வாரணம் ஆயிரம் படத்திற்கு நேற்று முன்பதிவு செய்யும் பொழுது வெறும் 2 சீட்டுகள் தான் மீதமிருந்தது. சூர்யாவிற்கும், காக்க காக்கவினால் கௌதம் மேனனுக்கும் நல்ல மவுசு பெங்களூரில் என்று நினைத்துக் கொண்டேன். இன்று காலையில் டிவிட்டரில் என் விருப்பமில்லாமல் கண்ணில் பட்டுவிட்ட, வாரணம் ஆயிரம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'த்தைவிட கேவலம் என்ற ரிவ்யூ காண்டாக்கியது என்னவோ உண்மை. நானாய்ப் போய் பார்க்காமல் தானாய் வந்து விழுந்த இரண்டு வரி விமர்சனம் எரிச்சலைக் கிளப்பியது. அதனால் இரண்டு டிவிட்டு டிவிட்டி விட்டு ஓய்ந்தேன். என் நல்ல நண்பர் ஒருவருக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகயிருக்கிறது, அவர் அளித்த பேச்சுலர் பார்ட்டியில் இருந்து பாதியில் தப்பித்து வந்து 'வாரணம் ஆயிரம்' படம் பார்த்தேன்.
நிச்சயமாய் கௌதம் மேனனின் படம் போல் இல்லை தான், ஒரு காக்க காக்கவையோ, வேட்டையாடு விளையாடுவையோ நினைத்துக் கொண்டு வந்திருந்தால் படம் அப்படியில்லை. ஆனால் நான் ரசிக்கக் கூடிய அளவிற்கு படமிருந்தது. இதற்கு மேல் கதை ஆங்காங்கு தட்டுப்படலாம். அதனால் படம் பார்க்க நினைக்கிறவர்கள் இங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுவது நல்லது.
படம் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டு பின்னர் அசாதாரணமாக நகர்ந்தாலும் கடைசி வரையிலும் சாதாரண மனிதர்களையே தூக்கிப் பிடிப்பதால் பரவாயில்லை. நான் சொல்லவருவது அப்பா கேரக்டரை, இந்தக் கேரக்டரின் காதல் காட்சிகள் தவிர்த்து மற்றவைகள் பரவாயில்லை ரகம். சூர்யாவின் முதல் காதல் ஒவ்வொரு 'சிறுகதை ஆசிரியர்'ன் கனவிலும் வந்து போயிருக்கக்கூடிய ஐஸ்கிரீம் காதல், அந்தப் பெண் அழகாக இருக்கிறாள், அழகாக சிரிக்கிறாள், ரொம்ப நாள் கழித்து எனக்கு ஒரு சினிமா ஹீரோயின் பிடித்துப் போயிருக்கிறாள். இந்தப் பெண் நடித்த மற்ற படங்களைப் பார்க்க விரும்பவில்லை - மோகமுள் படத்தில் வரும் ஜமுனா கதாப்பாத்திரம் போல்.
அந்தப் பெண்ணின் ட்ரெஸ்ஸிங் செலக்ஷன் பிரம்மாதம், மொத்த படத்தின் காஸ்ட்யூமுமே தேர்ந்தெடுத்து செய்திருக்கிறார்கள் என்றாலும், இந்தக் கதாப்பாத்திரம் செதுக்கப்பட்டிருக்கிறது, உடல்மொழியின் வழி, ஆடைகளின் வழி எல்லாவற்றிலும்.
சூர்யா நிறைய உழைத்திருக்கிறார் நன்றாகத் தெரிகிறது, அதுவும் முதல் காதலின் பொழுது - அந்தப் பெண் தன் காதலைச் சொன்ன பிறகு, நல்ல முன்னேற்றம். சிக்ஸ் பேக்ஸ் காண்பிக்கிறார், ஆர்மி உடையில் கச்சிதமாகப் பொறுந்துகிறார். வயதான கெட்டப்பில் கொஞ்சம் மேக்கப் பிசிறு தட்டினாலும் 'தசாவதாரம்' அளவிற்கு இல்லை. உடம்பைக் குறுக்கி கண்களைக் குறுக்கி உடல் மொழியை மாற்றி நன்றாகச் செய்திருக்கிறார்.
படத்தில் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும், கமர்ஷியலாக இந்தப் படம் பெயிலாகாமல் இருக்கச் செய்திருக்கிறார்கள் என்று தள்ளி வைத்துவிடலாம். நம் பக்கத்து வீட்டில் நடப்பதைப் பார்ப்பது போலவே இருக்கிறது.
