In நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

காஷ்மீர் பயணம் முடித்ததும் கிடைத்த இடைவேளையில் படித்த சில நாவல்களால் கவரப்பட்டு திரும்பவும் சிறுகதை எழுதணும் என்ற ஆர்வம் நிறைய வருகிறது. ஆனால் டோனும் நடையும் பேசும் விஷயமும் வித்தியாசமாக முன்னைக்கு மேம்பட்டதாக இருக்கவேண்டும் என்ற ஆவலில் பயணத்தைப் பற்றி குறிப்புகள் எழுதவும் எடுத்தபடங்களைக் தட்டி நிமிர்த்தி சரிசெய்து போடவும் நேரம் அமையணும். பார்ப்போம். ஆனால் முதலில் எழுதணும் என்று நினைத்திருப்பது "குடுமியான் மலை" பற்றி ஒரு பதிவு.

புத்தகக் கண்காட்சிக்கு முதல் நாளே சென்றிருந்தேன் தொடர்ச்சியாய் மேலும் மூன்று நாட்கள் சென்னையில் இருந்ததால் புத்தகக் கண்காட்சியை நன்றாக சுற்றிப்பார்க்க முடிந்தது. ஆனால் முன்னமே முடிவு செய்திருந்த புத்தகங்களைத் தவிர்த்து ஒரு புத்தகம் கூட அடிஷனலாய் வாங்கலை என்பது என் வரையில் அதிசயமே. 'கிழக்கின்' விடுதலைப்புலிகள் புத்தகம் வாங்காதீர்கள் புலிகள் பற்றி தெரிந்துகொள்ள என்று நண்பர்கள் சொன்னதையும் மீறி வாங்கினேன். எழுதப்பட்டிருந்த டோன் சுத்தமா பிடிக்கலை, அதிசயமாய் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் வேறு என்ன சொல்ல. 'உயிர்த்தலம்' ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆபிதீனின் தொகுப்பு பெரும்பாலும் படித்த கதைகள் தான் என்றாலும் புத்தகத்தில் படிப்பதில் சுகமே தனிதான்.

'பின்தொடரும் நிழலில் குரல்' லும் 'காடு'ம் படித்திருந்தேன். இந்த இரண்டு புத்தகங்களைப் பற்றி நிறைய எழுதணும் என்று அரிப்பு அதிகமாயிருக்கிறது.

சர்வேசனின் 'நச்' போட்டியில் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றதும் சந்தோஷமாய் இருந்ததைப் போல் இல்லாமல் கடைசியில் wild-card என்று என்னன்னமோ நடந்து 'நடுவர்'களின் தேர்வுகளுக்குப் பின் மூன்றாவது வந்ததில் சரியான 'காண்ட்'டாகியிருந்தேன். அக்கா இதைப் பற்றிச் சொல்ல முதலில் எனக்குப் புரியவேயில்லை நான் எப்படி கடைசி சுற்றுக்கு வந்தேன் என்று. இன்னொரு நடுவர் பற்றிய பிரச்சனையா என்றால் சொல்லத் தெரியலை, மற்றதைப் போலில்லாமல் நானாய் சென்று சேர்ந்து கொண்டது என்பதால் என்ன சொல்வதென்றே தெரியலை, ஆனால் 'நடுவர்' வகையறா விஷயம் சர்வேசன் முன்னமே சொல்லாதது. ஆனாலும் முக்கியமான விஷயம் நானாய் சென்று கலந்துகொண்டது ஆனாலும் நான் நினைப்பதை எழுதுவதில் தவறில்லை என்பதால் எழுதுகிறேன். முன்னமே இப்படி ஒரு ஐடியா இருப்பதையோ இன்னார் நடுவராக வருவார்கள் என்றோ சொல்லியிருந்தால் கலந்துகொண்டிருந்திருப்பேனா? தெரியலை!

ஆஸ்திரேலிய அணி இந்தக் கடைசி போட்டியில் ஜெயிச்சுருவாங்க என்று தான் நான் நினைக்கிறேன், எல்லோரும் கஷ்டமான டார்கெட் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் எனக்கென்னமோ நம்பிக்கை இருக்கிறது பார்க்கலாம். Go Aussie Go!!!

