ஜம்மு காஷ்மீர் என்று நமக்கு அறிமுகமான மாநிலத்தை நாம் மூன்று பகுதிகளாகப் பிரித்தால் இந்து பிரதேசமான ஜம்மு, முஸ்லீம் பகுதியான காஷ்மீர் பின்னர் லதாக் பகுதிகளைச் சார்ந்த புத்தப் பிரதேசமாகவும் வரும். இதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர்த்து லதாக் பகுதி பெரும்பாலும் போரால் அதிகம் பாதிக்கப்படாத பகுதியே. நாம் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் பார்த்து வரும் இந்திய வரைபடத்தின் தலை பகுதி காண்பிக்கப்படுவதைப் போல் உண்மையில் இந்தியாவின் வரைபடம் இல்லை.
உண்மையில் இத்தனை வெட்டுகளுக்குப் பிறகான இந்திய வரைபடம் என்பது எனக்கு இணைய தளங்கள் அறிமுகமான பின்னர் தான் தெரியவந்ததுதான்.
உண்மையில் ஜம்மு காஷ்மீரின் இன்றைய வெட்டுக்கான காரணம் சில வரிகளில், ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த பொழுது அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளை ஒன்றிணைத்து சுதந்திரம் கொடுக்கவில்லை, மாறாக தன்னாட்சி(அல்லது தனியரசு என்று ஆங்கிலேயர்கள் ஆளுமைக்கு உட்பட்டு மன்னர்கள் ஆள்வது) செய்து வந்த பிரதேசங்களுக்கு தனித்தனியாக சுதந்திரம் கொடுத்து அவர்கள் விருப்பப்பட்டால் இந்தியாவுடன் இணைந்து கொள்ளலாம் என்று அதிகாரம் கொடுத்தனர். அதே போல் வடக்கே சுதந்திரத்துடன் சேர்த்து இந்திய பாகிஸ்தான் பிரிவினையும் நிகழ்ந்ததால் ஜம்மு-காஷ்மீர் பகுதியை ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் ஆண்டு வந்த மன்னர் ஹரிசிங்கிற்கு சுதந்திரம் கொடுத்து, அவர் பாகிஸ்தானுடனோ இல்லை இந்தியாவுடனோ இணைந்து கொள்ளலாம் என்றும் வேண்டுமென்றால்(in special cases) தனியாகவேயிருக்கலாம் என்றும் அதிகாரம் வழங்கப்பட்டது.(பாண்டிச்சேரியை உதாரணம் சொல்லி போரடிக்கிறது புதுக்கோட்டை மாவட்டம் கூட 3.3.1948ல் தான் இந்தியாவுடன் இணைந்தது.)
காஷ்மீரின் மன்னர் இந்துவாக இருந்தாலும் 77 சதவீத மக்கள் முஸ்லீம்கள் அத்துடன் பாகிஸ்தான் என்று ஏற்கனவே பிரிக்கப்பட்டிருந்த பகுதியுடன் எல்லையை கொண்டிருந்தனர். கிழக்கு பாகிஸ்தான் போலோ இல்லை தற்போதைய ஆந்திர பிரதேசத்தின் ஹைதராபாத் போலோ அல்லாமல். மன்னர் இரண்டு பக்கம் சேராமல் தான் இருந்தார் ஆனால் பாகிஸ்தான் ராணுவம் அக்டோபர் 20, 1947ல் காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியது. முதலில் மன்னர் தன் படையைக் கொண்டு எதிர்த்துப் போரிட்டாலும் அக்டோபர் 27ல் அப்போதைய இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மௌன்பேட்டனிடம் முறையிட அவர் அதற்கு இந்தியா உதவும் ஆனால் இந்தியாவுடன் காஷ்மீர் சேர்ந்து கொள்ளும் என்ற உடன்படிக்கையின் படி என்றதும் உடன்படிக்கை கையெழுத்தானது. இந்தியப் படை காஷ்மீர் விரைந்து மன்னருக்கு உதவ முன்னேறும் பொழுது அவர்களுக்கு ஒரு கட்டளை இருந்தது அதாவது பாகிஸ்தான் மேலும் முன்னேறாமல் தடுக்கலாமே ஒழிய ஏற்கனவே முன்னேறிய பகுதிகளுக்குள் சென்று சண்டை போடக்கூடாதென்பது தான் அது.(இஸ்ரேல் என்றொரு தேசமே இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக சண்டை போட்டு முன்னேறி அமைக்கப்பட்டது என்பது வரலாறு!) அப்படி இந்திய ராணுவம் வரும் முன் பாகிஸ்தான் ராணுவம் முன்னேறிய பகுதி தான் இந்தியாவின் வரைபடத்தில் மேற்குப் பக்கமாக இருக்கும் வெட்டு.