ஒளிப்பதிவு எனக்குப் பிடிக்கவில்லை, ப்ரீஸ் செய்யும் பொழுது பிசிறு தட்டுவது தெரிகிறது என்ன பிரச்சனை? கௌதம் மேனனின் ரிச்னஸ் பாதி படத்தில் இல்லாமல் இருக்கிறது. ஒரு வேளை தெரிந்தே செய்தார்களா தெரியாது. இடையில் திருச்சி REC, மூகாம்பிகை கல்லூரி எல்லாம் வருகிறது; கொஞ்சம் போல் மனசு குறுகுறுத்தது.
மூன்று மணி நேர படத்தை கொஞ்சம் தட்டியிருக்கலாம், முதல் நாள் என்பதால் ஓட்டினார்களாயிருக்கும். நாளையிலிருந்து ஆப்பரேட்டர் கைவைத்துவிடுவார். ஆனால் கொஞ்சம் அலுப்பாய் இருந்தாலும், எப்படா இண்டர்வெல் விடுவார்கள், எப்படா முடிப்பார்கள் என்று இருந்தாலும் இந்த முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். நல்ல டிரை.
இந்தப் படத்தின் ஏதோ ஒரு பகுதியில் நீங்கள் உங்களை உணர்வீர்கள், எனக்கு அது போல் நிறைய இருந்தது. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சூர்யாவையும், கௌதமையும் பிடிக்குமென்றால் நிச்சயம் பார்க்கலாம்.
Credits - For Photos
வாரணம் ஆயிரம்
Mohandoss
Friday, November 14, 2008
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
உங்களயும் சேர்த்து 3 விமர்சனம் படிச்சாச்சு. பார்ப்போம்..
ReplyDeleteமோகமுள் படத்தில் வருவது 'யமுனா'. பரவாயில்லை. நீங்கள் ஜமுனான்னும் சொல்லலும். இரண்டும் ஒண்ணுதானே.
ReplyDeleteபடங்களும் படத்தினை பற்றிய பார்வையும்,காக்க காக்க வேட்டையாடு விளையாடு போன்ற படங்களால் கெளதம் மீது ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பார்ப்பும் இப்போதைக்கு படத்தினை பார்க்கும் ஆவலினை தூண்டியிருக்கிறது :)
ReplyDelete//இந்தப் படத்தின் ஏதோ ஒரு பகுதியில் நீங்கள் உங்களை உணர்வீர்கள், எனக்கு அது போல் நிறைய இருந்தது//
ம்ம்!
பொறுமையாக யோசித்து நீங்கள் உணர்ந்தவைகளை சொல்லதொடங்குகளேன் :))
அதுவும் ஆர்இசி மூகாம்பிகையில் மனம் குறுகுறுத்த விசயங்களில் நிறைய விசேஷங்கள் இருக்குமோ?
:))
// அதனால் படம் பார்க்க நினைக்கிறவர்கள் இங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுவது நல்லது.//
ReplyDeleteபடம் பாத்துட்டு வந்து மீதிய......
இளா,
ReplyDeleteபார்த்துட்டு சொல்லுங்க indeed எழுதுங்க.
ஸ்ரீதர் இன்னும் எத்தனை தடவை இந்தத் தவறைப் பண்ணப்போறேன்னு தெரியலை.
ReplyDeleteதிருத்தியதற்கு நன்றி - ஜமுனா - யமுனா இரண்டு ஒன்றையே குறிப்பதாகயிருந்தாலும்.
ஆயில்யன்,
ReplyDeleteபடத்தைப் பற்றி எதிர்மறை விமர்சனம் கொடிகட்டிப் பறந்ததால் - அப்படி இல்லை என்று சொல்வதற்காகவாவது எழுத எண்ணினேன்.
நிறைய விஷயங்களை விட்டிருப்பதாகவே உணர்கிறேன். நேரம் கிடைத்ததும் எழுதி கோர்த்துவிடுகிறேன்.
