வாழ்க்கையில் நமக்கு சிலரை பிடித்துவிடும் ஏன்னெல்லாம் தெரியாது. அவரைப்பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளச் சொல்லும். அதுபோல் சில ஆட்கள் எனக்கும் உண்டு. அதில் மிகக்குறிப்பிட்ட ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சந்தோஷப்படுகிறேன். இவரை உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும். சிலருக்கு என்னை விட மேலாய், எனக்கு இந்தாளால மட்டும் இந்த வயசிலேயும் இவ்வளவு எதிர்ப்புக்களைத்தாண்டி இருக்க முடியுதுன்னு ஆச்சரியமா இருக்கும்.
அவர், அக்குனியோண்டு குட்டி நாடான கியூபாவில் உட்கார்ந்துக்கிட்டு உலக போலீஸ்காரனுக்கு அல்வா கொடுத்துக்கொண்டிருக்கும் பிடல் காஸ்ட்ரோ. தலைவர் கருணாநிதி கூட தான் மிகவும் ஆசைப்பட்டு பார்க்கமுடியாமல் இருக்கும் நபர் என்று சொல்லியிருந்தார். எனக்கு கம்யூனிசம் தெரியாது. கொஞ்சமே கொஞ்சம் படித்தது கூட கதைகளின் வழியாகத்தான்.(இவரும் கம்யூனிஸ்ட் கிடையாது அது வேற விஷயம் பின்னாடி சொல்றேன்.)ரெவல்யூஷன், சுதந்திரப்போராட்டம் இதிலெல்லாம் பூந்து பொறப்படுற ஆளும் கிடையாது நான் ஆனாலும் இவரை பிடித்திருந்தது, இருக்கிறது, இருக்குமென்று நினைக்கிறேன்.
ஆனாளப்பட்ட அமேரிக்காவால வியட்நாமில் சாதிக்க முடியாததை. 1990 களுக்கும் முன்னர் இருந்த பலமான சோவியத் யூனியனால் ஆப்கானிஸ்தானில் சாதிக்க முடியாதை சாதித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவரைக் கொல்வதற்கு நடந்த முயற்சிகளின் எண்ணிக்கையை சொன்னால் யாராலும் நம்பவேமுடியாதது. இதைப்பற்றியே சில கதைகளைத்தனியாக கொண்டவர். அதாவது இவரைக் கொல்வதற்கு அனுப்பப்பட்ட ஒரு பெண் இவரையே காதலிக்கும் அளவிற்கு கொண்டுவரப்பட்டார் என்பது போன்ற அதிசயமான கட்டுக்கதைகள் இவரைப்பற்றி அதிகம்.
காஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் பிடல் அலக்ஸாண்ட்ரோ காஸ்ட்ரோ ருஸ், பிறந்தது, ஆகஸ்ட் 13, 1926. அதுவரை க்யூபாவை ஆண்டுவந்த பட்டீஸ்டா வின் ஆட்சியை தூக்கியெறிய, 1959ல் இவர் நடத்திய புகழ்பெற்ற 26th of July Movement, உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றாலும்.
1947களில் இவர் பார்ட்டி ஆப் கியூபன் பீப்பிளில் சேர்ந்ததில் இருந்து பல இடங்களில் பொதுவாக அறியப்பட்ட மனிதராகத்தான் இருந்து வந்தார். ஜூலை 26, 1953ல் ஒரு சந்தர்ப்பத்தில், பாட்டிஸ்டாவின் ஆர்மியிடம் சிக்கிக்கொண்ட காஸ்ட்ரோ, அந்த ஆர்மியில் இருந்த இவருடைய கல்லூரி நண்பரால் கொல்லப்படாமல் காப்பாற்றப்பட்டார். இது நடந்த அதே ஆண்டு தான் காஸ்ட்ரோ தன்னுடைய மிகப்பிரபலமான சொற்பொழிவான La historia me absolveráவை நிகழ்த்தியிருந்தார். இதில் தன்னுடைய செயல்களை நியாயப்படுத்தி தொடரப்போகும் தன்னுடைய அரசியல் வியூகத்தை தெரிவிக்க, பாட்டிஸ்டா அரசால் 15 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டார். ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டாண்டுகளில் அதாவது 1953ல் சிறையில் இருந்து வெளிவந்தவர் மெக்ஸிகோவில் அடைக்கலம் புகுந்தார்.
