Showing posts with label Science ஜல்லிஸ். Show all posts
Showing posts with label Science ஜல்லிஸ். Show all posts

In Only ஜல்லிஸ் Science ஜல்லிஸ் சுய சொறிதல்

வாசகர் பரிந்துரை அரசியல், blogger wordpress அரசியல், கன்னடம் படிக்கலாம் வாங்க!

வாசகர் பரிந்துரை சம்மந்தப்பட்டு நிறைய மடல்கள் வந்த வண்ணம் இருந்தன. சொல்லப்போனால் அது எப்படி 20/20 வரைக்கும் போனதோ அப்படியே 0/40 கொண்டு வந்துவிட்டு பின்னர் ஆட்டத்தை முடிக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன். போய்த் தொலையுது என்று விட்டேன், நண்பர்கள் அதை இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். நன்றி நண்பர்களே 0 ற்கு கொண்டு வந்து விட்டால் இன்னும் சந்தோஷம்.

வாசகர் பரிந்துரை ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட தொடக்கத்தில் இருந்த அதற்கான importance சிறிது காலத்திற்கு முன்பு இல்லை. எல்லோரும் சூடான இடுகைகளில் கால் கழுவிக் கொண்டிருக்கையில், தமிழ்மணம் மீண்டும் முகப்பிறகு 'வாசகர் பரிந்துரை'யை கொண்டு வந்து இங்கையும் கொஞ்சம் கழுவிக்கோங்க என்று விட்டிருக்கிறது.

நண்பர் ஒருவர் நிறைய '-' வருவதைப் பற்றி வருத்தப்படுவதாக, நண்பரின் நண்பர் என்னிடம் சொன்னார். ஒரு முறை எனக்கும் இதே பிரச்சனை வந்த பொழுது தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா? என்று எழுதி அவர்களும் கவனித்து, பதிவர் பட்டை 'செப்புப்பட்டயம்' திற்கு 'நட்சத்திரக் குத்து' இல்லாமல் வந்து கொண்டிருந்தது. நான் mohandoss.comற்கு மாறும் வரை. இப்பொழுதைய செப்புப்பட்டயத்தில் '+' '-'ற்கான ஆப்ஷன் வந்தாலும் இரண்டுமே 99% செய்ய முடியாது. அதனால் விட்டுவைத்திருக்கிறேன். (அந்த 1% வேலையை யாரும் நண்பர்கள் செய்தால் தமிழ்மணத்திடம் மீண்டும் முறையிட வேண்டியது தான்.)

மேற்சொன்ன நண்பரின் பதிவுகளைப் படிப்பவன் என்ற முறையில் 'உள்ளடி அரசியல்' காரணங்களுக்காக அந்த '-' போடும் பழக்கம் இருப்பது புரிந்தது. நண்பர் இந்த வகையறா 'வாசகர் பரிந்துரை' பிரச்சனையை மூட்டை கட்டிவிட்டு நகரணும் என்பது என் அவா.

--------------------------------------------

WordPress, Blogger இரண்டில் bloggerஐயே அதிகம் சப்போர்ட் செய்தவன் என்ற முறை என் பதிவை, mohandoss.comல் ப்ளாக்கர் கொண்டே இணைத்தேன். பதிவு feedburner மூலம் வருவதால் கிடைக்கும் statistics அத்தனை தூரம் ப்ளாக்கரை தேர்ந்தெடுத்ததை சரியென்று மனதிற்குச் சொல்லவில்லை.

என் செப்புப்பட்டயம், பூனையாக இல்லாமல் போன சோகங்கள் பதிவுகளின் மொத்தமும் 2004லிலிருந்தே அவ்வப்பொழுது WordPressல் சேகரிக்கப்பட்டிருப்பதால் wordpress statistics அற்புதமாக இருக்கிறது. நாம் பதிவெழுதும் நாட்கள் தவிர்த்து இன்னும் சொல்லப்போனால் அதற்கு ஒரு வாரம் கழித்து எனக்கு வருகை 30 - 40 தான் இருக்கும் நாட்கணிக்கில் பார்க்கும் பொழுது. ஆனால் பதிவு எழுதுகிறோமோ இல்லையோ ஒரு நாளைக்கு 250 - 350 வருகை wordpressற்கு வருகிறது. கூகுள் தேடலிலும் wordpress பதிவே முன்னால் வருகிறது, புது domainஐ தொடங்கியவுடன் கூகுள் indexingற்காக Webmaster centralல் இணைந்து பதிவை இணைத்து எல்லாம் செய்தும் கொஞ்சம் வேலை காட்டிக் கொண்டிருந்தது என் புது domain.

இப்பொழுது பிரச்சனையில்லை 'செப்புப்பட்டயம்' என்று தேடினால் blog.mohandoss.comற்கு வருகிறது, முன்னர் google index சரிவர செட் ஆகாததால் என் wordpress பதிவிற்கோ இல்லை AnyIndianன் உடைய பக்கமான பாலகுமாரனின் செப்புப்பட்டயம் புத்தகத்திற்கோ சென்று கொண்டிருந்தது.

ஆனால் இப்பொழுது என் kundavai.wordpress.com பதிவிற்கு இருக்கும் கூகுள் ரேங்க் 4, என் blog.mohandoss.comற்கு வர எவ்வளவு நாட்கள் ஆகுமோ? SEO எல்லாம் அத்தனை தூரம் தெரியாவிட்டாலும் இந்த விஷயத்தில் wordpress, bloggerஐ விட நன்றாக இருக்கிறது என்றோ சொல்வேன்.

--------------------------------------------
என் கம்பெனியில் தேவையென்றால், பெங்களூருவில் கன்னடத்தில் பேச கஷ்டப்படுகிறீர்கள் என்றால் கம்பெனி உங்கள் தனிநபர் விருப்பத்தின் பெயரில் கன்னடம் கற்றுக் கொடுக்கும் என்றும் விருப்பப்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என்றதும் நானும் 'yes' பட்டனைத் தட்டி சேர்ந்து கொண்டேன்.

சொல்லப்போனால் பெங்களூரில் இருப்பதற்கு நல்ல உபயோகமாக வகுப்புகள் இருப்பதால் அதை ஒரு பதிவாக தர உத்தேசம். நான் இங்கே எழுதுவதும் தனிநபர் விருப்பத்தின் பெயரில் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கே. அவர்கள் சென்ற வழியிலேயே நானும் செல்கிறேன்.

சரி இனி கன்னடம்,

நானு மோகன்தாஸ் - நான் மோகன்தாஸ்

நீவு யாரு? - நீங்க யாரு?

நிம்ம ஹெசுரு ஏனு - உங்க பெயர் என்ன?

நன்ன ஹெசுரு மோகன்தாஸ் - என் பெயர் மோகன்தாஸ்

நிம்ம கெலசா ஏனு - உங்கள் வேலை என்ன?(அல்லது) நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?

நிம்ம தந்தைய ஹெசுரு ஏனு - தந்தைய - அப்பாவுடைய
நிம்ம தாயிய ஹெசுரு ஏனு - தாயிய - அம்மாவுடைய
நிம்ம அக்கன ஹெசுரு ஏனு - அக்கன - அக்காவுடைய
நிம்ம தங்கிய ஹெசுரு ஏனு - தங்கிய - தங்கச்சியுடைய
நிம்ம அண்ணன ஹெசுரு ஏனு - அண்ணன- அண்ணனுடைய
நிம்ம தம்மான்ன ஹெசுரு ஏனு - தம்மான்ன - தம்பியுடைய
நிம்ம கண்டன ஹெசுரு ஏனு - கண்டன - கணவனுடைய
நிம்ம ஹெண்டத்தியிய ஹெசுரு ஏனு - ஹெண்டத்திய - மனைவியுடைய

இவத்து - இன்று
நாளே - நாளை
நினே - நேற்று
நாடிட்டு - முந்தா நேற்று
மொன்னே - நாளை மறுநாள்

யாரது - யார் அது?
யாவத்து - எது?

நந்து - என்னுது
ஈ பேனா நந்து!
ஈ புஸ்தகா நந்து!

இது தொடரும்...

-------------------------------------------------------

தமிழ்மணத்தில் தொடர்ச்சியாக பதிவுகள் படிப்பவர்கள்(அல்லது என் பதிவுகளை) எண்ணிக்கையை நான் 150லிருந்து 200க்கு மேல் உயர்த்தமாட்டேன். அவ்வளவு பேர் தான் தொடர்ச்சியாக என்ன எழுதினாலும் படிப்பார்கள் என்றே நினைக்கிறேன். சமீபத்தில் கூகுள் ரீடரில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அதில் Recommendation என்று வரும் இடத்தில் வந்த பதிவுகள் அனைத்திற்கும் ஏறக்குறைய 70 - 120 வரை கூகுள் ரீடரில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்தது. இது நபர் எத்தனை பிரபலம் என்ற விகிதத்தில் மாறியது.

அப்படிப்பார்த்தால் ஏறக்குறைய 100 நபர்கள் ரீடரில் இருந்தே பெரும்பாலும் பதிவுகளைப் படிக்கிறார்கள், பதிவின் தீவிரத்தை - நோக்கை கொண்டு பின்னூட்டம் இடவோ பின்னூட்டம் படிக்கவோ பதிவை நாடுகிறார்கள். பெரும்பாலும் பின்னூட்டங்கள் வரவே வராது என்னும் பதிவுகளை க்ளிக்கி படிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இளவஞ்சியிடம் நான் ரீடருக்கு மாறியதைச் சொன்னதும் அவர் வழமை போல் என் கொள்கையை வம்பிழுத்து, போலி கம்யூனிஸ்ட் என்று திட்டினார். கொள்கையை மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்று வீம்பு பிடிப்பதனால் கொள்கைக் குன்று என்ற பெயரைத் தவிர்த்து ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்ததால் விட்டுவிட்டேன்.

பல பதிவுகளுக்கு இப்பொழுது என்னுடைய ஒரு ஹிட் கிடைக்காதாயிருக்கும் பெரும்பாலும் பின்னூட்டம் படிக்க விரும்பமாட்டேன் என்பதால் எனக்கு ரீடர் 100% ஏதுவாயிருக்கிறது. இடையில் feedஐ குறைத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். anonymous chatல் வந்த பல நண்பர்கள் ப்ளாக்கர், flickr போன்ற பல தடை செய்யப்பட்ட நாடுகளில் ரீடர் மூலமாக படிப்பதாகச் சொல்லியதாலும், நானும் ரீடருக்கு மாறியதாலும் அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Science ஜல்லிஸ்

உங்கள் பதிவை ஹாக்கினால் தப்புவது எப்படி?

