ராலே - நார்த் கரோலினாவில் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் இன்று வெளியாகயிருந்தது. 8.00 மணி ஷோ, 8.40 வரைக்கும் காத்திருந்து பார்த்துவிட்டு ‘தமிழ்’ படம் டெக்னிக்கல் காரணங்களுக்காய் திரையிடப்படாததால் மற்ற நண்பர்கள் நகர்ந்துவிட நான் மட்டும் தெலுங்குப் பதிப்பில் சென்று உட்கார்ந்தேன். ஈரானிய ஸ்பானிய படமெல்லாம் பார்க்கிறோம். திராவிடப் படம் தானே பார்த்தால் என்ன என்று வந்து உட்கார்ந்தேன்.
ஷார்ப்பான நகைச்சுவை புரியவில்லை ஒப்புக்கொள்கிறேன். முதல் பாதியில் தியேட்டர் அதிர்ந்து சிரித்தது பொழுது உணர்ந்து கொள்ள சிரமப்பட்டேன், ஆனால் மீதி படம் புரிவதில் எனக்கு குழப்பம் இருக்கவில்லை - தெலுங்கு - நெருங்கிய உறவினார்கள் தெலுங்கு பேசுவார்கள் என்றாலும் நமக்கும் தெலுங்குக்கும் காத தூரம். இருந்தாலும் படம் புரிந்தது. இடையில் மனைவியிடம் தொலைபேசும் பொழுது அவர் கேட்டதும் தான் நினைவில் வந்தது - நான் கௌதம் படமெல்லாம் அல்மோஸ்ட் ஆங்கிலத்தான இருக்கும் என்று ஊகித்து சென்றது என் தவறு தான் தெலுங்குப் பதிப்பில் ஆங்கிலம் சுத்தமாகயில்லை. ஜாய்னிங் வேர்ட்ஸாகக்கூட. என்ன ஆச்சு கௌதம், தமிழிலும் இப்படியே இருந்தால் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
மனம் ஜீவாவையே கற்பனை செய்து கொண்டிருந்தது நானீயைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதும் - நானி நன்றாகச் செய்திருக்கிறார் என்றாலும். இதை ஜீவாவிற்காக நிச்சயம் இன்னொருதரம் பார்ப்பேன். சமந்தாவிற்காகவும் தான். நான் ஈயில் இருந்தே கவனிக்கிறேன், நல்லா முயற்சி செய்யறார். இந்தக் கதாப்பாத்திரம் பிடித்திருந்தாலும் எங்கேயோ எனக்கு ஒட்டவில்லை நானி - தெலுங்கு மட்டும் இதற்குக் காரணம் என்று நினைக்கவில்லை.
கௌதமின் கதாநாயகிகளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் எப்பொழுதுமே - கம்பீரமான கதாநாயகிகளை உருவாக்குவார். இதில் சமந்தாவின் கதாப்பாத்திரம் மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது. மெச்சூரிட்டியில் கூட வித்தியாசம் காண்பிக்கிறார், இதற்கு முன்னால் சமந்தா நடிச்சி எந்தப் படம் பார்த்தேன் நினைவில் இல்லை. ஆனால் இந்தக் கதாப்பாத்திரம் எனக்குப் பிடித்திருக்கிறது. சமீரா ரெட்டியை வாரணம் ஆயிரத்தில் பார்த்தப் பிறகு சொன்னது நினைவில் இருக்கிறது - சமந்தாவையும் இனிமேல் வேறுபடத்தில் வைத்து கற்பனை செய்ய முடியவில்லை, மொக்கைப் படங்களி. ஆனால் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றே மனதிற்குப் படுகிறது. நித்யா என்று நானி சொல்லும் பொழுதுகளில் எல்லாம் தனித்து ஒலிக்கிறது அந்தப் பெயர், அகிலாவைக் கொஞ்சம் ஓரம்கட்டி நித்யாவை உபயோகிக்கணும் இதே கேரக்டர்ஸிடிக்ஸுடன்.
