்பதையும் எழுதிக் கொடுப்பார்களே ஒழிய வந்து வெயிட் பண்ணி உங்களை இன்டர்வியூ முடித்து அழைத்துச் செல்ல மாட்டவேமாட்டார்கள்.

அவர்களுக்கு உங்கள் மீது பாசம் கிடையாதா என்றால் அப்படியில்லை அந்த பாசத்தை விடவும் முக்கியமான விஷயம் இருக்கிறது பார்ப்பதற்கு என்பதுதான் அதற்கு பொருள். இப்படியிருக்க 'சார் நான் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன், இங்கிருக்கிற தமிழ்ச்சங்கம் எங்கேயிருக்குன்னு தெரியலை கொஞ்சம் வண்டியில் இறக்கி விட்டுர்றீங்களா?' என்பது போன்ற கேள்விகளுக்கு எந்த மாதிரியான ரியாக்ஷன் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை எழுதி உணர்த்தவில்லை அது நான் டெல்லி வரும் மக்களிடம் தமிழில் உரையாடுவேனா உதவுவேனா என்பதைப் பற்றியது அதற்கான விடையை நான் சொல்லாமல் நீங்களே ஊகித்துக்கொள்ள விட்டுவிடுகிறேன். ஆனால் ஒரு விஷயம் இந்த 'தனிநபர்' கான்சப்டை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடியாதுதான்.

நான் இளங்கன்றாய் இருந்தாலும் எதைப்பற்றியுமே ஒரு ஒப்பீனியன் பெரும்பாலும் இல்லாமல் இருந்ததாலும் அந்த சூழலுக்கு மாறிக்கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டு சூழலில் தாம்பத்தியம் நடத்தி பின்னர் டெல்லி வந்தால் வரும் பிரச்சனைகளை என்னால் சொல்லாமலே விளங்கிக்கொள்ள முடிகிறது.

உண்மைதான் இங்கிருக்கும் டெல்லி வாழ் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு(குறிப்பாக பெண்களுக்கு) டெல்லி வாழ்க்கை முறை தெரிந்த, இங்கே வாழ்ந்தவர்களின் பையனைத்தான் விரும்புகிறார்கள். வண்டியில் ஒன்றாய் பயணம் செய்வது, ஹக்கிக் அண்ட் கிஸ்ஸிங் வெற்ய்ம் எழ்யுத்தாய் இருக்காமல் சர்வ சாதாரணமாய் இருக்கும் ஊர் பெண்களை தமிழ்நாட்டு பாரம்பரிய மணமகன் புரிந்துகொள்வதில் உள்ள பிரச்சனை அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து தான் இருக்கிறது.

இதைத் தான் நான் மங்கையின் பதிவில் மென்டாலிட்டி மாறாமல் டெல்லியில் வாழ்வது வேஸ்ட், நீங்களும் கஷ்டப்படுவீர்கள் மற்றவர்கள்யும் கஷ்டப்படுத்துவீர்கள் என்று கூறினேன். பல சமயங்களில் இந்த விஷயத்தை புரிந்து கொள்வதற்கு உங்கள் படிப்பறிவு போதாது பட்டறிவு அவசியம்.

ஒரு பெண் இன்று என்னுடனும் அடுத்த நாள் இன்னொரு பையனுடனும் பைக்கில் பயணம் செய்வதும், என்னுடனும் அந்தப் பையனுடனும் உரசிப் பேசுவதும் உங்களுக்கு தேவிடியாத்தனமாகத் தெரியலாம். ஆனால் அந்த ஊரில் வளர்ந்த பெண்ணுக்கு அது சர்வ சாதாரணம்.

நான் இந்தப் பதிவில் எங்கேயும் கற்பைப்(???) பற்றி குறிப்பிடவில்லை. அதுமட்டுமில்லாமல் இவைகள் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மட்டுமே, இதை பொதுப்படுத்த முடியாது. ஒன்றே ஒன்று, இவையெல்லாம் இல்லாமல் தமிழ் தமிழ் என்று உயிரைக் கொடுக்கக்கூடியவர்கள் டெல்லியில் மிக அதிகம் பேர் இருக்கிறார்கள். மிக அதிகம் பேர், அவர்கள் ஏன் அப்படியிருக்கிறார்கள் என்று கேட்பதுவும் தவறு, மற்றவர்கள் ஏன் அப்படியில்லை என்று கேட்பதுவும் என்னைப் பொறுத்தவரையில் தவறுதான்.

Related Articles

7 comments:

  1. just mind your own business.
    don't judge me. I don't have time to judge you.

    this attitude is really cool.

    ReplyDelete
  2. அருமையான பதிவு மோகன்தாஸ்.