Politically correct ஆ இல்லையா என்று பார்க்காதீர் உங்களுக்கு சரின்னு பட்டதை எழுதித் தொலையும், மொன்னையா இருக்கு நீங்க எழுதுறதெல்லாம் என்று நண்பர் ஒரு சொன்னதில் இருந்து அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன் கொஞ்சமாய் செயல்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் சொன்ன நண்பருடனேயே சண்டை போடும் நிலை வரும் என்று எனக்கு நன்றாகத் தெரியும் ஆனால் நண்பர் அதையே(மனசில் பட்டதைச் சொல்பவர்) செய்பவர் என்பதால் புரிந்துகொள்வார் என்று தெரியும். ஆனால் இப்படி எல்லா விஷயங்களிலும் எழுதிவிடமுடியுமா என்று தெரியலை! சில விஷயங்களைப் பார்த்தும் வாயை மூடிக்கொண்டிருப்பது அயோக்கியத்தனமான மௌனம் தான் என்றாலும் இப்போதைக்கு இதை மட்டுமே செய்ய முடிகிறது. பார்க்கலாம் எத்தனை விஷயங்களில் பேச முடிகிறதென்று.

சென்னையில் இருந்த பொழுது நண்பர்களுடன், The Legend, புலிவருது, அப்புறம் இன்னொரு முறை பில்லா பார்த்தேன்(இந்த முறை சூப்பரான தூக்கம்). புலிவருது படம் பத்தி என்ன சொல்றதுன்னு தெரியலை கனவு கனவுன்னு சொல்லி கடுப்பேத்தினாலும் ஏதோ மூணு மணிநேரம் பார்க்கிற மாதிரி இருந்தது. இரண்டு பாடல் கேக்குற மாதிரி இருந்தது. வேடந்தாங்கலுக்கும் சென்னை மியூஸியத்திற்கும் சென்றிருந்தேன் சுகமான அனுபவங்கள் இரண்டுமே. என் காமெரா லென்ஸ் போதாமை ஒரு குறை என்றாலும் வேடந்தாங்கல் நன்றாகயிருந்தது.

Related Articles

10 comments:

  1. ---இன்னொரு நடுவர் பற்றிய பிரச்சனையா என்றால் சொல்லத் தெரியலை,---

    எந்த நடுவர்... போட்டு உடையுங்க :)

    ReplyDelete
  2. //சர்வேசனின் 'நச்' போட்டியில் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றதும் சந்தோஷமாய் இருந்ததைப் போல் இல்லாமல் கடைசியில் wild-card என்று என்னன்னமோ நடந்து 'நடுவர்'களின் தேர்வுகளுக்குப் பின் மூன்றாவது வந்ததில் சரியான 'காண்ட்'டாகியிருந்தேன்//

    Sila nunnarasiyal, booth-capturing, vaakkalippil sila kuzhappangal, pondra vagayara vagayara kaaranangalaal, kadaisi nimidathil eduththa mudivu adhu :)

    sorry about that. but, it did turn out well and the best one won the contest :)

    In my personal opinion, I liked your 'nach' overall ;)

    ReplyDelete
  3. //but, it did turn out well and the best one won the contest :)//

    அப்படியா?! :) (நானும் ஸ்மைலி போட்டிருக்கிறேனாக்கும்)

    ReplyDelete
  4. மோகன் தாஸ்,

    உங்கள் "நச்" கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, யார் என்ன சொன்னாலும் (ஸ்மைலி போடவில்லை!)

    //ஆஸ்திரேலிய அணி இந்தக் கடைசி போட்டியில் ஜெயிச்சுருவாங்க என்று தான் நான் நினைக்கிறேன், எல்லோரும் கஷ்டமான டார்கெட் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் எனக்கென்னமோ நம்பிக்கை இருக்கிறது பார்க்கலாம். Go Aussie Go!!!
    //
    ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியது, இன்று :) அதனால், NO "Go Aussie Go" !!!

