“இசை எங்கேர்ந்து பிறக்குது தெரியுமா?” கேட்டதும் ஒரு கையை தூக்கி “எனக்கு தெரியும் சார்...” சொல்லிட்டு ஒரு மாதிரியா அசடு வழிஞ்சிக்கிட்டே, “ஆர்மோனியப் பெட்டியிலேர்ந்து சார்...” வடிவேலு சொல்வது போல் ஒரு காமடிக் காட்சி இருக்கும் கிங் திரைப்படத்தில்.
நான் இதிலிருந்து அதிகம் வேறுபட்டவன் கிடையாது. வடிவேலு ஆர்மோனியம்னு சொன்னதை வேண்டுமானால் நான் கீபோர்ட்ன்னோ இல்லை பியானோன்னோ சொல்வேன் அவ்வளவுதான் எனக்கு இசைக்குமான தொடர்பு இவ்வளவுதான். பாடல்களை ரசிக்கப் பிடிக்கும் அதற்கு மேல் ஆராய்ச்சியில் குதிக்கும் அளவிற்கெல்லாம் ஒன்றும் கிடையாது மேல் பக்கத்தில். எங்கள் குடும்பத்தில் ஆண்கள் தபேலாவோ இல்லை வயலினோ கற்றுக்கொள்ளும் பழக்கம் இருந்தாலும். நான் அந்தப்பக்கம் கூட போனதில்லை.
ஆரம்ப காலத்தில் இன்னும் மோசம் பாடல்களே பிடிக்காத ஒரு நிலையிருந்ததது. பின்னர் வந்த முதல் காதல் என்னில் ஏற்படுத்திய பிரளயத்தில் பாடல்களில் மேல் விருப்பம் வந்தது. அதற்கு பின் அது கொஞ்சம் கொஞ்சமாக காதலாகத் தொடங்கியிருக்கிறது.
யார் இந்த ஜான் லெனன். ஒரு அமேரிக்க ஜனாதிபதி இவரை கொல்லச் சொன்னார் என்று ஒரு கன்ஸ்பியரஸி தியரி இன்றும் உள்ளது.(யார் அவர் எனக்கேட்பவர்கள் கடைசி வரை பதிவைப் படிக்கும் தண்டனை.)
இந்த ஜான் லெனனைப் பற்றி உங்களில் பலருக்கு என்னை விட அதிகம் தெரிந்திருக்கும். பீட்டில்ஸ் குழுவின் இறந்தகாலத்தில் பிறந்த எனக்கு தெரிந்ததை விட அதிகமாக தமிழ்மணத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கும்.
சமீபத்தில் திருமதி. சுஜாதாவின் பேட்டியை சிநேகிதியில் படிக்க நேர்ந்தது. அதில் அவர் ஜான் லெனன் என்று கூறிப்பிடாவிட்டாலும். பீட்டில்ஸ் பற்றி கூறியிருந்தார். மேலும் சுஜாதாவின் கிதார் ஆசையைப் பற்றியும். என்னிடம் ஒரு அக்வெஸ்டிக் கிதார் உண்டு(மாமாவினுடையது) அதில் சி, டி கார்ட்களைக்கூட சரியாகக் பிடிக்கத் தெரியாது. நானும் கிதாரை பின்னால் கட்டிக்கொண்டு கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என்று, ‘ஓ நெஞ்சே நீ தான்...' பாடலை மட்டும் தப்பு தப்பா வாசிப்பேன். சரி விஷயத்திற்கு வருவோம்.
அமேரிக்க அரசாங்கம் இவரை கவனிப்பதற்காக ஒரு தனி FBI குழுவை அமைத்திருந்தது, இவர் மேடைகளில் சொல்லும் பாடும் ஒவ்வொரு வார்த்தைகளும் குறிப்பெடுக்கப் பட்டிருந்தது. ஒரு பெரிய அரசாங்கமே இவரை எப்படி அமேரிக்காவிலிருந்து வெளியேற்றுவது என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவர் ஒரு பயங்கரவாதியா, தீவிரவாதியா யார் இவர் எதற்காக இவரை அமேரிக்க அரசாங்கம் தனியாக குழு அமைத்து கவனிக்க வேண்டும்.
