எனக்கு அடல்ஸ் ஒன்லி வகை கதைகள் அறிமுகம் ஆன பொழுது நான் ஒன்பதாவது பத்தாவது படித்துக் கொண்டிருந்த சமயமாக இருக்கும். ஏனென்றால் எனக்கு நினைவில் இருக்கிறது அப்பொழுது நான் அரைக்கால் ட்ரௌசர் போட்ட பையன் என்று. அது தர்ம சங்கடமான சமயம், மதிய சாப்பாடு முடிந்து சற்று தூக்க கலக்கமாக இருக்கும் சமயங்களில் பையன்கள் ஆரம்பித்து விடுவார்கள்.
பின்னர் கல்லூரிக் காலங்களில் பெரும்பாலும் கடைசி பெஞ்சில் இதைப் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கும். சாஃப்ட்வேர் கம்பெனிகளும் இதற்கு கொஞ்சம் குறைந்தது கிடையாது, politically correctஓ இல்லையோ கூட வேலை செய்யும் பெண்களைப் பற்றி ஏக காலத்தில் கமென்ட்டுகள் வந்த வண்ணம் இருக்கும் XXX ஆக இல்லாமல் பெரும்பாலும் XX ஆகவோ இல்லை வெறும் X ஆகவோ தான் இருக்கும். தண்ணியடித்தால் 'பஞ்சாபி A ஜோக்குகள்' சொல்லும் PM ஒருத்தர், தண்ணியடிக்க ஆரம்பித்ததில் இருந்தே பெண்கள் பற்றி பேசும் 'சாஃப்ட்வேர்' நண்பர்கள் வரை இன்னமும் நிறைய பேர் நிறைய கதைகள் உண்டு.
பெரும்பாலும் யாரோ ஒருவர் ஆரம்பித்து பின்னர் மற்றொருவர் தொடர்வது என எல்லோரும் ஒரு கதையாவது சொல்லியிருப்பார்கள். நிறைய கதைகள் நினைவில் நிற்பது இல்லை பெரும்பாலும் இது போன்ற கதைகளை வெறுமனே கேட்டு அந்த நேரத்தில் சிரிக்கத்தகுந்தவையாகத்தான் இருக்கும்.
இதே போல் கிராமத்தில் நடமாடும் 'மறைவாய் சொன்ன கதைகளைத்' தொகுத்து கி.ராஜநாராயணனும் கழனியூரானும். மறைவாய் சொன்ன கதைகள் என்ற தொகுப்பாய் விட்டிருக்கிறார்கள் அதிலிருந்து ஒரு கதை சாம்பிளுக்கு. இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்ததற்கு கதை சிறியதாய் இருப்பதைத் தவிர்த்து வேறு ஒரு காரணமும் கிடையாது :).
ஒரு ஊர்ல ஒரு புருஷனும் பொண்டாட்டியும் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை இருந்தான். அவனுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். அவன் ஒரு பைத்தியக்காரனா வளர்ந்தான்.
ஒரு நாள் பட்டப்பகலில் கதவை ஒருச்சாத்தி(சிறிது திறந்தபடி) வைத்துக் கொண்டு புருஷனும் பொண்டாட்டியும் 'பேசிப் பெறக்கிக் கிட்டு' இருந்தாங்க. அவங்களோட பையன் கதவின் இடைவெளி வழியா உள்ளே எட்டி அந்தக் கங்காட்சியைப் பார்த்துட்டான்.
தன் பாட்டியிடன் வந்து வீட்டுக்குள் தான் பார்த்த கங்காட்சியை பற்றிச் சொல்லி 'அம்மாவும் அப்பாவும் என்ன செய்றாங்க பாட்டி' என்று விபரம் கேட்டான்.
பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டுட்டு, 'கதவைத் திறந்து போட்டுக்கிட்டு அவங்க சந்தோஷம் கொண்டாடியிருக்காங்க' என்பதைப் புரிந்து கொண்ட பாட்டி பேரன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து வழக்கம் போல் ஒரு பொய்யைச் சொன்னாள்.
அந்தப் பேரன் அடிக்கை எசக்குப்பிசக்கா பாட்டியிடம் அப்படிக் கேள்விகள் கேட்பதுண்டு.
