In Only ஜல்லிஸ்

குத்துங்க எசமான் குத்துங்க

குத்துங்க எசமான் குத்துங்க, இந்த சாஃப்ட்வேர் வேலை செய்யறவனுங்களே இப்படித்தான். குத்தங்க எசமான் என்கிற அளவில் சாஃப்ட்வேரில் வேலை செய்பவர்களையெல்லாம் ஒட்டுமொத்த சமூகத்தை சீரழிப்பதற்கென்றே அவதாரம் எடுத்தவர்கள் என்கிற ரேஞ்சில் அடிக்கடி போட்டு கும்முவது தெரிந்தது தான், அறிவுரை சொல்வதற்கு தகுதி என்கிற பெயரில் ஒன்றும் தேவையில்லை. சிலருக்கு வயதாகிவிட்டதே தகுதி இன்னும் சிலருக்கு 'வேலை விட்டு தூக்கப்பட்ட இரண்டு பேருக்கு' வேலை வாங்கித் தந்ததே தகுதி.

தகுதியைப் பற்றி பேச ஆரம்பித்தால், "கற்றதனால் ஆன பயனென்ன" கருமாந்திரமெல்லாம் நினைவிற்கு வந்து தொலைப்பதால் அப்படியே எஸ்கேப் ஆகிவிடுகிறேன். எழுதி இவன் sexual harassment செய்கிறான் என்று கையெழுத்து வேட்டை தொடங்கிவிடுவார்களோ என்ற பயம். தனக்கு தெரிந்த ஆட்களுக்கெல்லாம் 'மெயில்' அனுப்பி உடனே உதவவும் என்று சொல்லி முடிக்காதவேளையில் எங்கிருந்தோ குதித்து தழல்(:)) எரிக்கும் அன்பர்களைக்கண்டும் பயம் என்று ஆரம்பித்தால் தெனாலி கமலஹாசனைவிடவும் அதிகமாக பயப்படும் விஷயங்களை லிஸ்ட் போட்டு தாளாது.

"மண் புயல் தணிந்துவிட்டது
ஆனால் போர் தொடர்கிறது - இடம் பெயர்கிறது" - என்ற தருமு அரூப் சிவராம்(பிரமிள்) கவிதை தான் நினைவிற்கு வருகிறது.

இன்னும் சுலபமாக,

வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்து தான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா என்ற வரிகளில் சிச்சுவேஷனை விளக்கிவிடலாம்.

எங்கே இல்லை பிரச்சனை எதில் இல்லை குறை, குறை இல்லாத ஒன்றிருக்குமென்றால் அது இல்லாத இறையாகத்தான் இருக்க முடியும். அமேரிக்காவில் நிதி நெருக்கடி வந்ததோ இல்லையோ இங்கே பிங்க் சிலிப் பற்றியும் வேலையை விட்டு நிறுத்துவதைப் பற்றியும் நாளொரு விதமாய்ப் பதிவுகள், அறிவுரைகள் அள்ளி வீசுகிறார்கள். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், பிரச்சனை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எங்கே இல்லை பிரச்சனை?

வண்ணநிலவனின் கவிதையோடு முடித்துக்கொள்கிறேன் வாயில் நல்ல வார்த்தையா வருது.
அவரவர் வானம்
அவரவர்க்கே யானாலும்
அடியாமல் படியாமல்
வசப்பட வழியில்லை.

தண்ணியடிக்காமல், சிகரெட் பிடிக்காமல் ஏன் இன்னும் பொம்பளைப் பழக்கம் இல்லாத சாப்ஃட்வேர் மக்களிற்கு...


PS: முதலில் ஊருக்கு இளைச்சவன் சாஃப்ட்வேர் ஆண்டின்னு எழுதலாம்னு நினைச்சேன், ஏற்கனவே அந்த பெயரில் இன்னும் சில பதிவுகள் இருப்பது அறிந்து கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டுவிட்டேன்.

PS1: இந்த மாதிரி பதிவின் கடைசியில் 'ற்கு...' என்று முடிக்காவிட்டால் இலக்கியவாதின்னு ஒத்துக்க மாட்டாங்களாமே அப்படியா ;)

Related Articles

9 comments:

  1. என்னப்பா சொல்ல நினைக்கிறிங்க....