அது ஒரு பெரிய கதை, எவ்வளவு பெரியதென்றால், அமேரிக்காவின் வியட்நாம் போர் பற்றி தனியாக பதிவெழுதும் அளவிற்கு பெரிதானது. அதே போல் பீட்டில்ஸ் உடைய கதையும் மிகவும் பெரிதானது. ஆனால் அதையெல்லாம் குறிப்பிட்டு பதிவை திசைதிருப்ப விரும்பாததால், சில வரிகளில் ஜான் வின்சென்ட் ஓனோ லெனான் பிறந்தது 9 அக்டோபர் 1940 இங்கிலாந்தில், எல்விஸ் பிரஸ்லி, சொக் பெர்ரி போன்றவர்களில் ராக் அண்ட் ரோல் பாணி இசையில் கவரப்பட்டு ஜானும் ராக் அண்ட் ரோல் இசைப் பயிற்சியாளராக ஆனார்.
இவரும் இவருடைய நண்பர்கள், ஜார்ஜ் ஹாரிஸன், பவுல் மக்கார்டினி, ரிங்கோ ஸ்டர் இணைந்து உருவாக்கிய த பீட்டில்ஸ் இசை வரலாற்றில் ஏகப்பட்ட சாதனைகளை செய்திருக்கிறது. ஏகப்பட்ட சாதனைகளை. ஜானை தங்கள் தலைவனாக பார்த்த மக்களின் எண்ணிக்கை பல மில்லியன்களைத் தாண்டும். பலருக்கு அவருடைய இமேஜின் ஆல்பம் தேசியகீதத்தை விட விருப்பமுடையதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இமேஜின் பாடல் தான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறப்பான பாடல்களில் ஒன்றாக கருதப்படுவது. இந்த த பீட்டில்ஸ் வெளியிட்ட பல ஆல்பங்கள் இன்றும் பல சாதனைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
இனி முக்கியpபகுதிக்கு, ஜான் லெனன், அமேரிக்காவின் வியட்நாம் போரை எதிர்த்து தன்னுடைய கான்சர்ட்களில் பாடியும் பேசியும் வந்தார். சாதாரணமாக ‘அல்லாஹு அக்பர்’ என்று ஆரம்பிக்கப்பட்டோ, இல்லை இடையில் சொல்லப்பட்ட தனிநபர் தொலைபேசி உரையாடல்களை முழுவதுமாக பதிவு செய்து வைத்து விசாரிக்க, சுமார் ஏக்கர் கணக்கில் மெயின்ப்ரேம் வைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்த அமேரிக்க அரசாங்கத்திற்கு,
ஒரு நாட்டின் முதுகெலும்பான இளைஞர்கள், அதுவும் எண்ணிக்கையில் அடங்காத இளைஞர்களை தன்வசப்படுத்தி, தன்னுடைய மயக்கும் பாடல்வரிகளால், குரலால் கவர்ந்து கொண்டிருந்த ஜான் லெனன் வியட்நாம் போருக்கு எதிராக குரல் கொடுத்ததும் எங்கேயோ பிடுங்கிக்கொண்டுவிட்டது. ஜான் லெனனை எப்படியாவது அமேரிக்காவிலிருந்து வெளியேற்றிவிட்டால் போதும் என நினைத்ததும் இதனால் தான். இடையில் ஜான் தனக்கு இங்கிலாந்து அரசகுடும்பத்தால் கொடுக்கப்பட்ட கவுரவ மரியாதையையும் திரும்ப அனுப்ப பற்றிக் கொண்டு எரியத்தொடங்கியது லெனன்னின் அமைதிக்கான வேள்வி.
தீயிலே நெய்விடுவதாய், ஜான் மற்றும் அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட யோகோ ஓனோ இருவரும் ‘பெட் இன்’ என்ற அறப்போராட்டத்தை(?) ஆரம்பிக்க, ஏற்கனவே இவர்கள் திருமணம் செய்து கொண்டது உலகப்பிரசித்தமாக இருக்க இருவரும் அதை உபயோகித்து அமைதிக்கான முயற்சியில் இறங்க. அமேரிக்க அரசாங்கம் திணறியது. ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் குழுவையே ஜானை கண்காணிக்கப் பணித்தது.
