இரண்டு வாரத்திற்கு முன் ஹம்பி சென்று வந்திருந்தேன் இப்பொழுது தான் அந்த ஃபீலிங்க் குறையத் தொடங்குகிறது அத்தனை வெயில். ஹம்பியைப் பற்றி இரண்டே வரிகளில் சொல்லவேண்டுமென்றால், ஹம்பியைச் சுற்றிப் பார்க்க இரண்டு நாட்கள் நிச்சயம் போதாது! புகைப்படம் எடுக்க வாரக்கணக்கில் தேவைப்படுமாயிருக்கும். காஷ்மீர் போல இல்லாமல் ஹம்பிக்கு தனியாச் சென்றது தவறென்று நினைக்கிறேன் பொட்டல் காட்டில் நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் காமெரா தூக்கிக் கொண்டு அலைந்தது, சாதாரணத்தை விடவும் அதிக அலுப்பைத் தந்தது.
Nutrition ஒருவரை எங்கள் கம்பெனி அழைத்து வந்து விருப்பப்பட்டவர்கள் சென்று பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே அதில் விருப்பம் இல்லாமலே இருந்தேன், காலை உணவு உட்கொள்ளாமல், மத்யானம் கொஞ்சம் போல் எடுத்துக் கொண்டு, ஆறு ஏழு காப்பிகள் குடித்து பின்னர் ஹெவியான டின்னர் சாப்பிடுவது சரியில்லை என்பது தெரியாத ஒன்றில்லை. கட்டுப்பாடே இல்லாமல் சிக்கன் சாப்பிடுவது, உடல் உழைப்பே இல்லாமல் போன இந்தக் காலத்தில் பிரச்சனை என்று தெரிகிறது தான். கிரிக்கெட், வாலிபால், பூப்பந்து என்று ஒன்றும் விளையாடாமல் வெட்டியாய் கழியும் நேரம் நியூட்ரீஷியனை சந்திக்க விடாமல் செய்திருந்தது. ஆனால் ஒளிந்து கொள்வது எதற்கும் நன்மையல்ல என்று முடிவு செய்து சந்தித்திருந்தேன் கடைசியில்.
சுஜாதாவின் மரணம், புதன்கிழமை மதியம் ஹெவியான மதிய உணவிற்குப் பின்னும், கொண்டாட்டதிற்காக பப் சென்றுவிட்டு, தண்ணியடித்திருந்த நண்பர்களின் போதை தெளிவதற்காக Micheal Clayton படம் பார்த்துவிட்டு மனம் முழுவதும் மகிழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது அறிந்து கொண்டது. எப்பொழுதும் கூட்டமாகயிருக்கும் ஒரு இடத்தை பெரும்பாலும் விரும்பாமல் தனிமையை விரும்பும் எனக்கும் கூட, ஏகலைவன்களின் சில ஆயிரங்களில் ஒருவன் என்ற சட்டத்திற்குள் அடைத்துக் கொள்வதில் வருத்தம் இருந்ததில்லை. ஆனால் இப்படிச் சொல்ல ஆரம்பித்தால் கைகளில் மட்டுமல்ல கால்களில் கூட விரல்கள் இருக்க முடியாது இப்பொழுது எனக்கு. வருத்தமாகயிருந்தாலும், அவர் உடலளவில் ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டார் இன்னமும் கஷ்டப்படாமல் போய்ச் சேர்ந்துட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
அய்யனாருடன் தேசிகனின் பதிவில் சுரேஷ் கண்ணன் போட்டிருந்த ஒரு பின்னூட்டம் பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது சொன்னதுதான் நினைவில் வருகிறது. "அய்யனார் அவர் இதுக்கு மேல் மாற்றி எழுத மாட்டார், தேவையில்லை, ஆனால் எழுதினால் எல்லோருக்கும் நல்லது" இதுதான் அது. சுஜாதாவிடம் ஆண்டாள் பற்றி இன்னமும் கொஞ்சம் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன், "அம்பலம் அரட்டை" மூலமாய் அவரிடம் நான் கேட்க நினைத்த அத்தனையையும் கேட்டிருக்கிறேன். இதன் தொடர்ச்சியில் ஒரு வெறுமை பரவத்தொடங்கியது அது சுஜாதாவின் மரணத்தின் மூலம் முற்றுப் பெற்றது. போய் வாருங்கள் சுஜாதா, அவ்வுலகத்து மக்களுக்கு பிங் பேங் தியரியைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் அங்கே இல்லை என்று உணர்த்துங்கள்.
தொடர்ச்சியற்ற எண்ணங்கள் தான்.
ReplyDeleteபடம்
ஹம்பி
சுஜாதா..
மோஹன்,
ReplyDeleteதொடர்ச்சியற்ற எண்ணங்களின் கலவையாக இருந்தாலும் ரசிக்கலாம், முழுப்படத்தை விட சில படங்களின் தொகுப்பாக வரும் தொலைக்காட்சி நிகழ்வுபோல.
சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வான முதல் ஆஸ்திரிய படம் கவுண்டர்ஃபெய்டர்ஸ் (the Counterfeiters)எப்படி இருக்கு. நாஸி பின்னனி என்பது ஆர்வத்தை தூண்டுகிறது. பார்க்கலாம் என்று இருக்கேன்.
no country for old man பற்றியும் நினைத்தேன் நீங்களோ,வேறு யாராவது பார்த்துவிட்டு பொறுமையாக விமர்சிப்பார்கள் என்று ஆஸ்கர் முடிவு வந்த நாளில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன், அப்படியே போட்டாச்சு, இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லி இருக்கலாம்.இன்னும் படம் பார்க்கவில்லையோ?
வடுவூர் குமார்,
ReplyDelete:), நியூட்டிரிஷியனை சந்திச்சதை விட்டுட்டீங்க.
வவ்வால்,
ReplyDeleteNo country for old man, பார்த்தாகிவிட்டது எழுதணும். அதைத்தான் சொல்லியிருந்தேன் பதிவிலும்.
இந்தப் படம் கவுன்டர்ஃபெய்டர்ஸ் தேடிக்கொண்டிருக்கிறேன், சென்னையில் படம் கிடைக்கும் நிச்சயமாய் ஒரு முறை சென்னை வர டிக்கெட் புக் எல்லாம் செய்து பின்னர் கேன்ஸல் செய்திருந்தேன். வரவேண்டும்.
மோஹன்,
ReplyDeleteஉங்கள் ஆர்வம் அதீதமாக இருக்கே படம் பார்க்கவா சென்னைக்கு டிக்கட் புக் செய்தீர்கள்! ஆச்சர்யமான குணாம்சம்!
முன்னர் திரைப்படம் பார்க்க ஒரு இணைய தளம் சொன்னேனே அதில் இருக்கு அந்த படம் பாருங்கள்.
(பி.கு: தமிழ் மணம் இயங்கவில்லையா, பதிவுகள் தெரியவில்லை, பிழை என்று தகவல் வருது,, நான் flock என்ற உலாவி பயன்படுத்துவதால் , அதில் உள்ள புக் மார்க்கில் எல்லாம் அப்டேட் ஆக காட்டும், அதனால் சிரமம் இல்லை)
வவ்வால்,
ReplyDeleteஇல்லை படம் பார்க்க இல்லை; படம் வாங்க. டிவிடிக்கள் வாங்க வருவதாக ஒரு எண்ணம் இருந்தது. கடைசியில் mood சரியில்லை என்று டிக்கெட்களை கேன்ஸல் செய்திருந்தேன்.
பெங்களூரிலும் கிடைக்குமாயிருக்கும் தேடிப்பார்க்கிறேன்.
தமிழ்மணம் வேலை செய்யவில்லை, என்னுடையது firefox அதில் இருக்கும்(சேர்த்திருக்கும்) பதிவுகளின் அப்டேட்களைக் காட்டும். ஆனால் எனக்குத் தெரிந்து தமிழ்மணம் வேலை செய்யவில்லை என்றால் பதிவர்கள் பதிவுகளை வெளிவிட மாட்டார்கள். சிலர் பின்னூட்டங்களைக் கூட :))))
மோஹன்,
ReplyDelete//ஆனால் எனக்குத் தெரிந்து தமிழ்மணம் வேலை செய்யவில்லை என்றால் பதிவர்கள் பதிவுகளை வெளிவிட மாட்டார்கள். சிலர் பின்னூட்டங்களைக் கூட :))))//
உலகம் அவர்களுக்கு ஸ்தம்பித்து போய் இருக்கும் போல :-))
(கணித்திரைப்)படங்கள் - குறிப்பாக கடைசிப்படங்கள் - நன்றாகவிருக்கின்றன.
ReplyDeleteநாட்ஸியைப் பற்றி என்ன குப்பையை எடுத்தாலும் ஒஸ்கார் கொடுப்பார்கள்; காஸாவிலும் வெஸ்ற் பாங்கிலும் என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். இதுதான் அமெரிக்க முற்போக்கு ;-)
பெயரிலி,
ReplyDeleteஅப்படின்னா முதலாவது தவிர்த்த அனைத்தையும் கடைசி படங்களாக எடுத்துக் கொள்கிறேன். :)
ஆமாம் இது தொடர்ச்சியாக நடப்பது தான். The Pianist, அது இது என்று ஏகப்பட்ட உதாரணங்கள் கொடுக்கலாம்.
ஈராக் அமேரிக்க பேஸ்(???)ஸிலிருந்து விருது அறிவிப்பு எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஆனால் பரிசு பெற்ற ஒருவர்(எந்த பிரிவில் தேடிப்பார்க்கணும்) அமேரிக்கா மாறணும் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வரணும் என்று சொன்ன கமெண்ட் 'நச்' என்று இருந்தது.