கில்கிறிஸ்ட் இந்த மாட்ச் உடன் ஒருநாள் போட்டியில் இருந்து விடைபெறுகிறார். ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து இருந்தார். ஜென்டில்மேன்களின் ஆட்டம் என்று சொல்லப்பட்டு வந்தாலும் அப்படிப்பட்ட ஒன்றாக இல்லாமல் தான் இருந்தது/இருக்கிறது கிரிக்கெட். அதற்கு யார் யார் காரணம் எந்த அணி ரொம்ப மோசம் என்ற வெட்டி சர்ச்சைகளை விட்டுவிட்டு; அப்படிப்பட்ட நிலையிலும் கில்கிறிஸ்ட் தனக்கே உரிய நேர்மையுடன் நடந்து கொண்டு 'ஜென்டில்மேன்'என்ற இமேஜுடன் வெளியெறுகிறார்.
விக்கெட் கீப்பராக இருப்பவர் மிகச்சிறந்த பாட்ஸ்மேனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்த ஒரு சூழ்நிலையில் வந்தவர் கில்கிறிஸ்ட். பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் தூண்களில் ஒருவராக கடைசி மூன்று உலகக்கோப்பை ஆட்டங்களில் இருந்திருக்கிறார். மூன்று உலகக்கோப்பை வென்ற மிகச்சில வீரர்களில் கில்கிறிஸ்டும் ஒருவர்.
கில்கிறிஸ்ட் நல்ல தொடக்கம் தந்த, செஞ்சுரி அடித்த எல்லா மாட்சுகளும் ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கும் என்றே நினைக்கிறேன். நன்றாக நினைவில் இருக்கிறது மார்க் வாஹ் விளையாடிக் கொண்டிருந்த பொழுதுகளில் கில்கிறிஸ்ட் என்ற இவரை அறிமுகப்படுத்தினார்கள். மார்க் வாஹ் அந்தப்பக்கம் க்ளாசிக்கல் ஷாட்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இவர் சூறாவழி போல் பட்டையை கிளப்பினார். முதலில் எனக்குப் பொறாமையாக இருந்தது மார்க் வாஹ் சீக்கிரம் அவுட் ஆகிவிடும் சமயங்களில் கூட கில்லி அடித்து நொறுக்குவது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் மார்க் வாஹ்விற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் கிடைத்த நல்ல பார்ட்னர் ஓப்பனர்.
இருவரும் இணைந்து விளையாடிய உலகக்கோப்பை போட்டிகளில் நினைவில் வருகின்றன. பைனல்ஸ் என்று நினைக்கிறேன் சோயிப் அக்தர் ஓவரை கிழிகிழியென கிழித்து தோரணம் கட்டினர் இருவரும். கடைசி வரை அவுட் ஆகலை என்று நினைக்கிறேன். நான் சந்தோஷ வெள்ளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்த நாட்கள். அந்த செமி-பைனல்ஸ் யாரால் மறக்க முடியும்.
ம்ம்ம் இன்று கில்லி ஒரு நாள் போட்டியில் இருந்து விடை பெறுகிறார். தனக்கேயுரிய ஸ்டைலில் செஞ்சுரி அடித்த கையோடு சொந்த மண்ணான பெர்த்தில் இருந்து. இனி ஒரு கில்கிறிஸ்ட் கிரிக்கெட்டுக்கு கிடைப்பார்களா தெரியலை. போய்வா கில்கிறிஸ்ட் வெற்றியின் மகனாய்.
கில்கிறிஸ்டின் ரெக்கார்ட்
In கிரிக்கெட்
Gilchrist ஜென்டில்மேன் விளையாட்டில் நிஜ ஜென்டில்மேன்
Posted on Friday, February 15, 2008
Gilchrist ஜென்டில்மேன் விளையாட்டில் நிஜ ஜென்டில்மேன்
Mohandoss
Friday, February 15, 2008
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
எல்லோரையும் வியக்க வைக்கக்கூடியதும், மருள வைக்கக் கூடியதுமான நான்கு நூல் தொகுப்புக்கள் எப்படியோ இவர்கள் கையில் கிடைத்துவிட்டன; வேதங்கள் என்...
-
Desperately Seeking Cleavage வோக் ஆர்ட்டிகிள் வெளியான பொழுது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை எழுதிய கேத்லீன் “The tits will not be out for...
