சோழர்களின் மேலிருந்த காதலால் என்ன நடந்ததோ தெரியாது, பாண்டியர்களையும் சேரர்களையும் பிடிக்காமல் போனது. ஆமாம் உண்மையில் எனக்கு மதுரையும் கேரளமும் பிடிக்காது சின்னப் பிள்ளையாய் இருக்கும் பொழுது. இதெல்லாம் ஒரு நாளில் மாறியதா என்றால் மாறியது; இன்னும் அந்த நாள்(ட்கள்) நினைவில் இருக்கிறது. எங்கள் நேரு ஸ்டேடியத்தில் தேசிய கோ-கோ விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்ற சமயம்.
கேரளத்தில் இருந்து பெண்கள் அணி வந்திருந்தது, அப்பா PET என்பதாலும் நானும் கோ-கோ விளையாடுவேன்(எங்கக்காகிட்ட மட்டும் இதை சொல்லிடாதீங்க) என்பதாலும் ஸ்டேடியத்திலேயே இருந்தேன். அப்பொழுது பார்த்த மகளிர் கேரள கோ-கோ வீராங்கனைகளைப் பார்த்து கேரளத்தைப் பற்றிய என்னுடைய அபிப்ராயத்தை மாற்றிக்கொண்டேன்(அப்ப மிஞ்சி மிஞ்சிப் போனால் எட்டாவது படித்துக் கொண்டிருப்பேன்.) மஞ்சக்கலரில் சந்தனப் பொட்டொன்றை புருவங்களுக்கிடையில் வைத்திருந்த பெண்களைப் பார்த்து நானும் சந்தனம் வைத்துக் கொள்ளத் தொடங்கினேன்.
கொடுமை என்னான்னா எங்கள் வீட்டில் சந்தனக் கட்டை இருக்கும்(சிறிசுங்க - சந்தனக் கட்டையும் கல்லும் இருக்கும் நீங்கள் அரைத்து வைத்துக் கொள்ளலாம். வைச்சீங்கன்னா சந்தன வாசனை ஒரு நாள் முழுக்க உங்கக்கூடவேயிருக்கும்) அம்மா எப்பப்பார்த்தாலும் புலம்பல் தான்; சந்தனம் வச்சாத்தாண்டா நீ அழகாயிருக்க என்று அதைவிடுங்க காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு, ஆனா சந்தனம் வச்சா நானும் அழகாத்தான் இருப்பேன் ;-). ஆனால் வைத்துக் கொண்டதில்லை, படித்த சாமியார்ப் பள்ளியில் சந்தனம் வைக்காமல் இருக்கக்கூடாது சின்ன வயதில் எப்பொழுதும் சந்தனம் இருக்கும் நெற்றியில், என் கை அந்தப்பக்கம் போகாதென்பதால் பெரும்பாலும் அழியாமல் இருக்கும் மாலை நேரம் வரை.(நிறைய பேர் உறுத்தும் என்பதால் கைகொண்டு அழித்துவிடுவார்கள் தெரியாமல்).
ஆனால் ஏதோ ஒரு நாளில் ஆரம்பித்த சோம்பேறித்தனம் சந்தனம் வைக்காமல் ஆக்கியிருந்தது. ஆனால் அந்தப் பெண்களைப் பார்த்ததும் சந்தனம் ஒட்டிக்கொண்டது; அந்த முகங்கள் நினைவில் இல்லாமல் இல்லை, புகைபடிந்த ஓவியமாய் அந்தப் பெண்கள் என் நியூரான்களின் பின்னால் எங்கோ ஒளிந்திருக்கிறார்கள்; நிச்சயமாய். பொய்கள் இல்லாத வரிகள் இவை, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் எழுதவேண்டும் என்று எப்பொழுதும் நினைத்திருக்கிறேன். ஆனால் பிரச்ச்னை என்னவென்றால் அப்படிஎழுதும் பொழுது உடைந்து போகும் பிம்பங்கள் பெரும்பாலும் திரும்பவும் ஒட்டவைக்க முடியாதவையாகயிருக்கின்றன. செல்ப் சென்ஸாருக்குப் பிறகுதான் வெளியில் வருகிறது என்னுடைய பதிவுகள்.
அப்பா சபரிமலைக்குப் போவார் என்று முன்னமே எழுதியிருக்கிறேன்; பெரும்பாலும் சாதாரணமான நடை திறப்பிற்கும் விஷூவிற்கும் தொடர்ச்சியாக எட்டு வருஷம் போல் போனதாக நினைவு. ஆனால் என்னை அழைத்துச் செல்லவில்லை எனக்கு உண்மையில் கோபம் ஏற்படுத்தி நிகழ்வுகள் இவை(அப்பல்லாம் நான் ஆத்தீகன் தான் ;-) இது நான் நாத்தீகன் ஆனதற்காக ஒரு காரணம் கிடையாது). ஆனால் அப்பா நான் தீவிரமாக எதையும் செய்யமாட்டேன் என்று நம்பி என்னை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டார். நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் சபரிமலைக்குச் செல்லும் பாதைகள் மிகவும் அருமையாக இருக்கும் என்று.