இட்லிவடையின் பதிவை ஹாக்கிவிட்டார்கள் என்று ஒரு புரளியோ உண்மையோ கிளம்பி பெரிதாய் பேசப்பட்டது. அப்பொழுது இட்லிவடை gmail account hack ஆகிவிட்டதாகவும் blogger அக்கவுண்டை திரும்ப எடுத்துவிட்டதாகவும் சொன்னார். நிறைய பேர் இதைப்பற்றி பேசினார்கள் இட்லிவடை பதில் சொன்னாரா என்று தெரியாது ப்ளாக்கர் அக்கவுண்டை எப்படி திரும்பஎடுத்தார் என்று.

இந்தப் பிரச்சனை நடந்து கொண்டிருந்த பொழுது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார் இட்லிவடை சொல்வது சாத்தியமா என்று. நான் இல்லை என்று அவரிடம் கூறினேன். ஏனென்றால் இதைப்போல் செய்ய முயன்று தேடி கண்டுபிடிக்கமுடியாமல் இருந்ததால்.

எனக்கு பூனையாக இல்லாமல் போன சோகங்களுக்கும், செப்புப்பட்டயத்திற்கும் ஒரே மாதிரியான பெயர், ஃபோட்டோ வருவது பிடிக்கவில்லை. செகுவாராவை பூனைக்குட்டிக்கு அவ்டாரா போட்டு சக்க கடியா இருந்தது எனக்கு இது நடந்தது ப்ளாக்கரில் இருந்து பீட்டா ப்ளாக்கருக்கு மாறிய பொழுது. எல்லா பதிவும் ஒன்னா ஒரு மெயில் ஐடிக்கு போய்விட்டது.

இப்ப உங்களுக்கான சொல்யூஷன்.

முதலில் இன்னொரு gmail idக்காரரை உங்களில் பதிவில் எழுத இன்வைட் செய்யவேண்டும். எப்படியென்றால் Settings - Permissions - Add Authorல் ஒரு gmail idக்கு இன்வைட் அனுப்புங்க, அதை அந்த gmail idயில் இருந்து accept செய்துகொள்ளுங்கள்.

பின்னர் அந்த புதிய gmail id போட்டு ப்ளாக்கரை திறந்தால் நீங்கள் இன்வைட் எந்த பதிவில் இருந்து செய்திருந்தீர்களோ அந்தப் பதிவில் வெறும் எழுதுவதற்கான வசதி கிடைத்திருக்கும். இப்பொழுது திரும்பவும் உங்களின் பழைய gmail idல் ப்ளாக்கரைத் திறந்தால். அதே Settings - Permissionsல் Grant admin privileges என்று ஒரு லிங்க் வரும் இதைக் கிளிக்கினால் அந்த புதிய gmail idக்கு admin privileges கிடைக்கும், எப்படி உங்கள் பழைய gmail idக்கு இருக்கிறதோ அதைப் போல்.

இப்பொழுது பழைய gmail idக்கு admin rights இல்லாமல் author rights மட்டும் தான் இருக்கும். அந்த author rightsஐயும் எடுத்துவிட்டால் உங்கள் பதிவு உங்கள் புதிய gmail idயில் இயங்கத் தொடங்கும். author rights எப்படி எடுப்பதென்றால் அதற்குப் பக்கத்தில் இருக்கும் Delete பட்டனை குத்தி நீக்கலாம்.

இப்பொழுது நான் அப்படிச் செய்து என் பூனைக்குட்டியையும் செப்புப்பட்டயத்தையும் பிரித்துவிட்டேன். அதை டெஸ்ட் செய்ய இந்தப் பதிவு வந்த சில நிமிடத்தில் பூனனக்குட்டியில் weekend ஜொள்ளு வரும். இந்த விளக்கம் கொஞ்சம் மேம்போக்காக programming terms போல இருக்கலாம். உதவி வேண்டினால் தனியாக விளக்குறேன்.

இட்லிவடை இப்படித்தான் செய்தாரா என்றும் விளக்கலாம் ;)(அவரு பின்னூட்டம் போடுவாரா?)

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In Science ஜல்லிஸ்

கொண்டையை மறைப்பது எப்படி

பெரும்பாலும் இணைய உலகில் உலவுபவர்கள் அனைவருமே ஐபி, ஐபி டிராக்கர் போன்ற டெர்ம்களை கேள்விப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். அதனுடைய பங்ஷனாலிட்டியும் பெரும்பாலும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் தமிழ்மணத்தில் அடிக்கடி ஐபி டிராக்கர் வைத்திருக்கிறேன் தேர்ட் பார்ட்டி ஐபி டிராக்கர் வைத்திருக்கிறேன் என்று எல்லா சொல்பவர்கள் கூட ஒரு பங்ஷனாலிட்டியை புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது.(இல்லை நான் புரிந்துகொள்ளவில்லையென்றால் புரிந்துகொள்ளவே இந்தப் பதிவென்றும் வைத்துக்கொள்ளலாம்.)

சாதாரணமாக நபர்கள் ஐபி தெரிந்துவிட்டது என்று சொல்லும் பொழுது பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, முன்பே கூட ஒரு முறை இதைப்போன்ற பிரச்சனை எனக்கு வந்த பொழுது சொல்லியிருக்கிறேன். ரொம்ப கரெக்டா நீதான் பின்னூட்டம் போட்டன்னு சொல்லவே முடியாதுன்னு. சமீபத்தில் பெயரிலி அண்ணாச்சி ஒரு பதிவில் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் திரும்பவும் அந்தச் சந்தேகம் வந்தது. இந்தப் பதிவு நீங்கள் ப்ளாக்கர் உபயோகிக்கிறீர்கள் என்றால் மட்டுமே அதுவும் இலவச சேவை மட்டுமே.(பெயரிலி அண்ணாச்சி உபயோகிக்கிறது காசு கட்டிய சேவைன்னா நான் எஸ்கேப் அவர் பெயரை உபயோகித்ததில் இருந்து ;))

Blogger ஐப் பொறுத்தவரை நீங்கள் பின்னூட்டம் போடுவதற்கு தனிப்பட்ட இடத்தைத் தருகிறார்கள். எப்படியென்றால் என்னுடைய இந்தப்பதிவின் கீழ் "நீங்களும் சொல்லுங்களேன் ஏதாச்சும்" என்று பின்னூட்டம் போடவேண்டியவர்கள்/விரும்பியவர்களை அழைத்திருப்பேன் அதுவரை தான் உங்கள், ஐபிடிராக்கர், தேர்ட்பார்ட்டி ஐபி டிராக்கர் எல்லாம் உபயோகமாகும். அந்தப் பேஜை கிளிக் செய்துவிட்டீர்களேயானால். அது Bloggerன் சொந்தப் பதிவு அதில் யாராலும் ஐபிடிராக்கரை உபயோகிக்க முடியாது. (http://www.blogger.com/comment.g?blogID=15417112&postID=6031665407035373379 இங்கே)

இப்ப என் கேள்வி, உங்கள் பதிவு தமிழ்மணத்தில் வந்ததுமே ஒருவர் உங்கள் பதிவிற்கு கிளிக் செய்து வருகிறார். மேற்சொன்ன பின்னூட்ட இணைப்பை கிளிக் செய்கிறார்(Open in a new window) என்று வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் முன்னால் வந்த Parent Window வை க்ளோஸ் செய்துவிடுகிறார். இந்தப் பின்னூட்ட பக்கத்தை ஆறப்போடுகிறார்(ஒரு அரைமணிநேரத்திற்கு என்று வையுங்கள்). பின்னால் இருக்கும் அநாநிமஸ், அதர் ஆப்ஷனைக் கொண்டு பின்னூட்டம் போடுகிறார் என்றால் நீங்கள் உங்களிடம் இருக்கும் ஐபிடிராக்கரை வைத்து கண்டுபிடிக்கும் ஐபி யாருடையதாக இருக்கும். உண்மையிலேயே புரியவில்லை, இது மற்றவர்களுக்கு பெரும்பாலும் தெரிய வாய்ப்பில்லையென்றாலும் பெயரிலிக்குமா(அண்ணாச்சி இது சும்மா ஒரு உதாரணத்திற்கு - மேற்படி அநாநிமஸ் பின்னூட்டம் எனக்கும் வருத்தத்தை கொடுப்பது தான் - ஆனால் அதைக் கண்டுபிடிக்கும் முறை சரியானதுதானா? என்ற ஒரே ஒரு கேள்வி)

நான் சொன்ன இந்த அரைமணிநேர கணக்கும் கூட சரிவராது. இன்னும் தெளிஞ்சவனா இருந்தா. வெறுமனே ஜாவா அப்ளிகேஷன் ஒன்றில் உங்கள் பதிவின் பெயரைக் கொடுத்தேனேயானால்(http://wandererwaves.blogspot.com) உங்களின் பதிவின் எண்ணையும் ப்ளாக்கர் எண்ணையும் கண்டுபிடித்துவிட முடியும். http://www.blogger.com/comment.g?blogID=9437046&postID=7993645203957527874 அதாவது மேற்சொன்ன நம்பர்களைச் சொல்கிறேன். இதன் காரணமாக உங்கள் பதிவில் கிளிக்கே விழாமல்(உங்கள் ஐபி டிராக்கர்களை ஏமாற்றி) நேராக பின்னூட்ட பெட்டியை அடைய முடியும். இல்லையா? நான் சொன்ன கணக்கு சரிவருதா?

சரி எல்லோருக்குமா ஜாவா ப்ரொக்கிராம் கிடைக்குதுன்னு நீங்க கேட்கலாம். சரிங்க உங்க பதிவுக்கு வர்றாரு, பின்னூட்ட பெட்டியின் உரலை காப்பி செய்து நோட்பேடில் வைத்துக் கொள்கிறார். ஒரு நாள் கழிச்சு போடுறார் பின்னூட்டத்தை என்ன செய்வீர்கள் எப்படி கண்டுபிடிப்பீர்கள்.

ஏன் சொல்கிறேன் என்றால் இது போன்ற ஆட்கள் பின்னூட்டம் போடும் பொழுது ஐபி டிராக்கர் வைத்திருக்கிறேன் தேர்ட் பார்ட்டியோடது வைத்திருக்கிறேன் என்றெல்லாம் பெரிய ஆட்கள் சொல்வதை நம்பி சின்ன ஆட்களும் ஏடாகூடமாகச் சொல்கிறேன் பேர்வழியென்று சும்மா பார்த்துட்டுப் போனவனையெல்லாம் சொல்றாங்க. இது உண்மை எனக்கே நடந்திருக்கு.

