In வகைப்படுத்தப்படாதவை

இந்துவாக மதம் மாற முடியுமா?

சமீபத்தில் படித்த பதிவொன்றின் காரணமாக எனக்கு எழுந்த கேள்வி, முன்பே எப்பொழுதோ இதைப் பற்றிய பின்னூட்டம் எழுதிய நினைவு. கொஞ்ச நாள் பாலோ பண்ணிக்கொண்டிருந்தேன் பதில் வரவில்லை.

எங்க வீட்டிலெல்லாம் ரொம்பவும் தீவிரமான இந்து மக்கள், ஒவ்வொரு முறையும் மதமாற்றத்தைப் பற்றிய விஷயத்தைக் கேள்விப்பட்ட பொழுதும் இந்து மதம் மதமாற்றத்தை அனுமதிக்காததைப் பற்றி பேசப்படும்.

மற்ற மதங்களை விடவும் இந்து மதத்தை அவர்கள் சரியானதென்று சொன்னதற்கு இதுவும் ஒரு காரணம், நான் படித்த சாமியார்ப்(இந்து) பள்ளிகளில் கூட இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை, இந்த ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா மக்களை கூட இந்துக்கள் இல்லையென்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனக்கு உண்மையிலேயே புரியவில்லை, இந்துவாக மதம் மாறுவதென்றால் என்ன என்று. எங்கள் வீட்டில் சொல்வது, இந்துவாக பிறந்தால் மட்டுமே இந்துவாக ஆகமுடியும் என்றும். மதம் மாறி இந்துவாக மாறமுடியாதென்றும் சொல்வார்கள். தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்க முடியுமா?

ராமகிருஷ்னர் கூட கொஞ்ச நாள் முஸ்லீமா இருந்துவிட்டு(அந்த மார்க்கத்தை தெரிந்துகொள்ள என்று நினைக்கிறேன்) திரும்பவும் இந்துவாக மாறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் சேர்ந்து குழப்புகிறது.

Related Articles

4 comments:

  1. நீரு என்னமோ இங்கிலிபீசு பொஸ்தவம் படிச்சு சேக்ஸ்பியரா போவப் போறீருன்னு பார்த்தா வெறும் 'பீர்' அடிச்சவன் மாதிரி என்னமோ சொல்லிட்டு இருக்கீரு? முதுகுல நெறய இடம் இருக்குதா அடிவாங்க? பொழைக்குற வழியப் பாரும்வே!

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  2. How to Become a Hindu: A Guide for Seekers and Born Hindus

    இது பற்றி ஏற்கெனவே எழுதி விட்டதால், அந்த பதிவில் நான் பதில் எழுத விட்டுப் போய் விட்டது.

    அடுத்த பதிவு எழுதும்போது இது பற்றி எழுதுகிறேன்
    இந்தியாவிலும் உலகத்திலும் தொடர்ந்து இந்து மத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. பல்ல்லாயிரக்கணக்கான சமனர்களை நீறு கொடுத்து சம்பந்தர் சிவ நெறிக்கு அழைத்துக்கொண்டார்.
    . முஸ்லிம் கிருஸ்தவ ஆட்சியில் அடக்கி வைக்கப்பட்டிருக்கலாம்.
    நன்றி
    எழில்

    ReplyDelete
  3. இந்து மதம் என்பது ஒரு வாழ்வியலே....இறை சக்தியிடம் நம்பிக்கை வைத்து, அதற்கு வணக்கம் செலுத்தி, எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு காட்டுதல் அடிப்படை இந்து மதம். இதில் உருவ வழிபாடு என்பது அடுத்த லெவல். அதாவது இறை சக்தியுடன் கலக்க நினைப்பவன் யோக நிலை செல்ல முதல்படியாக ஒரு உருவத்தினை (தன் இஷ்ட தெய்வ உருவினை) பூஜை செய்ய ஆரம்பிக்கிறான்....அதன் மந்திரத்தை உபதேசம் செய்து கொண்டு உரூ ஏற்றுகிறான்/ள்.

    நாம் சொல்லும் மந்திரம், வேதம், செல்லும் கோவில், ஆச்சார, அனுஷ்டானங்கள் எல்லாம் இறை அனுபூதி கிடைக்க வழி செய்யும் சில சாதனங்களே.....வேத மந்திரங்களில் உள்ள அக்ஷரங்கள் நல்ல மனநிலையும், மனக்குவித்து தியானத்தினையும் அருளும்.....வாழ்வியலும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.....

    ReplyDelete
  4. இந்து மதத்திற்கு யாரும் மாறக்கூட தேவையில்லை. அதன் தத்துவங்களை பின்பற்றினாலே போதும். அது வாழ்வியல் தத்துவம். அவ்வளவே. உலகில் பிறந்த எல்லோருமே இந்துக்கள்தான், முஸ்லீம்கள்தான், கிறிஸ்துவர்கள்தான் இன்னும் உலகத்திலுள்ள எல்லா மதமும்தான். ஆனால் எல்லாத்துக்கும்மேல மனிதன்.

    ReplyDelete

Popular Posts