சமீபத்தில் அபோகலிப்டாவும், 300 வும் பார்க்க நேர்ந்தது, முதலாவது முற்றிலும் தற்செயலான ஒன்று எப்படியென்றால், முந்தைய நாள் டிரைலர் பார்க்க பிடித்துப்போய் இந்தப் படம் பார்க்க உட்கார்ந்தேன். ஆனால் 300 பற்றிய விமர்சனங்கள், டிரைலர்கள் என பலவற்றைப் பார்த்துவிட்டு இந்தப் படம் ரிலீஸ் ஆகும் நாளுக்காக காத்திருந்தேன்.
என்னைப் பொறுத்தவரை முதலாவது படம் எனக்கு அதிகம் பிடித்திருந்தது, காரணம் எல்லாம் சொல்லமுடியாது.
Mayan civilization ல் நடக்கும் கதையாய் சொல்லப்படுகிறது. படம் நகர்வதே தெரியவில்லை, காட்டில் பன்றியொன்றை வேட்டையாடுவதில் தொடங்கும் படம், ஹீரோ Jaguar Paw (Rudy Youngblood), பக்கத்து கிராமத்து(சொல்லப்போனால்) மக்கள் ஊரைவிட்டு போவதைப் பார்ப்பதில் இருந்து சூடுபிடிக்கிறது. அவர்கள் ஏன் ஊரை விட்டு ஓடிப்போகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது கதை.
மேட்டர் என்னான்னா, இந்த மாயன் சாம்ராஜிய மன்னர், சூரிய கிரகணத்தின் மீதான தன்னுடைய தவறான புரிதல்களால் அவர்களுடைய சூரிய கடவுளான (sun god Kukulkan) திருப்தி செய்வதற்காக நரபலி கொடுக்கிறார். அப்படி நரபலி கொடுக்க வேண்டிய ஆட்களை பிடித்துச் செல்ல ஹீரோவின் ஊருக்கும் வருகிறார்கள். அந்த களேபரத்திலும் ஹீரோ தன் புள்ளைத்தாச்சி மனைவியையும் அவருடைய குழந்தையையும் காப்பாற்றி ஒரு கிணற்றில் விட்டுவிட்டு அவர்களிடம் சிறைபடுகிறார். பின்னர் எப்படி இந்த நரபலி ஆட்களிடம் இருந்து தப்பித்து தன் மனைவி குழந்தையைக் காப்பாற்றுகிறார் என்று மெல் கிப்ஸனின் டைரக்ஷனில் பார்க்கலாம்.
இரத்தத்தை உறையச் செய்யும் வன்முறைக்காட்சிகள் நிறைந்த படம். அதுவும் அந்த நரபலி கொடுக்கும் காட்சிகள், படம் R rated. மெல்கிப்ஸனின் முந்தைய படங்களில் அறிமுகம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கும். பாஷன் ஆப் கிறிஸ்ட், பிரேவ் ஹார்ட் பார்த்திருந்தால் புரியும். பாஷன் ஆப் கிறிஸ்டைப் போலவே ஒரு கோட்டுடன் ஆரம்பித்து படத்தின் கடைசியில் கிரடிட்ஸ்.
Opening quote: "A great civilization is not conquered from without until it has destroyed itself from within." — W. Durant
இதுதான் கோட்.
அடுத்தது பார்த்தது 300, ஏற்கனவே சிறில் அலெக்ஸ் இந்தப் படத்திற்கான விமர்சனத்தை எழுதியிருந்தார். பிராங்க் மில்லரின் கிராபிஃக் நாவலை ஃசேக் ஸிண்டர் படமாக எடுத்திருக்கிறார். எனக்கென்னமோ படத்தை விடவும் டிரைலர் தான் ரொம்பவும் பிடித்திருந்தது. ஹிஹி. படத்தின் ஹீரோ ஜெராட் பட்லர், தான் படத்தின் ஹீரோவாகயிருந்ததால் பட்ட கஷ்டங்களை சொன்ன பேட்டி ஒன்றை யூடியூபில் பார்த்திருந்தேன். உரலைத் தொலைத்துவிட்டேன். அதில் அவருடைய மேட்டர்(;) புரியுதா) பெரிதாகத் தெரிவதற்காகப் பட்ட கஷ்டங்களை சொல்லியிருந்தார், சாக்ஸ் எல்லாம் வைப்பார்களாம் உள்ளே.
படம் பிரமாண்டமாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கு அபோகலிப்டோ பிடித்த அளவு இந்தப் படம் பிடிக்கவில்லை. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் வெளுத்து வாங்குகிறது.