ஒருநாள் 'பாட்டி நான் எப்பைப் பிறந்தேன்?' என்றூ கேட்டான்.
பேரனின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல விரும்பாத பாட்டி, 'நீ சின்ன பிள்ளையா இருக்கும்போது ஒரு கன்னப் பருந்து உன்னைக் கொண்டுவந்து உன் அம்மாவின் மடியில் போட்டுட்டுப் போய்ட்டு' என்று ஒரு பொய்யைச் சொல்லி வைத்தாள்.
இப்பமும் அதே மாதிரி 'பேரப்புள்ள, உங்கம்மா திடீரென்று செத்துட்டா, உங்கப்பா அவளைக் கட்டிப் பிடிச்சி உசிரு கொடுத்துக்கிட்டு இருந்திருக்கு. அதைத்தான் நீ பார்த்திருக்கிறெ.' என்று பொய்யைச் சொல்லி வைத்தாள்.
பைத்தியக்காரனான பேரப்பிள்ளையும் பாட்டி சொன்னதை நம்பிட்டான்.
ஒரு வாரம் கழித்து பக்கத்து வீட்டில் ஒரு வயசுக்கு வந்த பொம்பளைப் பிள்ளை ஒருத்தி இறந்துவிட்டாள். எல்லோரும் போய் செத்துப்போன பிள்ளையைப் பார்த்துட்டு வந்தாங்க.
பாட்டியோட பேரனும் போய் செத்துப் போன அந்தப் பிள்ளையப் பார்த்துவிட்டு அங்கே நின்றவர்களிடம் 'எங்கப்பா செத்தவங்களுக்குக் கெல்லாம் உயிர் கொடுக்கத் தெரிஞ்சவங்க. இப்ப எங்கப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்து செத்துப் போன இந்தப் பிள்ளையக் கட்டி பிடிக்கச் சொல்லுங்க. இந்தப் பிள்ளைக்கும் உயிர் வந்திரும்' என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.
பையன் சொல்வதைக் கேட்ட நிறைய பேருக்கு 'விபரம்' புரியவில்லை. கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் மட்டும் விசயத்தை யூகித்துக் கொண்டு சிரித்தார்.
அதற்குள் பையன் வாய் திறந்ததைக் கேள்விப்பட்டு அவனோட பாட்டி ஓடோடி வந்து அவன் வாயைப் பொத்துக் கொண்டு. 'வாடா வா பைத்தியக்காரப் பெயல் மகனே!' என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டுக்கு பேரனைக் கூட்டிக் கொண்டு போனாள்.
பாட்டி போன பிறகு, பையன் சொன்னதைக் கேட்டு சிரித்த பெரியவரிடம் சுற்றி நின்று 'என்னன்னு விபரம் புரியலியே. நீங்களாவது சொல்லுங்களேன்' என்றூ கேட்க பெரியவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் யூகித்த விஷயத்தை அனைவருக்கும் விளக்கினார். துக்க வீட்டிலும் சிரிப்பலைகள் பரவியது.
அறியாத பிள்ளைகள் கேட்கிற சில எசக்குப்பிசக்கான கேள்விகளுக்கு சம்மந்தா சம்மந்தமில்லாமல் நாம் பொய்யான பதிலைச் சொன்னால் அதன் பின்விளைவுகள் இப்படித்தான் இருக்கும்' என்று சொல்லி முடித்தார் கதை சொன்ன தாத்தா.
என் பள்ளிப் பருவத்தில் சொன்ன கதை ஒன்றும் அப்படியே.(எனக்கு இந்த வகைக் கதைகளை கூறுவதற்கான மொழி அமையணும் என்று வேண்டிக் கொள்கிறேன்.)