பின்னர் நான் படித்த கல்லூரியில் ஏகப்பட்ட கேரளப் பெண்கள் படிப்பார்கள். அந்தக் காலத்தில் (நான்குவருடங்கள் முன்பு) கேரளாவில் நிறைய கல்லூரிகள் கிடையாதோ என்னவோ எங்கள் கல்லூரியில் நிறைய மல்லு மக்கள். ஆனால் அவர்கள் செட்டாக வருவார்கள் செட்டாகப் படிப்பார்கள் செட்டாகப் போவார்கள் ;-). சும்மா வேடிக்கை வேண்டுமானால் பார்க்கலாம். இப்படி எனக்கும் கேரளத்திற்குமான தொடர்பு ஒரு விதத்தில் பெண்களைத் தொடர்பு படுத்தியே இருந்தது.
எனக்கு கேரளாவிற்கு டூர் செல்ல வேண்டுமென்ற ஆர்வம், ரொம்பகாலமே உண்டு. ஆனால் நல்ல வாய்ப்பு அமையாமலே இருந்தது. மிகச் சமீபத்தில் அந்த வாய்ப்பு அமைந்தது. ஏற்காடு செல்வதற்கான முயற்சியொன்றை நண்பர்கள் குழாம் செய்துகொண்டிருந்தது தெரியும். மற்றவர்களிடம் கூட நான் இந்த வாரக் கடைசியில் ஏற்காடு போகப்போகிறேன் என்று தான் சொல்லிவைத்திருந்தேன். சனிக்கிழமை காலை 2 மணிக்கு மீட்டிங்க் பாய்ண்ட் சென்றதும் தெரியும், கேரளாவின் வயநாட்டிற்கு(WAYANAD) போகப்போகிறோம் என்று.
நண்பர்கள் ஏற்கனவே ஏகப்பட்ட அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தார்கள். நிறைய தூரம் டூவிலரில் பயணம் செய்யாதே அது இது என்று. உண்மைதான் முதுகுவலி வரப்போவது இந்தப்பயணத்தால் வெகுசீக்கிரம் என்று அவர்கள் சொல்ல வந்ததும் உண்மைதான். ஆனால் இந்த இரண்டு நாள் பயணம் மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்றாய் அமைந்துவிட்டது.
கேரளத்தை கடவுளின் சொந்த நாடென்று சொல்வார்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், God's own country. ம்ம்ம் உண்மைதான் அப்படியும் ஒன்றும் கேரளத்தை முழுவதுமாகச் சுற்றிவிடவில்லை என்றாலும். சுற்றிப்பார்த்த வரையிலுமே நிச்சயமாகச் சொல்லலாம் அருமையான ஒரு பிரதேசம் கேரளம். இந்த முறை டூவீலரில்(பில்லியன் ரைடர் தான் - சொல்லிட்டேன்பா) பயணம் செய்ததால் முன்னர் குல்லு-மணாலி போயிருந்த எஃபெக்ட் இருந்தது. இதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.
அப்பார்ட்ச்சர், ஷட்டர் ஸ்பீட் சொல்லிக்கொடுத்த புண்ணியவான்களுக்கு சமர்ப்பணம். இது நண்பரின் கேமிராவில் என்னுடைய கைவண்ணம். நாளை அக்காவின் மொபைலில் எடுத்த என்னுடைய கைவண்ணத்தைப் போடுறேன்.
கடவுளின் தேசம்
பூனைக்குட்டி
Monday, July 30, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
படங்கள் மிகவும் அருமை....
ReplyDeleteநன்றிகள் நந்தா...
ReplyDeleteகேரள பெண்குட்டிகள் படங்கள் எங்கே?
ReplyDeletein '5 hero' pic, who is you?
ReplyDeleteமோகனா, பயணங்களுக்குன்னு தனிப்பதிவு வச்சிருந்தீங்களே, அது என்ன ஆச்சு? Anyway, படங்கள் ரொம்ப அருமை.
ReplyDeleteஇது பூரா ஜல்லியில்ல, அதனாலத்தான் இங்க.
ReplyDeleteபயணங்களில் படங்கள் போட்டிருந்தேன்.
Pls see :
ReplyDeletesavekerala.blogspoot.com
K.R.Athiyaman
Chennai - 96
nellikkani.blogspot.com
அடேங்கப்பா உங்களில் இப்படி ஒரு அதிரடிக்காரரும் ஒளிந்து இருக்காரா? இருசக்கர வாகனத்தில் செல்வது அபாயம் என்றாலும் ஒரு சாகச உணர்வைத்தருமே, அது வேறு எதில் வரும். நான் ஒரு குதிரை வாங்கிகொண்டு இப்படி எல்லாம் போகணும் என்று ஆசைப்படுவதுண்டு(அதற்கு பெட்ரோல் கூட வேனாம் எங்காவது மேஞ்சிட்டு வந்துரும்)
ReplyDeletenice photos!water falls pic gives cinematic effect!
நான் சாதாரணமாகவே பேருந்தில் ஏதேனும் ஒரு ஊருக்கு செல்வது என்றாலும் சுற்று வழியில் இரண்டு மூன்று வண்டி மாறித்தான் செல்வேன்! சமிபத்தில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு , உத்திரமேருர், வந்தவாசி எனா ஒரு மார்க்கமாக போய் வந்தேன்!
Wayanad is really Good yaarrrr.....
ReplyDelete