இந்த இரண்டாண்டு சிறை வாழ்க்கையில் தான் நான் மேலே "நம்பமுடியாதது" என்று சொல்லியிருந்த இவரைக் கொல்வதற்கான 600 முயற்சிகள் நடத்தப்பட்டன(அப்படியாக நம்பப்படுகிறது.) இது கொஞ்சம் புகழ்ச்சிக்காக மிகப்படுத்தப்பட்ட நம்பராக இருந்தாலும் முயற்சிகளின் எண்ணிக்கை நிச்சயம் குறைவானது கிடையாது. அத்துனையிலும் இருந்து தப்பித்து தான் காஸ்ட்ரோ சிறையில் இருந்து வெளியானது.
மெக்ஸிகோவில் தான் சொல்லப்போனால் கியூபாவின் சுதந்திரப்போராட்டத்தின் முக்கியப்பகுதி நிகழ்ந்தது. அதில் மிகவும் முக்கியமானது எர்நெஸ்டோ 'செ' குவாரா என்னும் மருத்துவம் படித்த போராளியை காஸ்ட்ரோ சந்திக்கும் நிகழ்வு. அது மட்டுமல்லாமல், காஸ்ட்ரோவின் ஆட்களுக்கு போர்ப்பயிற்ச்சியும் இங்கே தான் தரப்பட்டது. ஸ்பானிய சிவில் போரின் போராளிகளில் முக்கியமானவரான அல்பெர்ட்டோ பாயோ, தான் அந்த பயிற்சியை முன்னிருந்து அளித்தவர் இவர் பிறப்பால் ஒரு கியூபன் என்பது முக்கியமானது.
இதன் பிறகு நடந்த உள்நாட்டுப்போரின் பொழுது, தன்னுடைய தளபதியே காஸ்ட்ரோவின் பக்கம் சென்றுவிட்ட காரணத்தினால் பாட்டிஸ்டா கியூபாவில் இருந்து வெளியேறினார். அப்பொழுத்து தொடங்கப்பட்டது கியூபாவில் காஸ்ட்ரோவின் ஆட்சி இன்று வரை நீடித்து வருகிறது. இது அவரைப்பற்றிய சிறிய அறிமுகம்.
நான் சொல்ல வந்து இரண்டு விஷயங்கள், உலக வரலாற்றில் மிகப்பிரபலமான, Cuban Missile Crisis, Bay of Pigs பற்றி கொஞ்சம்.
முதலாவது ஆண்டுக்கணக்கின் படி, பே ஆப் பிக்ஸ் இன்வேஷன். ஒன்றுமில்லை அத்தாம் பெரிய அமேரிக்கா, கியூபாவை ஆக்கிரமிக்க நடந்திய ஒரு முயற்சிதான் இது. ஒன்றுமில்லை, காஸ்ட்ரோ உண்மையில் சொல்லவேண்டுமானல் ஒரு கம்யூனிஸ்ட் கிடையாது. ஆனால் அவர் சோவியத் யூனியனின் தயவை பெற வேண்டி அப்படியொரு உருவகத்தை எடுக்கவேண்டிய நிலை வந்தது. இதன் காரணத்தினால் ஏற்பட்ட சிந்தாந்தப்பிரச்சனையில் செகுவாரா காஸ்ட்ரோவை விட்டு பிரியும் நிலை வந்தது. பிரிந்த பொழுது அவர் காஸ்ட்ரோவிற்கு எழுதிய ஒரு கடிதம் மிகவும் பிரபலமானது. 'செ' வைப்பற்றி ஒரு தனி பதிவு போடவிருப்பம் அப்பொழுது அதுபற்றி எழுதுகிறேன்.