இல்லை என் கான்செப்டில் தப்பிறுக்குன்னா சொல்லுங்க திருத்திக்குறேன். கொண்டையை மறைப்பது எப்படி என்று நேரடியாகச் சொல்லவில்லை இந்தப் பதிவில்.

டிஸ்க்கிளெம்பர் - நான் சொன்ன இந்த இன்பர்மேஷன் பெரும்பான்மையானோருக்கு தெரிந்திருக்கக்கூடிய ஒன்றுதான். இந்தப் பதிவின் மூலம் யாருக்கும் கெட்டது செய்வது எப்படி என்று சொல்லித்தரவில்லை. அதற்கான முயற்சியும் இது இல்லை ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கிறேன். அவ்வளவே.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In Science ஜல்லிஸ் நட்சத்திரம்

நட்சத்திரம் - கணிதமேதை இராமனுஜம்

சில நபர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் பல காலங்களுக்கு மாறாமல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இதுவரை என் வாழ்நாளில் நான் எடுத்த பல தீர்மானங்கள் ஒருவரின் தாக்கத்தால் ஏற்பட்டவையே. பல சமயங்களில் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நபர் நல்லவராக இருந்துவிடும் சூழ்நிலையில் பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடுவதில்லை. ஆனால் அவரே தவறான ஆளாக இருக்கும் பொழுது நிலைமை கடுமையாக இருக்கும்.

நான் என் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா, அந்தத் தாக்கத்தில் பல விஷயங்கள் இன்று வரை தொடர்கிறது, சில விஷயங்கள் குறைக்கப்பட்டன சில விஷயங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதை கொஞ்சம் விவரமாக சொல்கிறேன் இந்தப்பதிவில்.

சும்மா அழகிற்காக, சுஜாதாவை மென்டர் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் என்னுடைய உண்மையா மென்ட்டர், ஆசான் எல்லாமே எங்க மாமாதான். அதாவது எங்க அம்மாவோட தம்பி, சின்ன வயதிலேயே நல்லா படிச்சிட்டு, 90களின் தொடக்கத்தில் வந்த கம்ப்யூட்டர் சகாப்பதத்தால் அமேரிக்கா சென்றவர்.

இன்றைக்கு நான் படித்த படிப்பு, நான் செய்து கொண்டிருக்கும் வேலை, நான் வேலை செய்து கொண்டிருக்கும் விஷயம் உட்பட பல இவரால் தீர்மானிக்கப்பட்டவைதான். நான் நிச்சயமாக இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால் அது இவரால் தான். +2 அதிகம் மதிப்பெண் எடுக்காத பொழுதும் நம்பிக்கையளித்து கணிணி படிக்கவைத்து, வேலை தேடிக்கொண்டிருந்த பொழுது இதைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்லி அதைப் படிக்க வைத்தவர்.

இதெல்லாம் நல்ல விஷயங்களைப்பற்றி நான் சொல்ல வந்தது. இந்த தாக்கங்கள் எல்லாம் எனக்கு நல்லவையாகவே இருந்தது.

நான் நட்சத்திரப் பதிவின் ஆரம்பத்தில் ஒரு நிகழ்வைப்பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா. அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

எங்க மாமாவிற்கும், அய்யர் ஆட்களுக்கும் என்ன பிரச்சனை என்றெல்லாம் தெரியாது. சரியாக நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் இவர் அமேரிக்காவில் இருந்து வந்து பின்னர் ஆஸ்திரேலியா சென்றது. அந்த சமயத்தில் இவர் என்மேல் திணித்த சில விஷயங்களில் ஒன்று, அய்யர் வீட்டு ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்ற ஒன்று.

இன்னும் சொல்லப்போனால், BHEL, 16 வருடங்கள் வாழ்ந்து வந்த எனக்கு அம்மா மண்டபத்தில் டியூஷன் படிக்கவேண்டிய கட்டாயத்தால், ஸ்ரீரங்கத்தில் இருக்கும் மாமாவின் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை. அந்த சமயத்தில் எனது வீட்டிலும், எங்க மாமா வீட்டிலும் எனக்கு கொடுக்கப்பட்ட ஒரே ஒரு அட்வைஸ், “ஸ்ரீரங்கத்தில் இருக்கப்போற, அந்த ஆளுங்கக்கிட்ட பார்த்து இருந்துக்கோ” அப்படிங்கிறது மட்டும்தான்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நான் இருந்த பொழுதுதான் நான் குறிப்பிட்ட அந்த சம்பவம் நடந்தது. நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் வயது, அமேரிக்கா மாமாவின் ஆலோசனை, (பின்னர் அமேரிக்கா அழைத்துச் செல்லும் கனவு.) இத்தனையும் சேர்ந்திருந்த நிலை.

அந்த ஹரன் ஒரு பிராமணப்பையனாப் போக, எல்லாம் சேர்ந்துப்போச்சு, மனசுல ஒரு ஆழமான சுவடா பதிந்திருச்சு, மாமா சொன்ன விஷயத்தை மறக்கவே முடியலை, தவறு என்பேரில் இருந்தாலும், போட்டுக் கொடுத்தானே அப்படிங்கிற ஒரு உணர்வுதான் அதிகமிருந்தது. இதனாலெல்லாம் பிராக்டிகலா வேற நடந்ததிற்குப் பிறகு, என்ன செய்ய மாமா சொல்றது தான் வேதவாக்கு, சில சமயம், நாள் கணக்கா மாமா என்னிடம் அவருக்கு நடந்த சில சம்பவங்களை சொல்லியிருக்கிறார். எனக்கு ஒரு பிராமின் பிரண்ட் இருக்கான்னு சொன்னாக்கூட திட்டுற ஒரு காலம் அது. இன்னும் புரியவில்லை அப்படி என்ன பிரச்சனையென்று.

ஆனாலும் எல்லாவற்றிலும் வித்தியாசமாய் எங்க மாமாவிற்கு ரொம்பவும் பிடித்த ஒரு நபர்களில் இராமானுஜமும் ஒருவர். மனுஷன் அவ்வளவு புத்தகம் வைச்சிருப்பார். அடிக்கடி தப்பிப் பிறந்திட்டான் தப்பிப் பிறந்திட்டான்னு சொல்லிக்கிட்டேயிருப்பார்னா பாருங்களேன். ஏதாவது ஒரு விஷயம்னா இராமானுஜத்தை தான் இழுப்பார் அவ்வளவு படிப்பறிவு அவரைப்பத்தி மாமாவிற்கு.

ஆரம்பக்காலத்தில் மாமா சொல்றாரேன்னு, சில புஸ்தகங்களைப் படித்திருக்கிறேன் இராமானுஜத்தைப் பற்றி. இப்பத்தான் இந்தப் பதிவின் முக்கியமான கட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள். கொஞ்சம் நாளில் எனக்கும் அவருக்கும் என்னமோ ஒரு சின்ன பிரச்சனை வந்திருச்சு, எனக்கெல்லாம் பிரச்சனை வந்திருச்சுன்னா நிறையப் படிப்பேன், அந்த சமயத்தில் இராமானுஜத்தைப் பற்றி என்ன தவறான விஷயங்கள் கிடைக்கும் தேடித்தேடி படித்திருக்கிறேன். இன்று நினைத்தால் சிரிப்பாக வருகிறது, அன்று நான் செய்தது.

பெரிய ஜீனியஸ் அந்தாளு, கொஞ்சம் கஷ்டப்படுற பேமிலி, இயற்கையாவே கணக்கு போடுவதில் பெரிய கை. சின்ன வயதிலிருந்தே அந்த கணக்கு மேல அப்படியொரு பிரியம். ஜி எஸ் கார்(GS Carr) அப்படிங்கிற ஒருத்தரோட புஸ்தகத்தை வைச்சிக்கிட்டு தானாவே கணக்கு கத்துக்கிட்டவரு. அவர் தன்னோட பள்ளிப்படிப்பில் எடுத்திருந்த மதிப்பெண்களின் அடிப்படையில் கும்பகோணத்தில் இருந்து கவர்மெண்ட் காலேஜில் ஸ்காலர்ஷிப் கிடைத்து படித்துவந்தார். ஆனால் தலைவர் கணக்கில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு மற்ற சப்ஜெட்டை எல்லாம் கோட்டைவிட்டதால் அடுத்த ஆண்டிற்கான ஸ்காலர்ஷிப் காலாவதியானது.

வீட்டில் யார்கிட்டையும் சொல்லிக்காம விசாகப்பட்டினத்துக்கு ஓடிப்போய்ட்டு, அங்கேயிருந்து கணக்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பிறகு 1906ல் மீண்டும் பச்சைப்பாவில் நடைபெற்ற ஆர்ட்ஸ் எக்ஸாமில் தேர்ச்சிபெற்று யூனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸில் படிக்க நினைத்திருந்தார். மூன்று மாத படிப்பிற்கு பிறகு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கணக்கில் மட்டும் நல்ல மார்க் எடுத்திருந்து மற்றவற்றில் மீண்டும் கோட்டைவிட்டிருந்தார். இதன் காரணமாக அவரால் யூனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸில் படிக்க முடியாமல் போனது.

பின்னர் தொடர்ச்சியாக கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1909ல் தீவிரமாக நோய்வாய்ப்பட்டு அறுவைசிகிச்சை செய்துகொண்டார். பிறகு அதே வருடத்தில் பத்து வயதே நிரம்பிய அவர் மனைவியை திருமணம் செய்து கொண்டார். அந்த அம்மாவின் பெயர் ஜானகி அம்மாள். அவர், மனைவியுடன் அடுத்த இரண்டு வருடங்கள் குடும்பம் நடத்தவில்லை, அதாவது அவர் மனைவிக்கு 12 வயதாகும் வரை.

பிறகு அவருடைய கணித ஆராய்ச்சியில் கவனம் செலுத்தத்தொடங்கி, கிளர்க்காக வேலை செய்து கொண்டே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பிறகு தான் இவருடைய திறமையை புரிந்து கொண்ட யுனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸ் இவருக்கு இரண்டு வருட ஸ்காலர்ஷிப் கொடுத்து இங்கிலாந்தின் டிரினிட்டி கல்லுரியில் சேர்ந்தார் இது நடந்தது, 1914. இங்கத்தான் ஆரம்பிச்சது ஒரு புதுப்பிரச்சனை.