    கிளார்க்கும், ஜான்ஸனும் பேயாட்டம் ஆடியபோது கொஞ்சம் வயிற்றைக் கலக்கியது உண்மை ;-)

    ReplyDelete
  5. ஏன் பயப்பட்டீங்க பாலா,
    புது பந்து எடுப்பதற்கு ஒரு 13 ஓவர் மீதமிருந்தது.. அதுவரைக்கும் நம்ம மோகன் தாஸ் மாதிரி ரசிகர்களுக்கு கொஞ்சம் வேடிக்கை காட்டலாம்னுதான் அப்படி அடிக்க விட்டாங்க :-))

    -அபுல்

    ReplyDelete
  6. "ஆனால் முதலில் எழுதணும் என்று நினைத்திருப்பது "குடுமியான் மலை" பற்றி ஒரு பதிவு. "
    இந்த விஷயத்தை விட்டுட்டீங்களே மோகன்.. காத்திருக்கவா...
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  7. கிருத்திகா - எழுதியாகிவிட்டது. படங்களை அப்லோட் செய்துகொண்டிருக்கிறேன். வேலை அதிகம் ஒன்றிரண்டு நாட்களில் வரும்.

    ReplyDelete
  8. மோகன் தாஸ்,

    I am still waiting for your response for

    "உங்கள் "நச்" கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, யார் என்ன சொன்னாலும் (ஸ்மைலி போடவில்லை!)"
    and
    "ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியது, இன்று :) அதனால், NO "Go Aussie Go" !!!"

    ;-)))

    ReplyDelete
  9. பாலா,

    அதற்கு என்ன பதில் வேண்டும் என்னிடமிருந்து.

    என் கதை எனக்கு அத்தனை பிடித்தமானது இல்லை எப்பொழுது அது 40 பின்னூட்டங்களைத் தாண்டிப் போனதோ அப்பொழுதே எங்கேயோ தப்பு இருக்கிறது என்று நினைத்தேன் ;)

    ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் தோல்வி பற்றி சொல்வதானால் இந்திய அணி நன்றாக விளையாடியது. ஆனால் அடுத்த டெஸ்டும் ஒருநாள் போட்டிகளிலும் ஒரு தோல்வியையும் சந்திக்காமல் ஆஸ்திரேலியா வெற்றி பெரும் போதுமா ;) Go Aussie Go!!!

    ReplyDelete
  10. ஆஸி வெறியாளராக இருக்கிங்களே மோஹன், இதெல்லாம் ரொம்ப ஓவர் :-))

    //என் கதை எனக்கு அத்தனை பிடித்தமானது இல்லை எப்பொழுது அது 40 பின்னூட்டங்களைத் தாண்டிப் போனதோ அப்பொழுதே எங்கேயோ தப்பு இருக்கிறது என்று நினைத்தேன் ;)
    //

    இதை இப்போத்தான் கண்டுப்பிடித்திங்களா, எனக்கு பிடித்த மாதிரி எழுதிப்போட்டா அதை எட்டிக்கூட இங்கே யாரும் பார்க்க மாட்டாங்க, ஆனால் மற்றவர்களுக்கு பிடித்ததை வைத்து எழுதினாலே போதும் பின்னூட்டம் 40ஐ தாண்டி ஓடும், அவங்களுக்கு பிடித்ததை பாராட்டிக்கூட எழுத வேண்டாம் , சும்மா கிண்டி எழுதினாலே போதும்! பின்னூட்டம் கியாரண்டி!

    சில நட்சத்திரங்கள், இயக்குனர்கள் பேட்டியில் கவனித்தால் இந்த அம்சமே எதிரொலிக்கும் எனக்கு பிடித்த படம்னா என்று சொல்லி ஓடாத ஒரு படத்தையே சொல்வார்கள், அதே போலத்தான் நமக்கு பிடித்தார் போல இருந்தால் கூட்டம் வராது, கூட்டம் வருவது நமக்கு பிடித்தார் போல இருக்கணும்னு அவசியம் கிடையாது:-)

    எனவே உங்கள் கூற்று சரிதான்!

    ReplyDelete

Popular Posts