வியாழக்கிழமை அதுவும் ப்ரொஜக்ட் ரிலீஸ் பிஸியில் இருந்த நான் டீவி பார்த்திருப்பதே பெரிய விஷயமாயிருந்திருக்க வேண்டும். என்ன செய்ய கலிகாலம் முத்திடுச்சு, நான் 1,2,3 என்று சன் மியூஸிக்கிற்காக நகர்த்திக்கொண்டே வர 4 ல் ஜெயாடிவி, சுஹாசினி தங்கச்சி(ஹிஹி) ஹாசினி பேசும் படத்தில் பேசிக்கொண்டிருந்தாங்க! நானும் பேசாம மூடிட்டு போயிருக்கணும் இல்லாமல் சரி என்னா சொல்றாங்கன்னு பார்த்தேன் - சரியா கவனிச்சிக்கங்க நான் பார்த்தது கடைசி ஐந்து நிமிஷம் தான் இருக்கும் அதற்கே இப்படி ஒரு பதிவு.
அவருடைய கொனொஷ்டைகளைத் தாண்டி அவர் விமர்சனத்தைப் பார்ப்பதே பெரிய விஷயம், இருந்தாலும் ஹீரோ ஹீரோயின் பின்னாடி ஐம்பது க்ரூப் ஆர்ட்டிஸ்ட் ஆடுறதுக்கு சுத்திச் சுத்தி காரணம் சொல்லிட்டு 'மாஜிக்கல் ரியலிட்டி' அப்படின்னாங்க பாருங்க. என்ன சொல்ல 'கார்சியா மார்க்வெஸ்' கேட்டிருந்தா வருத்தப்படுவார் என்பதைத் தவிர. இந்த மாதிரி நேம் டிராப்பிங்களை முதலில் நிறுத்தலாம் இந்த தங்கச்சி.
நினைத்துக் கொண்டேன், இன்னும் இரண்டு தரம் 'அரசூர் வம்சத்தையோ' 'டார்த்தீனயத்தையோ' படிச்சி பாவத்தைப் போக்கிக்கலாம் என்று இருக்கிறேன்.
--------------------------
சுஜாதாவுடன் சாட்டிக் கொண்டிருந்த பொழுது 'கற்றதும் பெற்றதும்' பற்றிய பேச்சின் பொழுது - தான் நிறுத்தவில்லை என்றும் ஆவிதான் நிறுத்தியதாகவும் சொன்னது எனக்கு ஆச்சர்யத்தையே அளித்தது. நான் இன்றுவரை வெள்ளிக்கிழமை ஆன்லைன் ஆவியை வெள்ளிக்கிழமையே படிக்காமல் இருப்பதற்கு ஒரே காரணம் சுஜாதாதான்.
"w_sujatha: Murthy They are behaving funny these days"
இதுவும் கூட ஆச்சர்யமான ஒரு ஸ்டேட்மென்ட்டே என்னைப் பொறுத்தவரை. ஞானியைப் பற்றிப் பேசும் பொழுது சொன்ன,
"w_sujatha: subbudu no idea juno gnani is their chief adviser"
என்றது கூட எனக்கு ஆச்சர்யத்தையே அளித்தது. அப்ப "ஓ! பக்கங்கள்" நிறுத்தியதை எந்தக் கோணத்தில் அணுகுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். பின்னர் இன்னொரு கேள்விக்குச் சொன்ன,
"w_sujatha: Saha probably They are being advised wrongly "
பதிலைப் பற்றி எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை ;).