இப்படியாக அமேரிக்கா உலகமெங்கிலும் எந்த நாடும் கம்யூனிச நாடாக இருக்கக்கூடாது என்று ஒற்றை காலில் நின்ற பொழுது அமைப்பின் படி அமேரிக்காவின் காலின் கீழ் இருக்கும் ஒரு நாடு கம்யூனிச முகம் கொண்டது பெரும் பிரச்சனையை கிளப்பியது. அதனால் காஸ்ட்ரோவை நிர்மூலமாக்கும் எண்ணத்தில் ஏப்ரல் 15, 1961ல் ஒரு பக்கம் A-26 குண்டுமழை பொழிய அமேரிக்க சிஐஏவால் பணமும் பயிற்சியும் கொடுக்கப்பட்ட, கியூபாவின் ஏறக்குறைய 1500 மக்கள் பே ஆப் பிக்ஸ்ஸில் இறங்கினர். அதாவது காஸ்ட்ரோவிற்கு எதிரான இந்த மக்களைக்கொண்டு ஒரு உள்நாட்டுக்குழப்பத்தை விழைவித்து அதற்கு ஆதரவு தரும்(என்று அமேரிக்கா நினைத்த) கியூபாவின் மக்களைக்கொண்டு காஸ்ட்ரோவை நீக்கிவிடலாம் என அமேரிக்கா கனவு கண்டது. ஆனால் கடைசி நிமிடம் கென்னடி இந்த இன்வேஷனுக்கான தன்னுடைய ஆதரவை ஏதோ ஒரு காரணத்துக்காக நீக்கிக்கொள்ள இந்த உள்நாட்டுக்குழப்பம் பிசுபிசுத்துப்போனது.
இந்த சமயத்தில் கியூபாவின் இராணுவத்தால் பிடிக்கப்பட்ட அமேரிக்க இராணுவவீரர்களை, கியூபா மருத்து உதவி வாங்கிக்கொண்டு விடுவித்ததாக எங்கேயோ படித்த நினைவு இதை படிக்கும் யாராவது சரிசெய்தால் சந்தோஷம். இப்படியாக தோல்வியில் முடிந்துபோன இந்த குழப்பத்தால், காஸ்ட்ரோ தான் ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்றும் அன்று முதல் கியூபா ஒரு கம்யூனிச நாடென்றும் வெளிப்படையாக அறிவித்தார்.
இதன் பிறகு நடந்தது இன்னும் ஆச்சர்யமான நிகழ்வு, அது மூன்றாம் உலகப்போரில் முடியாமல் போனதில் பலருக்கும் ஆச்சர்யமே. அக்டோபர் 22, 1962ல் அமேரிக்க பிரஸிடெண்ட் கென்னடி வெளிப்படையாக, ரஷ்யா கியூபாவில் தன்னுடைய குறைந்த தொலைவு செல்லும் நியூக்ளியர் மிஸைல்களை குவித்திருக்கிறது என்று சொன்னார். அமேரிக்காவின் ப்ளோரிடாவிற்கு கிட்டத்தட்ட 145 கிமீ, நிறுத்தப்பட்டிருந்த இந்த ரஷ்யாவின் நியூக்ளியர் ஏவுகணைகள் அன்று உலகத்தின் மிகப்பெரிய பேச்சாக இருந்தது. அமேரிக்காவிற்கும், ரஷ்யாவிற்குமான கோல்ட் வார் உச்சத்தில் இருந்த சமயம் அது.