இது போல் என்றில்லாமல் தொடக்கம் முதலே(19, 20 நூற்றாண்டுகளிலேயே) கிழக்குப் பக்க பிரச்சனை இருந்தது. இந்தியா 1962ல் சீனா இந்தப் பகுதியை இணைத்துப் போட்டிருந்த தரைவழிப்பாதை தெரியவந்ததும் சீனாவுடன் சண்டை போட்டது. 1956 - 57ல் முடிந்திருந்த இந்த தரைவழிப்பாதை சீனாவை இந்தப் பகுதியுடன் இணைத்தது. பின்னர் அக்சாய் சின் என்றழைக்கப்படும் கிழக்குப் பக்க வெட்டு 1962ல் இருந்தே இருக்கிறது.
காஷ்மீர் வரலாறு போதுமென்று நினைக்கிறேன். நான் காஷ்மீர் சென்று சேர்ந்த பொழுது மணி 1.30 AM மைனஸ் 1, 2 ல் இருந்தது பனி. எங்களை அழைத்துச் செல்ல வரவேண்டிய போட் ஹவுஸ் ஓனர் வராததால் நாங்கள் போட் ஹவுஸ் அசோசியேஷன் முன்னால் நின்றுகொண்டிருந்தோம். இடைப்பட்ட பயண நேரத்தில் நாங்கள் இப்படி 950, 1500 கொடுத்து புக் செய்து வந்திருந்ததை அறிந்த 'சாச்சா' நாங்கள் ஏமாந்ததைச் சொன்னார். அதனால் அவர் அங்கே இல்லாத காரணத்தைச் சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நினைத்தால் அவர் வந்துவிட்டிருந்தார்.(சட்டென்று எங்கேயோ நிற்பதைப் போல் உணர்பவர்கள், பெங்களூர் To டெல்லி, டெல்லி To காஷ்மீர் படிக்கலாம் - விரும்பினால்)
சாச்சா எங்களுக்கு காஷ்மீரை நெருங்கும் வழியில் அறிமுகப்படுத்தி அணிந்து கொண்டிருந்த பிரான்(Phiran) என்ற முழுநீள அங்கி அணிந்தபடி வந்த அந்த நபருக்கு ஒரு கை தான் இருந்தது எனக்கு ஆச்சர்யம் இவருக்கு ஒரு கை இல்லை என்று நினைத்தேன். சாச்சா நான் கையையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவர். காக்டி(Kanhgri)யை அறிமுகப்படுத்தி வைத்தார். அது மூங்கிலால் பின்னப்பட்ட சின்ன கூடை போன்ற ஒன்றில் கரியைக் கொட்டி நெருப்பிட்டு அது கனன்று கொண்டிருக்கிறது எல்லா காஷ்மீரியர்களும்(ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லை) ஒரு கையை அந்த பிரானுக்கு உள்விட்டுக் கொண்டு இதைப் பிடித்துக் கொள்கின்றனர். இதனால் அந்தக் கூடையில் இருந்து கிளம்பும் வெப்பமானது அவர்களை வெம்மையாக வைத்திருக்கிறது.
காரைக் கொண்டு போய் நிறுத்திய இடத்தில் இருந்து ஹவுஸ் போட் இருந்த இடம் வரை போக, சிறிய படகு ஒன்றில் எங்களை ஏறச் சொன்னார் வந்தவர். சாச்சா அவர் வரும் முன்னமேயே எங்களுக்கு நிறைய டிரிக்கள் சொல்லிக் கொடுத்திருந்தார். அது என்னவென்றால், நாங்கள் ஹவுஸ்போட் ஜம்முவில் புக் செய்த பொழுது எங்களை வற்புறுத்தி இரண்டு நாள் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள், அதற்கு நானும் சரி என்னுடன் வந்த தம்பதியினரும் ஒப்புக்கொள்ளாததால். One or Two days என்று எழுதி வாங்கிக் கொண்டனர். சாச்சாவிற்கு இந்த விஷயம் எக்ஸாக்டா தெரியாவிட்டாலும் காலை பிரச்சனை அந்த ஹவுஸ் போட் ஓனர் பிரச்சனை செய்வார் என்று தெரிந்திருக்கிறது அதுமட்டுமல்லாமல் குல்மர்க் கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லியும் உங்களை ஏமாற்றுவார்களாயிருக்கும். அதற்கெல்லாம் ஒப்புக்கொள்ளாதீர்கள் காலையில் வெளியில் வந்து எனக்கு தொலைபேசுங்கள் நான் உங்களை அழைத்துச் செல்கிறேன் என்றார்.