    ReplyDelete
  2. ற்கு என்று முடித்ததை ஏற்றுக் கொள்கிறேன்; அதில் பாதிக்கு உரிமையாளன் என்பதால். :-)

    மீதிப்பாதி? கலியாணம் ஆயிருச்சுப்பா எனக்கு.

    ReplyDelete
  3. me the first!
    (Hope its a serious post!) Me the escape too........

    ReplyDelete
  4. //மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், பிரச்சனை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எங்கே இல்லை பிரச்சனை//

    அதே தான் தலைவா :)

    அது ஏனோ ஐ.டிக்காரர்களை மட்டும் வித்தியாசமா பாக்குறாங்கன்னு தெரியலை :(

    ReplyDelete
  5. அப்ப நீர் இலக்கியவாதி ஆகி விட்டீர் என்று கூறும் :)

    ReplyDelete
  6. தாசு,
    எங்க குடும்பத்துல ஒரு பத்து பதினைந்து ஐடி பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு சமூகத்தின் பொருளாதாரத்தையே மாற்றி
    விட்டது இந்த ஐடி வேலை. கீழ் மத்தியவர்க்கத்தில் இருந்து, பிள்ளைகளால் மேலே உயர்ந்திருக்கிறார்கள். பெண்களுக்கு
    கல்யாணம் என்பது பெற்றோர்களுக்கு சுமையில்லை. இரண்டு பெண்கள் உட்பட, சிலர் கல்யாணத்துக்கு முன்பே அழகாய் பிளாட் வாங்கி, வீட்டு சாமான்கள் வாங்கிப் போட்டாயிற்று. இதெல்லாம் ஒரு பத்து வருடம் முன்னால் கூட நினைத்தே
    பார்க்க முடியாத சங்கதி. கணவனும், மனைவியும் வாங்கும் சம்பளம் வெளிநாடு போக தேவையேயில்லை. சில குறைகள் இருக்கின்றன, ஆனால் குறையில்லாத இடமும், மனிதர்களும் ஏது? மற்றப்படி தண்ணி வகையறா மேட்டர் எல்லாம் அவங்க அவங்க சொந்த விஷயம்.

    ReplyDelete
  7. சூடான் புலியாரே! நானும் பின்னுட்டத்துல ரெண்டு எலக்கிய வரிகளை எடுத்துப் போட்டு இருக்கலாம் ;-(

    ReplyDelete
  8. \
    இந்த மாதிரி பதிவின் கடைசியில் 'ற்கு...' என்று முடிக்காவிட்டால் இலக்கியவாதின்னு ஒத்துக்க மாட்டாங்களாமே அப்படியா ;)
    \
    ஓ இது வேறையோ...;)

    ReplyDelete
  9. // அது ஏனோ ஐ.டிக்காரர்களை மட்டும் வித்தியாசமா பாக்குறாங்கன்னு தெரியலை :( //

    நீங்க இந்த துறைல இருக்குறதால எல்லாரும் உங்களையே சொல்லுற மாதிரி தெரியுது.
    நம்ம ஊரப்பொறுத்த வரைக்கும்.பல பசங்க இந்த துறைல வேலைக்கு சேர்ந்தாள பல குடும்பங்கள் முன்னேறிருக்கு.

    உண்மையிலேயே இன்னைக்கு மக்கள் யாரு மேல கடுப்புல இருக்காங்கன்னா ரியல் எஸ்டேட்காரங்க மேலதான்.அவங்கள விட புரோக்கருங்க மேலதான் செம கடுப்புல இருக்காங்க. என் நண்பன் ஒருவன் மாசம் சாதரணமா 2 லட்சம் எடுக்குறான் அவன் அதிகம் படிச்சதுமில்லை முதல் கூட ஒன்னும் போடலை .அவனும் உங்கள மாதிரி தான் புலம்புறான் நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்சா இவனுங்க ஏன் கடுப்பாகுரானுங்கன்னு.இதே போல தான் என் டாக்டர் நண்பனும் சொன்னான்.

    உண்மைலயே அங்க அடிவிளவும் இங்க பலபேர் கேம்பஸ்ல செலக்ட் ஆனவங்களுக்கு வேலை தள்ளிப்போயிகிட்டு இருக்கு.இன்னும் சிலருக்கு பினான்சியல் செக்ட்டார்ல வேலபாத்தவங்களுக்கு வேலை போயிடுச்சு.அதனால இங்க இருக்கவன்களே கொஞ்சம் அரண்டு போயிருக்காங்க.

    ReplyDelete

Popular Posts