நண்பர் ஒருவர் தமிழிஷ் ஓட்டு காரணமாய் பெரிய சண்டை போகுதே பார்த்தீங்களா என்று கேட்டார், நான் அத்தனை தூரம் பதிவுகளில் தற்சமயம் இயங்காவிட்டாலும் கண்ணில் படத்தான் செய்தது. நான் தமிழ்மண ஓட்டுப்பட்டையைக் களவாடி மகுடும் சூட்டிக்கொண்ட சூத்திரம் தெரிந்தவர் என்பதால் தமிழிஷில் முடிந்தால் செய்து காட்டுங்கள் என்றார். ஆனாலப் பட்ட 32 digit key வைத்து செய்யும் என்கிரிப்ஷனையே உடைத்து களவாடிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் தமிழிஷ் எல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று சொல்லி விட்டு எப்படி ஓட்டிங் முறை செய்திருக்கிறார்கள் என்று பார்த்தேன். ம்ம்ம் ஓட்டை இருந்தது. அதற்கான டெஸ்டிங்கைத்தான் நேற்றைய பதிவில் செய்தேன்.
அந்தப் பதிவிற்கு ஓட்டுப் போட்டதாகச் சொல்லும் யாரும் எனக்கு ஓட்டுப் போட்டிருக்க நியாயம் இல்லை. sayanthan, sanjaigandhi, jaichan, nandhuu, senthazalravi, fedthemaster இதில் சயந்தன், சஞ்செய் காந்தியிடம் முன்னமே பேசியாகிவிட்டது ஆனால் நான் டெஸ்டிங்கை கொஞ்சம் சீக்கிரம் முடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் வந்ததால் செய்து வந்ததை நிறுத்திவிட்டேன். kks, chuttikurangu, hihi12, kilukku இவர்கள் எல்லாம் நான் டெஸ்டிங் நிறுத்திய பிறகு போட்டவர்கள். ஆனால் ஒரு விஷயம் சொல்ல முடியும், உங்கள் அனுமதியில்லாமலே ஒருவர் உங்கள் பெயரில் தனக்கு வேண்டிய பதிவிற்கு ஓட்டுப் போட முடியும் தமிழிஷில்.
எப்படி என்பதை சொல்ல விரும்பவில்லை.
PS: கள்ள வோட்டு போட உபயோகித்துக்கொண்ட அனைத்து நபர்களிடமும் ஒரு சைலண்ட் மாப்பு கேட்டுக்கிறேன் :(, nothing personal only testing.
தமிழிஷ் ஓட்டு நம்பகமானதா?
Mohandoss
Tuesday, May 12, 2009
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
என்னா சார் இப்படி குண்டை தூக்கு போடுகிறீர்கள்...
ReplyDeleteஉண்மை அதுதாங்க KRICONS.
ReplyDeleteஇப்படி எல்லாம் கூட நடக்குதா? அடக் கடவுளே!
ReplyDeleteஅட கடவுளே என்னங்க இது ;-(
ReplyDeleteநீங்க பெரிய டெஸ்டர் தான், அப்போ நம்ம பதிவுக்கு வோட்டு போட்டவங்க யாரு அவங்க இல்லை யா :-)
அப்புறம் உங்க படம் சேகுவரா அருமையாய் உள்ளது...
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநெல்லைத்தமிழ் said...
ReplyDeleteசார் நீங்கள் சொல்வது எந்த வகையிலும் சாத்தியமில்லை. அப்படி செய்யும் போது அடுத்தமுறை உரிய பதிவர் தனக்காக ஓட்டு போட முடியாது. ஏனென்றால் முதலில் அளிக்கப்பட்ட பாஸ்வேர்டை இரண்டாம் முறையாக இந்த சாப்ட்வேரில் பயன்படுத்த முடியாது. ஆனால் உரிய பதிவர் தனது ஐபி முகவரியில் இருந்து எத்தனை முறைவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பாஸ்வேர்டை மாற்றமுடியும்.
இதில் பாஸ்வேர்டு திருட்டு என்பது சாத்தியமற்றது.
PS: நெல்லைத்தமிழ் போட்டது பின்னூட்டத்தில் அவர் உரல் பின்னினைப்பாக இருந்ததால் மட்டுறுத்தியிருக்கிறேன்.
Tamilish commented on your story 'தமிழிஷ் ஓட்டு நம்பகமானதா?'