REC, மூகாம்பிகை இரண்டு இன்ஜியனிரிங் கல்லூரிகள் எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்றாலும் இயல்பாகவே திருச்சி, REC என்றதும் எழும் குறுகுறுப்பு உண்டு. விசேஷம் எதுவும் கிடையாது :(
கார்த்திக்,
ReplyDeleteபார்த்துட்டுச் சொல்லுங்க படம் ஒரு முறை பார்க்கலாம் வகையறா தான். உங்களுக்கு இன்னும் ‘ஆப்பரேட்டர்’ செதுக்கிய வெர்ஷன் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
உங்களையெல்லாம் அறிவுஜீவின்னு நாலு பேரு சொல்லுறதுக்குன்னே இதுமாதிரி மட்டமான படத்தையெல்லாம் ஆஹா ஓஹோன்னு சொல்வீகளா? படம் படுமட்டம். இப்போதுதான் பார்த்துவிட்டு வருகிறேன். தியேட்டரில் பயங்கர ரகளை.
ReplyDeleteஅனானிமஸ்,
ReplyDeleteஉங்களுக்கு எப்படின்னு தெரியாது, நான் படம் பார்க்க போகும் முன்னமேயே எனக்கு இந்தப் படம் கேவலமாந்துங்கிற மாதிரி ரிவ்யூ படிச்சிருந்தேன்.
ஆனால் அதையெல்லாம் மீறி இந்தப் படம் எனக்கு பிடித்திருந்தது. அறிவுஜீவி பட்டமெல்லாம் இதனால் கொடுக்கப்படுவதில்லை தல.
சினிமா ரொம்ப உணர்வுப் பூர்வமான ஊடகம். எனக்கு பிடித்திருப்பது உங்களுக்கு பிடித்திருக்க வேண்டிய அவசியம் கிடையவே கிடையாது.
//உங்களையெல்லாம் அறிவுஜீவின்னு நாலு பேரு சொல்லுறதுக்குன்னே இதுமாதிரி மட்டமான படத்தையெல்லாம் ஆஹா ஓஹோன்னு சொல்வீகளா? படம் படுமட்டம். இப்போதுதான் பார்த்துவிட்டு வருகிறேன். தியேட்டரில் பயங்கர ரகளை.//
ReplyDeleteஅனானி சொல்வது போல மட்டமான படமும் அல்ல. நீங்கள் சொல்வது போல சூப்பரான படமும் அல்ல. சினிமா தெரிந்தவர் எடுத்திருக்கும் சினிமா. வணிகரீதியாக வெற்றி பெறுவது கொஞ்சம் கஷ்டம் தான்.
அதிருக்கட்டும், சமீரா ரெட்டியோட மூக்கும், கண்ணும்.. உவ்வே.. அதைப் போயி எப்படி ஓய் புடிச்சிருக்கு? புடிச்சி வெச்ச புள்ளையார் மாதிரி உடம்பு ஷேப்பு அதுக்கு. கோணியை கவுத்து உட்டா மாதிரி ட்ரெஸ்ஸூ.. இதையெல்லாம் போயி குப்புன்னு வர்ணிச்சிருக்கிரே?
தானைத்தலைவி குத்து ரம்யா பற்றி ஏதும் சொல்லாத உம்மை லா காலேஜ் கேட்டில் நிறுத்தி இரும்புத்தடியால் பொளந்தால் என்ன?
அடங்காத காளையாய்
லக்கிலுக்
அன்புள்ள லக்கி,
ReplyDeleteகுத்து ரம்யா பற்றி எழுதாதது என் தப்பு தான், கொஞ்சம் பப்ளியாய் இப்ப அழகாகவே இருக்கிறார். பெங்களூர் பக்கத்தில் ரம்யாவை ‘கிழவி’ என்று சொல்வார்கள் என்றாலும் - பள்ளிக் கூட மாணவி உடையிலும் அருமையாக இருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேல், கேம்பிற்கு வரும் பொழுது புடவையில் ம்ம்ம் பிரம்மாதம்.
ஆனால் எனக்கு சமீரா ரெட்டியைப் பிடித்துப் போனது, அதற்கு மிகமுக்கிய காரணம் அந்தக் காதலாய்த் தான் இருக்க வேண்டும். RECயில் படித்த அமேரிக்காவில் MS Computers படிக்கும் பிகர் அப்படித்தான் இருக்கும் லக்கி.
அந்தப் பொண்ணு பேசுற மாதிரி, அந்தப் பொண்ணு நடக்குற மாதிரி தான் இருக்கும். கௌதம் அதை உணர்ந்து செய்திருக்கிறார்.
அந்தப் பெண் சுகி(சுடிதாரில்)யில் வரும் எல்லா சமயங்களிலும் ஷால் அணிந்திருப்பதை கவனித்தீர்களா?
