சர்வம் படத்திற்குச் சென்றிருந்தேன், விஷ்ணுவர்த்தன் ஆர்யா என்பதற்காக மட்டுமல்ல த்ரிஷா மாமிக்காகவும் தான். மற்றவர்கள் ஏமாற்றினார்களா மாற்றவில்லையா என்பதைத் தவிர்த்து த்ரிஷா மாமி ஏமாற்றவில்லை என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லிக் கொள்ள முடியும். அவர் அணிந்திருக்கும் ஆடைகள் அனைத்தும் அற்புதமாக இருக்கிறது, நல்ல செலக்ஷன். ஆனாலும் கூட வாரணம் ஆயிரம் ஷமீரா ரெட்டி தான் பர்ஸ்ட், அடுத்த இடத்திற்கு வேண்டுமானால் மாமியை வைத்துக் கொள்ளலாம். எனக்கு கல்யாணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி காதோரம் கசிந்தது, ஆனாலும் ஜொள்விடும் புத்தி போகவில்லை, கல்யாணத்திற்குப் பிறகும் போகாதென்றே நினைக்கிறேன். சரி ஜொள்ளு விடுவதைத் தவிர்த்துவிட்டு படத்திற்கு வருகிறேன்.
விஷ்ணுவர்த்தனிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவருடைய வெற்றியே இதில் தான் இருக்கிறதென்பேன். வித்தியாசமான கதை, பில்லாவிற்குப் பிறகு இப்படி ஒரு படம். எப்பொழுதும் சொல்வது தான் என்றாலும் இன்னொரு முறை, பாடல்களை வெட்டிவிட்டு இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் இன்னமும் நன்றாக வந்திருக்கக் கூடிய படம். இப்படி ஒரு படத்தை எடுக்கத் துணிந்ததற்காகவே விஷ்ணுவர்த்தனைப் பாராட்டலாம், இடைவேளைக்கு முன்னால் த்ரிஷா மாமி போன்ற ஹீரோயினைக் கொல்ல எத்தனை இயக்குநர்களுக்கு மனம் வரும். த்ரிஷா பெயர் போட்டதும் தியேட்டரில் ஏக விசில், கவனிக்க நான் பார்த்தது ஃபோரம் தியேட்டரில் ஆடிட்டோரியம் ஒன்றில். இன்றைக்கு ஹவுஸ்புல் தான். தைரியம் தான் இயக்குநருக்கு. இடைவேளைக்குப் பிறகு கற்பனை, பாடல் என்று கொஞ்சம் இடைச்செறுகளாக, த்ரிஷாவை நுழைத்தாலுமே கூட.
விபத்தென்பது எப்பொழுதும் கொஞ்சம் வருத்தம் வேதனையை அதிகம் கொடுக்கக்கூடியதுதான், படம் பார்த்ததும் சட்டென்று மனதிற்கு வரும் 21 க்ராம்ஸ் ஆகட்டும் அமோரஸ் பெர்ரோஸ் ஆகட்டும் விபத்தை மையமாக வைத்து ஆகக்கோர்த்த கதை தான், அமோரஸ் பெர்ரோஸில் தான் ஆசை ஆசையாய் வளர்த்த அத்தனை நாய்களையும் பாவம் என்று சொல்லி அழைத்து வந்த நாய் கடித்துவிட்டதை உணரும் இடம் அற்புதமான பொழுது. எத்தனையோ நாள் எத்தனையோ தடவைகள் நாய் ஒன்றைப் பார்க்கும் பொழுதோ இல்லை நாம் பெரிய சொத்தென்று நினைத்து வந்த ஒன்று இல்லாமல் போன பொழுது மனதைத் தேற்றிக் கொள்ள அந்தப் படத்தை நினைத்துப் பார்த்திருக்கிறேன். படத்தின் கதை புரிந்துவிட்டது என்று நான் நினைத்த நான்கு தடவைகளுமே தவறாகவே முடிந்தது. நல்ல திறமை இயக்குநருக்கு.
