"என்னடா புத்தகம் போடப்போறியாமே?"
முறைத்தேன்.
"குந்தவை வந்தியத்தேவன் கதைகள், தலைப்புக்கூட நல்லாத்தானிருக்கு. என்ன ஒரு ஐம்பதாயிரம் ஆகுமா. நான் தர்றேன் போடு..."
எனக்கு உண்மையிலேயே என்ன நடக்கிறதென்று புரியவில்லை, சிறிது நேரத்தில் பின்னால் இருந்து கேட்ட சிரிப்பின் பிறகுதான் புரிந்தது. அக்கா எல்லாவற்றையும் வத்தி வைத்திருக்க வேண்டும்.
அவரே தொடர்ந்தார்.
"உனக்கு இந்தச் சமயத்தில் இது தேவையில்லாதது. நீ சொன்னது சரியா? தப்பான்னு நான் எதுவும் சொல்லலை. வேண்டாம் விட்டுடு. கொஞ்ச நாளைக்கு தமிழ் படிக்கிறது, தமிழில் எழுதுறது இரண்டையும் விட்டுறு.
உன் வேலைக்கு நீ மனசாலையும், மூளையாலையும் உழைக்கணும். மூளை மட்டும் உழைச்சா சரி வராது.
அப்படியில்லைய, பிரபந்தம் படி, கம்பராமாயணம் படி. உனக்கு ஒரு இருபது அபிராமி அந்தாதிப் பாட்டுத் தெரியுமா அதைப் படி.
நான் உன்னைப் படிக்க வேண்டாமுன்னு சொல்லலை. ஆனால் கொஞ்ச நாளைக்கு இந்த எழுதுற வழக்கம் வேண்டாமே, தமிழ் நாவல் படித்தால் அதைப் பற்றி எழுதுவேன்னு நிற்ப அதான். இந்த நாவல் வகையறாக்கள் எல்லாம் வேண்டாமே."
"இந்தாத இப்ப என்னத்தான் சொல்ற..." கேட்டதுதான் சாக்கென்று கையில் இன்ஹெரிடன்ஸ் ஆப் லாஸ் கொடுக்கப்பட்டது.
"நல்ல புத்தகமாம், புக்கர் ப்ரைஸ் கூட வாங்கியிருக்கு. இதைப் படி."
"மம்மி, இதெல்லாம் ஸிட்னி ஷெல்டன் புக் இல்லை. என் இங்கிலிபீஷுக்கு நான் படிக்கவே முடியாது..." சொல்லி முடிக்கவில்லை கையில் ஒரு டிக்சினரி திணிக்கப்பட்டது.
ஆக ஒட்டுமொத்தமா ப்ளான் போட்டு வேலை செய்திருக்கிறார்கள். சரிதான், நானும் நரியாய் ஆகி கொஞ்ச நாளைக்கு இந்தப் பழம்(தமிழ்) புளிக்கும் என்று ஆங்கிலத்துக்கு தாவப் போகிறேன். அந்தப் பழமும் கூடிய சீக்கிரம் புளிக்க வேண்டும்.
வடுமாங்காய் ஊறிச்சுங்கோ
ReplyDeleteதயிர்சாதம் போய் துன்னுங்கோ :-)
ஆளாளுக்கு படம் காட்டுங்கய்யா
சாத்தான்குளத்தான்