In நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

திருமண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

பெங்களூரில் மழை சீசன் என்பதால், எங்கள் கம்பெனியின் ப்ரீமியர் லீக் ஆட்டங்கள் தற்போதைக்கும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. கேப்டனாக விருப்பப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து பின்னர் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுபவர்களைத் தேர்ந்தெடுத்து, பெட்டிங் முறையில் கேப்டன்கள், தங்கள் வீரர்களை சேர்த்துக் கொண்டு ஒருவாறு அணிகள் முடிவாகிவிட்டது. இனி ஆட வேண்டியது தான் பாக்கி.

இனிமேல் பெண்ணியம் என்பது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாய்டும். மொக்கைப் பெண்ணியைப் பதிவுகள் பெருக்கெடுக்கும். #ஜோசியம்

என்று நான் எழுதிய டிவிட்டைப் பற்றி நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியே வலையுலக மீடியேட்டர்களைப் பற்றி எழுதியதையும்.

# @peyarili இந்த மீடியேட்டர் பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனை. நானறியாத ஒன்றும் இல்லை, போலி டோண்டு விஷயத்தில் -நபர்- மீடியேட் செய்து கொண்டு இருந்த பொழுது இது எதிலுமே சம்மந்தப்படமால் நான் போட்ட பதிவிற்கு பிரச்சனை மீடியேட்டரிடம் இருந்த வந்தது. உண்மையிலேயே சம்மந்தம் இல்லாவிட்டாலும் கூட, நான் எதை எழுத எதை கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என்று அன்று அந்த மீடியேட்டரின் தொடர்பைத் துண்டித்தேன். பிரச்சனை ஒரு பக்கம் இருக்க மீடியேட்டர்களின் அலப்பறை ரொம்ப ஜாஸ்தி. இதுதான் பிரச்சனை. இவர்கள் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு, நான் தான் சமாதானம் பேசிக்கொண்டிருக்கிறேனே. நீயேன் இடையில் என. வலையுலக பஞ்சாயத்துக்காரர்கள், உண்மையில் சினிமாவில் பத்திரிக்கைகளில் படிக்கும் பஞ்சாயத்துக்காரர்களின் அலும்பிற்கு குறையாயது. 7:18 PM Jun 3rd via web in reply to peyarili

வளமையாகவே திரைப்படங்கள் பார்த்துக் கொண்டு வருகிறேன், மொக்கையாக இருந்தாலும் வேறு வழியின்றி உடன் வரும் மனைவி இதுவரை க்ம்ப்ளெய்ண்ட் செய்யவில்லை. சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் தமிழில் ஆங்கிலத்தில் வரவில்லை. ராஜ்நீதி நன்றாக இருப்பதாக மசந்த் சொல்லி அறிகிறேன், போய் வரவும் ஆசை. Karate Kid படமும் பார்க்கவேண்டும், ட்ரைலர் நன்றாக இருக்கிறது, என் மனைவிக்கு பிடித்த படமாய் இருக்கலாம்.

ப்ரெஞ்ச் ஓபனில் ஃபெடரரையும் அதற்குப் பின் சோடர்லிங்கையும் சப்போர்ட் செய்து கொண்டிருந்தேன். பைனல்ஸ் ஸ்டெரெய்ட் செட்களில் முடிந்ததில் வருத்தம். விம்பிள்டன்னில் மீண்டும் ஃபெடரரின் க்ளாசிக் ஆட்டத்திற்காக காத்திருக்கிறேன்.

உலகக் கோப்பை கால்பந்தில் ஆரம்பத்தில் இருந்தே, ஜெர்மனிக்கு சப்போர்ட் செய்து வந்திருக்கிறேன். இப்பொழுதும் கூட, Miroslav Klose எனக்குப் பிடித்த ஆட்டக்காரர். பார்கலாம் இந்த முறை என்னாகிறது என்று. அர்ஜெண்டினா வரும் போலிருக்கிறது, ப்ரெசில் Vs அர்ஜெண்டினாவோ இல்லை ஜெர்மனி Vs அர்ஜெண்டினாவோ எனக்குப் பிடித்த பைனல்ஸாக இருக்கும்.

Related Articles

2 comments:

  1. Are you married!

    ReplyDelete
  2. வா மச்சி :) உனக்காக தான் காத்திருந்தேன், நல்ல சிறுகதை படித்து எத்தனை நாள் ஆயிடுச்சு! சீக்கிரமா நிறைய பதிவுகள் போடுங்க!

    சாரு நித்யானந்தா பிரச்சனையப்ப உமது ஞாபகம் வந்தது, ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பே ஜோசியம் சொல்லிருந்தீங்க!

    பதிவுகளுக்கு காத்திருக்கின்றேன்!

    ReplyDelete

Popular Posts