ReplyDelete'மோகன் தாஸ் அவர்களுக்கு,
நீங்கள் IFRAME உபயோகித்தது சில நேரங்களில் கண்டறியப்பட்டு. அந்த குறை சரி செய்யப்பட்டது என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி
Tamilish'
Here is the link to the story: http://www.tamilish.com/story/61940
Thank your for using Tamilish!
- The Tamilish Team
PS: தமிழிஷில் இருந்து எனக்கு வந்த மெயில் - இன்னமும் கூட சாத்தியக்கூறுகள் இருக்கிறதுங்க தல.
சொல்லவா?
தெய்வமே.. :))
ReplyDeleteதமிழ்மணம் கருவிப் பட்டையே தெரியல.. அதனால என்னால எதிர் வோட்டு போட முடியல :)
ReplyDeleteதேர்தல்ல போடற வோட்டே நம்பகமானதான்னு தெரியல.. இதுல தமிழிஷ் வோட்டு மட்டும் என்ன?
எப்படியாவது கள்ள வோட்டு போட்டாவது ஜெயிங்கப்பா :)
வெளாடறதுக்கு என்னோட பேரை சரியா ஊஸ் பண்ணு :))))
ReplyDelete//PS: நெல்லைத்தமிழ் போட்டது பின்னூட்டத்தில் அவர் உரல் பின்னினைப்பாக இருந்ததால் மட்டுறுத்தியிருக்கிறேன்.//
ReplyDeleteஏன் ??
இருந்தால் என்ன ???
என் சந்தேகம் தீர்ந்தது.
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ப்ருனோ,
ReplyDeleteஎன் பதிவில் பின்னூட்டங்களை மட்டுறுத்துவதற்கு நான் வைத்திருக்கும் விதிமுறை அது. உங்களிடம் அதைப்பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.
////ஏன் ??
ReplyDeleteஇருந்தால் என்ன ??? ////
புருனோ சார் விடுங்கள்... இதுவே ஒரு பிரச்சனை ஆக வேண்டாம். உங்களது அக்கரைக்கு நன்றி. ஆயினும் இதையும் சிலர் பெரிய பிரச்சனை ஆக்குவார்கள்.
////என் பதிவில் பின்னூட்டங்களை மட்டுறுத்துவதற்கு நான் வைத்திருக்கும் விதிமுறை அது. உங்களிடம் அதைப்பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. ////
மோகன்தாஸ் நான் உங்கள் பின்னோட்டத்தில் உரலை சேர்த்தமைக்கு மன்னிக்கவும். இது போன்று மட்டறுக்கப்படும் பதிவுகளுக்கு அடுத்தமுறை வரும் போது உரல் இணைப்பதில்லை. ஆயினும் என் பின்னோட்டத்தை எவ்வித திருத்தமும் செய்யாமல் வெளியிட்டமைக்கு நன்றி.
இன்னும் கோபம் அடங்கலை போல :)
ReplyDeleteசரி, நேரம் கிடைத்ததும் எங்கள் தானைத் தலைவர் ப்ரூனோ டெண்டுல்கர் பதிவில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்வதாகச் சொன்னீர்களே, இன்னும் நேரம் கிடைக்கவில்லையா :) :) :)
தமிழ்மவத்திலேயே வினவுகாரர் கள்ளவோட்டு போடுகிறார்கள் அவர்களை கேட்டால் தெரியும்.
ReplyDeleteகடைசியில நம்மை பரிசோதனைக்கூட எலியாக்கிட்டீங்களே.. தல.. :)
ReplyDelete//ப்ருனோ,
ReplyDeleteஎன் பதிவில் பின்னூட்டங்களை மட்டுறுத்துவதற்கு நான் வைத்திருக்கும் விதிமுறை அது. உங்களிடம் அதைப்பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.//
நன்றி.
fedthemaster நான் தான் ! உங்க பதிவுக்கு வந்தால் tamilish க்கு கொண்டு சென்றது. ஆனால் இது மாதிரி வாக்கு increase பண்றதுல பிரச்சனை என்னனா, பலர் ஏதோ malware வச்சி இருக்காங்கன்னு வரமாட்டாங்க !
