ரவிசங்கர் அண்ணாச்சி தன்னை 'விக்கிபீடியாவின் கொபசெ'வாக நினைத்துக் கொள்வதில் பெரிய பிரச்சனையில்லை. சொல்லப்போனால் இணைய உலகில் தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகளைப் பரப்புவதற்கான செயலாளர் ஒரு அமைந்தது கூட நல்லதற்கே. இப்படி கொள்கைகளை பரப்பும் நோக்கில் அவர் எழுதி வருவதும் எல்லோருக்கும்(!?) தெரிந்தேயிருக்கும். அவருடைய கடைசி பதிவில், தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்? அவர் எழுதியிருப்பது அப்படித்தான்.
சொல்லப்போனால் பாராட்டப்படவேண்டியது தான் அவருடைய பதிவில் இருக்கும் 90% பகுதிகள். ஆனால் சைக்கிள் கேப்பில் அவர் செய்யும் அரசியல் தான் இந்தப் பதிவை எழுத வைத்தது. அது 'தன்னார்வத் தமிழ் இணையத் திட்டம்' என்று சொல்லிவிட்டு அதில் "மாற்று"வையும் "சற்றுமுன்"னையும் இணைத்துப் போட்டிருக்கிறார்.
எனக்கு உண்மையிலேயே தமிழ்விக்கிபீடியா, தமிழ் விக்கிசினரி, நூலகம் போன்ற திட்டங்களுக்கும் மாற்று, சற்றுமுன்னிற்கும் இருக்கும் ஒற்றுமை தெரியவில்லை. ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து செய்யும் எதையுமே "தன்னார்வத் தமிழ் இணையத் திட்டம்" என்று சொல்லிவிட முடியுமா? பிறகு வவாச, பபாச எல்லாம் தங்களை "தன்னார்வத் தமிழ் இணையத் திட்ட"த்தில் சேர்க்கவில்லை என்று பிரச்சனை செய்ய மாட்டார்களா?(வவாச, பபாச பற்றி எழுதியது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே!)
மாற்றுவிலும், சற்றுமுன்னிலும் ரவிசங்கரின் பங்களிப்பு எப்படி தமிழ் விக்கியிலும், இன்னபிற திட்டங்களிலும் இருக்கிறதோ அப்படி இருக்கிறது. அதனையே ஒரேயொரு காரணமாகக் கொண்டு தன்னார்வத் தமிழ் இணையத் திட்டம் வகையறாவில் மாற்றுவையும் சற்றுமுன்னையும் கொண்டுவந்துவிடமுடியுமா? இல்லை ரவிசங்கருக்கு உண்மையிலேயே "தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு" ஆன அர்த்தம் புரியலையா?
அவர் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். அன்பு அண்ணை 'கட்டற்ற சுதந்திர'த்திற்கு பெருமதிப்பு அளிப்பவர் என்று இரண்டு மூன்று முறை பட்டுத் தெரிந்து கொண்டதால் இங்கேயும் இருக்கட்டும் என்று அதை பதிந்து வைக்கிறேன்.
--------------------//தமிழ் இணையத் தன்னார்வலக் கூட்டு முயற்சித் திட்டங்களில் //
இதில் மாற்றுவையும், சற்றுமுன்னையும் இணைப்பது சரியா?
தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்கிசனரி, விக்கி நூல்கள், மதுரைத் திட்டத்துடன் மாற்றுவையும் சற்றுமுன்னையும் இணைக்க முடியுமா?
//மதுரைத் திட்டம் < 10
தமிழ் விக்கிப்பீடியா = 20
தமிழ் விக்சனரி = 6
தமிழ் விக்கி நூல்கள், தமிழ் விக்கி செய்தி = 0
தமிழ் விக்கி மூலம் = 1
நூலகம் திட்டம் < 10 ?
மாற்று! = 6
சற்றுமுன்… = 5
தமிழா!< 10// ----------------------
PS: ரவிசங்கர் தன் பதிவில் பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை என்பதற்காக இந்தப் பதிவு கிடையாது.
