காலையில் விழிப்பு தட்டியபொழுது ஏற்கனவே விடிந்திருந்தது. எப்பொழுதையும் போல் அம்மா-அப்பா ஓட்டப்பயிற்சி முடிந்து வீடு திரும்பிய சப்தம் கேட்டது. சிறிது நேரத்தில் காலம் முழுக்க பழகிய அம்மா காபி போடும் சப்தம். சிந்து இன்னமும் என்னை ஒட்டியபடிதான் படுத்திருந்தாள். இரவுவுடை நெகிழ்ந்திருக்க, போர்வை விலகியிருக்க குழந்தை போல் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளை எழுப்பிவிடாமல் விலகி குளியலறை சென்று வந்ததும் என் கம்ப்யூட்டர் டேபிளின் மீது காப்பி டம்ளர் முளைத்திருந்தது. அப்படியே சிந்துவின் மீது போர்வையும். நானே செய்திருக்கவேண்டும், அம்மா என்ன நினைத்திருப்பார் என்று யோசிக்கமுடியவில்லை. காபி கொஞ்சம் அதனுடைய வேலையைச் செய்தது. கீழிறங்கிப் போய் சமையல்கட்டில் நின்றிருப்பேன், ‘கொடுத்து வெச்சவன்டா ராஸ்கல் நீ!’ என்று சொல்லி சிரித்தவர், ‘சாரி நான் நீங்க ரெண்டு பேரும் எந்திருச்சிட்டீங்கன்னு நினைச்சேன். சிந்து தூங்கிக்கிட்டிருப்பான்னு தெரிஞ்சா வந்திருக்க மாட்டேன். நான் அவ எழுந்ததும் அவகிட்டையும் மாப்பு வாங்கிக்கிறேன்.’ என்றார். அவர்களுடைய வீடு, நான் இப்பொழுது அவருகளுக்கு விருந்தினர் போலத்தான் என்றாலும் கொஞ்சம் நேர்மையாய் அதைச் சொல்லியது போலத்தான் இருந்தது. எனக்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை, மனம் எங்க இரண்டுபேர்த்துக்கும் இடையில் நேத்தி நைட் ஒன்னும் நடக்கலை என்று சொல்லி அழணும் போலிருந்தது. அதைச் சொன்னால் பின்னர் நேத்தி நைட்டு நடக்கலை அப்ப முன்னாடி என்றொரு கேள்வி அவரிடம் இருந்து வராது என்று அறுதியிட்டு சொல்லமுடியவில்லை. ‘இன்னொரு காபி கொடேன்’ என்றேன், ‘சிந்துவுக்கு போட்டு கொண்டுவந்தது இருக்கு, ஒரு நிமிஷம் இரு சூடுபண்ணிக்கொடுக்குறேன்.’ அவர் சூடுசெய்வதற்கு தயாரானார்.
‘இப்பல்லாம் டென்னிஸ் ஆடுறியாடா?’ அப்பா தூரத்தில் இருந்து கேட்டார். எப்பவாவது ஆடுவேன்பா பதில் சொன்னேன், ‘இன்னும் இரண்டு மூணு நாள் இருப்பேன்னா வாயேன்டே ஒரு செட் ஆடுவோம். Your mom has improved a lot. She might even surprise you. If Sindhu plays tennis we could play doubles.’ அவருக்கு இதை என்னை முதலில் பார்த்ததிலிருந்து கேட்க ஆசையாயிருந்திருக்கும், இப்பொழுதுதான் மனசு இறங்கிவந்து கேட்டார். ‘நீயே அவகிட்ட கேளேன்பா, எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. அவங்கம்மா அவளை எல்லா க்ளாஸ்லயும் போட்டாங்க. எனக்கு அவ டென்னிஸ் ஆடுவாளான்னு தெரியாது.’ சொல்லிவிட்டு உதடைக் கடித்துக்கொண்டேன், அம்மாவோ அப்பாவோ அங்கிருந்து ஒரு உரையாடலை, சிந்துவின் அம்மாவை நோக்கி நீட்டிவிடவேண்டாம் என்று வேண்டினேன். வேண்டுதல் நிறைவேறவில்லை. அம்மா காத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும் எப்பொழுது நானோ சிந்துவோ உமையாளின் பெயரை உச்சரிப்போம் என்று. சிந்து மிகச்சரியாக உமையாளின் பெயரை எடுக்காமல் தவிர்த்து வந்தாள், நான் தான் வாயைவிட்டிருந்தேன். ‘உன்கிட்ட அவங்க ஃபோட்டோ இருந்தா காட்டேன்டா, அவங்களைப் பார்க்கணும் போலிருக்கு.’ என்றார். அவர் உமையாளைத்தான் கேட்டார். ‘தெரியலைம்மா, தேடிப்பார்க்கிறேன். போனில் இருந்த ஞாபகம் இல்லை.’ பொய்தான் சொன்னேன். அவள் எனக்கு நாளொருமேனிக்கு என்று புகைப்படம் அனுப்பியபடிதான் இருந்தாள்.