மார்டின் லு\தர் கிங்கையே, தேசப்பாதுகாப்பின் விரோதியென்று சொன்ன அமேரிக்காவிற்கு, இங்கிலாந்தின் குடிமகனான, அமேரிக்காவில் கீரின் கார்ட் அப்ளை செய்திருக்கும், ஜானை தேசப்பாதுகாப்பின் விரோதியென்று முத்திரை குத்த நாளாகவில்லை. ஜானை அமேரிக்க அரசாங்கம் ‘அண்டர் ஸ்டாராங் ஸர்வைலன்ஸ்ஸில்’ வைத்திருந்தது. இந்த வார்த்தையை அப்படியே தர ஒரு விஷயம் இருக்கிறது. அது இப்படிப்பட்ட ஒரு வார்த்தையைத் தான் மார்டின் லூதர் கிங்கிற்கும் அமேரிக்க அரசாங்கம் சொல்லியிருந்தது. கடைசியில் என்ன நடந்தது?
மார்டின் லூதர் கிங், நான்கு புறமும் எப்பிஐ சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கும் பொழுதும் சுட்டுக்கொல்லப்பட்டார். இஸ்ரேலின் மொஸாட் மட்டுமல்ல அமேரிக்காவின் எப்பிஐ மற்றும் சிஐஏ வும் அரசியல் கொலைகளை சர்வசாதரணமாக செய்யவல்லதுதான். ஆனால் என்ன இஸ்ரேல் செய்தால் அவர்கள் தான் செய்தார்கள் என்று தெரிந்துவிடும். ஆனால் பெரியண்ணன் அதிலெல்லாம் கில்லாடி, ஜேஎப்கே, ஆர்எப்கே, மார்டின் லூதர்கிங், இப்படி கோலி மாறிய ஆட்கள் நிறைய பேர். ஜேஎப்கே தெரிந்திருக்கும் அது யார் ஆர்எப்கே, அது ராபர்ட் கென்னடி, கென்னடி குடும்பத்தின் அடுத்த வாரிசு, இவரையும் போட்டுத்தள்ள சொல்லியது அந்த ஜனாதிபதிதான் என்று ஒரு கான்ட்ரவர்ஸி இன்றும் அமேரிக்காவில் உண்டு. யார் அவர் அது கடைசியில்.
இப்படியாக அண்டர் ஸ்டார்ங் ஸர்வைலன்ஸ்ஸில்(Under strong surveillance) வைக்கப்பட்டிருந்த மார்டின் லூதர்கிங் போட்டுத்தள்ளப்பட்டார் என்றால் ஜானின் கதி, அதே கதிதான் அவரும் போட்டுத்தள்ளப்பட்டார், இவருக்கும் ஒரு மனோதத்துவ முறையில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒருவனே கொலைகாரன். உலகத்தின் அமைதிக்காக சிந்தித்த பாடிய, ஒருவனை சுட்டுக்கொன்றனர். அந்த சமயத்தில் உலகமே இசை இறந்துவிட்டதாக எண்ணி வருத்தப்பட்டனர்.
இந்த ஆள் ஒரு பெரிய ஜீனியஸ், முன்னால் ‘Bed-in’ என்று ஒரு அய்ட்டம் சொல்லியிருந்தேன் அல்லவா, அது வேறுஒன்றுமில்லை. அப்பொழுதுதான் கல்யாணம் செய்துகொண்டிருந்த யோகோ ஒனோவும் ஜானும் தாங்கள் தேனிலவு கொண்டாடும் ஓட்டல் அறைக்குள் காலை ஒன்பதில் இருந்து மாலை ஒன்பது மணிவரை() பத்திரிக்கையாளர்களை விட்டு புரட்சி செய்தார்கள் எப்படி அமைதியைப் பேசி, அமைதிக்கான வாசகங்களை சுவற்றில் எழுதி வைத்திருந்து.