நம்மாளு அய்யரு, அசைவம் சாப்பிடமாட்டார், பால்கூட குடிக்கமாட்டார்னு நினைக்கிறேன். இங்கிலாந்தில் சைவம் கிடைக்காம ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார். இதனோடயே தன்னோட கணிதத்திறமையை பேப்பர்களாக பப்ளிஷ் செய்து பெரும் புகழை சம்பாதித்திருந்தார். இதெல்லாம் நடந்தது 1916, இப்ப இருக்கிற பிஎச்டி பட்டம் மாதிரி அந்த காலத்து Bachelor of Science by Research கிடைத்து.

இந்த சமயத்தில் எல்லாம் கூட அவருடைய உடல்நலனில் பல பிரச்சனைகள் இருந்துதான் வந்திருந்தது. அதன் பிறகு மேத்தமேட்டிக்ஸ் உலகத்தின் ஒரு உயர்ந்த விருதாக கருதப்படும், Fellow of Royal Society of England(FRS) என்று விருது கூட 1918ல் கிடைத்தது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் அதாவது 1917 மிகவும் சங்கடமான காலம் ராமானுஜத்திற்கு, அதாவது அந்த சமயத்தில் மருத்துவர்கள் இவர் இறந்துவிடுவார் என்று கூட பயந்தனராம். அப்படியொரு நிலை.

பின்னர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு வந்து கொஞ்சம் காலம் கிளார்க்காக பணிபுரிந்திருக்கிறார். 1919ல் இங்கிலாந்தில் இருந்த வந்த அவர் அதே வருடமே இறந்தும் போயிருக்கிறார்.

எங்க மாமா அடிக்கடி சொல்வது, ராமானுஜம் தன் டைரியில் எழுதி வைத்திருந்த சில சமன்பாடுகளை விளக்க முடியாமல் இன்னும் தடுமாறிக்கிட்டிருக்காங்க, அவர் மட்டும் உயிரோடிருந்திருந்தா இன்னும் நிறைய சாதிச்சிருப்பாரு அப்படின்னு.

அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு முதல் காரணம், அவர் சாப்பாடு தான். இந்த விஷயத்தில் மிகவும் கடுமையா இருந்திருந்ததால் ரொம்பவும் பிரச்சனை செய்திருக்கிறது. இன்று வரை கூட உலக கணிதவல்லுநர்கள் மதிக்கும் ஒரு மிகப்பெரிய கணிதமேதை தான் ராமானுஜம்.

என்னைப் பொறுத்தவரை அவர் வைத்திருந்த சில பழக்கவழங்கள் முற்றிலும் தவறானவை, தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு சிறிய கொள்கை மீது நம்பிக்கை வைத்திருந்தது முட்டாள்த்தனம்.

இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும். இவரைப்பற்றியும் எழுத என்னிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது. நிச்சயம் அவருடைய கணிதத்திறமையைப் பற்றி இன்னுமொறு பதிவு எழுதுவேன்.

உங்களுக்கெல்லாம் தெரியுமா, 1917ல் உடல்நலன் மிகவும் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் மனநலம் கூட பாதிக்கப்பட்டிருந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் இராமானுஜம். அவருடைய நண்பர் ஹார்டிதான் அவர் ஒரு எப்ஆர்எஸ் என்று பொய் சொல்லி(அப்பொழுது அவர் வாங்கியிருக்கவில்லை.) அவரை தப்பிக்க வைத்தார்.

என்னைப் பொறுத்தவரை நமக்காகத்தான் கொள்கைகள் கொள்கைகளுக்காக நாம்கிடையாது. ஒருவேளை மிகப்பெரியவர்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம், இருந்திருக்கலாம் இராமானுஜத்தைப் போல, என்ன இருந்தாலும் என் மாமாவால் என் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய தாக்கம் இந்த இராமானுஜம். அதை மறுப்பதற்கில்லை.

ஒரு விஷயத்தை ஆரம்பித்துவிட்டு முடிக்காமல் போனால் தவறாகிவிடும். மாமாவின் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா. அதில் முக்கியமாக, பிராமணர்கள் மீதான கருத்து கொஞ்சம் காலத்தில் மாறியது எப்படியென்றால், பிராமணர்கள் மட்டுமல்ல, யாராகயிருந்தாலும் சந்தர்ப்பசூழ்நிலை வரும்பொழுது நடந்துகொள்ளும் நிலை மாறுபடும். இதனால் இப்பொழுதெல்லாம் யாரையும் நம்புவதில்லை அவ்வளவே.

அதிகம் படிக்க படிக்க, வாழ்க்கையை அனுபவிக்க அனுபவிக்க நிறைய மாற்றங்கள் நிகழ வேண்டும் அது எனக்கு இந்த விஷயத்தில் நடந்திருக்கிறது.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In Science ஜல்லிஸ் நட்சத்திரம்

நட்சத்திரம் - ஹாக்கிங் பண்றாங்கப்பா ஹாக்கிங்

இந்தப் பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவே, சமுதாயத்தில் இருக்கும் தீய விஷயங்களில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு வழிமுறையை என்னால் ஆனவரை தர முயன்றிருக்கிறேன். எந்த தவறான நோக்கத்திற்காகவும் இந்தப் பதிவு கிடையாது. முழுக்க முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்தப் பதிவு.

எப்பொழுதுமே ஒரு நல்ல விஷயத்தை தவறான வழியில் பயன்படுத்தக் கூடிய வழிகள் பல சமயங்களில் அமைந்துவிடுகின்றன. உதாரணமாக நம்முடைய வலைப்பதிவுகளையே எடுத்துக் கொள்ளலாம். நல்ல விஷயங்களை எழுதுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று தான் இந்த ப்ளோக்கர்கள் எனப்படும் வலைப்பதிவுகள். ஆனால் இதில் இருக்கும் சில ஓட்டைகளை பயன்படுத்தி குளிர்காயும் மக்கள் இருப்பதைப் போலத்தான் இந்த ஹாக்கர்கள் என்ற மக்களும்.

இதன் வரலாறு சொல்லப்போனால் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. யார் இந்த மக்கள், ஏன் இப்படிச் செய்கிறார்கள், எப்படி இவர்களால் இது முடிகிறது. போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு எழுவதற்கு வாய்பிருக்கிறது.

நம்மைப் போலவே இரண்டு கைகள், இரண்டு கால்கள் கொண்ட சாதாரணமான மனிதர்கள் தான் இவர்களும் ஆனால் கொஞ்சம் புத்திசாலிகள். ஒரு நல்ல விஷயத்தை எப்படி தவறாக பயன்படுத்தலாம் என அறிந்து கொள்வதையே வாழ்நாளின் நோக்கமாக கொண்டவர்கள். இது ஒரு விதமான நோய்னு கூட சொல்லலாம். அடுத்தவர்களுடைய பர்ஸனல் விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புவதில் இருந்து, தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதன் பரப்பளவு அதிகரித்து அடுத்த நாட்டின் பர்ஸனல் விஷயங்களை நோண்டுவது வரை செல்கிறது. இது போன்ற விஷயம் இவர்களால் மட்டுமல்ல நினைத்தால் எல்லோராலும் செய்ய முடிந்ததே.

இதை சொல்வது ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் அதாவது அவர்கள் நம்மைவிட அதிபுத்திசாலிகள் எல்லாம் ஒன்றும் கிடையாது. நாம் நம்முடைய திறமையை நல்ல வழியில் பயன்படுத்துகிறோம் அவர்கள் தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள் அவ்வளவே.

இந்தப் பதிவெழுதுவதின் முக்கிய நோக்கமே எனக்குத் தெரிந்த இப்படியெல்லாம் உங்களின் பணத்தை, ஐடென்டிடியை, தவறான வழியில் பயன்படுத்தப்படுவதை தடுக்கவே. இன்னும் சில முறைகளை உங்களுக்கு தெரியப்படுத்தி, நீங்கள் இது போன்றதான ஒரு தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முறைகளை சொல்ல நினைக்கிறேன்.

முன்பே சொன்னது போல், இந்தப்பதிவின் முக்கிய நோக்கமே, ஹாக்கர்களுக்கு எதிராக உங்களை பாதுகாக்க சில வழிமுறைகளை சொல்வதே. வேறொன்றுமில்லை. இப்பொழுது இந்தத் துறை(Ethical Hacking) கூட சாதாரணமானது கிடையாது. தனக்கென்று தனிப்பெரும் இயக்கமாக உருவாகி வருகிறது.

எத்திகல் ஹாக்கிங் எனப்படும் உங்கள் கணிணியோ இல்லை உங்கள் தகவலோ திருடப்படாமல் இருப்பதற்கான வழிகள் பல இடங்களில் கிடைக்கத்தான் செய்கிறது. ஹாக்கிங்க வளர்ந்து வரும் நிலையில் எத்திகல் ஹாக்கிங் எனப்படும் அதனை தடுக்கும் முறையும் தீவிரமாக வளர்ந்து வருகிறது.

முதலில் எங்கிருந்து பிரச்சனை ஆரம்பிக்கிறது எனத் தௌiவாக சொல்லிவிடுகிறேன். அதாவது நீங்கள் இன்டர்நெட் மையத்திலிருந்து இணையத்தை உபயோகப்படுத்துபவராக இருந்தால், உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் 5% க்கும் குறைவே.

எப்படியென்று ஒரு உதாரணத்தைப் பார்ப்போம், நீங்கள் ப்ரௌசிங்க சென்டரில் உபயோகப்படுத்தும் கணிணிகளில் சில மென்பொருள்களை பதிந்துவிட முடியும், அதாவது உங்கள் கண்ணுக்கு தெரியாமல் அந்த மென்பொருள் நீங்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்தையும் தன்னகத்தே சேமித்துக் கொள்ளும்.

இது ஒரு பேக்ரவுண்ட் ப்ராஸஸிங் மாதிரியானது. அதாவது அந்த மென்பொருள் ஓடிக்கொண்டிருப்பது உங்களுக்கு சில சமயங்களில் அந்த ப்ரௌசிங் சென்டர் உரிமையாளருக்கோ கூட தெரியாமல் இருக்கலாம். அந்த மென்பொருளின் முக்கிய வேலையே நீங்கள் தட்டச்சும் ஒவ்வொரு வார்த்தையும் சேகரித்து வைப்பது. அதுமட்டுமில்லாமல் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் உங்கள் கணிணியின் திரையை புகைப்படம் எடுத்து சேகரித்து வைத்துக் கொள்ளவும் முடியும்.