கென்னடி, அமேரிக்காவின் மீதோ இல்லை இலத்தீன் அமேரிக்கா நாடுகளின் மீதோ ஏவுகணை வீசப்பட்டால் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சொன்னதிலிருந்து இன்னும் சூடுபிடித்தது. அமேரிக்கா கியூபாவை சோதனை செய்வதற்காக அனுப்பப்பட்ட ஸ்பை விமானம், கியூபாவில் சுட்டு வீழ்த்தப்பட்டு விமானியும் கொல்லப்பட, அதன் உச்சத்தை அடைந்தது.
கியூபாவை ஒழித்துக்கட்டிவிடும் ஆத்திரத்துடன் வந்த அமேரிக்க அமேரிக்க கப்பல்களை எதிர்கொள்ள ரஷ்யா தன்னுடைய நீர்மூழ்கி கப்பல்களை அங்கே அனுப்பியது. சொல்லப்போனால் இதுதான் இந்த சூழ்நிலையின் உச்சக்கட்டம். உலகமே அடுத்த உலகப்போர் தொடங்கப்படுமோ என்ற பயத்தில் இருந்த சமயம்.
ஆனால் என்ன காரணத்தினாலோ ரஷ்யா அந்த சமயத்தில் பின்வாங்கியது, கியூபாவின் மீது படையெடுக்காமல் இருக்கும்பட்சத்தில் நியூக்ளியர் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து நீக்கிக்கொள்வதாக ரஷ்யா அறிவிக்க இந்த பிரச்சனை உலகப்போராக மாறாமல் காப்பாற்றப்பட்டது. இதில் காஸ்ட்ரோவிற்கு ரஷ்யாவின் மீது கோபம் இருந்தாலும் மறுக்கமுடியவில்லை. இப்படியாக உலகப்போலீஸ்காரனுக்கு ஒரு காலத்தில் பெரும் தலைவலியாக இருந்த கியூபா இன்று வரை அப்படித்தான் இருக்கிறது.
ரஷ்யாவின் பண உதவி கிடைத்துக்கொண்டிருந்ததால் ஒருவாறு சமாளித்துவந்த, கியூபா கடைசியில் 1990களில் ரஷ்யாவும் பிளவுபட்டுப்போக, கஷ்டம்தான் படுகிறது தற்பொழுது. இந்த நிலையில் காஸ்ட்ரோவின் அரசியலை விமர்சிக்கும் நிறைய பேர் இன்றளவும் அதிகமாகவே இருக்கிறார்கள். அதே போல அவருடைய ஆளுமையை விரும்புகின்ற என்னைப்போன்றவர்களும் நிறைய பேர்.
அதேபோல் அங்கோலா, எத்தியோப்பியா, நிக்காராகுவே போன்ற நாடுகளுக்கு கியூபாவின் படைகளை அனுப்பி அங்கே விடுதலைபோரில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உதவி செய்து, அமேரிக்காவால் வியட்நாமில் செய்ய முடியாததை, 1990களுக்கு முன்பிருந்த ரஷ்யாவால் ஆப்கானிஸ்தானில் செய்ய முடியாததை காஸ்ட்ரோ செய்தார்.
இதன் காரணமாகத்தான் நெல்சன் மண்டேலா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் சுதந்திரம், விடுதலைப்போருக்கு கியூபாவின் பங்கு மிக அதிகமானது என்று குறிப்பிட்டிருந்தார். என்ன இருந்தாலும் தனியொரு மனித ஆளுமையாக இன்று வரை அமேரிக்காவின் அருகிலேயே இருந்து கொண்டும் அமெரிக்காவிற்கு அல்வா கொடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர் பிடல் அலெக்ஸாண்ட்ரோ காஸ்ட்ரோ.
ஒரிஜினல் தலைப்பு - நட்சத்திரம் - இந்த ஆளைப்பற்றி கொஞ்சம் ஜல்லி
மீள்பதிவிற்காக மாற்றியிருக்கிறேன்.
