ரஜினி போல் கமல் போல் சல்மான் எனக்கு ஆகிப்போனது எப்பொழுது என்று தெரியாது. அதன் அர்த்தம் படம் நல்லாயிருக்குமா இருக்காதா என்பதைப் பற்றிய கேள்விகள் இல்லாமல் படத்திற்குச் செல்வது, ரஜினி கமல் என்றால் ஒருவித எதிர்பார்ப்பும் இயல்பாகவே வந்துவிடும். ஆனால் சல்மான் விஷயத்தில் அதுவும் கிடையாது, இடையில் இணையத்தில் பார்த்த என் ‘One of the favorite’ கரீனா கபூரின் பாடல் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது, சொல்லப்போனால் எதிர்மறையான விஷயங்கள் தான் இந்தப் படத்தை பற்றி மனதில் இருந்தது. இந்தப் படத்தை அபினவ் இயக்கவில்லை அர்பாஸ் இயக்குகிறார் என்பது ஒரு மிகப்பெரிய தடையாய் இருந்தது இந்தப் படத்தை நான் அணுக.
ஆனால் சல்மான் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் முடிந்தவரை சல்மான் படங்களைப் பார்த்துவந்தேன், இன்று கூட என் உடன் உட்கார்ந்திருக்கும் வட இந்திய நண்பரிடம் தமிழர் ஒருவர்(நானில்லை) படத்துக்கு ரிவ்யூ நல்லா வரலை போலிருக்கே என்று சொல்ல(எவண்டா இதையெல்லாம் சொல்றான்) அட படம் எப்படியிருக்குங்கிறது இரண்டாவது விஷயம் படம் சல்மானோடது என்றார் நண்பர், நான் அப்படி அதுவரை உணரவில்லை என்றாலும், அப்படித்தான் என்று அதற்குப் பிறகு பட்டதெனக்கு.
ரஜினி படம் பார்ப்பதைப் போன்ற கொண்டாட்டம் சல்மான் படம் பார்ப்பது(ஏறக்குறைய தான் - ஒட்டுமொத்தமாய் இல்லை), தியேட்டர் ஃபுல், அதிலும் பெரும்பான்மை அல்லது 99% வட இந்தியர்கள் என்பதால் - ஆடியன்ஸ் எப்பொழுதுமே முக்கியம் - படத்திற்கான வரவேற்பு படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தெரிந்தது. சல்மான் அடித்து நொறுக்குவது போன்ற விஷயங்கள் - சிறிது சலசலப்பை உண்டாக்கினாலும் - ரஜினியை நாம் ரசிப்பதைப் போல இருந்தது. படத்தை ப்ரேம் பை ப்ரேம் தபாங் முதல் பாகம் போல எடுக்க முயன்றிருக்கிறார்கள்.
படம் மொத்தமே சல்மான் தான், நன்றாக இருக்கிறார் - சண்டைப்பயிற்சி அனல் அரசாமா(ANL Arasu :)) நல்லாயிருக்கு. கேரக்டரைசேஷன் முன்னமே செய்தது என்பதால் அதில் பெரிய மாற்றம் செய்யவில்லை, படம் முழுவதும் தியேட்டர் அதிர்ந்து கொண்டேயிருந்தது - படம் மக்களுக்குப் பிடித்திருந்தது என்பதற்கு நல்ல உதாரணம். உடம்பை இன்னும் நன்றாகத் தேற்றியிருக்கிறார், இன்ஸ்பெக்டர் உடுப்புக்குள் அவர் உடம்பு அடங்க மறுக்கிறது.