இதன் விபரீதம் என்னவென்றால், நீங்கள் யாகூவில் உங்கள் பெயரையும் பாஸ்வேர்டையும் அடித்தீர்களேயானால் அது அப்படியே பெயர் மற்றும் பாஸ்வேர்டை சேகரித்துக் கொள்ளும். இதைவிட விபரீதம் என்னவென்றால் நீங்கள் கிரெடிட் கார்டை உபயோகிப்பாளராக இருந்தால், உங்கள் கார்டைப் பற்றிய அத்துனை தகவல்களையும் அவர்கள் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும்.

எனக்குத் தெரிந்த ஒரு கம்பெனியில் ஒரு விபரீத ஆசாமி இப்படி எல்லா கணிணிகளிலும் பதிந்து விட, அத்துனை பேரின் விவரங்களும் அவனுக்கு கிடைத்துக் கொண்டிருந்திருக்கிறது. பின்னர் அவனைப் பிடித்து போலீஸில் விட்டுவிட்டதாக நண்பர் சொன்னது.

அதனால் இன்டர்நெட் ப்ரௌஸிங்க சென்டர்களில் பாதுகாப்பு பூஜ்ஜியம் தான் இதை எப்படி தெரிந்து கொள்வது என்றால் அதிலும் சிக்கல். இதை சாதாரணமாக கண்டுபிடிக்க முடியாது, அந்த கம்பெனியில் பதிக்கப்பட்ட மென்பொருளை கண்டுபிடிக்க வேண்டுமென்றால். கன்ட்ரோல், ஷிப்ட், ஆல்ட், மற்றும் ஒய்யை அழுத்தினால் அந்த மென்பொருளின் திரை வரும் என்று நினைக்கிறேன். இது ஒரு கூட்டு இதைப்போல பல விஷயங்களைப் பயன்படுத்த முடியும். அதனால் மிகவும் அவசியம் என்றால் மட்டும் கடனாளர் அட்டை போன்ற விஷயங்களை அது போன்ற இடங்களிலிருந்து பயன்படுத்துங்கள்.

எனக்குத் தெரிந்த வரை யாகூ மெயிலில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் மற்ற மெயில் அக்கவுண்ட்ஸ் போல் பாஸ்வேர்ட் மறந்து விட்டீர்களேயானால் அதை இன்னொரு மெயில் அக்கவுண்டிற்கு அனுப்ப மாட்டார்கள். உங்களுக்கே கூட தெரிந்திருக்கும் அவர்கள் கேட்கும் தகவல்கள் மிகக் குறைவானவையே, உங்கள் ஐடி, பிறந்தநாள், பின்கோட். பிறகு ஒரு சீக்ரெட் கேள்வி.

இதில் சீக்ரெட் கேள்விக்கான பதிலைத்தவிர மற்ற விஷயங்களை உங்களுக்கு நெருக்கமானவர்கள் அறிந்திருக்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அதனைப்பயன்படுத்தினால் கடைசியில் உங்களைப் பாதுகாக்க இருப்பது சீக்ரெட் கேள்வி மட்டுமே. அதையும் நீங்கள் என்னைப்போல் ப்ளேஸ் ஆப் பர்த்னெல்லாம் சொல்லியிருந்தீர்களோ அவ்வளவுதான் காலி. உங்கள் யாகூ ஐடி உடைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

அதனால் யாகூ பயன்படுத்தும் மக்கள் தயவுசெய்து சீக்ரெட் கேள்விக்கான பதிலை மற்றவர்களால் கணிக்க முடியாத அளவிற்கு வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனை கூகுளில் கிடையாது. அவர்கள் நீங்கள் முன்னமே சொல்லியிருக்கும் இன்னொரு இடத்திற்குத்தான் பாஸ்வேர்டை அனுப்புவார்கள். அதனால் பிரச்சனை கிடையாது. நான் அறிந்த வரை யாகூவில் இந்த பிரச்சனை உண்டு, நண்பர்களே இனிமேலாவது கவனம்.

நான் இங்கே சொல்லி வருவதெல்லாம் சின்ன சின்ன விஷயங்களைப்பற்றி மட்டுமே. அமேரிக்காவின் பாதுகாப்பை உடைப்பது போன்ற விஷயங்களைப் தடுப்பது என்பதைப் பற்றியெல்லாம் கிடையாது.

மற்றபடிக்கு வீட்டில், கணிணி உபயோகிக்கும் மக்களுக்கு சில எச்சரிக்கைகள்.

உங்கள் கணிணியில், ஆன்ட்டி வைரஸ் ஸாப்ட்வேர்களை அவ்வப்பொழுது சரி பார்த்துக்கொள்வது அவசியம். அவை இருந்தாலும் தேவையற்ற கடிதங்களை திறக்காமல் இருப்பதுவே உத்தமம். நாம் பெரும்பாலும் வீட்டில் உபயோகிக்கும் கணிணி என்பதால் இதை அப்படியே விட்டுவிடுவதுண்டு அது என்னன்னா?

உங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில், டுல்ஸ், இன்டர்நெட் ஆப்ஷன்ஸ், கன்டன்ட், ஆட்டோ கம்ப்ளிட் ஆப்ஷனை கிளிக்குங்கள்(Tools, Internet Options, Content, Auto Complete, UserName and Password on Forms), அதில் யுஸர் நேம் பாஸ்வேர்ட் ஆன் பார்ம்ஸ் என்றொரு செக் பாக்ஸ் பட்டன் இருக்கும் அது பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டே(Selected) இருக்கும் பல கணிணிகளில், என்னுடய கணிணியிலும் கூட, இதன் காரணமாக நமக்கு சில, பல உபயோகங்கள் கிடைக்கலாம்.

உதாரணமாக, நீங்கள் ப்ளாக்கர் அக்கவுண்டிலோ, இல்லை, உங்கள் மெயில் அக்கவுண்டிற்கோ நுழைய பாஸ்வேர்ட் எதுவும் கேட்காமல் அதுவே உள்ளே நுழைந்து விடும். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது. உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை கணிணி ஒரு இடத்தில் சேமித்து வைக்கும்.

அது போன்ற விஷயங்கள் எதிரிகளில் கைகளில் சிக்கிவிடக்கூடிய அபாயம் இருக்கத்தான் செய்கிறது. அதனால் நீங்கள் ப்ரௌசிங் சென்ட்ரோ இல்லை வீட்டு கணிணியோ அந்த ஆப்ஷனை அன் செலக்ட் பண்ணிவிடுங்கள். இது எப்பொழுதுமே உங்களுக்கு உபயோகமாகயிருக்கும்.

அதைப்போல கடனாளர் அட்டை உபயோகிக்கும் மக்களுக்கு தெரிந்திருக்கும் நீங்கள் கடனாளர் அட்டை விவரங்களை ஒரு பக்கத்தில் தருகிறீர்களென்றால் அந்தப்பக்கம் சாதாரணமான HTTP யாக இல்லாமல், HTTPS பக்கமாக இருக்க வேண்டும். இது முக்கியம் இதுமட்டுமில்லாமல் அவர்கள் ஏதாவது ஒரு தரமான சர்டிபிகேட் வைத்திருப்பவர்களாக இருந்தால் மட்டும் அந்த பக்கத்தை உபயோகியுங்கள்.

சில பொதுவான விஷயங்கள், இணையத்தளம் வைத்திருக்கும் அன்பர்களுக்கு, அதாவது கூகுளின் நன்மைகளைப்பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது கூகுளால் அதாவது ஒரு சர்ச் இன் ஜின் வேலை செய்யும் விதம் தெரிந்திருக்கும் நண்பர்களுக்கும் கூகுள் தகவல்களை எப்படி எடுத்து வருகிறது என்பது தெரிந்திருக்கும்.

இதன் போன்ற காரணங்களால், சில தடவைகள், வெப்சைட் தயாரிக்கத்தெரியாத ஆட்களாள் தயாரிக்கப்பட்ட வலைத்தளங்கள் பல மோசமான பாதிப்பை சந்திக்கும். அதாவது கூகுளில் உள்ள சில ஆப்ஷன்களைப் பயன்படுத்தி கூகுளிடும் பொழுது அது, அந்த வெப்சைட்டிற்கான அத்துனை பைல்களையும் தந்துவிடும் வாய்ப்பிருக்கிறது. அதாவது பாதுகாப்பாக வைக்கப்படாத பைல்கள்.

சில தடவைகளில் பாஸ்வேர்ட் சேகரித்து வைத்திருக்கும் பைல்கள் உட்பட, ஆனால் இந்த பைல் பெரும்பாலும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். அப்படி என்கிரிப்ட் செய்யப்படாமல் சேகரித்து வைக்கப்படும் பைல்கள் பாதுகாப்பானது கிடையாது. இது நிச்சயமாக கூகுளில் தவறு கிடையாது. தரமான வெப்சைட் தயாரிக்கத் தெரியாதவர்களின் குறைபாடே.

ஒரு சின்ன உதாரணத்திற்கு பிகேஎஸ்ஸின் இந்தப்பதிவு எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
இதில் அவர் இன்னாருடைய முகவரியை கண்டறிந்தேன் என்று சொல்லியிருப்பார். என்னைப் பொறுத்தவரை அவர் இதை தெரிந்து கொள்ள கூகுளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன். (தவறாகவும் இருக்கலாம்.)

மற்றவர்கள் சிலர் அப்பொழுது சில கேள்விகள் கேட்டனர் அதாவது பிகேஎஸ் மற்ற நண்பர்களின் பதிவிலும் இடப்படும் பின்னூட்ட முகவரியையும் கண்டறிந்து சொல்ல வேண்டு என்பதான ஒன்றை.(அப்படிதானென்று நினைக்கிறேன்.)

அப்படிக் கண்டுபிடிக்க முடியாது, பிகேஎஸ் கண்டுபிடித்ததற்கு ஒரு முக்கிய காரணம், ப்ளாக் சிஎம்எஸ்(BLOG CMS) என்று காசி பயன்படுத்தும் ப்ளாக்கர் சேவையை தரும் ஒரு மென்பொருளின் சிறு குறைபாடே. அந்த குறைப்பாட்டின் காரணமாக காசியினுடையது மட்டுமல்ல, ப்ளாக் சிஎம்எஸ்(BLOG CMS) உபயோகப்படுத்தும் அத்துனை நபர்களின் ப்ளாக்குகளிலும் பின்னூட்டமிடும் அத்துனை நபர்களின் ஐபி முகவரியை தெரிந்து கொள்ளமுடியும். பிகேஎஸ் இதை நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தியிருந்தார்.(என்னைப்பொறுத்தவரை).

