என்னைக்கவர்ந்த மற்றொரு அற்புதமான திரைப்படம், பாபி பிஷ்ஷருக்கான தேடல். (Searching for Bobby Fischer) பெரும்பாலானவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும், சில மாதங்களுக்கு முன்னர் கூட அமேரிக்காவின் வலியுறுத்தலின் பெயரால் ஜப்பானில் கைது செய்யப்பட்டு பின்னர் தற்சமயம் ஐஸ்லாந்தின் வாழும் பாபி பிஷ்ஷர், இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சதுரங்க வீரர்.(Former world chess champion & One and only American to win the FIDE World Chess Championship.) ஆனால் படம் இவரது பெயரை கொண்டிருந்தாலும் கதை இவரைப்பற்றியது இல்லை. பிஷ்ஷரைப்போலவே சிறுவயதிலேயே சதுரங்கத்தின் அத்துனை திறமைகளும் கைவரப்பெற்ற ஒரு சிறுவனைப்பற்றிய(Josh Waitzkin - Max Pomeranc) திரைப்படம் தான் இது.
பாபி பிஷ்ஷர்
ஒரு சிறுவன், அவனுடைய இணையில்லாத சதுரங்கத்திறமையை புரிந்து கொண்ட அவன் தந்தை(Fred Waitzkin - Joe Mantegna ), தன் மகனின் திறமையை புரிந்துகொண்டாலும் அது அவனுடைய வாழ்க்கையை பாதிக்குமோ என பயப்படும் அவன் அம்மா(Bonnie Waitzkin - Joan Allen), சிறுவனுடைய திறமையை சரியான வழியில் கொண்டுசெல்ல நினைக்கும் தந்தை, ஏற்பாடு செய்யும் பயிற்சியாளர்(Bruce Pandolfini - Ben Kingsley), அமேரிக்க வீதிகளில் சதுரங்கத்தின் இன்னொரு வகையான உத்தியை பயன்படுத்தி வேகமாக விளையாடும் சிறுவனின் ஆதரவாளர்(Vinnie - Laurence Fishburne). இவர்களைச் சுற்றி சூழழும் இந்தக் கதையை மிக நேர்த்தியாக வடிவமைத்திருப்பார் இயக்குநர்(written and directed by Steven Zaillian).
ஆரம்பத்தில் அந்த சிறுவனுடைய திறமையை, அவன் தந்தை நிறைய யோசித்து நகர்த்தும் ஒரு நகர்வின் பதில் நகர்வை இவன் பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டோ இல்லை அந்த அடுக்கு மாடிகுடியிருப்பின் எல்லா இடங்களிலிருந்தும் கணக்கிட்டோ சொல்லும் வடிவத்தில் வெளிக்காட்டுவதிலாகட்டும், ஒரு போட்டியின் மிக ஆரம்பக்கட்டத்தின் பொழுது அவனது போட்டியாளரின் ஒரு நகர்த்தலை வைத்து அவனிடம் "நீ தோத்துட்ட" என்று மெதுவாய் சொல்லிவிட்டு பின்னர் அந்த போட்டியாளர் முழிக்க "ஆனால் உனக்கது தெரியாது" என சொல்லவதில் ஆகட்டும், ஒரு கட்டத்தில் பயிற்சியின் பொழுது தான் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் பயிற்சியாளரின் நகர்விற்கு மெதுவாய் சதுரங்கக் கட்டங்களையும் காய்களையும் பார்த்து குழம்பி மெதுவாய் நகர்த்த அதைப் பார்த்த பயிற்சியாளர், அவனுக்கு உதவுவதாய் சொல்லிவிட்டு அத்தனை காய்களையும் கீழே தள்ளிவிட்டு இப்பொழுது சுலபமாய் இருக்குமே எனக் கேட்பதில் இருக்கும் உண்மையிலும் மிக அழகாய் படத்தைச் செதுக்கியிருப்பார் இயக்குநர்.
