நான் வலைப்பூ உலகில் காலடி எடுத்து வைத்தது ஆகஸ்ட் 2005; ஆக இரண்டு வருஷம் ஆச்சுது. என்ன எழவ சாதிச்சேன்னு என்ற கேள்வி எழும் பொழுது "நான் ஏன் பிறந்தேன்" அப்படிங்கிற கேள்வி எழுற மாதிரி எழுதினேன் அப்படின்னு பெருமையா சொல்லலாம். ;-) நிறைய நட்பைச் சம்பாதித்திருக்கிறேன் அப்படியே விரோதத்தையும் எப்படி நட்பு நாம் கேட்காமலே கிடைக்கிறதோ அதைப் போன்றே விரோதமும்.
இரண்டு மூணு பேர் உங்களாலத்தான் பதிவுலகத்திற்கு வந்தேன் என்று சொல்லும் பொழுது திகிலாயிருக்கிறது. பின்னாடி பதிவுலகம் சரிவரலைன்னதும் அடிக்க வந்திடுவாங்க்யலோன்னு :). மற்றபடிக்கு இரண்டறை வருஷத்துக்கு முன்னாடி எழுதின "ஒரு காதல் கதை" யை அப்பப்ப யாராவது படிச்சிட்டு சூப்பராயிருக்கு - ஆனா அப்படி ஒரு முடிவை வைத்திருக்கக்கூடாதுன்னு சொல்றப்ப மட்டும் அப்படியே காற்றில் பறக்குறது மாதிரியிருக்கும். ஹிஹி.
2005 மற்றும் 2006ல் வெறும் 75 & 76 பதிவுகள் போட்டதாக கணக்கு சொல்லுது; இந்த வருஷம் இப்பவே 150 ஐ தாண்டிடுச்சு. இது இல்லாமல் பூனை வேற; அப்பப்ப, அதை ஏன் தொடங்க வேண்டி வந்ததுன்னு சமீபத்தில் நடந்த ஒரு பெங்களூர் இரகசிய சந்திப்பில் கலந்துகொண்ட ரகசிய பதிவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவ்வளவு சுவாரசியமாக அதை அவர்கள் கேட்டதாக நினைவில் இல்லை. ஆனால் அந்தப் பதிவை தொடங்கியதன் காரணம் போய் இப்ப என்னவோவாக வந்து நிற்கிறது. ஆனால் மாற்றம் என்பது மாறாத்தத்துவம் இல்லையா சல்தா ஹை.
ஒரு விஷயம் தான் மலைப்பாயிருக்கு - நான் இங்க வந்து இரண்டு வருஷம் தான் ஆகுதா??? என்பதுதான் அது.
இரண்டு வருஷம் தான் ஆச்சுதா
பூனைக்குட்டி
Wednesday, August 01, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
It was Saturday morning, early 2010, head still thumping from last night’s tequila flood, but I couldn’t stay away—back at Visu’s room like ...
-
Amidst the scorching days of an unremarkable summer, a single day emerged that would shatter the ordinary rhythms of my life, forever alteri...
வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteஇரண்டுவருடம் சாதனைதான்...பாராட்டுக்கள் !
ReplyDeleteவெறும் பதிவுகளை மட்டும் எழுதினால் போரடிக்கத்தான் செய்யும். அதைத்தாண்டி பதிவர் சந்திப்பு, ஜிமெயில் சாட் என்று சொல்வதால் பதிவுலகில் ஈடுபாடு குறைவதில்லை என்பது என்கருத்து !
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
ReplyDeleteமோகன் அவர்களே.. :)
துளசிம்மா, கோவி. கண்ணன், சத்யன் நன்றிகள்.
ReplyDeleteஇரண்டு வருஷம் பெரிய விஷயம் இல்லைதான். ஆனால் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்த பதிவர் ஒருவர் நீங்க வந்து இரண்டு வருஷம் ஆச்சா என்று ஆச்சர்யமாகக் கேட்டார் அதான் ஒரு சுய சொறிதல்... ;)
அடேங்கப்பா... 2 வருஷமாவா இந்த பதிவுலகம் உங்களை சகிச்சுக்கிட்டிருக்கு.... பெரிய சாதனைதான் போங்க....
ReplyDeleteலக்ஷ்மி நன்றிகள்.
ReplyDeleteபாராட்டுக்கள் தாஸ்.....
ReplyDeleteவாழ்த்து(க்)கள்.
ReplyDelete// நீங்க வந்து இரண்டு வருஷம் ஆச்சா//
அவ்ளோதான் ஆச்சா?
வணக்கம்..
ReplyDeleteவரும் ஞாயிறு சென்னை வருகிறீர்களா...
அன்புடன்
அரவிந்தன்
வாழ்த்துக்கள். யார் என்ன சொன்னாலும் பயப்படாம நிறையா எழுதுங்க. கருத்து வேறுபாடு இல்லன்னா உலகமே போரடிக்க ஆரம்பிச்சுடும். இன்னும் 20 வருஷம் எழுத வாழ்த்துக்கள்.
ReplyDeleteDear Author,
ReplyDeleteWe are from the National Library of Singapore. We would like to feature your blog in one of our articles. We write to you seeking for your permission. Please get back to us with your approval at primadonnatella@gmail.com
Thank you.-Shreena
இரண்டு வருஷம் ஆயிடுச்சா. வாழ்த்துக்கள் தல.
ReplyDeleteஅனானி, இளா, அரவிந்தன், சின்ன அம்மணி, கொத்தனார் - உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஆமாமாம் இளா உங்களுக்கு அப்படிக்கேட்ட ஆள நல்லாத்தெரியும் தான.
சின்ன அம்மணி எழுதுறேங்க.
அரவிந்தன் வருகிறேன்.