அப்படிக் கண்டுபிடிப்பதொன்றும் பெரியவிஷயம் கிடையாதுதான். ஒரே ஒரு சர்ச் கீவேர்டில் கண்டறிந்துவிடலாம்.

site:kasi.thamizmanam.com "promise-this-is-not-a-spam"

இவ்வளவுதான் விஷயம் அந்த கீவேர்ட் தேடித்தரும் பதிவில் இருந்து விஷயத்தை பிகேஎஸ் எடுத்திருக்கலாம்.(இப்போ போட்டுப்பாக்காதீங்க, அந்த பின்னூட்டத்தை காசி அவர்கள் நீக்கிவிட்டார்.) நான் இதை உங்களுக்கு சொல்வதற்கான முக்கியமான காரணம் விழிப்புணர்வு தான், அதாவது இதுபோன்றதொறு இணையத்தளத்தில் உங்களை யாராவது தவறாக சொல்லியிருந்தால் அந்த நபரின் ஐபி முகவரியை இப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதற்காகத்தான்.

என்னைப்பொறுத்தவரை, டோண்டு அவர்கள் அவருடைய இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என நினைத்தால், காசி அவர்களைப்போல், தேசிகன் அவர்களைப்போல், இல்லை இன்னும் சிலரைப்போல் சொந்தமாக வெப்சைட் வைத்துக்கொள்ளலாம். அந்த இணையத்தளத்தில் உங்களிடம் யாரும் வாலாட்ட முடியாது, உங்கள் இணையத்தளத்தை பார்த்தவர்களைபற்றிய எல்லா விவரங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.(டோண்டு சார் நீங்க என்ன சொல்றீங்க.) கடைசியாக ஒரு விஷயம் மக்களே பாதுகாப்பா இருங்க. நான் சொன்னதெல்லாம் ரொம்பக்கம்மி இணையத்தில் இன்னும் நிறைய நடக்கிறது. பார்த்து இருந்துகொள்ளுங்கள்.

இன்னும் நிறைய விஷயங்களை சொல்லலாம், ஆனால் நேரப்பிரச்சனை தான் பெரிதாகயிருக்கிறது. இவ்வளவுதான் நான் இந்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் சொல்ல விரும்புவது.

பிகேஎஸ்ஸின் பெயரையும், காசி அவர்களுடைய பெயரையும் ஒரு உதாரணத்திற்காகத்தான் பயன்படுத்தியிருக்கிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

Read More

Share Tweet Pin It +1

26 Comments

In Science ஜல்லிஸ்

Of Big Bangs, Parallel Universes and 11 dimensions - The String Theory

நீண்டகால யாஹூ உபயோகிப்பாளன் என்ற முறையில் யாஹூவின் இந்த புதிய பீட்டா மெயிலைப்பற்றி தீவிரமாகப்படித்துவருகிறேன்.

கூகுளைப்போல யாஹூவும் டாட் அய்ட்டத்தை உபயோகத்தில் கொண்டுவந்துள்ளது. என்னோட பேவரைட் ஐடிதான் கிடைக்கலை. mohandoss.i@yahoo.com() டாட்டுக்கு பிறகு நான்கு கேரக்டர்கள் வரணுமாம். அதுனால வேற ஒரு ஐடியை எடுதுக்கொண்டேன்.(ஹிஹி உண்மையில் இரண்டு. இன்னும் ஆசை போக மாட்டேங்குது.)

அப்புறம் ஒரு ஆன்லைன் வேர்ட் புரொசசிங் டூல் ஒன்னு வந்திருக்கு. இன்னும் சிறிது காலத்தில் ப்ளாக் எழுதும் மக்களிடம் வரவேற்பு நிச்சயமாய்க்கிடைக்கும் என்று நினைக்கிறேன். இதில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன் உபயோகப்படுத்தி பாருங்கள்.

அப்புறம் கொஞ்சம் சைன்ஸ் பத்தி, அறிவியல் உலகத்தில் இருக்கும் மோசமான வேலைகள் பற்றி ஒரு கட்டுரை படித்தேன் சமீபத்தில். நீங்களும் படித்துப்பாருங்கள்.

கட்டுரை குறிப்பு இலகிய மனம் கொண்டவர்கள் படிக்கவேண்டாம்.

வழக்கம் போல ஒரு சூப்பரான ஐட்டம் படிக்கக்கிடைத்தது. ஆனால் தமிழில் எழுதும் எண்ணம் இல்லாததால் அப்படியேத் தருகிறேன். தனித்தமிழ் மக்கள் மன்னிக்கவும். இதைப்பத்தி ஒரு சைன்ஸ் பிக்சன் கதை எழுதியாகிவிட்டது. அடுத்தவாரம் போடுகிறேன். (செத்தீங்கடே)

உங்கள் அனைவருக்குமே, Big Bang Theory, Parallel Universes பத்தி தெரிஞ்சிருக்கும். சில அறிவுஜீவிகளுக்கு 11 dimensions and The String Theory பற்றியும். அதைப்பற்றி சில டாக்குமெண்டரிக்களை பார்க்கமுடிந்தது.

என்னால் முடிந்த சில பில்டப்புகளை மட்டும் கொடுக்கிறேன். ஐன்ஸ்டின் தியரி ஆப் எவரிதிங் என்ற ஒன்றை நிரூபிக்க நினைத்திருந்தார். தலைவரின் வார்த்தகளின் படி "ஐன்ஸ்டைன் ஐம்பதாண்டுகளுக்கு முன் இறந்து போகுமுன், The Theory of Everything என்ற உலகின் நான்கு வகை ஆதார சக்திகளை, குறிப்பாக புவிஈர்ப்பு விசை யையும் க்வாண்டம் சக்திகளையும் ஒரே சமன்பாட்டில் ஒருமித்து அறிய முற்பட்டார்... முடியவில்லை! இன்னும் அது விஞ்ஞானிகளுக்குக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு இருக்கிறது."

இந்த ஸ்டிங் தியரியால் அது முடியும்னு சொல்றாங்க(????) சில டாக்குமெண்டரிக்களும் கிடைத்தது. கூகுள் அனுமத்தித்திருக்கும் நாடுகள் மட்டுமே பார்க்கமுடியும். முக்கியமாய் இந்தியாவிலிருந்து பார்க்கமுடியாது. நான் சில தகடுத்திதங்கள் செய்து பார்த்தேன்.

நான் சில தகடுத்திதங்கள் செய்து பார்த்த, வெளியில் சொல்லக்கூடிய முறைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.

உண்மையிலேயே விளக்கமான டாக்குமெண்டரிகள். அனைவரும் பார்க்கவேண்டியது. யாரோ எழுதியிருந்தார்கள், வாத்தியாரும் கூட, ஐன்ஸ்டின் சொன்ன கடவுள் டைஸ் விளையாடுவதில்லை என்பதைப்பற்றி, அந்த வரிகளில் உள்ள தவறுகளைக்கூட டாக்குமெண்டரியில் சொல்லியிருந்ததாக ஞாபகம். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.


ஒன்னாம் நம்பர்
இரண்டாம் நம்பர்
மூன்றாம் நம்பர்



கட்டக்கடேசியா,

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அடுத்த வருஷமும் வருவோமுல்ல தொல்லை பண்ண.

Credits: geetham.net, pbs.org, yahoo.com, writely.com, popsci.com.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Science ஜல்லிஸ்

வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

இதைப்பத்தி நான் ஏன் எழுதுறேன்னா, முதல்ல நான் இதைப் போல் சம்பாதிப்பதற்கு என்ன செய்யணும்னு தேடினேன், எனக்கு தமிழ் வலைப்பூக்களில் விவரம் எங்கிருக்கிறதுன்னு தெரியலை. அதான் நான் பட்ட கொஞ்சம் சிரமத்தை இனிமேல் வர்றவங்க படாமயிருக்குறதுக்காக ஒரு பதிவு. உஷா கூட ஒரு பதிவின் பின்னூட்டத்தில் பினாத்தல் சுரேஷிடம் கேட்டிருந்தார்கள். பினாத்தலார் கவனிக்கலையோ இல்லை தனிமடலிட்டாரோ நான் அறியேன் பராபரமே. ஏதோ என்னால் முடிஞ்சது போட்டுட்டேன்.

முதல்ல ஒரு நம்பிக்கை வார்த்தை.

கூகுளிருக்க பயமேன், ஆமாங்க நான் கூகுளைப் பயன்படுத்தி வலைத்தளத்தின் மூலமாக பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்கிறேன்.

முதல்ல கூகுள் கிட்ட நான் பார்த்த வரைக்கும் ஒரு பிரச்சனை தமிழ் வலைப்பூவைப்பயன்படுத்தி இந்த சேவையை முதலில் பெறமுடியாது.(அதனால ஒரு டிரிக் செய்யணும் இதுக்கு அதையும் சொல்றேன் பின்னாடி). அதனால் ஒன்றும் வருத்தப்படாதீங்க. ஒரு ஆங்கிலப்பதிவைத் தொடங்குங்க அதில ஒரே ஒரு பதிவை போட்டு வைச்சிருங்க. எடுத்துக்காட்டுக்கு நான் பயன்படுத்தின ஆங்கிலப்பதிவு ஜாவா பையன் ( எல்லாம் ஒரு விளம்பரம்தான்.)

பின்னாடி அந்த ஆங்கிலப்பதிவின் டெம்ப்ளேட்டிற்கு வந்தால், எடிட் கரென்ட், ஆட் சென்ஸ், பிக் நியூ அப்பிடின்னு மூணு அய்டம் இருக்கும். அதில ஆட் சென்ஸ் அப்பிடிங்கிற அய்டத்தை செலக்ட் பண்ணுங்கோ. பண்ணீங்கன்னா உங்களுக்கு ஒரு பார்ம் வரும் அதில் உள்ள அய்டத்தையெல்லாம் பில்லப் பண்ணுங்கோ, கூகுள் பணம் கொடுக்கும்ங்கிறதால உண்மையான விவரம் கொடுத்தால் நலம். (நான் கம்பெனி அட்ரெஸ் கொடுத்துருக்கேன் போன் நம்பர் உட்பட.)

