சொல்லப்போனால் இந்த ஆட்டத்துக்கெல்லாம் பதிவெழுதி ஸ்காட்லாந்தை ஆளாக்கணுமா என்றுதான் நினைத்தேன். ஆனால் உலகக்கோப்பை ஆரம்ப ஆட்டமாக(ஆஸ்திரேலியாவிற்கு) இருப்பதால் வேறுவழியில்லை.
இந்த உலகக்கோப்பையின் சிறந்த பந்துவீச்சாளராக, ஸ்டுவர்ட் க்ளார்க் இருப்பாரென்று நினைக்கிறேன் அதேபோல் சிறந்த பேட்ஸ்மேனாக, Mr. Cricket இருப்பாரென்றும் நினைக்கிறேன். அதுயாரு Mr. Cricket என்று கேட்பவர்களுடன் நான் "கா".
சொல்றதுக்கு ஒன்னுமேயில்லை இந்தப் போட்டியைப் பற்றி. ஆனால் சில கணிப்புகள், ஆஸ்திரேலியா டாஸ் ஜெயித்தால் பீல்டிங் கேட்கும், அதேபோல் ஸ்காட்லாந்து ஜெயித்தால் பேட்டிங் கேட்பார்கள். ஆஸ்திரேலியா மெக்ராத், ஷான் டைட், ஸ்டுவர்ட் க்ளார்க் வைத்து விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அது ஆட்டத்தின் தளத்தைப் பொறுத்து மாறுபடலாம். சைமண்ட்ஸ் எதிர்பார்க்காத அளவிற்கு உடல்தகுதியில் முன்னேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றபடிக்கு சரியான நேரத்திற்கு ஷான் வாட்சன் பார்மிற்கு வந்திருக்கிறார். மேடி உடல்நலம் சரியில்லாமல் போனாலோ இல்லை ஒரு மாற்றத்திற்காகவோ வாட்சன் ஒப்பனராக களமிறங்கலாம்.(பான்டிங்கின் நீண்ட நாள் ஆசை. ஆனால் கில்லியையோ, மேடியையோ தூக்கமுடியாத சிட்சுவேஷன்.)
பிரட் லீ இல்லாத குறையை ஷான் டைட் சரி செய்வாரா? தெரியாது, ஆனால் 150 K போடுவார் என்று தெரியும், அக்யூரஸி எவ்வளவு இருக்கும், இன் ஸ்விங்கிங் யார்கர்கள் கஷ்டப்படாமல் போடுவாரா என்பதெல்லாம் இந்த உலகக்கோப்பையில் பார்க்கலாம்.
மெக்ராத்திற்கு இன்னும் பதினோறு விக்கெட்கள் தேவை வாசிம் அக்ரமின் வேர்ல்ட் கப் ரெக்கார்டை முறியடிக்க, மெக்ராத்திற்கும், ஸ்டுவர்ட் கிளார்க்கிற்கும் வெஸ்ட் இண்டீஸ் தளங்கள் நிறைய சப்போர்ட் செய்யும் என்று நினைக்கிறேன். அவ்வளவாக வேகத்திற்கு சப்போர்ட் இருக்கும் தளங்களாகத் தென்படவில்லை, பிட்சில் மூவ்மெண்ட் இருந்தால் இவர்கள் இருவருக்கும் கொண்டாட்டமே. அதுவும் ஸ்டுவர்ட் கிளார்க்கின் சட்டென்று உள்ளே வரும் இன் ஸ்விங்கர்ஸ் வித்தைகள் செய்யும்.
அதிசயமாக ஆஸ்திரேலியா பர்ஸ்ட் பேட்டிங் செய்தால் எனக்கு கொண்டாட்டம்.
Australian Team...
Ricky Ponting
Nathan Bracken
Stuart Clark
Michael Clarke
Adam Gilchrist (wk)
Brad Haddin (wk)
Matthew Hayden
Brad Hodge
Brad Hogg
Michael Hussey
Mitchell Johnson
Glenn McGrath
Andrew Symonds
Shaun Tait
Shane Watson
முந்தைய உலகக்கோப்பை பதிவுகள்
ஆஸ்திரேலியா - உலகக்கோப்பை
Go Aussie Go!!! - 1
பூனைக்குட்டி
Wednesday, March 14, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
//பிரட் லீ இல்லாத குறையை ஷான் டைட் சரி செய்வாரா? தெரியாது, ஆனால் 150 K போடுவார் என்று தெரியும், //
ReplyDeleteவேகத்தைக் கருத்திற்கொண்டால் லீயைவிட டைட் சிறப்பாகச் செய்வார். போட்டியொன்றில் சராசரி வேகம் என்றுபார்த்தால் லீயைவிட டைட்டின் வேகம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். சராசரியாகவே 150 ஐத் தாண்டித்தான் அவரது பந்துகள் போகும். லீ சில பந்துகள் மட்டுமே 150 ஐத் தாண்டிய வேகத்தில் போடுவார்.
ஆனால் அனுபவம், திறமை என்று பார்த்தால் லீ மிகமிக முக்கியமான வீரர்.
உம்ம நெனப்புல மண்ணைப்போட்டுட்டாங்களே!
ReplyDeleteScotland have chosen to bowl