காஷ்மீரில் ஹவுஸ் போட் உரிமையாளர் எவ்வளவு பழக்கமோ அதே அளவு பழக்கம் தான் சாச்சாவுடனும் இருக்கும் அவர் சொன்னதை எப்படி நம்பலாம் என்று கேட்கலாம். நாங்கள் செய்த ஜம்முவிலிருந்து காஷ்மீர் பயணத்தில் சாச்சாவைப் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து கொள்ள முடிந்தது. 'அல்லா'விற்கு ரொம்பவும் பயப்படுபவர், ஹஜ் சென்று வந்தவர் என்பதால் தவறு செய்யவே பயப்படுபவர் என்றும் புரிந்தது. ஏனென்றால் சாச்சா எங்கள் பயணத்தில் பேசி வந்தவைகளைக் கோர்த்தால் அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும் என்று படும். பட்டது.
இரவு அந்தப் படகில் பயணம் செய்தது சிலீரென்ற அனுபவம், கை காலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது அந்தச் சிறிய படகில் ஏறி பின்னர் இறங்க, அந்தக் குளிரில் தால் ஏரியில் பயணித்ததால் இன்னமும் குளிரைக் கொண்டு வந்தது ஏரி. தெர்மல்களையும், சட்டை, ஸ்வெட்டர், ஜெர்கின்களையும் தாண்டி குளிர் தாங்கமுடியாத அளவிற்கு இருந்தது. கொடுமைக்கு என்று நான் தங்க வேண்டிய அறையில் ஹீட்டரும் கிடையாது ஒழுங்கான கம்பளியும் கிடையாது. காஷ்மீர் பயணம் வெறுத்துப் போகும் படியான குளிர் என்று தான் சொல்வேன், நான் எடுத்துச் சென்றிருந்த கம்பளி அங்கே கொடுத்த கம்பெளி என்று சுற்றிக் கொண்டு படுத்தது தான் தெரியும். காலை "மோகன் பாய்" என்று அந்த தம்பதியில் பெண் அழைக்கும் பொழுது தான் எழுந்தேன்.
அவர் புதுப் பிரச்சனையுடன் இருந்தார் அங்கே போட் ஹவுஸில் ஓனருடன், இரண்டு நாள் தங்கியே ஆகணுமாம். போட் ஹவுஸ் அசோசியேஷன் ஜம்முவில் வாங்கியது அவர்களுக்காம் போட் ஹவுஸின் ஓனருக்காக அங்கேயும் ஒருநாள் தங்கணும் என்று வற்புறுத்திக் கொண்டேயிருந்தார். எங்களுக்கோ பயங்கர கடி, அன்று குல்மர்க் செல்வதாகத் திட்டம், எழுந்ததும் லேட் இவர் வேறு பிரச்சனை செய்தார். நாங்கள் ஒரேயடியாக எங்களை போட் ஹவுஸ் அசோசியேஷன் கொண்டு செல்லுங்கள் அங்க பேசிப்போம் என்று ஒற்றைக் காலில் நிற்க. கடைசியில் அவர் அழைத்துச் சென்றார், ஆனால் போட் ஹவுஸ் அசோசியேஷன் ஆட்கள் நல்ல மாதிரியாக எங்களை நடத்தி உங்களுக்குத் தேவையில்லை என்றால் நீங்கள் இரண்டாம் நாள் தங்கத் தேவையில்லை என்று சொல்லி எங்களை அனுப்பி வைத்துவிட்டார்.
காஷ்மீர் செல்லப்போகும் மக்கள் இந்த ஹவுஸ் போட் மக்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.