படத்தின் முக்கிய கட்டமே அவன் தான் தோற்றுவிடுவோமா என்ற பயத்திலேயே ஒரு பையனிடம்(Jonathan Poe - Michael Nirenberg) தோற்பதிலிருந்து சூடுபிடிக்கும். அவனுடைய அந்த காம்ப்ளக்சை மிக அழகாக படமாக்கியிருப்பார் இயக்குநர். அதே போல் அவனுக்கு பாரம்பரிய சதுரங்க முறை மட்டுமில்லாமல், பிலிட்ஸ்(Blitz) என அழைக்கப்படும் அதிவிரைவான சதுரங்க போட்டியில் இருக்கும் ஆர்வத்தால், அமேரிக்க தெருக்களில் விளையாடும் இது போன்ற நபர்களிடம் விளையாட ஆசைப்பட்டு பிறகு அவர்களிடம் கற்றுக்கொள்ளும் சில நெளிவு சுழிவுகளையும் ஆழமாக படமாக்கியிருப்பார் இயக்குநர். இடையிடையில் பாபி பிஷ்ஷரையும் குறிப்பிடுவார்கள். அதாவது அந்த சிறுவனின் பயிற்சியாளருக்கு பாபி பிஷ்ஷர் விளையாண்ட அத்துனை போட்டிகளின் நகர்த்தலும் அத்துப்பிடி என சொல்வதிலிருந்து, அடிக்கடி அந்தச் சிறுவனை பயிற்சியாளர் பாபி பிஷ்ஷருடம் ஒப்பு நோக்குவிலும் குறிப்பிடுவார்கள்.
இந்தப் படத்தின் முடிவும் ஒரு அழகான மாலை நேரத்தின் தூறல் விடும் காலத்தில் சூடாய் தேநீர் சாப்பிடுவதைப் போல அற்புதமாக இருக்கும். அந்தப் பையனைப் பார்த்தாலே தோற்றுவிடுவோமோ என்ற பயம் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு அந்த ஆண்டின் தலைசிறந்த வீரருக்கான போட்டியில் இறுதிப்போட்டியில் இருவரும் விளையாட நேரும், அந்தச் சமயத்தில் அவனுடைய இரண்டு பயிற்சியாளர்களிடமும் கற்றது எப்படி பயன்படுகிறது என தெளிவாக சொல்லியிருப்பார் இயக்குநர்.
அதாவது முதலில் அவனுடைய ஒரு தவறான நகர்த்தலால் தன் ராணியை தவற விடுவான் சிறுவன், ஆனால் கொஞ்சம் சோர்ந்த அவன், அதிவிரைவான பிலிட்ஸ் போட்டி அவன் விளையாடியிருந்த காரணத்தால் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து விளையாடுவதை காட்டுவதிலிருந்தும், இடையில் எதிராளியின் ராணியை வெட்டிவிட்டு இருவரும் சமநிலையில் இருக்கும் பொழுது அந்தப் பெண் நகர்த்தும் ஒரு நகர்த்தலால் அவன் தோற்றுவிடுவான் என இவனுக்கு முன்பே தெரிந்து கொள்வதில் இவனுடைய பயிற்சியாளரின் உதாரணத்தை பயன்படுத்துவதிலாகட்டும் மிக அற்புதமாக காட்டியிருப்பார் இயக்குநர். கடைசியில் அவன் தோற்றுவிடுவாள் எனத்தெரிந்ததும், இந்தப்போட்டியை டிராவில் முடித்துக் கொள்ள அவன் கேட்கும் அழகே அழகு. ஆனால் அந்தப்பெண் அதை ஒப்பாமல் விளையாடி தோற்பாள். முடிவில் அவனுடைய ஒரு நண்பனிடம் இருக்கும், தன்னிடமிருந்த அதே தோற்றுவிடுவோமென்ற காம்ப்ளெக்ஸை விரட்ட அவன் பேசுவதில் முடிப்பார் இயக்குநர்.