இந்தக் கலவரத்திற்கு நடுவில் சிந்து இறங்கிவந்தாள், அவள் பிரா அணிந்திருந்தது தெரிந்தது, அப்ப கீழேயும் போட்டிருப்பாள் என்று ஊகித்தேன். சிந்து என் வீட்டில் நாகரீகமாகத்தான் நடந்து கொண்டிருந்தாள், அவளுக்கும் தெரியாது அம்மா என் அறைக்கு சொல்லாமல் கொள்ளாமல் வருவார்கள் என்று. ‘காபி போடட்டுமா சிந்து?’ அவளைப் பார்க்காமலேயே அவள் இறங்கிவரும் சப்தத்தை வைத்தே அம்மா கேட்டார்கள். ‘ப்ளீஸ், கொடூரமான இந்த தலைவலியில் இருந்து உங்க பில்டர் காப்பிதான் காப்பாத்தணும் ப்ளீஸ் கொஞ்சம் ஜாஸ்தியாவே தாங்களேன்.’ என்றாள். அம்மாவின் பில்டர்காபி நாங்கள் குடிக்கும் லாட்டே, காப்பசினோவின் மூன்றில் ஒரு பங்குதான் வரும். எனக்கும் காலையில் குடித்தது போலவே இல்லாததால் தான் இன்னொன்று கேட்டிருந்தேன். அவள் நேராய் அப்பாவிடம் போய் உட்கார்ந்துகொண்டதும், அம்மா திரும்பி அவளைப் பார்த்தது தெரிந்தது. ஒரு நிமிடம் தான், ஒரு பார்வைதான். அவள் ப்ராபோடாமல் கீழேவருவாள் என்று அம்மா நினைத்திருக்க மாட்டார்கள் தான், அவளும் எங்கேயே தேடி ஒரு ஷாலை கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு வந்தவள், மாடியில் இருந்து கீழிறங்கியதும் தோள்ப்பட்டையில் போட்டுக் கொண்டிருந்தாள். அனிச்சையான ஒரு பார்வைதான். நான் அம்மாவைப் பார்த்து சிரித்தேன். அம்மா கண்பார்வையால் சாரி என்றார்.
கேட்டில் ஏதோ சப்தம் கேட்க அப்பா எழுந்து என்னவென்று பார்க்கச் சென்றார். அம்மா ‘உனக்கு சூடுபண்ண அவளோட ஒரிஜினல் காபியை அவளுக்கே கொடுத்துடுறேன். நம்ம எல்லாத்துக்கும் புதுசா பில்டர் போட்டு காபி போடுறேன் ஓக்கேவா?’ கேட்டபடி சூடுபண்ணிய காபியை அவளிடம் கொடுக்கச் சென்றார். நானும் யார் வெளியில் என்று பார்ப்பதற்காக வாசல்வரை சென்றேன். அம்மா சிந்துவிடம், ‘சாரி நீ தூங்குறேன்னு தெரியாம மேல வந்துட்டேன், நீ அசந்து தூங்கிக்கிட்டிருந்த. நான் தான் பெட்ஷீட் போத்திவிட்டேன்.’ சிந்துவிற்கு புரியவில்லை, இதற்கு எதற்கு மன்னிப்பு கேட்கணும் என்று, திரும்பி என்னைப் பார்த்தாள், அம்மா உடனே, ‘இல்ல உன் நைட்டி கொஞ்சம் விலகியிருந்தது. அதான்…’ சிந்து புரிந்துகொண்டவளாய், ‘இதுல என்னயிருக்கு ஆன்ட்டி நீங்களும் என் அம்மா மாதிரிதான். நைட்டு கொஞ்சம் கசகசன்னு இருந்துச்சு அதான்…’ சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள், நான் காதுகளை மட்டும் அவர்கள் பக்கம் வைத்துக்கொண்டு பார்வையை கேட்டை நோக்கித் திருப்பியிருந்தேன். ‘ஏய் அதெல்லாம் ஒன்னுமில்லை நானும் ப்ராவையெல்லாம் கழட்டிவெச்சிட்டுத்தான் தூங்கறது. இவன் இல்லைன்னா வெளிய போனாதான் போடுவேன்.’ அம்மா மெதுவாய் பேசினாலும் கேட்டது. அம்மா எனக்காகத்தான் ப்ரா போட்டிருந்தார், சிந்து எனக்காகத்தான் கழட்டியிருந்தாள். ‘நீ சொன்னதும் தான் ஞாபகம் வந்துச்சி, உங்கம்மா ஃபோட்டோ இருந்தா காட்டேன். எப்படியிருப்பாங்கன்னு பார்க்கணும்னு ஆசையா இருக்கு. விசு ரொம்ப பிகு பண்ணுறான்.’ நான் அப்பா அழைக்க கேட்டிற்கு சென்றேன். அப்பாவுடைய ப்ரண்ட் ஒருவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார், என் மனது சிந்து இப்பொழுது என்ன செய்துகொண்டிருப்பாள் என்று பதறியபடியிருந்தது.
