In புகைப்படம்

என்ன ட்ரெஸ் போடாம ஃபோட்டோ எடுக்கப்போறேனா?

புகைப்படம் எடுக்கும் அன்பர்களுக்கு அவர்களுடைய ஒரு கனவுத் திட்டமாய் "மேற்படி" புகைப்படம் எடுக்கும் எண்ணம் இருக்குமாயிருக்கும். சமீபத்தில் கொல்லிமலை சென்றிருந்த பொழுது கூட இதைப்பற்றிய பேச்சு வந்தது நினைவில் இருக்கிறது. :)

சமீபத்தில் மைசூர் போகலாம் என்ற திட்டம் தீட்டியதும் நண்பர்களாய் ரங்கன்திட்டு என்றொரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது அங்கே நீ ஏன் அங்கே சென்று புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கேட்டனர். நான் வேடந்தாங்கலையே பார்த்தவன் என்கிற மமதையில் ம்ம்ம் சரிசரி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன்.

மைசூர் சென்ற பொழுது ரங்கன் திட்டுவிற்கும் சென்றிருந்தேன், வேடந்தாங்கலை ஒப்பிட பறவைகள் குறைவு தான் என்றாலும் வகைகளுக்கும் பறவைகளுக்கு நிச்சயமாய்க் குறைவில்லை ரங்கன் திட்டுவில். அதைவிடவும் முக்கியமான விஷயம் போட்டிங் உண்டு, போட் ஒன்றை எடுத்துக் கொண்டு நீங்கள் பறவைகளுக்கு அருகில் சென்று பார்த்துவிட்டு வரலாம். 300 ரூபாய் கொடுத்தால் இன்னும் நிறைய தூரம் அழைத்துச் சென்று அமைதியாக புகைப்படம் எடுத்துவிட்டு வரமுடியும் என்றும் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அதையும் ஒரு முறை செய்து பார்க்க உத்தேசம் கைவசம் இருக்கிறது.

இப்போதைக்கு அங்கே எடுத்த படங்கள் சில.

Bird

Bird

Bird

Bird

Bird

m1__IMG_7375

Bird

PS1:பறவைகள் மேல் க்ளிக்கினால் பறந்து போய்டாது பெரிதாகத் தெரியும்

PS2:பறவைகள் எதுவும் ட்ரெஸ் போட்டிருப்பதாகத் தெரியவில்லை

PS3:கொல்லிமலையில் பேசியது விலங்குகளைப்(மனிதன் தவிர்த்த :)) பற்றி

Related Articles

16 comments:

  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  2. நந்து,

    ஹிஹி

    ReplyDelete
  3. படங்கள் அருமையாக வந்திருக்கின்றன..பறவைகள் ஆடைகள் அனிவதில்லை என்பதை
    கண்டுபிடித்த உமக்கு ஆஸ்கார் அவார்ட்டுக்கு பரிந்துரை செய்யலாம்.... :)

    ReplyDelete
  4. ராஜீபன்,

    நன்றி.

    ஆஸ்காருக்கு பதில் நோபெல் கொடுக்க முயற்சி எடுத்தால் நானும் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  5. வாவ்..படங்கள் மிக அழகு..
    உங்கள் கேமராவைச் சுத்திப் போடவேண்டும்.. :)

    ReplyDelete
  6. பறவைகள் மேல் க்ளிக்கினால் பறந்து போய்டாது பெரிதாகத் தெரியும் // அட ஜூப்பர்...

    ReplyDelete
  7. Nice photos. Looks very professional.

    ReplyDelete
  8. தலைப்பும் படங்களும் சூப்பர் :-)

    ReplyDelete
  9. போட்டோ எடுப்பவர் ட்ரெஸ் போட்டு எடுத்தாலென்ன, போடாமல் எடுத்தால் என்ன? :-)

    அருமையான படங்கள். இந்தப் பறவைகள் பெயர் என்ன என்று என் மகனைக் கேட்டு சொல்கிறேன். :-)

    ReplyDelete
  10. படங்கள் அருமை.

    ReplyDelete
  11. ரிஷான் ஷெரிப்,

    காமெராவை சுற்றுவதில் பிரச்சனையில்லை, சுற்றிட்டு கையில் கொடுத்திடணும். கீழே போட்டிடக்கூடாது.

    ReplyDelete
  12. செல்வேந்திரன்,

    நல்லாயிருக்கில்ல. என்னமோ வந்திருச்சு.

    கண்ணன்,

    நன்றி.

    மதுரையம்பதி,

    நன்றி.

    ReplyDelete
  13. நாகு,

    நன்றி.

    உங்கள் மகன் பறவை ஆராய்ச்சியாளன் என்றால் பெயரைக் கேட்டு சொல்லுங்கள்.

    அங்கே போட்டிருந்தார்கள் நான் தான் எழுதிக்கொள்ளாமல் வந்துவிட்டேன்.

    ReplyDelete
  14. கோவை சிபி,

    நன்றி.

    ReplyDelete
  15. padangal ellam miga arumai..Especially 4th photo is really beautiful :)

    ReplyDelete
  16. என் மகன் மிருக நிபுணனாக நிறைய அறிகுறிகள் தெரிகிறது. பார்க்கலாம்.

    அவன் பதில்கள்

    1. don't know
    2. Cattle egret in breeding plumage(that explains the color)
    3. don't know
    4.Cattle egret (not in b.p. :-)
    5. dont know
    6. Painted Stork
    7. Anhinga

    ReplyDelete

Popular Posts