அப்புறம் சரியான விவரம் எல்லாம் கொடுத்து சப்மிட் பண்ணீங்கன்னா, அடுத்த ஸ்கீரினுல நீங்க எந்த மாதிரியான விளம்பரத்தை உங்க வலைத்தளத்தில் போடப்போறீங்கன்னு கேட்பாங்க, விவரமானவங்க அவங்க வலைத்தளத்தின் கலருக்கு ஏற்ற மாதிரி விளம்பரத்தை தேர்ந்தெடுக்கலாம். என்னை மாதிரி முட்டாளுங்க அவங்க கொடுக்குற டிபால்ட் விளம்பரத்தையே ஒத்துக்கிட்டு ஸேவ் அப்பிடின்னு கொடுக்கலாம். இது முடிஞ்சிருச்சுன்னா எப்பவும் போல திரும்ப பப்ளிஷ் பண்ண கேட்பாங்க பண்ணீருங்க. அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு முதல் கட்டம்.

இனிமேல் இரண்டாம் கட்டம்.

அதாவது இனிமேல் நீங்க சொன்ன மெய்ல் அட்ரஸ்க்கு ஒரு மெயிலை கூகுள் அனுப்பும் எப்பிடின்னா இப்படி,

Hello Mohandoss Ilangovan,

Welcome to Google AdSense. In order to verify your email address and
submit your information for review, please click on the link below.

https://www.google.com/adsense/c?u=1461447&k=0x503

This link will take you directly to an email confirmation page. If it
does not, please copy and paste the full URL into your web browser's
address box and hit the "Enter" key on your keyboard. Once you confirm
your email, we'll review your application and email you after we check
your site for AdSense eligibility. If you're accepted, you'll then be
able to log in to your account at https://www.google.com/adsense, or
through the application or service from
which you originally registered. Please use the email address and
password you
submitted with your application.


இதில் சொல்லப்பட்டிருக்கும் உரலை கிளிக்கினால் மட்டும் போதும்(உங்களுடையதை மட்டும்; என்னுடையதை வேண்டாம் நான் உரலை மாற்றியிருக்கிறேன் இந்த உரல் போகாது) அது ஒரு பக்கத்தை திறக்கும் அதன் பின்னர் கூகுள் உங்கள் பக்கத்தைப் பற்றி விவரங்களை ஆராய்ந்து உங்கள் வலைப்பூவில் தங்கள் விளம்பரத்தை போடலாமா அப்பிடின்னு ஆராய்ச்சி செய்வாங்க. (தமிழ்ல பதிவிருந்தா மட்டும் தான் பிரச்சனை. நானெல்லாம் இரண்டு தடவை முயற்சி பண்ணேன் தமிழில், ரெண்டு தடவையும் அப்ளிகேஷன் ரிஜக்ட் ஆகியிருச்சு ஆனா நம்ம ஆங்கில பதிவு ஓக்கே ஆயிருச்சு அதுமாதிரி.)

இரண்டு நாள்ல உங்களுக்கு திரும்பவும் ஒரு மெயில் வரும் அதாவது உங்களோட அப்ளிகேஷன் ஓக்கேஆயிருச்சா இல்லையான்னு பதில் அனுப்புவாங்க. ஆங்கிலம்னா அப்ரூவ் ஆயிரும் கவலைப்படாதீங்க.

அப்ரூவ் ஆச்சின்னா இப்படி ஒரு மெயில் வரும்.

Congratulations!

Your Google AdSense application has been approved. Your account is now
activated, and Google ads are being delivered to your pages.

You can log in to your AdSense account at any time, to make changes to
your ad layouts or to view your activity reports.

------
Make changes to your Google ads:

Log in to your account at https://www.google.com/adsense?hl=en_US, or
through the application or service from which you originally
registered. Select from the available color and layout options to
select an ad format that works best for your web pages.

-------------------------

இப்ப உங்களோட இரண்டாவது கட்டம் முடிஞ்சிருச்சு மூணாவது தான் முக்கியமான கட்டம் அதாவது உங்களோட தமிழ் பதிவில் வரும் வாசகர்களின் வருகைக்கும் சேர்த்து பணம் சம்பாதிப்பது பற்றி.

அதாவது நீங்க ஒரு ஆடை செலக்ட் செய்தீர்களே அது ஒரு ஜாவா ஸ்கிரிப்டை உங்கள் டெம்ப்ளேட்டில் உருவாக்கும் நீங்கள் அதை வைத்து இரண்டு விஷயங்கள் செய்யணும். முதல் வேலை,

div id="main" div id="main2"
script type="text/javascript"
google_ad_client="ca-pub-5614942101384756";
google_ad_width=468;
google_ad_height=60;
google_ad_format="468x60_as";
google_ad_type="text";
google_color_border="336699";
google_color_bg="FFFFFF";
google_color_link="0000FF";
google_color_url="008000";
google_color_text="000000";
/script
script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"
/script

இது தான் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆட் ஸ்கிரிப்ட் (தயவு செய்து இதை காப்பி செய்யாதீர்கள் இல்லாவிட்டால் எனக்குத்தான் உங்கள் பணம் முழுக்க வரும். இதில இந்த நம்பர் தான் ca-pub-5614942101384756 முக்கியம் இதைவச்சுத்தான் உங்கக்கிட்டேர்ந்து வர்றாங்கன்னு கண்டுபிடிப்பாங்க, அதனா எப்ப காப்பி பண்ணி எத்தனை தடவை எங்கப்போட்டாலும் இந்த நம்பர் தப்பாகாம பார்த்துக்கோங்க. )

முதலில் இதை உங்கள் ஆங்கிலப்பதிவிலிருந்து எடுத்து, தமிழ் பதிவில் இடுங்கள். ஆங்கிலப்பதிவில் எங்கிருந்து எடுத்தீர்களோ அங்கேயே.

அதாவது உங்கள் தமிழ் டெம்ப்ளேட்டின் இந்த இடத்திற்கு கீழே,

Begin #content
div id="content"
Begin #main
div id="main" div id="main2"

//here//

{ நான் < > இந்தக் குறிகள் பயன்படுத்த முடியாத காரணத்தால் நீக்கியிருக்கிறேன் நீங்கள் காப்பி செய்து போடும் பொழுது அதை அப்படியே போடுங்கள் அதாவது <> குறிகளை நீக்காமல். }

முதல் காரியம் முடிந்துவிட்டது. பின்னர் உங்கள் தமிழ் வலைப்பூவில் முன்பே சொன்னதைப்போல டெம்ப்ளேட்டிற்கு வந்தால், எடிட் கரென்ட், ஆட் சென்ஸ், பிக் நியூ அப்பிடின்னு மூணு அய்டம் இருக்கும். இதில் ஆட் சென்ஸை தேர்ந்தெடுங்கள் இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் முதலில் ஒரு இமெயில் முகவரியும் பாஸ்வேர்டும் கொடுத்தீர்கள் அல்லவா அதையே இங்கே கொடுத்து உள்ளே செல்லூங்கள் பின்னர் ஆங்கில பதிவில் சொன்னது போல் உங்களுக்கு பொறுத்தமான ஆடை தேர்ந்தெடுத்தால் முடிந்தது. இனி சம்பாதிக்கவேண்டியது தான் பாக்கி.


https://www.google.com/adsense?hl=en_US

இந்த இடத்துக்கு வந்து லாகின் ஆகி பாத்தீங்கன்னா இப்படி கொடுப்பாங்க,




ஒரு நாளில் நம்ம இம்ப்ரஷன் அதிகம் ஆயிருச்சு. டாலர் கணக்கும் ஆரம்பிச்சுருச்சு. ரொம்ப சந்தோஷம்.



இதிலையும் இரண்டு விஷயம் இருக்கு இரண்டு விதமா நமக்கு பணம் கிடைக்கும் முதல் முறை நாம் போட்டுறுக்குற ஆடைக் கிளிக் பண்ணி யாராவது உபயோகிச்சாங்கன்னா காசு கிடைக்கும் இன்னொன்னு நம்ம வலைப்பூவிற்கு யாரும் வந்தாலும் அந்த கவுண்ட் படியும் காசு கிடைக்கும் அதை அவங்க இம்ப்ரஷன்னு சொல்றாங்க இன்னிக்கு காலையிலேர்ந்து 19 இம்ப்ரஷன் கிடைச்சிருக்கு எனக்கு. இது ஆயிரமா ஆனா டாலர் கிடைக்க ஆரம்பிக்கும் 50$ கிடைத்தால் பணத்தை கூகுளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இதன் காரணமாவே திரும்பவும் பழைய மாதிரி பதிய ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சேன் பின்னாடி வேண்டாம்னு உட்டுட்டேன் அந்த ஐடியாவை. நமக்குத்தான் பிரச்சனை தமிழ் வலையில் குஷ்பு, சுகாசினி, ராமதாஸ், திருமா, ரஜினி, முசலமான் பத்தி எழுதினா சீக்கிரமே 50$ கிடைச்சிரும். :-)

டவுட் இருந்தால் கேட்கலாம். என்னால் முடிந்தால் தீர்த்து வைக்கிறேன்.

mohandoss.i @ gmail.com
நான் கூறிய விஷயங்களில் தவறிருந்தாலும் கூறினால் திருத்திக்கொள்கிறேன். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படிங்கறது தான் நம்ம கொள்கை அதான் இவ்வளவு.

Read More

Share Tweet Pin It +1

20 Comments

In Science ஜல்லிஸ்

கிரிப்டோகிராபியும் ஜல்லியடித்தலும் 2

முன்பே சொன்னது போல கொஞ்சம் கிரப்டோகிராபியைப் பற்றி கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம். மீண்டும் சொல்கிறேன் கொஞ்சம் விவரமாய்த்தான். இங்கே எனக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை, என் திறமையை வெளிப்படுத்திக் கொள்ள நான் பயன்படுத்தவில்லை. எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் தெரிவிப்பதில் கிடைக்கும் சந்தோஷத்திற்காக மட்டுமே எழுதுகிறேன். இனி கிரிப்டோகிராபி,

இப்படியாக நாலாயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் கிரிப்டோகிராபி, கணிணி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தபிறகு, கொஞ்சம் வடிவம் மாறத்தொடங்கியிருந்தது. இதன் காரணமாக அதன் பயன்படுத்தப்டும் முறைகளும் கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் அடையத் தொடங்கின.

முதலில் மதிப்பு (Key Based) சார்ந்த கிரிப்டோகிராபி.

