In Layoff ஈழம்

ஐயோ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை

சசி ஒரு பதிவெழுதியிருந்தார், அவரளவிற்கு தைரியம் கிடையாதென்பதால் அது போன்றதொரு பதிவை நான் போடவில்லை. அவ்வளவே. 'தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்' என்பதில் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது, அப்படியே ஸ்டாலினின் 'You cannot make a revolution with silk gloves.' என்பதும். ஆனாலும் மக்கள் இப்படிக் கொத்துக்கொத்தாய் உயிரிழக்கும் பொழுது, நாம் இது வரை மனதில் வைத்திருந்த நியாயங்கள் எல்லாம் அநியாயங்களாய் நீள்கின்றன. அடிப்படைகளையே மாற்றிக்கொள்ளக்கூட மனம் தடுமாறுவதில்லை, மரணம் அத்தனை வலிமையான ஆயுதம். ஆனால் இதைக் கொண்டு தான் இராஜபக்ஷே போன்றவர்கள் ஆரம்பத்தில் இருந்து பயமுறுத்துகிறார்கள் எல்லாவற்றையும் துறந்து விட்டு இழந்து விட்டு ஓடிவிடு இல்லையென்றால் அழிக்கப்படுவாய் எனும் பொழுது எந்தப் பக்கம் பேசுவது என்ற குழப்பமே நீள்கிறது. இந்திய சுதந்திரம் அஹிம்சையால் பெறப்பட்டது என்பதில் எனக்கு இன்னமுமே கூட நம்பிக்கையில்லை, அதேபோல் ஆயுதம் தாங்கிய போராட்டாம் விடுதலை பெற்றுத்தராது என்பதிலும் கூட.

Capgemini ல் இருந்து 1600 நபர்களை வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள் என்ற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது, சென்னை, புனே, ஹைதராபாத் என்று Kanbay இருந்த இடங்களில் இருந்து வெளியேற்றம் நடந்திருக்கிறது. Kanbayவின் முக்கியமான க்ளையண்டான HSBC அதனுடைய ப்ராஜக்ட்களை திரும்ப வாங்கிக் கொண்டதால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம். என்னுடைய நண்பர்கள் சிலருக்கும் இப்படி நடந்திருப்பதாக செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது, உச்சிக் கொண்டையாகிய சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியின் ஈறும் பேனும் இது போன்ற லே ஆஃப்கள் ஆனால் தாழம்பூக்களை மனம் இயற்கையாகவே விரும்புகிறது என்ன செய்ய, தனக்கு வந்தால் தெரியும் ஈறும் பேனும் என்று இளக்காரம் பேசும் மக்களுக்கு புன்சிரிப்பை மட்டும் காட்டிவிட்டு நகரவேண்டியிருக்கிறது.



