In புத்தகங்கள் பெங்களூர்

பெங்களூர் புத்தகக் கண்காட்சியை புறக்கணித்த பதிப்பகங்கள்

தொடர்ச்சியாய் இது மூன்றாவது வருடம் நான் பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்கு போவது, ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம். நான் விரும்பி புத்தகம் வாங்கும் பதிப்பகங்கள் இந்தக் கண்காட்சிக்கு வரவில்லை. குறிப்பாய் உயிர்மை, கிழக்கு மேலும் கண்ணதாசன், நர்மதா, அல்லயன்ஸ், கலைஞன் இப்படி நிறைய வந்த பதிப்பங்களை சுலபமாகச் சொல்லிவிடலாம்.

வழமை போல் காலச்சுவடு, விகடன், திருமகள், வானதி, நாதம் கீதம், NCBH, பிறகு மேலும் ஒரு தமிழ்ப் பதிப்பகம். அவ்வளவு தான் தமிழில் மொத்தமே. NCBH சில கிழக்கு புத்தகங்கள் வைத்திருந்தார்கள் அத்தனையும் பழசு. மொத்தமே ஐந்து பத்து எண்களுக்குள் தான் இருக்கும். மற்றவர்கள் வராததற்கு காரணமாக கடந்த முறை விற்பனை மோசமாக இருந்ததைக் குறிப்பிட்டார்கள்.

நான் காலச்சுவட்டில் மட்டும் புத்தகங்களை தட்டிக் கொண்டுவிட்டு கொஞ்சம் புகைப்படம் எடுத்துவிட்டு நகர்ந்துவிட்டேன். நான் காலச்சுவட்டில் வாங்கிய புத்தகங்களை புத்தகப் பையில் அடுக்கிக் கொண்டிருந்த பொழுது, துப்பறியும் சாம்பு புத்தகம் கேட்டு காலச்சுவட்டில் வந்து நின்ற பெரியவர் வருத்தத்துடன் நகர்ந்தார். சுஜாதாவின் புத்தகங்கள் வாங்கவும் மக்கள் அலைந்தது தெரிந்தது. நான் 2004 டெல்லி புத்தகக் கண்காட்சியில் காலச்சுவட்டிடம் சுஜாதா, பாலகுமாரன் புத்தகமெல்லாம் எடுக்காம ஏன் சார் வர்றீங்க என்று கேட்ட நினைவு நிழலாடியது. நான்கு வருடங்களில் என்னிடம் தான் எத்தனை மாற்றம் என்று நினைத்தவாறு புத்தகங்களை மூட்டைக் கட்டிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

மொத்தத்தில் பெங்களூர் புத்தகக் கண்காட்சியை இந்த முறை பதிப்பகங்கள் புறக்கணித்துவிட்டன என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

வாங்கிய புத்தகங்கள்

ஆத்மாநாம் படைப்புகள்
புனலும் மணலும்
ஜி. நாகராஜன் ஆக்கங்கள்
நினைவுப் பாதை - நகுலன்
சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை - ராஜமார்த்தாண்டன்
ஜி. நாகராஜன் - சுந்தராமசாமி நினைவோடை
தி. ஜானகிராமன் - சுந்தரராமசாமி நினைவோடை
சி.சு. செல்லப்பா - சுந்தரராமசாமி நினைவோடை
க.நா.சு - சுந்தரராமசாமி நினைவோடை
சொல்லில் அடங்காத வாழ்க்கை - காலச்சுவடு சிறுகதைகள்
நடந்தாய்; வாழி, காவேரி! சிட்டி - தி. ஜானகிராமன்
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழில் சுந்தர ராமசாமி
செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழில் சுந்தர ராமசாமி
தூர்வை - சோ. தர்மன்
நிழல் முற்றம் - பெருமாள் முருகன்

சில புகைப்படங்கள்








Related Articles

2 comments:

  1. நல்ல பதிவு. ஆனால் பெங்களூரில் நடந்தது தமிழ் புத்தக கண்காட்சி ./ பொது புத்தக கண்காட்சி.

    சென்னை புத்தக கண்காட்சியில் கூட மலையாளம் , கன்னடம் புத்தகனக்ல் பார்த்த ஞாபகம் எனக்கு இல்லை.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  2. //சென்னை புத்தக கண்காட்சியில் கூட மலையாளம் , கன்னடம் புத்தகனக்ல் பார்த்த ஞாபகம் எனக்கு இல்லை.//

    நான் சொல்ல வர்ற மேட்டர் வேறன்னு நினைக்கிறேன் :(

    ReplyDelete

Popular Posts