Legends : Fidel Castro
பூனைக்குட்டி
Friday, May 16, 2008
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
கன்யூனிஸம், காஸ்ட்ரோ - எனக்கும் ஒன்றுமே தெரியாது. ஆனால், பீட்ரூட் ஒன்றை மட்டும் வைத்து, 'உலகின் சக்கரைக்கிண்ணம்' என்று போற்றப்படும் கியூபா நாட்டைப் பற்றி ஒருமுறை தகவல் சேகரித்தபோது கொஞ்சம் தெரிந்து கொண்டேன், காஸ்ட்ரோவைப் பற்றி. கம்யூனிஸம் - இன்னும் புரியாத புதிர்தான் எனக்கு?
ReplyDeleteகாஸ்ட்ரோவைப் பற்றி, எனக்குத் தெரிந்த நிகழ்ச்சி இது.
ஒருமுறை காட்டுக்குள் பதுங்கி இருந்த காஸ்ட்ரோவைப் பிடிக்க, அமெரிக்காவிற்கு எடுபிடி வேலை பார்த்த கியூபா இளைஞர்களை அமெரிக்கா அனுப்பியது. எடுபிடிகள் எல்லாம் அவரிடம் வசமாக மாட்டிக் கொண்டனர். வழக்கமான எதிராளிபோல் அல்லாமல், அவர்களுக்கு ராஜமரியாதை கொடுத்து, தங்கள் பக்கம் உள்ள நியாயங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களை நாட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
நீங்கள் நேரடியாக காஸ்ட்ரோ கதைக்கு வந்துவிட்டீர்கள். எனக்கு என்னவோ, பாடிஸ்டா கதையையும் சேர்த்து இருந்தால், இன்னும் மிக நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். இதுபோன்ற பதிவுகள் தொடர வாழ்த்துகிறேன்.
அப்பறம், அவ்ரு சுருட்டைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை?
-ஞானசேகர்
நல்ல பதிவு...
ReplyDeleteஇன்னமும் அனு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் அமெரிக்காவை நோக்கி இருப்பதாக்க் கேள்வி. அதனால் தான் அமெரிக்கா இன்னமும் வாயால் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது!
//அதே போல அவருடைய ஆளுமையை விரும்புகின்ற என்னைப்போன்றவர்களும் நிறைய பேர்.//
அதே போல அவருடைய ஆளுமையை விரும்புகின்ற என்னைப்போன்றவர்களும் நிறைய பேர்.:-)
ஆனாலும் தலைக்கு அடுத்தபடியாகத் தான்!
நான் எதிர்பார்த்தது உங்களுடைய வலைப்பூவில், நிழற்படத்தில் இருக்கும் "தலையை" பற்றி...
எப்பொழுது எழுதப் போகிறீர்கள்?
இப்பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி மோகன் தாஸ்.... நிஜாமவே.. தனி ஒரு மனிதனா.. மறைவுவாழ்கை இல்லாம... எதிர்த்து, ஜெயித்து நிற்கிறார்னா.. பெறிய விஷயம்.... சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தது... ரஷ்யா,சைனா போன்ற கம்யூனிச நாடுகள் முன்பு க்யூபாவில் கிடைக்கும் விளைபொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியதாகவும், பின்னர் சில பிரச்சனைகளுக்காக அதை நிறுத்தியதும் க்யூபாவில் பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுத்ததாகவும்.. அந்த வகையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காஸ்ட்ரோவுக்கு சறுக்கலே என்று குறிப்பிட்டிருந்தது....
ReplyDeleteநைனா எல்லாம் சரி. தமிழ்மணத்தில் உங்கள் வளைப்பதிவின் கோட்டில் ஏன் பிடல் காஸ்ட்ரோவின் புகைப்படத்திற்க்கு பதிலாக 'சே' வின் புகைப்படம் இருக்கிறது?
