தலைவியைப் பிரிந்து பொருள் கொண்டுவரச் சென்ற பாலைநிலத் தலைவனை ஒத்த மனநிலையிலேயே இருந்தேன், சிந்துவின் தொல்லை கொஞ்சம் குறைந்திருந்தது, அவளுக்கு எதனாலோ ஜெயஸ்ரீயை பிடித்துப் போயிருந்தது, அவர்கள் இருவரும் வெளியில் போய்வருவதாய் சொல்லி கிளம்பியதும் விட்டது தொல்லை என்றுதான் நினைத்தேன். டெல்லியிலிருந்து சென்னை வந்ததில் இருந்து கனத்திருந்த மனம் அப்பொழுதுதான் கொஞ்சம் இளகத்தொடங்கியிருக்கும, உடனே அங்கிருந்து தொடங்கிய இன்னொரு மனயிழை சிந்துவிடம் அவள் அப்பாவைப் பற்றி வேறு எப்படியும் சொல்லியிருக்கவேண்டும் மீண்டும் கனமாக்கத்தொடங்கியது. உமையாளிடம் இதை எப்படி சிந்துவிடம் சொன்னேன் என்பதை சொல்லியே ஆகவேண்டும் என்று நிர்பந்தித்தது, சிந்து என்னைச் சீண்டிவந்தது வரை உமையாள் அறிவாள் என்றாலும். அவளிடம் காதல் சொல்லி எடுத்துக்கொண்டு பின்னர் தான் இந்தக்கதையைச் சொன்னேன் என்பது அறிந்திருக்கவில்லை. சிந்துவிடன் களவுகொள்வதற்காக நான் அப்படிச் செய்யவில்லை என்பதை எனக்கு நானே உறுதிபடுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. சிந்து எனக்கு வாய்ச்சுகம் அளித்ததையோ, ஸ்ட்ரிப் டீஸ் நடனம் ஆடி பாதியில் விட்டுப் போனதையோ நான் உமையாளுக்கு சொல்லியிருக்கவில்லை. ஆனால் அவள் புரிந்துகொண்டிருப்பாள் என்று நினைத்திருந்தேன். அளவுகடந்துவிட்டதாகத்தான் மீண்டும் உட்கார்ந்து அந்தநாளை நகர்த்திப் பார்த்த பொழுது தோன்றியது, உமையாள் என்னை முழுவதுமாக நிராகரிப்பதற்குக்கூட அதுமட்டுமே போதும் என்று மனம் தள்ளாடியது. சிந்து என்னை இப்படி தனியாகவிட்டு ஜெயஸ்ரீயுடன் போயிருக்கவேண்டாம் என்று கோபமாய் வந்தது.
‘நலம்கேழ் ஆகம் பூண்வடு பொறிப்ப, தெள் நீர் தண் ஆன் பொருநை மணலினும் பல, முயங்குகம் சென்மோ’, என் மனமும் உமையாளின் முலைகள் என் மார்பில் வடு ஏற்படுத்துமாறு மணலை விடவும் அதிகமாக முயங்க வேண்டும் என்றுதான் ஆசை கொண்டிருந்தது, சிந்து என்னை தொல்லை செய்துகொண்டிருந்த வரை. அவள் நகர்ந்ததுமே அங்கிருந்து நகர்ந்த காதல்மனம் உமையாளிடம் சிந்துவிடம் கொண்ட களவை சொல்லவேண்டுமாயும் அதன்காரணமாய் நடக்கக்கூடிய சாத்தியங்களை அசைபோடத்தொடங்கியது. சிந்துவின் தந்தை பற்றிய ரகசியத்தை இப்படித்தான் சொல்வாய் என்றிருந்தால் உன்னிடம் அந்தக் கடமையை விட்டிருக்கமாட்டேன் என்று உமையாள் கடுமுகம் காட்டிவிடுவாளோ என்றிருந்தது. சிந்துவிடம் நீ காதல் சொல்லியிருக்கக்கூடாது என்று உமையாள் என் அறையின் வெவ்வேறு இடங்களில் இருந்து என்னை நிராகரித்து, இனி என்னிடம் பேசாதே என்று சொல்லி விலகுவது மனக்கண் முன் வந்து போனது. ஒருவேளை இதெல்லாமும் உமையாளுடைய திட்டமாகயிருக்குமோ என மனம் சஞ்சலித்தது, என்னையும் சிந்துவையும் ஒன்றாக அனுப்பிவைத்தால் இது இப்படித்தான் முடியும் என்று நினைத்திருப்பாளோ, என் மனம் இப்படித்தான் யோசிக்கும், கடைசியில் இப்படித்தான் முடியும் என்று கண்ணாடி போல் என் மனம் அவளுக்கு தெளிவாகக் காட்டியிருக்கவேண்டும். உமையாள் மீதும் கோபம் வந்தது. உமையாளிடம் இதற்கெல்லாம் அவள்தான் காரணம் என்று சொல்லி அவள் நிராகரிப்பை நிராகரிக்கவேண்டும். காதல் சொல்லியிருந்தாலும் அது ஒரு நாடகமே, களவு கொண்டிருந்தாலும் அது சிந்துவை முகிழச் செய்யவே ஒரு கணம்கூட அவள் என் மனதில் இல்லை என்பதை எப்படி உமையாளை நம்பவைப்பது. வேண்டுமானால் நீ கூட யாரிடமாவது செக்ஸ் வெச்சிக்கோயேன் என்று சொல்லலாமா என்று நினைத்தேன்.