உயிர்மையில் பாரதிராஜாவைப் பற்றி எழுதியிருந்தார் அதிலும் ஏகப்பட்ட ஆச்சர்யப்படுத்தக் கூடிய விஷயங்கள். கேட்டதற்கு என்னுடைய சிறிது கால அவதானிப்பு என்று வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார், சமீபத்தில் நடந்த ஒரு சந்திப்பின் பொழுது பிரபல வலைப்பதிவரிடம் இதைப் பற்றிப் பேசினேன். ஆனால் பேச்சு சட்டென்று சினிமா, பாரதிராஜாவிடம் இருந்து நகர்ந்து வேறுபக்கம் சென்றுவிட்டது.(வேறயாரு சாருநிவேதிதா தான் அது - அதாவது பேச்சு சென்றது)
-----------------------------------------
சமீபத்தில் பெங்களூரில் இருந்து ஒரு தமிழ் ப்ளாக் எழுதும் படிக்கும் கும்பல் 'ஆடு தாண்டிய காவிரி' 'முத்தத்தி' வரை சென்று வந்தது. ஒரு 'நைஸ்' ட்ரிப். SLR வாங்கிய பிறகு பெங்களூரில் செய்யும் முதல் பயணமாயிருக்கும், முன்னமே திருச்சி, கங்கை கொண்ட சோழபுரம் போய் வந்திருந்தேன். ஆனால் இந்த முறை என் காமராவை கையில் எடுக்கவே மனம் நடுங்கியது. எல்லாம் பெரிய பெரிய கைகள் எல்லாம் அவங்கவங்க SLR உடன் வந்திருந்ததால் கொஞ்சம் portrait மட்டும் எடுத்தேன். போர்ட்ராய்ட்டுகள் போட அனுமதி கிடைக்காததால் ;) போடலை. தமிழ்மணத்தின், மற்ற குழுமங்களின் அரசியல் அதிகம் பேசப்பட்டது, என் வாயை நன்றாகக் கிளறினார்கள். எவ்வளவு உளறினேன் என்று தெரியாது. யாராவது பதிவெழுதினால் பார்க்கலாம். இருமுறை ஃபோனில் மட்டுமே பேசியிருந்த நண்பரொருவர் பக்கத்து சீட்டில் மாட்டினார், பாவம், ஆனால் நாங்கள் இருவரும்(வேணும்னா நான் மட்டும்) பேசிய பேச்சில் டெம்போ டிராவலரே கொஞ்சம் ஆடிப் போயிருந்தது. ஹிஹி. வெளியில் பப்ளிஷ் செய்றோனோ இல்லையோ அதைப்பற்றி ஒரு பதிவு எழுதிவைச்சிக்க முயற்சி செய்யணும்.
In நாட்குறிப்பு
'கார்சியா மார்க்வெஸ்' பிச்சை வாங்கணும் சுஹாசினி கிட்ட - மாஜிக்கல் ரியலிஸம்
Posted on Friday, November 23, 2007
'கார்சியா மார்க்வெஸ்' பிச்சை வாங்கணும் சுஹாசினி கிட்ட - மாஜிக்கல் ரியலிஸம்
Mohandoss
Friday, November 23, 2007
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
சிறு வயதிலேயே தோன்றிய ஆசை இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது. அது தமிழில் ஒரு வளைத்தலம் அமைக்க வேண்டுமென்பது. பல முறைகளiல் முயன்று இப்பொழுது...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
ஏன் இப்படி புதுசா முதுகு சொறியறது
ReplyDeleteஅனானி, நான் ரொம்ப நாளா blog roll போடணும்னு இருந்தேன்! நான் blog roll போட்டா நண்பரொருவர் வந்து நிச்சயம் முதுகு சொறியிறியான்னு கேப்பாரு அதான் நானே போட்டேன்!
ReplyDeleteமாஜிக்கல் ரியலிசத்தை ஜெயமோகனின் டார்த்தினீயத்தினுடன் இணைக்க முடியாதென்றே நினைக்கிறேன்; மாயாஜாலக் கதைகளை எல்லாம் magical realism என்று சொல்ல முடியுமா என்ன. அப்படியானால் அம்புலிமாமா கதைகள் எல்லாம் magical realism கதைகள் தாம்.
ReplyDeleteஅதுவும் டார்த்தீனியம் மிக மோசமான கறுப்பர்களுக்கெதிரான பிரதி என்றே அதை படிக்கும்போது விளங்கிக் கொண்டேன் (கணையாழியில் வந்த 1993ல்).
உங்களுக்கென்ன கோபம் marques மீது - சுஹாசினியுடன் எல்லாம் சேர்த்துப் பேசுகிறீர்கள்.-)))
பிறகு, அது என்ன முதுகு சொறிவது... தமிழ் நதியின் சுகுணாவிற்குமான பின்னூட்டத்திலும் பார்த்தேன்...