ஒரு அற்புதமான படம், கொஞ்சம் சென்டிமெண்ட், ஹாலிவுட் மசாலா தடவி எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் இதுபோன்ற ஒரு படம் தமிழில் வருமா என இந்தப்படம் பார்த்ததிலிருந்தே யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
இனி இப்படியே சினிமாவை மட்டும் பேசிவிட்டு போகாமல் கொஞ்சம் ஆழமாக சதுரங்கத்தைப் பற்றி பார்ப்போம். இது அனைவருக்கும் தெரிந்த விளையாடிய ஒரு விளையாட்டு என்பதால் தற்சமயம் கணிணியில் இருக்கும் அதி நவீனமான சதுரங்க இயந்திரங்களைப்பற்றி பார்ப்போம். சின்ன சுய விளம்பரத்துடன்,
நான் லினக்ஸைப் பற்றி தெரிந்து கொண்டதும் உபயோகப்படுத்த தொடங்கியதும் சில தில்லுமுள்ளுகளை பண்ணத்தொடங்கினேன் அது, யாகூவிலோ இல்லை மற்ற இணையத்தில் கிடைக்கும் இடங்களிலோ சதுரங்கம் விளையாட நண்பர்களை அழைத்து இன்னொரு பக்கம் என் மடிக்கணிணியில் லினக்ஸில் நான், பிராஸஸரோடு விளையாடி, அடுத்த மூவை தெரிந்து பல நல்ல சதுரங்கம் விளையாடும் நண்பர்களை ஏமாற்றி வீழ்த்தியிருக்கிறேன். உங்களுக்கும் விருப்பமானால் முயற்சி செய்து பாருங்கள்.
இனி கணிணியில் சதுரங்கத்தைப்பற்றி,
முதன் முதலில் கம்ப்யூட்டர் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுமே, பிரபல பிரிட்டிஷ் கணித வல்லுநர், ஆலன் டியுரிங்(Alan Turing), அதைப் பயன்படுத்தி மனிதனை வெல்லவும் உலகவல்லுநரை வெல்லவும் சில சூத்திரங்களை கண்டுபிடித்தார். அதாவது முதன் முதலில் 1950-ல், கம்ப்யூட்டர் லாஸ் அலமோஸில் ஸயின்டிபிக் லெபாராட்டரியில்(Los Alamos Scientific Laboratory) வெளியிடப்பட்ட பொழுதிலிருந்து அதைப்பயன்படுத்தி ஆய்வாளர்கள் சதுரங்கம் விளையாட ப்ரோக்கிராம் எழுத தொடங்கிவிட்டனர்.
ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக நாளொரு மேனியும் பொழுதொறு வண்ணமுமாக வளர்ந்து வந்த இந்த ஆர்ட்பிஷியல் இன்டெலிஜன்ஸின்(Artificial Intelligence) முக்கிய நோக்கமே உலக வல்லுநரை(World Champion) வீழ்த்துவதாகத்தான் இருந்தது. இந்த சதுரங்கக்கணிணியை கண்டுபிடிப்பதில் ஒரு பெரிய சமுதாயமே இறங்கியிருந்தது, பல ஆயிரம் மாணவர்களின் ஒரு குறிக்கோளாக இருந்தது இந்தத் தொழில்நுட்பமே. அந்த நாளும் வந்தது,
மே மாதம் 11ம் நாள் 1997 3.30 மணிக்கு, ஐபிஎம்மின்
டீப் புளு IBM's Deep Blue என அழைக்கப்பட்ட மல்டி மில்லியன் டாலர் இயந்திரம், அப்போதய உலக வல்லுநரான கேரி காஸ்பரோவை(Garry Kasparov)(ஒரு வழியாக) ஆறு ஆட்டங்கள் கொண்ட போட்டியில் முறியடித்து, ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் தொழில் நுட்பத்தின் பல ஆண்டு கனவை நிறைவேற்றியது. ஆனால் ஐபிஎம் அந்த முயற்சியை தொடர்ந்து செய்யாமல் அதாவது அந்த டீப் புளுவின் ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் அத்துடன் எங்கள் வேலை முடிந்தது எனக்கூறி அந்த டீப்புளுவையும் செயலிழக்க செய்துவிட்டது அதாவது தான் நிலவுக்கு சென்று திரும்பி வந்ததை வெளிப்படுத்தியைப்போல நிலவில் இருந்த பொழுது புகைப்படம் எடுத்துக்கொண்டதாக அந்த ஒரு வெற்றி.
ஆனால் இந்த முயற்சி இன்னமும் பிறரால் நடத்தப்படுகிறது, டீப்புளுவைப்போல டீப்ஜனியர், டீப் பிரிட்ஸ்(Deep Junior, Deep Fritz) வந்தாலும் கேரி காஸ்பரோவ் சொன்னது தான் நினைவில் வருகிறது, டீப்புளுவிடம் இருந்த ஒரு ஜீனியஸ்னஸ் இவற்றிடம் இல்லையென்பது, இதற்கு டீப்புளு மற்றவையைவிட 100 மடங்கு வேகமானது என்பது காரணமில்லையென்றும் கூறுகிறார் அவர். அதாவது வேகம் சதுரங்கத்தில் செய்யக்கூடியது எதுவும் இல்லை, கணித முறைகளில் எண்ணிக்கையில் அடக்கமுடியாத நகர்வுகளை தீர்மானிக்க வேண்டும் அந்த சதுரங்கக்கணிணி.