அப்பா சிந்துவைத் தேடிக்கொண்டு என் அறைக்கு வந்தார், அவரிடம் உமையாளைப் பற்றியும் சிந்துவைப் பற்றியும் சொல்லி ஆலோசனை கேட்கலாம்தான். உமையாளை பெருந்திணைப் பெண்ணாகவும் சிந்துவை கைக்கிளை காமஞ்சாலா இளையோளாகவும் அப்பா எடுத்துக்கொள்ளக்கூடும் தான். ஆனால் இவர்களுடனான என்னுடைய தொடர்பை இலக்கியப்பிரச்சனையாக மட்டும் அவரால் பார்க்கமுடியாமா என்று தெரியவில்லை, தனிப்பட பெருந்திணையையும் கைக்கிளையையும் அவர் கைக்கொள்வார் தான், ஆனால் இரண்டையும் சேர்த்து எப்படி? அதுவும் ஒரே நேரத்தில்? அப்பா உன் வழக்குக்கு நான் நீதிபதியாக முடியாது, அறம் பத்தி நான் பாடமெடுக்க முடியாது, அம்மாவோ பொண்ணோ ஏதோ ஒன்னு நீயே முடிவெடுத்துக்கோ. ரெண்டுபேரும் வேணும்னா கஷ்டம். அம்மான்னா உனக்கு குழந்தை பெத்துக்கொடுக்க முடியாது, பொண்ணுன்னா முடியும். உனக்கான அறம் எது தேவை எதுன்னு நீதான் முடிவு பண்ணனும். முடிவெடுத்த பின் அது வளையுமான்னு யோசிச்சிக்கலாம்னு ஆலோசனை சொல்வார் என்று ஊகித்தேன். மனதில் எங்கேயிருந்து சட்டென்று குழந்தை பற்றிய எண்ணம் வந்தது தெரியவில்லை, மனம் இப்படி அலைபாய்ந்த பொழுதுதான், ‘எங்கடா உன் கேர்ள் ப்ரண்ட்’ என்று கேட்டார். மனம் ‘what an absurd statement’ என்று நினைத்தது. ‘அவ சென்னையை சுத்திப் பார்க்க இன்னொரு ப்ரண்ட் கூட போயிருக்கா’ சொல்லிய மனம் அங்கிருந்து குதித்து ஆல்பர்ட் காமுவிடம் சென்றடைந்தது. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறதா என்று தேடி நான் காமுவிடம் செல்லவில்லை, அப்படியொன்று இருக்கமுடியாது என்று நானாய் உணர்ந்த பிறகு தான் காமு அகப்பட்டார். அம்மாவிடம் இருந்து சார்த்தரும் காமுவும் முன்பே அறிமுகம் ஆகியிருந்தார்கள். நான் சார்த்தரிடம் இருந்து பின்னர் காமுவை அடைந்தேன். பின்பொருநாளில் அபத்தம் அறிமுகமானது. அப்பொழுது சிந்து, உமையாள், காதல், களவு, கைக்கிளை, பெருந்திணை என்று அலைந்த மனதிற்கு காமுவும் அபத்தமும் ஆறுதலளித்தது. எல்லாமே அபத்தமாய்ப்பட்டது.