அவருடைய சொந்த ஊரில் இது கடைசி ஆட்டம். ஆனால் இந்த தொடர் முழுவதும் விளையாடப் போகிறார் என்றே நினைக்கிறேன். கொஞ்சம் சரி பார்க்கவும்.
ReplyDeleteilavasa koththanaar,
ReplyDeleteI guess he retired from one day internationals.
Sorry for the late publish and reply. I am away from home/company.
But let me clarify it from BaggyGreen.com.au
மோஹன்,
ReplyDeleteகில்லி மற்ற ஆஸி வீரர்களிடம் இருந்து வித்தியாசமானவர், பலரும் அங்கே திறமைசாலிகள் , ஆனால் இவர் அளவுக்கு நேர்மையானவர்கள் அல்ல, அந்த பண்பாலேயே மற்ற அணியினராலும் மதிக்கப்பட்டவர். மற்ற நாட்டு ரசிகர்களும் இவரை ரசிப்பார்கள்.
இந்தியாவிற்கு எதிராக ஆடினாலும் உள்ளுக்குள் திட்டிக்கொண்டே இவரது ஆட்டத்தினை ரசிப்பேன் :-))
அவர் சதம் அடித்த அனைத்துப்போட்டிகளிலும் ஆஸி வென்றுள்ளது ஒரு சாதனை.
இவரது ஹோம் கிரவுண்டில் இது கடைசி மேட்ச், இந்த தொடர் முழுவதும் ஆடுவார்.
அடுத்து ipl ஆட வருவார்.சிலர் இவர் ipl இல் ஆடுவதற்காகவே முன்கூட்டியே ஓய்வுப்பெறுகிறார் என்று கூட சொல்கிறார்கள்.இன்னும் ஓராண்டுக்கூட இவர் ஆட வாய்ப்புள்ளது, இருந்தும் விரும்பி ஓய்வு பெறுகிறார்.
இன்றும் அடிலெய்டில் விளையாடி இருக்கிறார் பாருங்கள். இந்தத் தொடருக்குப் பின்னரே அவர் ஓய்வு பெறுகிறார்.
ReplyDeleteஇ.கொ,
ReplyDeleteஆமாம் இந்தத் தொடர் முழுக்க விளையாடுவார் போலிருக்கிறது திருத்தியதற்கு நன்றி. :)
வவ்வால்,
IPL பற்றி கேள்விப்பட்டேன் அதாவது கில்லி விளையாடப்போவதை. எனக்கு சந்தோஷம் தான் அப்படியானால்.
இங்க பாருங்க,
ReplyDeleteகில்கிரிஸ்ட்க்கு இந்த மேட்ச் பெர்த்தில்தான் கடைசி மேட்ச்..
இந்த சீரீஸ் முடிஞ்சப்பறம்தான் ரிட்டையர்ட் ஆகிறார்.
ODI Matches ஆவது இன்னும் கொஞ்ச நாள் ஆடலாம்.. சரி IPL'la ஆட வர்றார்... கலக்குவாருன்னு நம்பலாம்..
ஆக மார்க் வாஹ் உங்களோட பேவரைட் பேட்ஸ்மேன் னு சொல்றீங்க :-))
Blog'la comment போட முடியல.. அதனாலதான இங்க. :-))
-அபுல்
அபுல் அதை முன்னமே இலவசக் கொத்தனார் சொல்லியிருக்கார் பாருங்க.
ReplyDeleteநான் சரியாக கவனிக்காமல் போட்டிருந்தேன்.
ஆமாம் மார்க் வாஹ் தான் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர். அவருடைய எலகன்ஸ் இன்னமுமே கூட பிரமிப்பாகயிருக்கிறது, கொஞ்ச நாள் அவரைக் காப்பியடித்து விளையாடியிருக்கிறேன்.
காலில் போடும் பந்தை தேர்ட் மேன் ஏரியாவில் ஒரு சிக்ஸ் வைப்பாரு பாருங்க கண்ணிலேயே நிற்கிறது அந்தா ஷாட். அதே போல் ஸ்கோயர் கட்டில் அவர் அடிக்கும் பவுண்டரியும்.
மார்க் வாஹ் மார்க் வாஹ் தான்.