சோனாக்ஷி கும்மென்று இருக்கிறார், உடன்படம் பார்த்த நண்பரிடம் இதைப்பற்றி சொன்ன பொழுது, அவர் பின்பக்கம் சப்பையாக இருக்கென்று சொல்லி மூடைக்கெடுத்தார். நல்லவேளை இவருடைய கேரக்டர் ஸ்கெட்சையும் மாற்ற முயற்சிக்கவில்லை. அப்படியே சல்மான் தந்தை மற்றும் தம்பியின் கேரக்டரையும். சோனாக்ஷி முந்தையப் படத்தைப் போலவே இதிலும் நேரம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் தன்னால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருடைய ஜாக்கெட் மேல் எனக்கு படம் ஆரம்பித்து முடியும் வரை ஒரு கண் இருந்தது. பைக் ஒன்றில் சோனாக்ஷி உட்கார்ந்திருக்கும் காட்சி இன்னனும் கண்ணில் நிற்கிறது. :)
கதையெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது. தபாங் 1 மாதிரியே தான் தபாங் 2ம் ஏற்கனவே உருவாக்கிய கதாப்பாத்திரங்களை வைத்து இன்னும் கொஞ்சம் பணம் பார்க்க உத்தேசித்திருக்கிறார்கள் - எடுப்பார்களாயிருக்கும் தான். படம் 2 மணிநேரம் ஐந்து நிமிடம், இடைவேளை இல்லை என்பதால் அலுக்கவில்லை - பாடல்கள் கொஞ்சம் போல் போரடித்தாலும், கதையென்று ஒன்னும் செய்யவில்லை என்பதால் வேற வழியில்லை.
மாஹி ஜில் மற்றும் கரீனா கபூர் தற்சமயம் இந்தியில் நான் கவனிக்கும் ஹீரோயின்கள். மாஹிக்கு கதாப்பாத்திரம் எல்லாம் ஒன்றும் இல்லை சும்மா ரெண்டு சீன், கரீனாவிற்கு ஒரு குத்துப்பாட்டு - அதற்காகவே கூட இந்தப் படத்தைப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள் - அதுவும் நன்றாகவேயிருக்கிறது. இப்ப கொஞ்சம் மாடல் ஃபோட்டோகிராஃபியில் இறங்கியிருப்பதால் கூட இருக்கலாம் இவருடைய சோலி(காக்ராவினுடைய) ரொம்பப் பிரமாதம். ஆகமொத்தம் சிறப்பாக எல்லாம் நான் ஒன்றும் எதிர்பார்த்துச் செல்லவில்லை, அர்பாஸ் என்றதும் ஆஃப் ஆன என் எதிர்பார்ப்பு படம் முடிவடைந்ததும் அப்படியில்லை. இதில் அர்பாஸ் எதுவும் புதிதாகச் செய்யவில்லை என்றாலு கலர், ஸ்டைல் முதற்கொண்டு எல்லாவற்றையும் முதல் படத்தில் இருந்து நன்றாக காப்பியடித்திருக்கிறார்.
மறந்துட்டனே இடையில் பிரகாஷ் ராஜ் வேறு - டப்பிங் பேச ஆள் வரலை போல யாரையோ வைச்சு பேசியிருக்கிறார்கள், கொஞ்சம் ஒட்டலை. விடுமுறையில் இரண்டு மணிநேரத்தை இந்தப் படத்திற்காக செலவு செய்யலாம் தான்.
தபாங் 2 - கொண்டாட்டம்
Mohandoss
Saturday, December 22, 2012
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
வாங்க என்ன வெளியிலேயே நின்னுட்டீங்க, உள்ள வாங்க என்னடா இந்த வீடு கூட அமைதியா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? ம்ஹும் என்ன செய்றது அப்படியாய்...
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
On a serene Saturday evening, I slowly emerged from the embrace of slumber, rousing from my afternoon repose. Gradually, my senses rekindled...
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி......
ReplyDeleteநன்றி,
மலர்
------மட்டுறுத்தியிருக்கிறேன்--------
நல்ல விமர்சனம் ஒஸ்தி -2 வருமோ ?
ReplyDeleteWanted wonderful publishing! I seriously really enjoyed perusing doing it, you are an incredible author.Most definitely i'll you should lesemarke your web site and often will quite often visit in the future. I would like to really encourage a person continue a great items, have got a attractive break week end!
ReplyDeleteDABANG 2 வேட்டைகாரன்,மற்றும் சிங்கம் படங்களின் உல்டா...
ReplyDelete