ரவிசங்கரின் அரசியல்
Mohandoss
Thursday, May 22, 2008
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
உங்களோட இதே அக்கப்போரா போச்சப்பா... :P
ReplyDeleteமாற்று, சற்றுமுன் இருக்கும் போது கில்லி ஏன் இல்லை, ஒரு வேளை ரவிசங்கர் கில்லியில் இல்லையோ? :-))))))))
ReplyDeleteவிருபா ?
ReplyDeleteஅனானிமஸ் பின்னூட்டத்தை வெளிவிடுவதாய் இல்லை. மன்னிக்கவும்.
ReplyDelete//ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து செய்யும் எதையுமே "தன்னார்வத் தமிழ் இணையத் திட்டம்" என்று சொல்லிவிட முடியுமா?//
ReplyDelete//விருபா?//
விருபா ஒரே ஒரு ஆளின் முயற்சியால் செய்யப்படும் சின்ன(!!) வேலை. அதனால் ரவி அண்ணை இதற்குத் "தன்னார்வத் தமிழ் இணையத் திட்டம்" பட்டத்தைக் கொடுக்க நினைக்கவில்லையோ என்னவோ!
ஆமாம், சற்றுமுன்னைச் சேர்த்த அண்ணை, ஏன் அதிகாலை, மதியம், சாயங்காலம், இப்போ, செத்த முந்தி போன்ற வெட்டு/ஒட்டு "தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களையோ" அல்லது "தமிழ்வெளி, திரட்டி போன்ற திரட்டிகளையோ அல்லது உத்தம்(இன்ஃபிட்), எறும்புகள், டாவுல்டே, தமிழ் ஒருங்குறிக் குழுமம், தமிழ் லினக்ஸ் போன்ற முயற்சிகளையோ குறிப்பிட்டிருக்கிறாரா? திரட்டிகள் தேவையில்லையென்று பேசிய அண்ணையால் ஏன் வெட்டு ஒட்டு செய்திப்பதிவுகள் தேவையில்லை என்று பேசமுடியவில்லை?
இவர் ஒரு நிறுவனத்தில் இணைந்து கொள்ளும்வரை இப்படித்தான் இருக்கும்:))
அனானிமஸ்,
ReplyDeleteஎன் அரசியலுக்கு உட்பட்டு, நான் தனிநபர் தாக்குதல் என்று நினைக்காத பின்னூட்டங்களையே பதிவிட முடியும்.
மேற்கண்ட குழலி பின்னூட்டம் அவ்வகையானது. அதுமட்டுமல்லாது, குழலி யார் என்பது இணையத்தில் எல்லோருக்கும்(அல்லது பெரும்பாலானோருக்கு) தெரியும் என்பதால் அவருடைய கருத்திற்கான responsibilityயை அவர் எடுத்துக் கொள்ள முடியும். அது என் பதிவில் வெளிவிடப்பட்டிருந்தாலும்.
அவர் அனானியாகவே/வெறும் பெயர் கொண்டோ வந்திருந்தால் நான் வெளிவிட்டிருக்க மாட்டேன்.
என் பதிவில் எந்தப் பின்னூட்டம் வெளிவிடவேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். அதில் தலையிட வேண்டாம். மீண்டும் உங்கள் பின்னூட்டத்தை வெளியிடாததற்கு ஒரு மாப்பு.
அனைவருக்கும் - தன்னார்வத் தமிழ் இணையத் திட்டத்திற்கான ஒரு வரையறையை தமிழ் விக்கிப்பீடியாவில் பார்க்கலாம். இதனை ஒட்டி ஒவ்வொருவர் பார்வையிலும் எது தன்னார்வத் திட்டம் என்பதும் மாறுபடலாம். சற்றுமுன்னும், மாற்றும் உங்கள் பார்வையில் தன்னார்வத் திட்டம் இல்லை என்றால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ReplyDeleteநான் குறிப்பிட்டுள்ள திட்டங்கள் சில எடுத்துக்காட்டுகளே என்பது என் இடுகையில் தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. முழுமையான பட்டியல் இல்லை. எனவே, அந்தத் திட்டத்தை விட்டேன், இதை விட்டேன் என்று கேட்பதில் பொருள் இல்லை. நேரடியாக நான் ஈடுபட்ட திட்டங்களிலும் எனக்கு அறிமுகம் உள்ள திட்டங்களிலும் இருந்தும் இடுகைக்குத் தேவைப்படும் துல்லியமான தகவல்களைத் தர முடிவதும் எடுத்துக்காட்டுகளின் தெரிவுக்கு ஒரு காரணம். நன்றி.