பெரும்பாலும் எனக்கு அறிமுகமாகியிருந்த கதைகள் பெண்ணொருத்தியுடையதோ இல்லை ஆணினுடையதோ இந்த விஷயத்திலான சாமர்த்தியத்தை சூட்சமத்தை விளக்குவதாக இருக்கும். அப்படித்தான் இந்தக் கதையும், முன்பு நண்பர்களாயிருந்து பின்னர் எதிரிகளான இருவரும் அவர்களில் ஒருத்தரின் காதலியும் ஒரு இரவு ஒரு மண்டபத்தில் தங்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டது. இதில் காதலியுடன் வந்திருப்பவரின் பெயர் சந்திரன் என்று வைத்துக் கொள்வோம், மற்றவர் பெயர் செல்வம். இது சுலபமாக கதை சொல்வதற்காக மட்டும். :) பின்நவீனத்துவ கதைக்காரர்கள் ஒருவனை அதீதன் என்றும் மற்றவனை நன்மொழித்தேவன் என்றும் அவளை ஆத்மார்த்தி என்றும் வைத்துக் கொண்டாலும் தவறில்லை. அதீதனும் நன்மொழித்தேவனும் வேறல்ல இருவரும் ஒருவரே என்று 'சொல் என்றொரு சொல்' சொல்பவர்கள் ஒதுங்கி நின்று செல்வம், சந்திரனாக கதைக்கலாம்.
சந்திரனுக்கு அவர்களுடைய நண்பர்கள் செல்வத்தைப் பற்றி நிறைய சொல்லி காதலியை பதுவிசாக பார்த்துக் கொள்ளும் படியும் ஒரு நிமிடம் விட்டாலும் செல்வம் தவறு செய்துவிட வாய்ப்புள்ளது என்று சொல்லி அனுப்ப சந்திரனுக்கோ தர்மசங்கடமான நிலை, இதில் செல்வத்தின் 'காமப் புகழ்' வேறு உலகம் அறிந்தது என்பது சந்திரனுக்கும் தெரிந்து தான் இருந்தது. சரி எப்படித்தான் அவனும் 'தில்லுமுள்ளு' செய்யறான்னு பார்ப்போம் என்று ஒரு வித மமதையில் ஒரு திட்டம் போட்டான். தன் காதலியின் யோனியின் மீது கையை வைத்துக் கொண்டே தூங்குவது என்றும் எப்படியும் அவன் 'தவறு' செய்ய நினைத்தால் கண்டுபிடித்து விடலாம் என்றும் திட்டம் போட்டான். இது போல் கை வைத்துக் கொண்டு வெகுநேரம் தூங்காமலும் வேறு இருந்தான் செல்வம் பற்றிய பயத்தினாலே, பின்னர் ஒருவாறு தூங்கிப்போனான் அவனுக்கே தெரியாமல் ஆனால் கைமட்டும் விழிப்பா அங்கேயே இருந்தது. இருட்டில் எங்கிருந்தோ வந்த ஒரு கொசு அவன் தொடையில் கடிக்க அதை அடிக்க சந்திரன், அவன் காதலி மேல் வைத்திருந்த கையை எடுத்துவிட்டு நொடியில் மீண்டும் வைக்கும் பொழுது பிசுபிசுவென்று இருந்தது என்றும் இதிலிருந்து செல்வம் எந்த அளவுக்கு சூச்சமக்காரன்னு புரியும் என்று சொல்லி கதை முடியும்.
மறைவாய் சொன்ன கதைகள்
Mohandoss
Monday, December 10, 2012
Mohandoss
Monday, December 10, 2012
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
காதல். பதின்ம காதலை சத்தமில்லாத முத்தங்களுடனும் காற்றைக் கிழிக்கும் அம்புகளைத் தாங்கும் அம்பாறாத்தூளியைத் தோளில் சுமக்கும் அழகிய அர்ச்சுனன...
-
இம்மாதம் 18 ஆம் தேதி இரவு பதினோரு மணியளவில், நகுலன் எனும், அற்புத, அதிசய, அபூர்வ, குண நலம் கொண்ட தமிழ் எழுத்தாளன். திருவனந்தபுரத்தில் ஒரு தன...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...


செல்வம், சந்திரன் கதையை நான் வேறுவிதமாக பள்ளிநாட்களில் கேட்டிருக்கிறேன்.
ReplyDeleteமுன்னாள் பிரதமர்களும், தேசத்தலைவர் ஒருவரும் சம்பந்தப்பட்ட ஒரு மோசமான ஜோக் அது :-)
மறைவாய் சொன்ன கதைக்கு மறைவா ஒரு பின்னூட்டம்
ReplyDeleteலக்கி,
ReplyDeleteஇதே கதையை நான் நண்பர்களிடம் சொன்ன பொழுது அவர்களும் இதற்கு வித்தியாசமான வேறு ஆட்கள் கொண்டு இதே கதை சொல்லும் வழமை உண்டு என்று சொன்னார்கள்.