ReplyDelete***
ReplyDeleteசரி, நேரம் கிடைத்ததும் எங்கள் தானைத் தலைவர் ப்ரூனோ டெண்டுல்கர் பதிவில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்வதாகச் சொன்னீர்களே, இன்னும் நேரம் கிடைக்கவில்லையா :) :) :)
****
வழிமொழிகிறேன் !! (:)
தமிழ்மணம் மற்றும் தமிழிஸால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்களா இல்லை எழுத்துக்கள் மட்டும் பாபுலர் ஆக மட்டுமா? ( அதிக வோட்டு விழுந்து என்ன பயன் என்ற கேள்வியின் மரூ இது..)
ReplyDeleteஇந்த மாதிரி பிரித்து மேயும் சமாச்சாரங்களை கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன். கற்றுக்கொள்ள இணையத்தில் சரியான தளம் ஏதாவது உள்ளதா?
ReplyDeleteadhaana naethu site-ku vandhaley anga redirect agitu irundadhu i was thinking whether you knew this issue or not :-))
ReplyDelete>> அதைப்பற்றி விவாதிக்க <<<
vita idhai vachum oru 100-150 comments vandhurukumey ;-) just kidding..
தமிழிஷ் மக்கள், iframe சப்போர்ட் எடுத்துவிட்டதால், என் பேஜிலேயே அவர்கள் பேஜ் வந்து கொண்டிருந்தது. நான் பார்த்ததும் திரும்பவும் மாற்றிவிட்டேன்.
ReplyDeleteiframe உடைய பிரச்சனைகளில் ஒன்று, அதை நீங்கள் parent window வோடு restrict செய்ய முடியாது / அல்லது எனக்கும் இன்னமும் தெரியாது. அதைச் செய்தால் முடிந்தது விஷயம்.
window.open, window.close ஐ உடனடியாகத் தரலாம் ஸ்கிரிப்ட் மூலமாய் பட்டென்று வந்து போகும் இது இன்னொரு வழி.
அட விடுங்க பாஸ்! இருக்கிறதில இப்ப அங்க தான் கூட்டம் ஓடிட்டு இருக்கு. எல்லாம் நல்லபடியா இருந்துட்டா மட்டும் நம்ம ஆட்கள் சரியான பதிவை படிச்சிடுறாங்களா?
ReplyDeleteநம்ம ஆட்களை பதிவிற்கு வர வைக்க சில ஐடியாக்கள் இருக்கு. ஆனா அத செஞ்சா நாம பதிவு போடறதுக்கான அர்த்தமே இல்லாம போயிடும்.
இது tamilishல் மட்டும் இருக்கும் ஓட்டையா அல்லது அது பயன்படுத்தும் pligg (?) மென்பொருள் தளங்கள் எல்லாவற்றிலும் இருப்பதா?
ReplyDeleteஇப்படியும் செய்ய இயலும் என்று நிறுவ விரும்பினீர்களா அல்லது இப்படியோ நீங்கள் குறிப்பிடாத பிற வழிகள் மூலமோ ஏற்கனவே ஏய்ப்பு நடந்து கொண்டிருக்கிறது என்று நம்ப இடம் இருக்கிறதா?
//மோகன்தாஸ் said...
ReplyDeleteப்ருனோ, என் பதிவில் பின்னூட்டங்களை மட்டுறுத்துவதற்கு நான் வைத்திருக்கும் விதிமுறை அது. உங்களிடம் அதைப்பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.//
தம்பி...
இவ்வளவு வேகம் நம்ம டாக்டரிடம் வேண்டியதில்லையே ராசா..!
அது என் கொள்கை ஸார் என்று ஒற்றை வரியில் முடித்திருக்கலாம்.
சில வேளைகளில் முகம் பார்க்காதவர்களில்கூட நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைக்கக்கூடும்..!
Tamilish uses the script which has vulnerabilities..
ReplyDeleteyou dont have to be a hacker to exploit it...
Even script kiddies could exploit it..
no big deal..
ஃஃஉங்கள் அனுமதியில்லாமலே ஒருவர் உங்கள் பெயரில் தனக்கு வேண்டிய பதிவிற்கு ஓட்டுப் போட முடியும் தமிழிஷில்.ஃஃ
ReplyDeletedigg கூட கிட்டத்தில்தான் இதபோன்றதொரு தவறை திருத்தியதாக சொன்னார்கள்.
மற்றும் clonhe scripts ல் தவறுகள் இருக்க வாய்ப்புண்டு. நிறுவும்போது எல்லாவற்றையும் சரிபார்ப்பதென்பது கஷ்டம்தான். போகப்போகத்தான் நிறைய விடயங்கள் புலப்படும்.