//அனைவருக்கும் - தன்னார்வத் தமிழ் இணையத் திட்டத்திற்கான ஒரு வரையறையை தமிழ் விக்கிப்பீடியாவில் பார்க்கலாம்.//
ReplyDeleteயாருங்க எழுதினா இந்த வரையறையை? சரி அதை விடுங்க முக்கியமான விஷயம் பற்றி பேசுறீங்க, தன்னார்வலர்கள் ஏன் வரமாட்டேங்கிறாங்கன்னு அங்க மாற்றுவையும் சற்றுமுன்னையும் இழுத்துட்டு வந்தே ஆகணுமா?
மாற்றுவில் என்ன செய்கிறீர்கள், சற்றுமுன்னில் என்ன செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது?! ஆனால் அதில் செலவளிக்கும் பத்து நிமிஷங்களுக்கு பதில் ஒரு நிமிஷம் தமிழ்விக்கிக்கு செலவளித்தால் போதும்னு நினைக்கிறேன்.
நீங்கள் சொன்ன கட்டுரையின் 'உரையாடல்' பகுதியில் நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனை வரைமுறைக்கும் மாற்றும் சற்றுமுன்னும் ஒத்துவருமா?
மாற்றுவையும் சற்றுமுன்னையும் நீங்கள் பங்குபெறுவதாலேயே தூக்கிப்பிடிப்பதாகவும் தமிழ்விக்கிப்பீடியாவுடன் எல்லாம் ஒப்பிடியும் படியும் இருப்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது.
அந்த வரையறையின் பெரும்பகுதியை நற்கீரன் எழுதினார். ஆனால், அது விக்கிப்பீடியா கட்டுரை தானே? தகுந்த காரணங்களுடன் யாரும் இனியும் திருத்தி எழுதலாம்.
ReplyDelete//ஆனால் அதில் செலவளிக்கும் பத்து நிமிஷங்களுக்கு பதில் ஒரு நிமிஷம் தமிழ்விக்கிக்கு செலவளித்தால் போதும்னு நினைக்கிறேன்.//
எது தேவை, முக்கியம் என்பது அவரவர் பார்வை, விருப்பம். மற்றதை விட விக்கிப்பீடியா முக்கியம் என்றால் விக்கிப்பீடியாவை விட முக்கியமானவை எவ்வளவோ உள்ளன :)
மற்ற திட்டங்களைக் காட்டிலும் விக்கி திட்டங்களுக்குத் தான் எப்போதும் கூடுதல் உழைப்பைச் செலுத்தி இருக்கிறேன். விக்கிப்பீடியா பங்களிப்புகளை மட்டும் இங்கு காணலாம். இது போக விக்சனரி, விக்கிநூல்கள், விக்கிமூலத்திலும் பெருமளவு உழைப்பு இருக்கிறது. ஆனால், இருக்கிற எல்லா ஓய்வு நேரத்தையும் விக்கியிலேயே எவரொருவரும் செலவழிப்பதை விக்கிப்பீடியர்களே பரிந்துரைப்பதில்லை. அது விக்கிப் பித்துக்கு இட்டுச் செல்லும்.
இன்னும் உங்கள் மற்ற கேள்விகளுக்கு எல்லாம் விரித்து பதில் கூறலாம். ஆனால், நீங்களே சொல்வது போல் இதில் செலவழிக்கும் நேரத்தை விக்கிப்பீடியாவில் செலவழிப்போமே :)
அன்புள்ள ரவிசங்கர்,
ReplyDeleteஎல்லாவற்றையும் தனிப்பட்டவர்களின் தனிப்பட்ட விஷயமாக பார்ப்பதில் எனக்குப் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் ஓடையைக் குறைப்பதையும் அதிகரிப்பதையும் நம்மால் இப்படிப் பார்க்க முடியுமா அவங்க அவங்க தனிப்பட்ட விருப்பமா? இணைய தள இயங்குதல் பதிக்கும்னு பொலிடிகலி கரெக்டா சொல்லுறதில்லையா அது மாதிரி தான் விக்கிபிடியாவிற்கு எதுவும் செய்யாமல் சற்றுமுன்னோ மாற்றுவுக்கோ செய்யறது இணைய தள இயங்குதலைப் பாதிக்கும்னு பொலிடிகலி கரெக்ட்-ஆ சொல்லலாம். இணைய தள இயங்குதல் கொஞ்சம் 'ஆட்'டா இருக்கும்னா வேற வார்த்தை வேணும்னா கண்டு பிடிக்கலாம்.