தற்சமயம் ஒரு கட்டுரையில் படித்தேன், கைவசம் இல்லாததால் சரியான தகவல் தரஇயலவில்லை, டீப்புளுவை விட வேகமாகவும், எண்ணிக்கையில் ஒப்பிடவே முடியாத எண்ணிக்கையில் அடுத்த நகர்வைப்பற்றி சிந்திக்கும் சதுரங்கக் கணிணிகள் தற்பொழுது புழக்கத்தில் உள்ளன. இந்தக் கட்டுரையை கேரி காஸ்பரோவ் சொல்லும் ஒரு கருத்துடன் முடிக்கிறேன் அதாவது, சதுரங்கமானது ஒரு அற்புதமான விளையாட்டு இதில் மனித மூளையையும் கணிணியின் திறமையையும் ஒப்பிட்டு நோக்கும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் அது.
"What makes this new era so exciting is that there are many programs using different techniques that produce distinct styles. Deep Junior is as different from Deep Fritz as Kasparov is from Karpov. Chess offers the unique opportunity to match human brains and machines. We cannot do this with mathematics or literature; chess is a fascinating cognitive crossroads."
Mr. Kasparov, the world's top-ranked chess player, in The Wall Street Journal.
Searching for Bobby Fischer
பூனைக்குட்டி
Wednesday, May 14, 2008
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
I use(d) to meet Bonnie Waitzkin (Joshua Waitzkin's mother) very often in Chess Tournaments. I will tell her shortly about what u wrote about the movie in English when I meet her next time. - PK Sivakumar
ReplyDeleteநவன்,
ReplyDeleteஅது ஆண்தான், பின்னால் தெரியவந்தது. ஆணா பெண்ணா என்ற குழப்பம் படம் பார்க்கும் பொழுது இருந்தது, அந்தப் பையன் பெண்ணின் சாயல் கொண்டவனாக இருந்தான்.
பிகேஎஸ்,
ReplyDeleteநன்றிகள்.
//தற்சமயம் ஐஸ்லாந்தின் வாழும் பாபி பிஷ்ஷர்//
ReplyDeleteவாழ்ந்த...
இந்த வருடம் ஜனவரி 17ல் பிஷ்ஷர் காலமானார்.
அன்புள்ள நாகு,
ReplyDeleteஇந்தக் கட்டுரை எழுதும் பொழுது அவர் உயிருடன் இருந்தார்.
இப்ப இல்லை. :(
நல்லதொரு பதிவு.
ReplyDelete....
/நான் லினக்ஸைப் பற்றி தெரிந்து கொண்டதும் உபயோகப்படுத்த தொடங்கியதும் சில தில்லுமுள்ளுகளை பண்ணத்தொடங்கினேன் அது, யாகூவிலோ இல்லை மற்ற இணையத்தில் கிடைக்கும் இடங்களிலோ சதுரங்கம் விளையாட நண்பர்களை அழைத்து இன்னொரு பக்கம் என் மடிக்கணிணியில் லினக்ஸில் நான், பிராஸஸரோடு விளையாடி, அடுத்த மூவை தெரிந்து பல நல்ல சதுரங்கம் விளையாடும் நண்பர்களை ஏமாற்றி வீழ்த்தியிருக்கிறேன்./
உங்களோடு யாகூவில் சதுரங்கம் விளையாடிப் பார்க்கும் ஆர்வம் வருகின்றது :-). ஆனால் அதிகமாய்
4 அல்லது 5 நிமிட அதிவேக ஆட்டங்களே அடுவதுண்டு (ஒவ்வொரு ஆட்ட நகர்வுக்கும் ஆகக்குறைந்தளவு 10/20 நொடிகள் இடைவெளி கொடுத்து). அப்படி ஆடும்போது அடுத்த நகர்வைக் கண்டுபிடிக்கும் முறை வேலை செய்வது கடினமென நினைக்கிறேன் :-).