In சினிமா சினிமா விமர்சனம்

ராவன்

எனக்குப் பிறக்கப்போகும் பையனுக்கு ராவணன்னு பெயர் வைப்பேன்னு தலைகீழா நிற்கிற ஆள் ராவணன் படத்திற்கு போகாமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம், ஆனால் நான் ராவனுக்குப் போனேன். எல்லாம் பெங்களூர் மல்டி ப்ளக்ஸுகள் செய்து சோதனை.

படம் நடக்கிற சூழல் இந்திக்கு பிரச்சனையில்லை. படத்தின் மிகப்பெரிய பிரச்சனை ஐஸ்வர்யா ராய், இந்த அத்தைக்கு நடிக்கத் தெரியாது என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்பும், மணிரத்னம் போன்றவர்கள் விளம்பர அடையாளத்திற்காக இவர் பின் தொங்குவது கொடுமை.

படத்தில் இவருடைய க்ளோசப்பு காட்சிகள் நம்மை அப்புகின்றன. ஐஸ்வர்யா ராய்க்கு தகுதியான படம் எந்திரனாகத்தான் இருக்க முடியும், இரண்டு சாங், கொஞ்சம் அழுகை, கொஞ்சம் காதல் வகையறா தான் ஐஸ்வர்யா ராய் செய்ய முடியும். உணர்ச்சியற்ற இவர் முகம் படத்தில் தேவைப்படும் subtle ஆன எதையும் செய்ய இயலவில்லை.

இந்திப் படத்தில் நன்றாய் பெயர் வாங்குவது ரவி கிஷனும், கோவிந்தாவும் தமிழில் கோவிந்தா கதாப்பாத்திரத்தை கார்த்திக் செய்வதாக அறிகிறேன். பாவம்.

படத்தில் நான் மிகவும் எதிர்பார்த்தது, மணிரத்தினத்தின் இராமாயண interpretation ஆனால் அப்படி ஒன்று மணிரத்தினத்திடம் இருந்து எதிர்பார்க்கக்கூடாது என்று முந்தைய பிரதிகளில் இருந்து எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் கொடுமைக்கு நாம் விஜய் இடமே கூட சரி இந்தப் படத்தில் ஏதாவது இருக்கும் என்று ஒவ்வொரு படத்திற்கும் செல்பவர்கள், மணிரத்தினத்திடம் எதிர்பார்க்கக்கூடாது என்று ஒன்றும் இல்லை.

இராமாயணத்திலிருந்து மொத்தமாக பிறழாமல் ஆனால் இராவன் சீதைக்காக இராமனை விட்டுவிடுவது போலவும், சீதைக்கான இராவன் மீதான பிடிப்பு மட்டும் மணிரத்தினத்தின் interpretation ஆக ஒப்புக்கொள்ள முடியவில்லை, Mr. and Mrs. Iyer படம் இப்படியான ஒன்றை முதலிலேயே அளித்திருக்கிறது. கடைசி வரையிலும் சீதையை இராவன் தொடவேயில்லை என்பது கம்பனுடைய interpretationன் பாதிப்பு என்று நினைக்கிறேன். Mr. and Mrs. Iyer லெவலையே இன்னும் இராவன் தாண்டலை இந்த விதத்தில் என்று நினைக்கிறேன். Dev D அளவிற்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பதில் அர்த்தமில்லை.

நான் தேவ் டி பாணி படங்களையே இந்த விதத்தில் விரும்புகிறேன். இதன் காரணமாகவே எனக்கு ஓம்காராவும் ராஜ்நீதியும் பிடிக்காமல் போனது.

Related Articles

3 comments:

  1. Why should one go to a movie with an expectation of what the story line would be like?
    The basic idea of a movie is defeated even before watching it if one knows what to expect of it!
    I dont think this movie should be even loosely associated with the epic Ramayana.

    Aishwarya looks old and cannot bring our emotions and its underlying expressions in some places - Agreed, but I think AB's performance is much more immature...his mannerism reminded me of Surya in Tamil Ghajini....As opposed to Vikram in Tamil Raavanan, AB did not do justice to his role.
    Honestly, when the cast did not do so very well, I dont see why the whole world is blaming Mr.Maniratnam for the movie being presented in a not-so-expected way or the way it was hyped by none other than the audience/people themselves.

    ReplyDelete
  2. சலோனி,

    எல்லோருக்கும் ஏதோவொரு வகையில் ஒரு படத்தைப் பற்றிய முன்முடிவு இருக்கும். ஆனால் இந்தப் படம் பற்றிய செய்திகளில் இருந்து படம் மட்டும் தான் பார்க்கலை மற்ற விஷயங்கள் எல்லாமே பெரும்பாலும் படம் பார்ப்பதற்கு முன்பாகவே ஊகிக்க கூடிய அளவிலேயே இருந்தது.

    இந்தப்படத்தை இராமாயணத்திலிருந்து மாற்றிப் பார்க்க வேண்டிய அவசியம் நிச்சயம் கிடையாது.

    நான் தமிழ் படம் இன்னும் பார்க்காததால் என்னால் அதைப்பற்றி எதுவும் சொல்ல முடியாது.

    ReplyDelete
  3. // Mr. and Mrs. Iyer லெவலையே இன்னும் இராவன் தாண்டலை //

    இந்தப்படம் பாத்த (ஐயர்) ஒருசிலருக்கும் கடசி காச்சில இந்த எண்ணம் வரத்தான் செஞ்சிருக்கு.

    ReplyDelete

Popular Posts