சக்கரவர்த்தியா அது என்னவோ போங்க, ப்ர்த்திவிராஜின் அண்ணன் என்று கொஞ்சமே கொஞ்சம் ஆட்கள். தங்கள் பார்ட்டை நன்றாகச் செய்திருக்கிறார்கள், சக்கரவர்த்தி ஒரு ரவுண்ட் வருவாராயிருக்கும் வில்லான நடிக்க விருப்பப்பட்டால் தமிழில். பார்க்கலாம்.
ஆர்யாவிற்கு நான் கடவுளிற்கு பிறகு வரும் படம், நிறைய ஸ்கோப் இருக்கிற படம். கொஞ்சமாய்ச் செய்திருக்கிறார். எத்தனைப் பேருக்கு இடைவேளைக்கு முன் அழகான காதலியை இழக்கும் வாய்ப்பு கிடைக்கும். ம்ம்ம் இன்னும் நன்றாய்ச் செய்திருக்கலாம். அலட்டலில்லாமல், நடிக்கிறேன் பார் என்கிற திமிரில்லாமல் நடிக்கக்கூடியவர் என்றே நினைத்து வந்திருக்கிறேன் ஆர்யாவைப் பற்றி. இந்தப் படமும் அதற்கு இன்னொரு உதாரணம்.
எக்ஸாக்டா நாம் விரும்பும் ஒரு அழகான டம்ப் ஹீரோயினாக த்ரிஷா, கேரக்டர் படி, என்ன தான் டாக்டராயிருந்தாலும் சட்டென்று காதலில் விழுகிறார். முன்பே சொன்னது போல் டாக்டர்களுக்கான காஷ்ட்யூம் போட்ட வலம் வர வைக்க நிறைய யோசித்திருக்கிறார்கள், ஆடைகளில் வித்தியாசம் தெரிகிறது. மேக்கப் முழுவதும் அப்பிக் கொண்டு ஆடும் 'ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா' வை விடவும் கொஞ்சம் மேக்கப்பில் அழகாகவே இருக்கிறார். மாமியைப் பார்க்கும் பொழுது ஆர்யாவிற்கு மட்டுமல்ல நமக்கும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன . என்ன செய்ய வயசும் காலமும் அப்படி, என்னமோ போங்க மனசை விட்டே போக மாட்டேங்குறாங்க. த்ரிஷாவைப் போல் பொண்ணு பாருன்னு சொன்னா செருப்படி விழும் முன்னமே கொஞ்சம் கலரா பாருங்கன்னு சொன்னா நீ என்னா கலரு உனக்கேத்த மாதிரி தான் பார்க்க முடியும்னு முகத்திலடித்த அனுபவம் வேறு.
படத்தின் உண்மையான ஹீரோ நீரவ் ஷா தான், செக்ஸி period. அவ்வளவுதான், மனுஷன் அனுபவித்து செய்கிறார். நல்லாயிருக்குது சார். இதில் படம் இடைவேளைக்குப் பின் மூணாறுக்கு போய்விடுகிறது. கேட்கணுமா தலைவர் படம் காண்பிக்கிறார், ஒவ்வொரு காட்சியும் செதுக்கியிருக்கிறார். எங்கடா சில்லவுடைக் காணோம் என்று தேடிக் கொண்டிருந்தேன் ஒரு பாட்டில் அழகாக உபயோகப்படுத்தியிருந்தார். ஆர்யாவும் அந்த குட்டீஸும் ரஹ்மான் இளையராஜாவைப் பற்றி சண்டை போட்டுக் கொள்ளும் பொழுது சட்டென்றூ புருனோ நினைவு வந்தது. இரண்டு முறை வழுவாய் தலையை ஆட்டி அந்த எண்ணத்திலிருந்து வெளியில் வந்தேன். பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. படத்தில் பறவைகளை உபயோகப்படுத்தியிருக்கும் விதம் வித்தியாசமாக நன்றாக இருந்தது, எனக்கு திரைப்படங்களில் பறவை என்று சொன்னால் சட்டென்று நினைவுக்கு வருவது மிஷன் இம்பாஸிபிள் இரண்டில் டாம் க்ரூஸ் க்ளைமாக்ஸில் வேகமாக வரும் பொழுது சட்டென்று பறக்கும் புறாக்கள் நினைவு தான் வரும். இனி ஆர்யா மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கும் பொழுது பறந்து வந்து உட்காரும் காட்சி நினைவுக்கு வரலாம்.