சுந்தர் 'டார்த்தீனியம்' விஷயத்தில் எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை.
ReplyDeleteமுதுகு சொறிதல் என்றால் என்னான்னா, ஐஸ் வைக்கிறது, ஒத்து ஊதறது ஜால்ரா தட்டுறது என்று ஏகப்பட்ட அர்த்தம் வரும். எது பொருத்தம் என்று நினைக்கிறீங்களோ அதை எடுத்துக்கலாம். ;)
மார்க்வெஸ் மீது எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை சும்மா விளையாடிப் பார்த்தேன், நீங்க 'பெரியாத்தா கருமாதி' படிச்சிருக்கீங்களா?
இதைப் படித்தீர்களா :)
ReplyDeleteSuhasini’s pick of heroines! - Sify.com
த்ரிஷாவிற்கு மட்டும் அநீதி
//"w_sujatha: Saha probably They are being advised wrongly "
ReplyDeleteபதிலைப் பற்றி எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை ;).//
i accept 100% with sujatha
AV lost its quality.
i am not going to renew the AV subsrication in coming month.
but still AV portal is selling sujatha;s articles ,,,,what a irony
பாபா "one of the best critics" ஸாமாம், என்ன சொல்ல
ReplyDeleteஎனக்கு யாராவது சன்யாசம் கொடுத்தா வாங்கிட்டு போய்டலாம்னு பார்க்கிறேன் ;)
அனானிமஸ் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஏதோ நாணயம் விகடனுக்காகப் பார்க்கிறேன்.
ReplyDeleteஅப்படி ஒன்னும் பெரிசா இல்லைன்னாலும் அவங்களோட பரிந்துரைகளைக் கவனித்து வருகிறேன். ஆனால் ஆனந்த விகடன் இப்ப அவ்வளவு சீக்கிரம் படிக்கிறதில்லை மெதுவா டைம் கிடைக்கிறப்ப படிக்கிற விஷயமாய்டுச்சு.
//சுஜாதாவுடன் சாட்டிக் கொண்டிருந்த பொழுது 'கற்றதும் பெற்றதும்' பற்றிய பேச்சின் பொழுது - தான் நிறுத்தவில்லை என்றும் ஆவிதான் நிறுத்தியதாகவும் //
ReplyDeleteஅப்போ அள்ளியதும் அமுக்கியதும் பகுதிய டம்ளர்டாக்குன்னு போட்டு வாராவாரம் லாண்ட்ரிலிஸ்டை ஒப்பேத்துறதுதானே? வாட் இஸ் இன் த நேம்? எ லாண்ட்ரிலிஸ்ட் இஸ் எ லாண்ட்ரிலிஸ்ட்
//இன்னும் இரண்டு தரம் 'அரசூர் வம்சத்தையோ' 'டார்த்தீனயத்தையோ' படிச்சி பாவத்தைப் போக்கிக்கலாம் என்று இருக்கிறேன்.//
இன்னும் மொதத்தரமே இல்லீங்க. ஆனா மாஜிக்கல்லு ரிஜாலிஸா ரஸத்துல நானும் உப்பு போட்டிருகேனாக்கும் நாயர் டைப்புல லைன் முன்னறிவிப்புங்களோட வர்ற புக்ஸுங்க ஒண்ணை ரெண்ட பாத்தாப்புறம் இதுங்களுக்கு ஹாஸினி மந்தஹாஸமே பரவாயில்லேண்ணு தோணுதுங்க
குள்ளதாரா,
ReplyDelete'எ லாண்ட்ரிலிஸ்ட் இஸ் எ லாண்ட்ரிலிஸ்ட்' நிறைய பேரிடம் இதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதையெல்லாம் வைத்து அவருடைய திறமையை எடை போடுவது சரியாகயிருக்காதென்றே இன்னமும் நினைக்கிறேன்.
//ஹாஸினி மந்தஹாஸமே பரவாயில்லேண்ணு தோணுதுங்க//
மந்தஹாஸமா - கிழிஞ்சது போங்க.