தம்பதியில் கணவருக்கு சாச்சா நேற்று கழுதையை அடித்துத் தூக்கியதும் ரிப்பேர் ஆன காரை சாச்சா சரி செய்திருப்பாரா என்ற டவுட், மேலும் அவரை அழைக்கணுமா என்றும் சந்தேகம். என்னிடம் கேட்டார் நான் சொன்னேன் சாச்சா பார்க்க நல்லவராய்த் தெரிகிறார் அவரையே அழைப்போம் என்று. போன் செய்ததும் வந்த சாச்சா எங்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். லால் சவுக் என்றழைக்கப்படும் இடத்தில் இருந்த ஹோட்டல், ஹீட்டர் டிவி வசதியுடன் நல்ல தரத்துடனும் 300 ரூபாய்க்கு அறைகள் கிடைத்தது. குளித்துவிட்டு பார்த்தால் மணியாகியிருந்தது குல்மர்க் சென்றாலும் அவதியில் சென்று திரும்பும் படி இருக்குமென்பதால், லோக்கல் ட்ரிப் ஒன்று போய்வரலாம் என்று உத்தேசித்துச் சென்றோம்.
சங்கராச்சார்யா கோவில், ஏகப்பட்ட பார்க்குகள், மசூதி ஒன்று, குருத்துவாரா ஒன்று என நிறைய இடங்களுக்குச் சென்றுவிட்டு ஹோட்டலுக்கு வந்தால் எங்களுக்காக என ஒரு பெரிய குண்டு காத்திருந்தது அது அப்புறம். இப்ப கொஞ்சம் படங்கள்.
ஒற்றைக்கை காஷ்மீரியர்கள்
Mohandoss
Wednesday, February 13, 2008
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
-
Akilandeswari - Google chat status - Public I lost my virginity to Mohandoss எனது Buzzல் வந்து விழுந்த அகிலாவின் இந்த அப்டேட் என்னை கொஞ...
புகைப்படங்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteஅனானிமஸ் - நன்றிகள்
ReplyDeleteநல்ல்லா எழுதுறீங்க
ReplyDelete--சென்றுவிட்டு ஹோட்டலுக்கு வந்தால் எங்களுக்காக என ஒரு பெரிய குண்டு காத்திருந்தது அது அப்புறம--
சீக்கிரமா போடுங்க
அட்டகாசமான புகைப்படங்கள் ..
ReplyDelete௩0 வருடங்களுக்கு முன்பு காஷ்மீர் சென்றிருந்த அம்மா சொல்ல கேட்டிருக்கின்றேன் , ஒற்றைக்கை காஷ்மீரிகளைப்பற்றி .. அதே நேரத்தில், கனல் அடுப்பை தங்கள் வயிற்றோடு கட்டிக்கொண்டிருக்கும் நபர்களையும் பற்றி ..
.. பல இடங்களில், இது மாதிரி எதிர்பாராத எளிய நபர்களே பயணத்தை சுவாரசியமாக்குகிறார்கள் ... ;-)
ஆகா மொத்தம் , போட் ஹவுஸ் புக் பண்ணும்போது ரொம்ப கவனமா இருக்க சொல்றீங்க.. நல்ல தகவல் ..
ramesh gopalan, யாத்திரீகன் - நன்றிகள்
ReplyDeleteரமேஷ் எழுதணும் என்பதை விட எடுத்தப் படங்களை ஒழுங்குபடுத்திப் போடத்தான் நேரம் நிறைய எடுக்கிறது.
யாத்திரீகன்,
//ஆகா மொத்தம் , போட் ஹவுஸ் புக் பண்ணும்போது ரொம்ப கவனமா இருக்க சொல்றீங்க.. நல்ல தகவல் ..//
ஹவுஸ் போட்களை மொத்தமாக தவிர்த்துவிடலாம். சீசன் டைமில் எப்படியென்று தெரியவில்லை விண்டரில் ரொம்பவும் மோசம்.
முந்தையைப் போலில்லாமல் இப்பொழுது காஷ்மீரைச் சுற்றி வீடுகள் அதிகம் இருப்பதால் ஹவுஸ் போட்களின் தேவை குறைவே.
காஷ்மீரில் ஒரு வாரம் தங்கப்போகிறீர்கள் என்றால் கடைசியில் வேண்டுமானால் ஹவுஸ் போட் பற்றி யோசிக்கலாம்.
http://tvpravi.blogspot.com/2008/03/blog-post_26.html
ReplyDeleteமிக சுவாரஸ்யமான பயணக்கட்டுரை. நல்ல புகைப்படங்கள்.
ReplyDelete