மூன்றாவது பார்த்தது மொழி, தமிழ் படங்களில் வித்தியாசமான முயற்சி, வில்லன்கள் கிடையாது, வெட்டிச் சண்டை கிடையாது, அதிக லாஜிக் மீறல்கள் கிடையாது. ஜோதிகா பிரமாதப்படுத்தியிருக்கிறார் டவ் அண்ட் டம்மாக. ஆனால் பாபெல் படத்தில் அந்த ஜப்பானியப் பெண் செய்திருந்த கதாப்பாத்திரத்துடன் ஒப்பிட்டுக்கொண்டே தான் படம் பார்த்தேன். எனக்கென்னமோ அந்தப் பெண் இன்னும் இயல்பாகச் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. இதில் பாலிடிக்ஸ் எதுவும் கிடையாது.
கடைசியாக அபோகலிப்டோ பார்த்ததும், முன்பு ராயர் காப்பி கிளப்பில் படித்த இந்தக் கவிதையும் அதைத்தொடர்ந்த சில வரிகளும். எனக்கென்னமோ ராஜராஜர் ராஜேந்திரர் காலத்தில் நரபலியைத் தவிர்த்து அத்தனையும் நடந்திருக்கும் என்று படுகிறது.
ராஜராஜன்
ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்
ராஜராஜனின் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
சிலையாகுமுன்னர் ஜீவித்திருந்த
இம்மன்னன்
எதைச் செய்து கிழித்துவிட்டானாம்?
ஈழம் கொண்டானாம்...
சாவகம் வென்றானாம்...
காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்
கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்
பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக
குடும்பவிளக்கின் கொழுந்துகளை எல்லாம்
மண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்
தஞ்சை நகரில் தேவடியார் தெருக்களுக்குக்
கால்கோள் விழாச்செய்த காமுகன்
இம் மன்னன்.
மக்களாட்சியின் மகத்துவத்தைச்
சிலையான பின்னும் கற்பழிக்கிறான்
ராஜராஜ சோழன் பற்றிய இன்குலாப் கவிதையின் பகுதி மேற்கண்டது.
'ராஜராஜ சோழனுக்கும் அவன் மகனுக்கும்(ராஜேந்திர சோழன்) வாழ்க்கையில் இரண்டு முக்கியமான வேலைகள் தான் உண்டென்று தெரியவருகிறது. அவர்கள் போர் செய்யாத போதெல்லாம் கோவில் கட்டினார்கள். கோவில் கட்டாத பொழுதெல்லாம் போர் செய்தார்கள். போரில் எதிரிகளை வென்று அவர்களிடமிருந்து காணிக்கையாகப் பெற்ற பொருளையெல்லாம் கோவில் கட்டுவதில் செலவழித்தார்கள்.'
இதை எழுதியவர் சாட்சாத் கல்கி தான்.
ஒரு சேஞ்சுக்காக இந்தப் பதிவில் படங்கள் எதுவும் போடவில்லை. இந்தப் பதிவிற்கான படங்கள் தனியாக இன்னொறு பதிவாகப் போடப்படும்.
In சினிமா சினிமா விமர்சனம் சுய சொறிதல்
Apocalypto, 300, மொழி & ராஜராஜன்
Posted on Tuesday, March 20, 2007
Apocalypto, 300, மொழி & ராஜராஜன்
பூனைக்குட்டி
Tuesday, March 20, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
300 எல்லோருக்கும் பிடிக்க வாய்ப்பில்லை, நானும் அதை சூப்பரு டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். காட்சிகளை அமைத்திருந்தது.. the very fact that the whole set was CG, இதுதான். Timeல ஒரு கட்டுரை வந்திருந்தது சில காட்சிகள் எப்படி எடுத்திருந்தார்கள் எனப் போட்டிருந்தாங்க.
ReplyDeleteகுறிப்பா அந்த ஆரக்கிளின் நடனம். அது தண்ணீர் தொட்டியில் ஆட விட்டு எடுத்த காட்சியாம். பாக்கும்போது நம்பமுடியல.
ஒரு காமிக்ஸ் புத்தகத்திலிருந்து (கிட்டத்தட்ட அதே பார்வையில்) படத்தை தந்திருப்பதால் இதன் வரலாற்றுப் பார்வையை விமர்சனம் செய்வது தேவையல்ல என நினைக்கிறேன்.
அப்போக்ளிப்டோ பாக்கணும்.
DVD வந்துடுச்சா?
சொல்ல மறந்துட்டேன்.. அதென்ன இப்ப எல்லாரும் வரலாற்றப் போட்டு நாறடிக்க ஆரம்பிச்சுட்டாங்க?
ReplyDeleteஇனம் பற்றிய அதீத உணர்வுகள் இப்போது அதிகமாகி வருகின்றன. As long as it makes a positive impact I am for it.
நான் தியேட்டரில் பார்த்தேன் அண்ணாச்சி. டிவிடி வரலைன்னு தான் நினைக்கிறேன்(பெங்களூரில்).
ReplyDeleteசில படங்களைப் பார்த்தேன் நானும், அதைப் பற்றி தனியாக ஒரு பதிவு போடும் எண்ணம்.