ReplyDeleteஅன்புள்ள மோகன்தாஸ்,
ReplyDeleteமிக நல்ல பதிவு.
காஸ்ட்ரோ, செ குவேரா போன்றவர்கள் எல்லாம் ஒரு குறியீடுகள் தான். அதாவது ஆணவத்தையும், அதிகாரத்தையும் எதிர்த்தவர்கள். சுதந்திரம் என்பதன் முழுமையான பொருளை உலக மக்களுக்கு தெளிவாக்கியவர்கள். அதனாலேயே, உலகின் எல்லைகள் எதுவுமற்ற பிரதேசங்களில் இவர்களால் சஞ்சாரிக்க முடிகிறது. பலரையும் தங்கள் பக்கம் ஈர்க்க முடிகிறது. எனக்கும் இந்த இருவரையும் பிடிக்கும். இன்னும் சொல்லப் போனால், கடந்த பத்து நாட்களுக்கு முன் தான் நண்பர் ஒருவர் இந்தியாவில் இருந்து அனுப்பி வைத்திருந்தார் இந்த இருவர் பற்றிய புத்தகங்களையும். இனி தான் வாசிக்க வேண்டும்.
ReplyDeleteஅதற்குள் உங்களின் இந்த பதிவு ஒரு முன்னுரையாகவும் அறிமுகமாகவும் அமைந்து விட்டது - மிக்க நன்றி.
அன்புடன்
நண்பன்
ஞானசேகர், நான் நிச்சயமாக பயோகிராபி எழுதவில்லை. ஏதோ என்னால் முடிந்ததை எழுதினேன். :-) மற்றபடிக்கு சுருட்டை மறந்திட்டேன் உண்மையில். தவறுதான். :-)
ReplyDeleteநீங்கள் 'செ'வைப்பற்றி சொல்கிறீர்களென்றா. ஒரு விஷயம் சொல்கிறேன். இது காஸ்ட்ரோவைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம் அவ்வளவே. ஆனால் செ வைப்பற்றி தனித் தொடராக எழுத உத்தேசம் அதற்கு தகுந்த நேரம் இது கிடையாது.
ReplyDeleteஅண்ணாச்சி அந்த ஸ்மைலியின் அர்த்தம் உண்மையிலேயே புரியவில்லை. விளக்க நேரம் இருந்தால் விளக்கவும்.
அட அட அட, என்னமோப்போங்க பெயரிலி, ஒன்லைனர்னாலும் பின்னீட்டீங்க. போங்க.
ReplyDeleteநன்றிங்க யாத்ரீகன், காஸ்ட்ரோவிற்கு அமேரிக்காவிற்கு எதிராக தன்னை, தன் நாட்டை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பிருந்தது. தான் அழிக்கப்பட்டால், கியூபா நிர்மூலமாக்கப்படும் என்று நன்றாக அறிந்திருந்த காஸ்ட்ரோ, அதை முறியடிக்கும் அத்துனை முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். அதில் ஒன்று தான் கம்யூனிச மயமாக்கப்பட்ட கியூபா. இதைப்போல பல பிரச்சனைகளை பார்த்து வந்ததால் கொஞ்சமே கொஞ்சம் அரசியலிலும் சறுக்கிவிட்டார். நீங்கள் பார்த்தால் இவர் மட்டுமல்ல இன்னும் பல விஷயங்கள் ரஷ்யாவின் வீழ்ச்சியில் ஆட்டம் கண்டிருக்கின்றன.
ReplyDeleteபொட்டீக்கடை இடையில் உள்ள பின்னூட்டம் உங்களுக்குத்தான். பெயரெழுத மறந்துவிட்டேன்.
ReplyDeleteபீலமேடு பையா, முன்னால் பொட்டீக்கடைக்கு கொடுத்திருக்கும் விளக்கதை படிக்கவும். உண்மையில் ஏன் செகுவாராவின் புகைப்படத்தை அளித்தேன் என்பதற்கான பதில் அடுத்த ஏதாவதொரு பதிவில்.