நீங்க சொல்ற மாதிரி இந்தப் பிரச்சனை பற்றி பேசுறதுக்கு விக்கிக்கு இரண்டு கட்டுரை எழுதிட்டுப் போயிடலாம் தான். ஆனால் உங்க பதிவு படிச்சிட்டு வர்ற ரெண்டு பேர் விக்கியை விட்டுட்டு சற்றுமுன்னுக்கோ மாற்றுக்கோ போய்ட்டா என்னாகிறதுங்கிரதுக்காகத்தான்.
//ஆனால் உங்க பதிவு படிச்சிட்டு வர்ற ரெண்டு பேர் விக்கியை விட்டுட்டு சற்றுமுன்னுக்கோ மாற்றுக்கோ போய்ட்டா என்னாகிறதுங்கிரதுக்காகத்தான்.//
ReplyDeleteஇது தேவையில்லாத பயம். சும்மா நான் சொன்ன ஆர்வத்தில் எந்தத் திட்டத்திலும் எவரும் இணைந்து பார்க்கலாமே ஒழிய, அதில் அவர்களுக்கு தானே வரும் ஈடுபாடு, மகிழ்ச்சி இல்லை என்றால் ஒரே வாரத்தில் பங்களிக்காமல் குறைத்துக் கொள்வது உறுதி.
இதன் காரணமாகவே யாரையும் வேண்டி இணைக்காமல் அவர்களாகவே இணைந்து கொள்ளட்டும் என்று இருப்பதும்.
விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது, பிற திட்டங்களுக்குப் பங்களிப்பது இயல்பிலேயே வெவ்வேறான தன்மை உடையவை. வெவ்வேறான மக்களை ஈர்ப்பவை. அறியாமல் ஒன்றை விட்டு இன்னொன்றுக்குச் செல்வார்கள் என்று சொல்ல இயலாது. மக்கள் அந்த அளவு சிந்திக்க இயலாதவர்கள் அல்ல.
மாற்று!வைப் பற்றித்தெரியாது. ஆனால் 'சற்றுமுன்'னை மற்ற தன்னார்வ முயற்சிகளோடு சேர்த்து ரவிசங்கர் தன் இடுகையின் மொத்தப் பொருளையும் வீணடித்துவிட்டார். பூனைக்குட்டி என்றாவது ஒருநாள் வெளியே வந்துதானே ஆகணும்:-)
ReplyDelete(ஏன் இதைப் பூனைப்பதிவில் போடவில்லை தாஸ்?:P)
பி.கு. அல்லது டிஸ்கி அல்லது குசும்பு அல்லது சொ.செ.சூ.: அவர் அரசியல் முழுக்கப் புரிந்துவிட்டதால் இந்த மறுமொழியை அங்கே போடாமல் இங்கே போடுகிறேன்.
Mohandoss - கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தையும் நீக்கி இருக்கிறேன். எல்லாரின் வரையறைக்கும் உடன்பாடான ஏதாவது ஒரு திட்டம் இருந்தாலும், அதில் ஏன் பங்களிப்பு குறைவாக இருக்கிறது என்று அலசுவது தான் கட்டுரையின் நோக்கம். அதை விடுத்து, எது எல்லாம் தன்னார்வத் திட்டம் என்று தற்போது உரையாடல்கள் திசை திரும்புவதை விரும்பவில்லை. எவை எல்லாம் தன்னார்வத் திட்டம் என்பதும் முக்கியமான விசயம் தான். அதை இன்னொரு இடுகையில் பார்ப்போம். நன்றி.
ReplyDeleteஅவர்தான் தன் ஆர்வத்திட்டங்கள் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே? இதிலே உங்களுக்கு என்ன குழப்பம் ஐயா?
ReplyDelete