உலகக்கோப்பைப் போட்டியில் பெர்முடாஸ் அணி மேட்ச் பிக்ஸிங் செய்தது தெரியவந்துள்ளது. இதைப் பற்றி தீவிர விசாரணை நடத்தப்படும் என்று ஐசிசியின் தலைவர் மால்கம் ஸ்பீட் தெரிவித்தார். இன்று மதியம் போல் பெர்முடா அணியின் கேப்டன் Irvine Romaine ஐசிசியின் மேட்ச் பிக்ஸிங் தடுப்புக் குழுவால் விசாரிகப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்தியா அணிக்கெதிரான போட்டியின் உத்தப்பாவின் கேட்சைப் பிடித்த Dwayne Leverock ஒரு போலீஸ்காரர் என்பதால் அவரால் தான் இந்த ஸ்காண்டல் வெளிப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது.
பத்திரிக்கையாளர்கள் மால்கம் ஸ்பீடிடம் எப்படி இந்த விஷயம் வெளியில் தெரியவந்தது என்று கேட்ட பொழுது, பெர்முடாஸ் இந்திய அணியிடம் தோற்ற பொழுதே இதைப் பற்றிய சந்தேகம் எழுந்ததாகவும், பின்னர் பெர்முடா அணியினரின் தொலைபேசிப் பேச்சுக்களை கேட்டதில் இந்தச் சந்தேகம் உறுதியானதாகவும் தெரிவித்தார்.
இதைப் பற்றிய விரிவான வெள்ளை அறிக்கை நாளை வெளியாகுமென்று தெரிகிறது.
Bermuda in match pixing scandal
பூனைக்குட்டி
Saturday, March 24, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
சிறு வயதிலேயே தோன்றிய ஆசை இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது. அது தமிழில் ஒரு வளைத்தலம் அமைக்க வேண்டுமென்பது. பல முறைகளiல் முயன்று இப்பொழுது...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
அடப்பாவிகளா.. இது கூட காசு கொடுத்துதான் ஜெயிச்சாங்களா நம்மாட்கள்?? நல்ல எதிர்காலம் இந்திய அணிக்கு :)))
ReplyDeletePixing ;) ;).. அதானே
ReplyDeleteஇந்தியர் அனைவருக்கும் ஏப்ரல் 1 தேதியை இந்திய கிரிக்கெட் அணி மார்ச் 23 தேதியே கொண்டு வந்து பரிசாக கொடுத்துள்ளது. தொடரட்டும் அவர்களது பணி. விலகட்டும் நமது கிரிக்கெட் மோகம்.
ReplyDeleteஇது நல்லாயிருக்கு :)))
ReplyDelete