ஜெயமோகனின் அனல் காற்று படித்தேன், ஒரே காரணம் அய்யனார் அதைப்பற்றி எழுதியிருந்த சில வரிகள், முன்னர் யாரோ ஒருவர் பெயர் மறந்துவிட்டது கேட்ட 'படிச்சிட்டீங்களா'விற்கு இல்லை என்றும் படிக்கும் ஆவல் இல்லையென்றும் சொல்லியிருந்தது நினைவிற்கு வருகிறது. அய்யனார் சொல்லியிருந்த ஒன்றிரண்டு வார்த்தைகளுக்காக படிக்க நேர்ந்தது, ம்ஹூம் தூக்கம் வராதா ஒரு இரவில் இன்னும் கொஞ்சம் நேரம் தூக்கத்தை தள்ளிப் போட உதவியது. ஜெயமோகனின் வகையான எழுத்தில்லை இது, என்பதைத் தவிர்த்து, வேறு யாராவது எழுதியிருந்தால் இரண்டாம் பாக முடிவில் தூக்கியெறிந்திருப்பேன். எனக்கு ஆதவன் வாசனை அதிகம் தெரிந்தது, நான் ஆதவனை அதிகம் படித்தது காரணமாய் இருந்திருக்கலாம். ஆதவன் பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தைப் பற்றிய் எழுதியதும் காரணமாய் இருந்திருக்கலாம், கொஞ்சம் போல் சாரு வாசனை வந்தது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. எப்பொழுது ஜெமோ எழுத்து படித்தாலும் நான் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பேன் என்பதைப் போலவோ என்னுடைய கற்பனைகளைப் போலவே இருப்பதைப் போலவோ இருக்கும். அனல் காற்று இதற்கு விதிவிலக்கல்ல. இரண்டு மூன்று முறை Mother Fucker என்று வந்துவிட்ட காரணத்தாலேயே இதை இன்செஸ்ட் வகைக் கதை என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன், என் பெயர் ராமசேஷனில் Mother Fucker வார்த்தைகள் இல்லாமலே அதைப் பற்றிச் சொல்லியிருப்பார். ஒரு எல்லையைத் தாண்டாமல் ஜெமோ எழுதியிருப்பதைப் போலவே தோன்றியது அவராய் வகுத்துக் கொண்ட அந்த எல்லையெல்லாம் தாண்டி மக்கள் எழுதத் தொடங்கி எழுதி காலமாகுது என்று சொல்ல நினைத்தேன். சொல்லிட்டேன்.

இந்தப் பதிவை வைத்து ஒரு டெஸ்டிங் செய்யலாம் என்ற ஒரு ஆசை, செய்யப் போகிறேன். ரிசல்ட் நான் எதிர்பார்ப்பதைப் போல் வந்தால் சொல்கிறேன்.

பசங்க படம் இன்னும் பெங்களூரில் வெளியாகலை நல்லாயிருக்கு என்று மக்கள் சொல்லும் பொழுது பார்க்க ஆசையாகயிருக்கிறது. வெளியாகாமல் போகக்கூட வாய்ப்பிருக்கிறது, இப்படி மிஸ் ஆன படம் தான் சுப்பிரமணியபுரம்.

தலைப்பை பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. புரிஞ்சவங்க புரிஞ்சிக்கோங்க புரியாதவங்க புரிஞ்சவங்களைக் கேளுங்க

Related Articles

7 comments:

  1. :)- சுவாதிக்கு கல்யாணம் ஆயிடுச்சாம் @!

    ReplyDelete
  2. தலைப்பு யாருக்குப் புரியுதோ இல்லையோ.. எனக்கு நல்லாவே புரியும். டவுசர் கிழிக்கப் பட்ட இடத்தில் ஜட்டி அவிழ்க்கும் முயற்சி்யில் மயிரிழையில் தப்பியவனாச்சே.. :))

    ReplyDelete
  3. மணிகண்டன்,

    சுவாதியை எனக்குப் பிடிக்குமென்றாலும் நடிகைகளை கல்யாணம் செய்து கொள்ளும் அளவிற்கு வைத்துப் பார்ப்பதில்லை. அதனால் பிரச்சனையில்லை.

    ReplyDelete
  4. சஞ்செய்,

    சரிதான் உங்களுக்குப் புரியாம போகுங்களா?

    ReplyDelete
  5. நண்பா நீங்க பெங்களூர் தானா சரி sakkaraisuresh@gmail.com மெயில் பண்ணுங்க பேசுவோம்....

    நானும் இங்கே தான் உள்ளேன்

    ReplyDelete
  6. மோகன்தாஸ், உங்களது விளக்கத்திற்கு நன்றி ! எனக்கு தலைப்பு புரியாமல் எழுதிய பின்னூட்டம் அது. சஞ்சயின் கமெண்ட் படித்தவுடன் தான் எனது மரமண்டைக்கு உறைத்தது.

    ReplyDelete
  7. பதிவில் இருக்கிற படம் பிடித்திருக்கிறது :)

    (இந்தப்படத்தை நானும் எடுத்து வச்சிருந்தேன் நீங்க முந்திட்டிங்க )

    ReplyDelete

Popular Posts