    சமூகப் பார்வைக்கான பதிவுகளில், உம்-பெண்ணியம், மொழிப் பிரச்சினை போன்றவற்றிற்கு பொதுவாக எல்லோரும் ஒரே மாதிரி இடும் (ஏற்கனவே எதிர்பார்த்த :)] வழமையான பின்னூட்டங்களிலிருந்து கொஞ்சம் மாற்றி இன்றைய இளைஞர்களிடமிருந்து வரும் பின்னூட்டங்களை நான் ஆவலுடன் தொடர்கிறேன். அந்த வகையில் உங்க சமீபத்திய பின்னூட்டங்களில் உள்ள பார்வைகள் உங்களை மற்றவர்களுக்கு கலகக்காரனாகவோ [சமுதாயத்தில் முதல் மாற்றுச் சிந்தனையைச் சொல்பவன் எப்போதும் கலகக்காரனாகவே பேசப்படுவான். :)], திரித்துச் சொல்பவனாகவோ, தூங்குவதுபோல நடிப்பதாகவோ சொல்லவைக்கலாம். இது பொதுவாகவே மாறிவரும் இளையசமுதாயத்தின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுதான். ஆனால் என்னைப் போல சிலர் இதை பாசிடிவாக நல்ல சமுதாய வளர்ச்சியாகவே எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் தெரிந்துகொண்டு தொடர்ந்து உங்கள் கருத்துகளை எல்லா இடங்களிலும் எழுதவேண்டும்.

    ReplyDelete
  3. மிக நல்ல பதிவு மோகன்தாஸ்

    //இவையெல்லாம் இல்லாமல் தமிழ் தமிழ் என்று உயிரைக் கொடுக்கக்கூடியவர்கள் டெல்லியில் மிக அதிகம் பேர் இருக்கிறார்கள். மிக அதிகம் பேர், அவர்கள் ஏன் அப்படியிருக்கிறார்கள் என்று கேட்பதுவும் தவறு, மற்றவர்கள் ஏன் அப்படியில்லை என்று கேட்பதுவும் என்னைப் பொறுத்தவரையில் தவறுதான்//

    மிக மிக சரி.

    cultural shock எல்லாம் தாங்கி, ஜீரணித்து டெல்லியில் சில வருடம் வாழ்ந்தபின்னர் அதிகம் கேள்வி கேட்காமல் எல்லாரையும்/ எல்லாவற்றையும் தத்தம் முரண்பாடுகளுடன் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  4. அனானிமஸ்கள், எலிவால்ராஜா, ஜெயஸ்ரீ நன்றிகள்.

    அனானிமஸ் 2,

    தேவையில்லாத இடங்களில் நான் அட்வைஸ்களை விரும்புவதில்லை. பலசமயம் பார்த்துவிட்டு நமட்டுச் சிரிப்புடன் நகர்ந்துவிடுவதுண்டு. அன்று அப்படி இல்லாமல் பதில் அளிக்கவிரும்பினேன், இன்று வரை யோசித்துக்கொண்டிருக்கிறேன் அன்று ஏன் அப்படி செய்தேன் என.

    ஜெயஸ்ரீ,

    ரொம்ப நாள் ஆகிவிட்டதில்லை. ம்ம்ம் டெல்லி வாழ்க்கை எனக்கும் இப்படி அதிர்ச்சிகரமாய்த்தான் தோன்றியது.

    ReplyDelete
  5. இது டெல்லிக்கு மட்டுமில்லைங்க. நம்ம சொந்த ஊர், கலாச்சாரம்(???) எல்லாம் விட்டுட்டு
    வெளியே போய் வாழற எல்லாருக்கும் இப்படித்தான்.

    ReplyDelete
  6. மோகன்தாஸ்,

    துளசி அவர்கள் சரியாகச் சொன்னார். குரும்பனூரிலிருந்து கோயமுத்தூர் வந்தவருக்கும், கோவையிலிருந்து சென்னை வந்தவருக்குமே கிடைக்கும் இந்தக் கலாச்சார அதிர்ச்சிகள், தலைநகராம் டெல்லியில் இல்லையென்றால்தான் ஆச்சரியம்.

    மெட்ரோ நகரங்களுக்கு வர, 'சல்தா ஹை' மனப்பான்மை கொஞ்சம் கொஞ்ச்ம் வேண்டும்.

    --உண்மைதான் இங்கிருக்கும் டெல்லி வாழ் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு(குறிப்பாக பெண்களுக்கு) டெல்லி வாழ்க்கை முறை தெரிந்த, இங்கே வாழ்ந்தவர்களின் பையனைத்தான் விரும்புகிறார்கள்.-

    இதுவும் எல்லா ஊருக்குமே பொருந்துமே. பையனுக்குப் பெண் எடுக்கும்போது கிராமத்திலும், பெண்ணுக்குப் பையன் பார்க்கும்போது, 'டவுனிலும்' பார்ப்பது வழக்கம்தானே.

    -சிமுலேஷன்

    ReplyDelete
  7. Good blog! I agree is you.
    Another point of view might be I'm young and ready to explore/adapt. Most people who argue on the 'thaevudiya' thanam are less accepting, in the sense that they are 'on their own peak' of their adaptation. Eg: The state/culture in which our dad/mother was brought up was different and they have adapted/changed to the current level in other metro cities. But if I bring them to new zealand then it will be hard for then to adapt to this culture. So the point is the age and amount of adaption they have already gone through might also be a fact.
    But I will also like to see a blog on your reaction/though process on the replies you got when you asked about tamil club and similar things being a new comer.

    ReplyDelete

Popular Posts