நானும் அப்பாவும் மீண்டும் வீட்டிற்குள் வந்த பொழுது சிந்துவும் அம்மாவும் மொபைல் போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர், நான் உமையாள் புகைப்படத்தையா காட்டுகிறாள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே, ‘Your mom must have had you when she was very young, she looks very pretty’ அந்த உரையாடலில் பங்கேற்க விருப்பமில்லாதவனாய் நேராய் ஏதோ வேலை இருப்பவனாய் மாடிக்கு நகர்ந்தேன். ‘எங்கடா ஓடுற, காபி ரெடியாய்டுச்சி குடிச்சிட்டுப் போ.’ நான் திரும்பி வரவேற்பறைக்கு வந்து ட்ரிபிள் சீட்டரின் நடுவில் உட்கார்ந்தேன் இந்தப்பக்கம் சிந்து அந்தப்பக்கம் அப்பா. உரையாடல் காபி கொண்டுவரச் சென்றிருந்தது. சிந்துவை அப்படி நைட்டியுடன் அதுவும் ஷால் அணிந்து பார்ப்பது கொஞ்சம் விநோதமாய் இருந்தது, காலையில் அவள் படுத்திருந்த நிலையை நினைவுபடுத்தும் மனதை ஒதுக்கித்தள்ள, அம்மா எதை வைத்து உமையாள் பற்றிய பேச்சை என்னிடம் எடுப்பாள் என்று யோசித்தேன். அம்மாவின் அறிவிற்குள் சிக்கிக்கொள்ளாமல் சிந்துவையும் உமையாளையும் எடுத்துக்கொண்டு டெல்லி மீண்டுவிடவேண்டும், காரியம் மட்டும் மீதமிருந்தது. போய்த்தான் ஆகவேண்டும், சிந்துவின் அப்பா வீட்டில் வற்புறுத்தி சொல்லியிருந்தார்கள். இன்னமும் எதற்காக நானும் சிந்துவும் சென்னை வந்தோம் என்று தெரியாது, சிந்துவின் அப்பா தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட ஒருவர், இது உமையாளின் ரகசியம் தற்சமயம் சிந்துவினுடையதும். இன்னும் ஒரு நூழிலை விலகினாலும் அம்மாவால் நான் ஏன் சிந்துவை அவர்களிடம் என் காதலி என்று அறிமுகப்படுத்தவில்லை என்று உணரமுடிந்துவிடும். அதுவும் சிந்து உமையாளின் புகைப்படத்தைக் காட்டியபிறகு, உமையாளின் இளமையின் வழியல்ல, நான் சிந்துவை மறுக்கும் வழிபிடித்து.