அதாவது நம்மிடம் இருக்கும் தகவலை, ஒரு மதிப்பைப் பயன்படுத்தி பாதுகாக்கப்பட்ட தகவலாக மாற்றவேண்டும், பிறகு தகவல் சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடைந்ததும், மீண்டும் அதே மதிப்பைப் பயன்படுத்தியோ இல்லை, அந்தக் மதிப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பெறப்பட்ட மற்றொரு மதிப்பையோ கொண்டு பாதுகாக்கப்பட்ட தகவலை மீண்டும் சாதாரண தகவலாக மாற்ற வேண்டும்.

இதில் இரண்டு வகை உண்டு, ஒன்று மறைக்கப்பட்ட மதிப்பு சார்ந்த சூத்திரம் (Secret Key Algorithm or Symmetric Algorithm), மற்றது பொதுவான மதிப்பு சூத்திரம் (Public Key Algorithm or ASymmetric Algorithm). முதலில் சொன்ன மறைக்கப்பட்ட மதிப்பு சார்ந்த சூத்திரத்தில் நாம் தகவலை பாதுகாக்க பயன்படுத்திய மதிப்பு மறைக்கப்பட்டிருக்கும் அதாவது, அந்தக் மதிப்பைப் பயன்படுத்தியோ இல்லை அந்தக் மதிப்பிலிருந்து உருவாக்கப்படும் மற்றொரு மதிப்பையோ பயன்படுத்தி தகவல் மறுபடியும் நேராக்கப்படும். இதனால் அந்த மதிப்பு பாதுகாப்பாக வைக்கப்படுவது அவசியம். இந்த வகையான தகவல் பாதுகாக்கும் முறைக்கு உதாரணம், தகவல் பாதுகாப்பு பயன்பாடுகள் (DES - Data Encryption Standard) வகையான சூத்திரங்கள், இதில் மூன்றடுக்கு DES (Triple DES) எனவும் ஒரு வகை உண்டு, விளக்கமாக எழுதவேண்டாம் என்பதால் விடுகிறேன். 2000த்தில் AES என்றழைக்கப்படும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சூத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை DES சை விட வேகமாக செயல்படுபவை.

மற்றது பொதுவான மதிப்பு சூத்திரம், இதில் தகவலை பாதுகாக்க பயன்படுத்தப்படும் மதிப்புக்கும், பாதுகாக்கப்பட்ட தகவலிலிருந்து மீண்டும் நேரான தகவலாக மாற்ற பயன்படும் தகவலுக்கும் எந்தச் சம்மந்தமும் இருக்காது. அதனால் இந்த வகையான தகவல் பாதுகாப்பில், தகவலை பாதுகாக்க பயன்படும் மதிப்பு எல்லோருக்கும் கொடுக்கப்படும். ஆனால் பாதுகாகப்பட்ட தகவலை நேர்த்தகவலாக மாற்றக்கூடிய மதிப்புதான் மறைத்துவைக்கப்படும். இதைப்போன்ற காரணங்களால் தான் பொதுவான மதிப்பு சம்மந்தப்பட்ட சூத்திரங்கள் இணையத்துறையில் வெகுவாக பிரபலம். இதில் தான் வரும் RSA (Rivest, Shamir, Adelman - இந்த மூவரும் சேர்ந்து கண்டுபிடித்தது தான் இந்த சூத்திரம்)வகையான சூத்திரங்கள். இதைப்பற்றியும் விரிவாக எழுத விருப்பமில்லை.

தற்சமயங்களில் கிரிப்டோகிராபி என்பது தகவலை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு மட்டுமல்லாமல். அந்த தகவல்களினுடைய நம்பகத்தன்மையை உறுதிசெய்யவும் பயன்படுகின்றன. ஒருவழி(One Way) முறை என்ற ஒன்று இதில் புழக்கத்தில் உள்ள ஒன்று. அதாவது நீங்கள் பேப்ரை, நறுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி கிழிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் அதை மீண்டும் பேப்பராக மாற்ற முடியுமா, அதைப்போலத்தான் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு தகவலின் மொத்த விஷயங்களையும் வைத்து ஒரு சிறியதாக ஒரு குறிப்பு(Message Digest) உறுவாக்குவது, எப்படியென்றால் நீங்கள் எப்பாடு பட்டாலும் இரண்டு வெவ்வேறான தகவல்களுக்கு ஒரு குறிப்பு வராது என்ற உத்திரவாதத்துடன். இந்த வகையான முறைக்கு எம்டி5, எம்டி4 போன்ற அல்காரிதங்கள் பயன்படுகின்றன.

இதைப்போலவே நீங்கள் தற்சமயத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள், Digital Siganature என்று, இதுவும் புரிந்துகொள்ள சுலபமான ஒன்றே. இந்த டிஜிடல் சிக்நேட்சர் என்பதும் ஒரு வகையான மதிப்பே(Value), இதையும் உங்களுடைய உண்மையான தகவலிலிருந்தே தயாரிப்பார்கள், மதிப்பு சார்ந்த சூத்திரங்கள் பயன்படுத்தி. அதாவது இந்த டிஜிடல் சிக்நேட்சர் வைத்திருப்பவர் நினைத்தால், தன்னிடம் உள்ள தகவல் சரியானதுதானா இல்லை தகவல் பரிமாற்றத்தின் பொழுது இடைமறிக்கப்பட்டு மாற்றப்பட்டதா எனத் தெரிந்து கொள்ளலாம். டிஜிடல் சிக்நேட்சர்கள் பெரும்பாலும் பொதுவான மதிப்பு சார்ந்த சூத்திரங்களையே பயன்படுத்துகின்றன. சிறு மாறுதல்களுடன் அதாவது நாம் பொதுவான மதிப்பு சார்ந்த சூத்திரங்களில் பயன்படுத்தியைப்போலில்லாமல், தகவலை பாதுகாக்கப்பட்ட தகவலாக மாற்ற அவர்கள் ரகசிய மதிப்பைப் பயன்படுத்துவார்கள். பாதுகாக்கப்பட்ட தகவல்களஇல் இருந்து நேர்ப்படுத்த பொதுவான மதிப்பைப் பயன்படுத்துவார்கள்.

அதாவது முதலில் மொத்த தகவல்களில் இருந்து ஒரு சிறு குறிப்பை(Message Digest) பெறுவது. பின்னர் அந்தக் குறிப்பை பொதுவான மதிப்பு சார்ந்த சூத்திரத்தில் ரகசிய மதிப்பைப்பயன்படுத்தி பாதுகாப்பான தகவலாக மாற்றவேண்டும். இந்தத் தகவலே டிஜிடல் சிக்நேட்சர். பின்னர் உபயோகிப்பாளரை தகவல் சென்றடைந்ததும், தன்னிடம் உள்ள பொதுவான மதிப்பு சார்ந்த சூத்திரத்தை பயன்படுத்தி, அவர் டிஜிடல் சிக்நேட்சரில் இருந்து சிறுகுறிப்பை(Message Digest) பெறுவார். பின்னர் அந்தக் குறிப்பைப் பயன்படுத்தி வந்த பாதுகாப்பான தகவலை நேர்த்தகவலாக மாற்றுவார். பின்னர் இரண்டையும் ஒப்பு நோக்கி வந்த தகவல் சரியானதுதானா என சரிபார்த்துக்கொள்வார். தற்சமயம் இந்த முறையை பயன்படுத்த DSA(Digital Signature Algorithm) என்ற சூத்திரம் புழக்கத்தில் உள்ளது.

இதைப்போலத்தான் Digital Certificate, டிஜிடல் சிக்நேட்சரில் இருந்து பெறுவது தான். அதாவது நாம் உபயோகிப்பாளருக்கு கொடுக்கும் பொதுவான மதிப்பை ஒரு தேர்ந்த நிறுவனத்திடம்(Certification Authority like Verisign, National Security Agency - America) இருந்து பெற்றுக்கொண்டு நாம் உபயோகப்படுத்துவதே டிஜிடல் சர்டிபிகேட், அதாவது நீங்கள் உங்கள் கடனாளர் அட்டையைப் ஒரு இணையத்தளத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் அந்த இணையத்தளத்தின் நம்பிக்கைத்தன்மையை இந்த டிஜிடல் சர்டிபிகேட்டை வைத்து மதிப்பிடலாம். அதாவது, மைக்ரோசாப்ட் இருக்கிறதென்றால் அவர்கள் தங்களின் இணையத்தளத்திற்கென்று ஒரு சர்டிபிகேட் அத்தாரிடியிடம், அனுமதி வாங்கியிருப்பார்கள் தாங்கள் இன்னாரென்றும் இன்னது செய்கிறோமென்றும் இதை வைத்துக்கொண்டும அந்த சர்டிபிகேட் அத்தாரிடி ஒரு குறிப்பிட்ட பொதுவான மதிப்பை இந்த நிறுவனத்தின் உபயோகரிப்பாளர்களிடம் கொடுக்கும் இதை வைத்துக்கொண்டு, அந்த உபயோகிப்பாளர் தான் இருப்பது மைக்ரோசாப்டின இணையத்தளத்தில் தானா, தன் தகவல் பரிமாற்றங்கள் அவர்களுடன்தான் நடக்கிறதா என சரிபார்த்துக்கொள்ள முடியும். இதைப்போன்ற சர்டிபிகேஷன் அத்தாரிடிகள் ஒவ்வொரு நாட்டிற்கும் இருப்பார்கள், நம்பகத்தன்மையுடன். இந்த வகையான டிஜிடல் சர்டிபிகேட்களில் தற்சமயத்தில் புழக்கத்தில் இருப்பது, X.509, இதன் உட்பிரிவுகள்(Versions), மூன்றும்(X.509.3) ஒன்றும்(X.509.1).

இத்துடன் நான் கிரிப்டோகிராபி என்ற பெயரில் எழுதி வந்த இந்தக் கட்டுரையை வெற்றிகரமாக முடிக்கிறேன். நான் முழுமையாக விளக்கவில்லை முன்பே சொன்னதைப்போலவும் தலைப்பைப்போலவும் இது ஒரு ஜல்லியடிக்கும் முயற்சியே, என்னிலும் அனுபவம் வாய்ந்தவர்கள் வந்து ரோடு போட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

For Advanced Reading

Why Cryptography is Harder than it Looks
Security Pitfalls in Cryptography
Cryptography, Security, and the Future
The Code Book

Only for genius

Algorithms and Mechanisms:

Key Management

Digital Signature:

Authentication:

Sessions

Email:

Electronic commerce

Smart cards and crypto devices

Miscellaneous

Crypto Politics.

Thanks to my sister for helping me in this article. :-)

Read More

Share Tweet Pin It +1

8 Comments

Popular Posts