ஒரு சிறு விளக்கம் கொடுக்கவேண்டுமென்றால் காஸ்ட்ரோவை விட செ வை அதிகம் பிடிக்கும்னு வைச்சுக்கோங்களேன்.
மூர்த்தி உங்கள் வருகைக்கும் வாழ்த்துதளுக்கும் நன்றிகள் பல.
ReplyDeleteநிறுத்தி நிதானமாகப் படித்தேன். அருமையான பதிவு. கலக்கிட்டீங்க...( ஆமா நீங்க நம்ம ஆளாமே, நெசமாவா?) 'நம்ம ' ன்னா இன்னான்னு கேக்காதீங்க.. வெளக்கம் குடுக்க நான் 'வாத்தியாரில்லை'
ReplyDeleteநண்பரே, புத்தகத்தை படித்து முடித்துவிட்டு ஆழமான ஒரு பதிவு போடவும். இது என்னுடைய வேண்டுகோள். பெரும்பாலும் நான் எழுதவதை விட படிப்பதையே அதிகம் விரும்ப்பவன். உண்மைதாங்க, எனக்கும் கியூபாவிற்கும் என்ன தொடர்பு சொல்லுங்க, நான் ஏன் இவங்களைப்பற்றி எழுதணும்.
ReplyDeleteஇவர்களின் ஆளுமை சென்றடையும் பரப்பளவு மிகவும் அதிகமானது. முன்னுரையை நான் எழுதிவிட்டேன், மீதி விஷயத்தை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.
//'செ' வைப்பற்றி ஒரு தனி பதிவு போடவிருப்பம் அப்பொழுது அதுபற்றி எழுதுகிறேன்.
ReplyDelete//
'கனவிலிருந்து போராட்டத்திற்கு' என்ற புத்தகம் 'சே'வும் ஆல்பிரட்டோவும் மேற்கொண்ட மோட்டார் பைக் பயணகுறிப்புகள் புத்தகம் 'சே'வை பற்றி அறிய நிறைய உதவும், இவரைப்பற்றி ரமேஷ் அவர்கள் பதிவு செய்துள்ளார் என அறிகின்றேன்.
நன்றி
பிரகாஷ் அண்ணாச்சி, நீங்கள் வாத்தியார்னு சொல்லியிருக்காவிட்டால் கூட நான் புரிந்து கொண்டிருப்பேன் இருந்தாலும் பரவாயில்லை.
ReplyDeleteஇதுல சந்தேகம் வேறா???
குழலி, இன்னும் நிறைய படிக்கணும் அவரைப்பற்றி, நிறைய.
ReplyDeleteஅவருடைய, கடைசி காலம் வரை டைரி எழுதியதாக படித்திருக்கிறேன். ஆனால் எங்கே மொழியாக்கம் கிடைக்கும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் லிங்க் தரவும்.
குழலி, நீங்களும் ரமேஷின் பதிவிற்கு லிங்க் கிடைத்தால் கொடுக்கவும்.
ஸ்மைலியின் அர்த்தம் - உங்களுடைய அதே வரியை நானும் வழி மொழிந்தேன்!
ReplyDeleteஅதுக்கு தான்
பல்லில் கடிபடும் சில கற்களும் உண்டு ;-)
ReplyDeleteமேலும் அறிய
தெளிவுபடுத்தியதற்கு நன்றி பொட்டீக்கடை.
ReplyDeleteசன்னாசி, நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயமாகப் படிக்கிறேன். நன்றி.
நல்ல பதிவு. சே, மோட்டார் சைக்கிள் டைரீஸ் பற்றி யளனகபக கண்ணன் எழுதி இருக்கிறார்.
ReplyDeleteகலாநிதி மற்றும் செல்வராஜ். உங்களின் ஆதரவிற்கு நன்றி.
ReplyDelete