சமையலறையில் இருந்து அம்மா சிந்துவைக் கூப்பிட்டார், காபி கோப்பைகள் தான் பிரச்சனை என்றால் அம்மா என்னைக்கூட அழைத்திருக்க முடியும். சிந்துவை அழைத்தது எங்களுக்கான கோப்பைகளை கொடுப்பதற்கு அல்ல, அப்பா அவருடைய செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். நான் சமையலறையில் காது கொடுத்திருந்தேன், ‘நீ ஷால் போடணும்னு அவசியம் இல்லை. விசு அவங்க அப்பா எதுவும் நினைச்சிக்க மாட்டார். உனக்கு கம்ஃப்ர்டபிளா இருந்தா போட்டுக்க. உங்க வீடு மாதிரி நினைச்சிக்க என்ன?’ கேட்டது. ‘எனக்கு இந்த நைட்டியே கம்ஃப்ர்டபிள் இல்லை ஆன்ட்டி, தலைவலியால் அப்படியே கீழயிறங்கி வந்துட்டேன். இல்லைன்னா வேற ஏதாவதுதான் போட்டுக்கொண்டிருப்பேன்.’ என்றாள். எங்கே ப்ரா போடாமல் கீழிறங்கி வந்திருப்பாளோ என்று ஒரு நிமிடம் பார்த்த அம்மாதான், அவளுக்கு சுதந்திரமாய் இரு என்று பாடம் நடத்தியது. ப்ரா இல்லாமல் இறங்கியிருந்தாலும் அம்மா எதுவும் சொல்லியிருக்கப் போவதில்லை, அப்பா அந்த நண்பருடன் கிளம்பியிருப்பார், இல்லை அதை பொருட்படுத்தாமல் இப்பொழுதைப் போல் செய்தித்தாளில் கவனம் குவித்திருக்கவும் வாய்ப்பிருந்தது. ஒரு ஆங்கிலப் பேராசிரியருக்கும் என் தங்கையின் அம்மாவிற்குமான இடைவெளிதான் அவர் சிந்துவின் உடையை உற்றுப்பார்க்க வைத்திருக்கவேண்டும். அது ஒரு கவனச்சிதறல், மனம் ஒருமித்திருந்தால் அவர் அதை செய்வதில் இருந்து தன்னை காத்துக்கொண்டிருப்பார்.
நான் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. காபி முடித்ததும் குளிக்கக் கிளம்பினேன், சிந்து என்னைத் தொடரவில்லை. டவலுடன் வெளியில் வந்த பொழுது என் அறையில் தான் இருந்தாள், தங்கையின் உடைகள் சில அவள் வசம் இருந்தது. இன்னமும் நைட்டியில் தான் இருந்தாள், காத்திருந்தாளா என்று தெரியாது. நான் வெளியில் வந்ததும் நைட்டி நீக்கியவள் அவளுடைய ஆடையொன்றை உடுத்திப் பார்த்தாள். சரியாகத்தான் இருந்தது. நெஞ்சு பகுதியில் உடை கீழிறங்கத்தான் கொஞ்சம் முயற்சி தேவைப்பட்டது. தங்கையின் ரசனை சிந்துவின் உடலில் கொஞ்சம் அந்நியமாய் இருந்தது. நான் வேகமாய் என் உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு நகரத் தொடங்கிய பொழுது, ‘ஏன் நான் உன் தங்க ட்ரெஸ்ஸைப் போடக்கூடாதா?’ கேட்டாள், ‘தாராளமா போட்டுக்க தாயே, ஆனா காலங்கார்த்தால எனக்கு இது ஆகாது.’ அவள் அடுத்து இதே போல் ஒவ்வொரு ஆடையாய் கழட்டி மாட்டி என அவள் இளமையை மறுக்கவில்லை, ஆனால் நான் அவளிடமிருந்து மீண்டிருந்தேன் இன்னமும் உமையாள் சென்றடையவில்லை. சிந்து கோபம் கொண்டாள், ‘நான் தான் நேத்தே செஞ்சிவிடுறேன்னு சொன்னேன், இல்ல நீயே செஞ்சிக்கோன்னும் சொன்னேன். இது ஒரு ட்ரான்ஸாக்ஷன் மாதிரிதான். தேங்க்ஸ் கிவ்விவ். நீ அவன காரணங்காட்டி சொல்லாதே. இங்க யாரும் இல்ல, உங்கம்மாகிட்ட காட்டவா முடியும்? நீ ஒரு பெஸ்ட் ப்ரண்ட் மாதிரி, ப்ரண்ட்ஸ் வித் பெனிஃபிட் மாதிரி. எங்கம்மாவ சொல்லணும் வழவழன்னு இழுத்துக்கிட்டிருப்பாளாயிருக்கும், சின்னதா க்விக்கா ஒன்னு உனக்கு சொல்லிக் கொடுத்திருக்கணும்.’ நான் முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டேன், உமையாளை இழுத்தால் அதுதான் நடக்கும் என்று அவளுக்கும் தெரிந்திருக்கும். நான் திரும்பி உடை உடுத்திவரும் பொழுது அவள் கீழே சென்றிருந்தாள்.
0 comments:
Post a Comment