அப்பொழுது ஜான் இதையெல்லாம் பணத்திற்காக, புகழுக்காக செய்கிறார் என்று கூட ஒரு பரப்பப்பட்டது. ஆனால் ஜான் நினைத்தால் அந்த ஏழுநாட்கள் அவருக்கு கிடைத்த பப்ளிஸிட்டியை ஒரு பாடல் எழுதியும் அதை விட அதிக பணத்தையும் பப்ளிஸிட்டியையும் பெற்றிருக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
இது ஒரு பக்கம் தான் நான் சொன்னது, ஜானின் இன்னொரு பக்கமும் இருக்கிறது ஆனால் அது இங்கே தேவையில்லாதது. என்னைப்பொறுத்தவரை.
ஜானின் புகழ்பெற்ற இமேஜின் பாடலை தமிழ்ப்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் எவ்வளவு முயன்றாலும் என்னால் அந்த ஆங்கில வரிகளில் உள்ளவற்றை அதே மாதிரியான தமிழில் சொல்ல முடியவில்லை. அதை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். இது அமைதிக்கான முயற்சிகளில் தேசியகீதமாக இன்றும் நிழைத்திருக்கிறது.
Imagine
Imagine there's no heaven, it's easy if you try,
No hell below us, above us only sky,
Imagine all the people, living for today.
Imagine there's no countries, it isn't hard to do,
Nothing to kill or die for, and no religion too,
Imagine all the people, living life in peace.
You may say I'm a dreamer, but I'm not the only one,
I hope someday you'll join us, and the world will be as one.
Imagine no possessions, I wonder if you can,
No need for greed or hunger, a brotherhood of man,
Imagine all the people, sharing all the world.
You may say I'm a dreamer, but I'm not the only one,
I hope someday you'll join us, and the world will live as one.
கடைசி விஷயம், அவரை கொல்லச்சொன்னதாக் சொல்லப்படும் அதிபர், இப்பொழுது இருப்பவரின் மூத்தவர். அவரே தான்...
Imagine Song (Real player)
en.wikipedia.com/john_lennon
en.wikipedia.com/the_beatles
Legends: John Lennon (The Beatles)
பூனைக்குட்டி
Thursday, May 15, 2008
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
என்ன உமக்கு புடிச்ச எழுத்தாளரின் வீட்டுக்காரம்மா பீட்ல்ஸ் பத்தி சொன்னோன்ன பதிவு போட்டுட்டீரு! 'பெட் இன்' நிகழ்ச்சி அப்ப ரொம்ப பிரசித்தம்!
ReplyDeleteலெனன் பற்றிய பதிவு அருமை மோகன்தாஸ். "Imagine there is no...." இந்த பாடலை இசையுடன் லெனனின் குரலில் கேட்கையில் எல்லையில்லா உலகும், சகோதரத்துவமும்...மனம் முழுதையும் நிறைக்கிறது. உங்கள் பது மீண்டும் லெனனின் பாடலை கேட்க வைக்கிறது.
ReplyDeleteபீட்டில்ஸ் பத்தி எழுதினதுக்கு அந்தம்மா காரணம் கிடையாது, ஒரே காரணம் ஜான் தான். இடையில் ஒரு வரி.அவ்வளவுதான் அவர்களுக்கான தொடர்பு. ஹிஹி.
ReplyDeleteநீங்க செக்ஸ் அன்ட் த சிட்டி, நான் பெட் இன் இரண்டு பேரையும் வெளிய அனுப்ப போறாங்க.
ReplyDeleteஅடடா லிங்க தரலையா, தர்றேங்க. மறந்துட்டேன் அப்புறம் நிறைய இடத்தில் இருந்து விஷயம் எடுத்தேன் அதையும் போடணும். உங்கள் விமரிசனத்திற்கு நன்றி. திரு.
ReplyDeleteI like 'Imagine' too. Here is another song by Lennon
ReplyDeletemade famous by B.B. King. 'Stand by Me'. I don't know what happened to John Lennon at this time.
http://www.youtube.com/watch?v=O4_ghOG9JQM
You should also listen to B.B. King's version!