கதைகளுக்கு கால்கள் உண்டு என்று கேள்விப்பட்டதில்லையா? கதை நகரும் பொழுதும் பெயர்கள் தொடர்ச்சியாக மாற்றமடைகின்றன.
அனானி,
ReplyDeleteநன்றிகள் மறைவாய் சொன்னதற்கு :).
//கதைகளுக்கு கால்கள் உண்டு//
ReplyDeleteகால்கள் மட்டுமா?
இந்த மாதிரி கதைகளுக்கு ...................
ஒரே கதைய ஊருக்கு ஊர் மாத்தி சொல்றாங்க
ReplyDeleteலக்கி,
ReplyDeleteஹாஹா அதுவும் சரிதான்.
தம்பி,
உங்க பக்கத்து கதையும் சொல்லிட்டு போங்கப்பா.
இல்லாட்டி லக்கி மாதிரி சூசகமா சொல்லிட்டு போங்களேன், இப்படி "முன்னாள் பிரதமர்களும், தேசத்தலைவர் ஒருவரும் சம்பந்தப்பட்ட ஒரு மோசமான ஜோக் அது :-)"
நல்லா வந்திருக்குங்க.
ReplyDeleteசுந்தர் - நன்றிகள்.
ReplyDeleteதமிழ்நாட்டு முதல்வர்கள் மூவரை வைத்துக் கூட இந்தக் கதையைச் சொல்லி கேட்டிருக்கிறேன் :)
ReplyDeleteஅனானி,
ReplyDeleteம்ம்ம் புரியுது. :)
இன்னும் நீங்க என்னை ஞாபகம் வச்சிருக்கீங்களா? ரொம்ப சந்தோஷம். தொலைக்கப்படவேண்டிய முகவரி இன்னும் தொலயவில்லை போலிருக்கே?? :)
ReplyDelete//தமிழ்நாட்டு முதல்வர்கள் மூவரை வைத்துக் கூட இந்தக் கதையைச் சொல்லி கேட்டிருக்கிறேன் :)//
ReplyDeleteஅதுலே கில்லாடியா இருப்பவர் அதீதனை போல வழுக்கைத் தலை கொண்டவராக இருப்பார். சரியா?
//அதுலே கில்லாடியா இருப்பவர் அதீதனை போல வழுக்கைத் தலை கொண்டவராக இருப்பார். சரியா?//
ReplyDeleteலக்கி,
இதில் சந்தேகம் வேறா? :)
கணேஷ் சில முகவரிகள் தொலைக்கப்படமுடியாதவை.
ReplyDeleteநான் பதிவு எழுத ஆரம்பித்த புதிதில் நீங்களும் தொடங்கி எழுதிக் கொண்டிருந்தவர் என்பதால் கூட இருக்கலாம்.
ஐயோ, அதீதனுக்கு வழுக்கை இல்லைங்க. இப்போதான் வழுக்கை விழ ஆரம்பிச்சிருக்கு :)
ReplyDeleteஎனக்குத்தான் வழுக்கை :)
//அதுலே கில்லாடியா இருப்பவர் அதீதனை போல வழுக்கைத் தலை கொண்டவராக இருப்பார். //
ReplyDelete//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
எனக்குத்தான் வழுக்கை :)//
அப்போ நீங்க தான் அதுலே கில்லாடியா என்ற கேள்வி எனக்கு மட்டுமல்ல, மோகனுக்கும் எழும்பும் ஜ்யோவ்ராம்! :-))))
லக்கி,
ReplyDeleteஅதான் ஜ்யோவ்ராம் அதெல்லாம் 'myth'ன்னு சொல்லி மனசை உடைச்சிட்டாரே முதல்லயே! :)
ஏதோ 'ஆண்டவன்' இந்த அளவிற்காவது உதவியிருக்காரேன்னு நினைச்சேன். சுந்தர் திரும்பவும் கடவுள் இல்லங்கிறதை நிரூபிச்சிட்டார் :)))))
//எனக்கு மட்டுமல்ல, மோகனுக்கும் எழும்பும் ஜ்யோவ்ராம்! :-))))
ReplyDelete//
ayyo ayyo...