டிரெயினில் சூர்யா அவளிடம் சேட்டை செய்யும் பொழுது சமீராவின் ரியாக்ஷன் மனதைக் கவர்வதாக இருந்தது. இந்தப் பொண்ணும் கொஞ்சம் பப்ளியாய், சிரிக்கும் பொழுது அவள் முகமே சிரிக்கிறது.
Opinion differs லக்கி அவ்வளவுதான். :)
படம் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும்...:)
ReplyDeleteசிலர் படத்தைக் கிழித்து மேய்ந்திருக்கிறார்கள்...
ReplyDeleteஉங்களுக்குப் பிடித்திருக்கிறது..
நீங்கள் சொன்னபடி உணர்வுகள் differs with individuals...
பார்த்தால் தெரியும்!
தமிழன் - கறுப்பி,
ReplyDeleteஎனக்கும் ஆசிப்பிற்கும் இடையில் சண்டை மூட்டிவிடும் விஷயம் வெற்றிகரமாக முடியவில்லை போலிருக்கே! ;)
பாருங்க பார்த்துட்டு எழுதுங்க.
அறிவன்,
ReplyDeleteசரிதான். பார்த்துட்டு எழுதுங்க.
மோகன்தாஸ் said...
ReplyDelete\
தமிழன் - கறுப்பி,
எனக்கும் ஆசிப்பிற்கும் இடையில் சண்டை மூட்டிவிடும் விஷயம் வெற்றிகரமாக முடியவில்லை போலிருக்கே! ;)
பாருங்க பார்த்துட்டு எழுதுங்க.
\
:)
அப்படியெல்லாம் இல்லை அண்ணன் சில படங்களை அரங்கில் அப்படி இல்லையேல் டிவிடியில் பார்க்க வேண்டும் என்று விரும்புவேன் மற்றப்படி சில படங்களைத்தான் பார்த்தே ஆகவேண்டும் என்று பார்ப்பேன் அப்படி எதிர் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று அவ்வளவுதான்!
//ஒளிப்பதிவு எனக்குப் பிடிக்கவில்லை//
ReplyDeleteஅப்படியா?
படத்தின் பெரிய பலமே (சூர்யாக்கு அடுத்து) அதுவாதான் பட்டுது.
குறிப்பா, அமெரிக்க பாடல் காட்சிகள் எல்லாம் பளிச்னு அருமையா வந்திருந்தது.
தமிழன் - கறுப்பி,
ReplyDeleteசரிதான்.
சர்வேசன்,
ஒளிப்பதிவில் ஒரு ரிச்னஸ் இருக்கும் கௌதம் படங்களில், இதில் முற்றிலுமாக இல்லை என்று சொல்லாவிட்டாலும் - பாதி படத்தில் இல்லை; அல்லது நான் உணரவில்லை.
ஒரு காட்சியை ப்ரீஸ் செய்துவிட்டு அடுத்தக் காட்சிக்கு நகரும் பொழுது பிசிறு தட்டுகிறது, இது எடிட்டிங் குறையா அல்லது ஒளிப்பதிவு குறையா என்ற தொழில்நுட்ப அறிவு சினிமா கேமரா பற்றி இல்லை. ஆனால் திரையில் தெரியும் பொழுது நன்றாக இல்லை என்பதால் ஒளிப்பதிவு என்று சொன்னேன்.
//தானைத்தலைவி குத்து ரம்யா பற்றி ஏதும் சொல்லாத உம்மை லா காலேஜ் கேட்டில் நிறுத்தி இரும்புத்தடியால் பொளந்தால் என்ன?
ReplyDeleteஅடங்காத காளையாய்
லக்கிலுக்///
வழிமொழிகிறேன்...
குத்துங்க லக்கி குத்துங்க...
குத்து ரம்யா ரசிகன்
The most idiotic film, I have ever seen in my life. Just like "Boys" film made by Sankar. At least, BOYS had one "jolly type" song.
ReplyDeleteThese iditic directors think that because of their banner, they can sell any rubbish.
People like Gowtham Menon think too much of themselves: that's the problem.
Anyway thanks for exposing the following:
1.Surya is not that calibre enough to do two roles... maybe atleast in this film.
This one film by Surya will not bring audience for atleast another 5 -6 films.
2.The fame Siran got with her acting over the years has been decimated with this one particular overacting movie.
3.For that heroine, sammeera, even a beggar wont travel outside of chennai to chase her.
4.The audience wont encourage these useless movies and fans can esape from another gowtham's movie for atleast another 2-3 years.