உமையாள் அழைத்திருந்தாள், காமுவில் எவ்வளவுநேரம் திளைத்திருந்தேன் என்று நினைவில் இல்லை. வீடியோ காலில் வரச்சொன்னேன், ஏன் என்று முதலில் கேட்டவள், நான் பதில் சொல்லும் முன்பே வந்தாள். எப்பொழுதையும் போல் மெனக்கெட்டு திருத்தியிருந்த முகம், புன்சிரிப்பு, மெத்தையிலிருந்து நகர்ந்து வந்து ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்றாள். அலங்கார விளக்குகளால் இன்னமும் பளிச் என்று முகம் தெரிந்தது. இரவு உடையிலிருந்து மாறி புடவையில் இருந்தாள், வீட்டு உபயோகத்திற்கான புடவையில்லை, எங்காவது வெளியில் சென்று வந்திருக்கவேண்டும் இல்லை செல்வதற்காக தயாராகியிருக்கவேண்டும். அவள் சிந்து எங்கே என்று கேட்காதது எனக்கு மகிழ்ச்சியாகயிருந்தது, அவள் பெயர் வந்தால் தேவையில்லாமல் மீதமும் ஞாபகத்தில் வரும். ‘காட்டேன்…’ என்றென். நான் எதை என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் அவளுக்குத் தெரிந்துதானிருந்தது. முதலில் மறுத்தாள், அனிச்சையாய் திரும்பி கதவைப்பார்த்தாள், மேஜர் வீட்டில் இருக்க நியாயம் இல்லை, மீதமிருவரும் சென்னையில் ஆனாலும் மனம் கதவை நோக்கி அவளைத் திருப்பியது. அவள் அறை கதவு திறந்திருக்கவேண்டும், ஆனால் வீட்டின் கதவுகள் திறந்திருக்க வாய்ப்பில்லை. நான் அவளிடம் அதைக்கேட்டதில்லை, அதற்கான தேவையும் வந்ததில்லை, நாங்கள் அதைப்பற்றி பேசியிருக்கிறோம். சிந்து ஒருநாள் என்னிடம் நாம ரெண்டு பேரும் மாஸ்க் போட்டுக்கொண்டு வீடியோ எடுப்போமா என்று கேட்ட பிறகான ஒரு நாள். அவளுக்கு வீடியோ காலில் காண்பிப்பதில் இருக்கும் பிரச்சனைகளை அன்று சொல்லியிருந்தேன். ‘ப்ளீஸ் வேண்டாமே’ என்று வெட்கப்பட்டாள். பாலைத்தலைவனுக்கு இல்லாத கொடுப்பினை அது. ‘கள்ளின் மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண், சில்மொழிப் பொலிந்த துவர்வாய், பல் மாண் பேதை’யைப் பிரிந்து வந்திருந்தாலும், ‘வாங்கு அமை புரையும் வீங்கு இறைப்பணைத் தோள், சில்சுணங்கு அணிந்த, பல் பூண் மெல் முலை, நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து’ என்னாலும் அவளுடைய அழகிய மார்பைத் தழுவமுடியாவிட்டாலும் பார்க்கமுடியும் உமையாள் கருணைகாட்டினால். காட்டினாள்.
ஜாக்கெட் உடன் புடவையை இணைத்திருந்த ஊக்கை கழட்டியவள் புடவைத்தலைப்பை மட்டும் எடுத்து கையில் வைத்துக்கொண்டாள். ‘வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடு ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க’, அவள் நிறத்திற்கு கான்ட்ராஸ்டான ஜாக்கெட் அணிந்திருந்ததால், அவள் க்ளவேஜூம் முத்து ஒன்று அங்கிருந்து பிரகாசிப்பது போலவேஜொலித்தது. அவள் தன்னைத்தானே பார்த்துக்கொள்வது போல இடப்பக்கமும் வலப்பக்கமும் கொண்டு போய் பார்த்துக்கொண்டாள். இதைத்தொடங்கிய பொழுது நான் அதற்குமேல் அவளிடம் யாசிக்க நினைத்திருக்கவில்லை, அவளாகத்தான் ‘போதுமா?’ என்று கேட்டாள் நான் பதில் சொல்லவில்லை. ஜாக்கெட் ஹூக்குகளைக் கழட்டினாள், நான் என் கேமராவை முகத்திலிருந்து திருப்பி, என் படுக்கையறைக்குத் திருப்பினேன். காலம் அவள் முலையிடையில் கால் நீட்டிப் படுத்திருந்தது. ஜாக்கெட் போய் பிராவும் போய் யுகம் ஆனது போலிருந்தது, அவள் ‘நானும் பார்க்கிறேனே…’ என்று சொல்லும் வரை. பெண்ணுடல் ஒரு ஆர்ட் பார்ம், ஆண் உடல் இப்படிப் பார்ப்பதற்காக அல்ல என்பதால் தான் கேமரா திருப்பியிருந்தேன். கேமரா என்பக்கம திருப்பியதும் கொஞ்சமாய் அசைத்துக் காட்டினாள், பிசைந்து காட்டினாள், காம்பு பிடித்து கொஞ்சம் தூக்கிக் காட்டினாள். ஒரு நிமிடம் ‘அரும்புகளை உச்சியில் ஏந்திய அமுது விளைந்த இணைக்கலசங்கள்’, மற்ற நிமிடம் ‘மூத்தமதயானை தன் முகத்தில் ஏந்திய இரு தந்தங்கள்’. கம்பன் சீதையின் நேர்க்காட்சியையும் பக்கவாட்டுக் காட்சியையும், அவற்றின் நெகிழ்வை, வளைவை நுனி மேலெழுந்த கூர்மையை, திரும்பிய பொழுது அவற்றின் அசைவையும் சொன்ன காட்சி கண்முன்னே நடந்தேறியது. ‘ப்ளீஸ் போய் குளி’ என்று எப்பொழுதையும் போல் வற்புறுத்தினாள். காமுவின் அபத்தம் அளித்த ஆறுதலைவிடவும் இது வலிமை கொண்டதாகயிருந்தது.
0 comments:
Post a Comment