அந்த நாயைப் பார்த்தால் இயல்பாய் வரவேண்டிய பயம் எனக்கு வரவில்லை காரணம் நாய் ஒன்றை அருகில் இருந்து வளர்த்த காரணமாய் தான் இருக்கணும். எவ்வளவு குரைத்தாலும் ச்ச புள்ளைய இப்படி குரைக்க விடுறானுங்களே பாவின்னு தான் நினைக்கத் தோணுது. ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால் தர அளவில் மத்திய அளவுக்கான படம் தான், ஆனால் நீரவ் ஷாவிற்காகவோ இல்லை த்ரிஷா மாமிக்காகவோ நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.
சர்வம்
Mohandoss
Saturday, May 16, 2009
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
மாமிக்காகத்தான் நானும் பாக்கணும்னு இருக்கேன், ஸ்டில்ஸ் பாக்கும்போதே தெரிஞ்சுது மாமியோட ஆடைத்தெரிவுகளும் வித்தியாசமும்..
ReplyDelete;))
// படம் பார்த்ததும் சட்டென்று மனதிற்கு வரும் 21 க்ராம்ஸ் ஆகட்டும் அமோரஸ் பெர்ரோஸ் ஆகட்டும் விபத்தை மையமாக வைத்து ஆகக்கோர்த்த கதை தான்,//
ReplyDeleteஅப்ப ஆயுத எழுத்து இப்போ இது இன்னும் எத்தன படம் வ்ருமோ தெரியல.
நல்ல மனசுக்கு புடுச்ச பொண்ணுகிடைக்க வாழ்துக்கள் :-))
தமிழன் கறுப்பி, கார்த்திக் நன்றிகள்.
ReplyDelete//நல்ல மனசுக்கு புடுச்ச பொண்ணுகிடைக்க வாழ்துக்கள் :-))//
இதுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
ஆனாலும் கூட வாரணம் ஆயிரம் ஷமீரா ரெட்டி தான் பர்ஸ்ட், அடுத்த இடத்திற்கு வேண்டுமானால் மாமியை வைத்துக் கொள்ளலாம். எனக்கு கல்யாணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி காதோரம் கசிந்தது, ஆனாலும் ஜொள்விடும் புத்தி போகவில்லை, கல்யாணத்திற்குப் பிறகும் போகாதென்றே நினைக்கிறேன். சரி ஜொள்ளு விடுவதைத் தவிர்த்துவிட்டு படத்திற்கு வருகிறேன்.///
ReplyDeleteநாங்க எஸ்கேப்.... நல்ல துணைவி கிடைக்க வாழ்த்துக்கள்!!
/சரி ஜொள்ளு விடுவதைத் தவிர்த்துவிட்டு படத்திற்கு வருகிறேன்.///
ReplyDeleteபடத்த பத்தி எங்க சொன்னீங்க ,ஒரே மாமி மயம் தான் பதிவு முழுதும்
ஜொள்ளின் திலகம் .. எதுக்கும் ஒரு ஆம்புலன்சுக்கு சொல்லி வைக்கவா வரப்போற அண்ணிட்ட அடி வாங்கிட்டு மருத்துவமனை போக ..