இத்தனை காம்ப்ளக்ஸான கதாப்பாத்திரங்களை/காதலர்களை தமிழ்ச் சினிமாவில்(தமிழ் தெலுங்கில் ஒரே கதை என்று நினைக்கிறேன்) பார்த்து காலமாகிறது. அதற்காக ஒரு நன்றி. இதை மட்டுமே தனிப்பட எடுக்க நினைத்ததற்கும். ஆங்கிலத்தில் இது போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். தமிழில் நன்றாகவே வந்திருக்கிறது கௌதம். க்ளைமாக்ஸ் சற்றே உறுத்தினாலும் ரியாலிட்டி வந்திருப்பதைப் போல் பட்டது, நல்ல நேரம் எடுத்து கதாப்பாத்திரங்களை உருவகப்படுத்தியிருக்கிறார்.
படம் பார்க்கும் வரை நான் இந்தப் படத்தின் இசையைக் கேட்டதில்லை என்று சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் நம்பத்தான் வேண்டும். இசையைப் பற்றி பெரிதும் மக்கள் பேசுவார்களாயிருக்கும், என்வரையில் இது ரஹ்மான் படம், கௌதம் சொதப்பிட்டார். ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பரவாயில்லை என்றாலும் கூட. கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு படத்தொகுப்பு. இளையராஜா இசை உறுத்துகிறது என் வரையில் சொல்ல முடியவில்லை இதுதான் இந்தப் படத்திற்கான பெஸ்ட் இசையா என்று. படத்தைப் பற்றிச் சொல்ல நிறைய இருந்தாலும் கதை வந்திடுமோ என்கிற பயத்தில் நழுவுகிறேன்.
இந்தப் படம் எத்தனைப் பேருக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை, எனக்குப் பிடித்திருக்கிறது. நான் விரும்பிய க்ளைமாக்ஸ் இல்லை என்றாலும் கூட க்ளைமாக்ஸ் பிடித்திருந்தது, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பாதிப்பாக இருக்கும். நல்ல படம் நிச்சயம் பாருங்க.
தமிழ்ப்படம் பார்த்த பிறகு எழுதியது
1) ஜீவாவை விட நானி நன்றாகச் செய்திருப்பதாகப்பட்டது.
2) தெலுங்கு எத்தனை எனக்குப் புரிந்ததுன்னு தெரியாவிட்டாலும், தெலுங்கு வசனம் நன்றாக இருப்பதாகப் பட்டது.
3) சமந்தாவின் வாய்ஸ் தெலுங்கில் நன்றாக இருந்ததாவும் தமிழில் இல்லாததைப் போலவும் இருந்தது, உடன்பார்த்த நபர் அவளே(சமந்தா) தான் பேசியிருக்காள் என்று சொன்னதை நான் நம்பலை - டப்பிங்காகயிருந்தால் தெலுங்கு நல்லாயிருந்தது.
4) தெலுங்கில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்த, நானி சொல்லும், நித்யா நித்யா நித்யா தமிழில் இல்லை. நானியின் உச்சரிப்புப் பிடித்திருந்தது பித்து கொள்ளச் செய்திருந்தது. நானி சமந்தாவிற்கு நல்ல கெமிஸ்ட்ரி படத்தில் இருந்தது. சத்தியமா அது ஜீவா சமந்தாவிற்கு இல்லை.
5) தெலுங்குப் படம் பார்க்கும் பொழுது எம்பிஏவிற்குப் பிறகு நானியின் கண்ணாடி கொஞ்சம் உறுத்தினாலும் தமிழ்ப் படம் பார்த்த பிறகு நிச்சயமா அதை ஜீவாவிற்கு சஜஸ்ட் செய்திருப்பேன்.
6) ஜீவா மஸ்குலரா இருப்பது படத்தில் உறுத்துது.
7) யுவன் சங்கர் ராஜா பாடும் பாடலைத் தவிர்த்து தமிழில் பாடல்கள் நல்லாவேயில்லை - இதைப் பத்தித் தானா இணையத்தில் இத்தனை உரையாடல்கள் நடந்தது.
8) சந்தானம் காமெடி அருமையாக இருந்தாலும் - இளையராஜாவின் இசையைப் போல் படத்தில் ஒட்டாமல் தனித்திருக்கிறது. இதற்கே கத்தும் தமிழ் சினிமா ரசிகர்கள் - சந்தானம் இல்லாமல் இருந்திருந்தால் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
9) சுத்திச் சுத்தி நான் பார்த்த படம் பார்த்த பெண்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.
10) யாரோ சொல்லியிருந்தது போல முத்தக் காட்சிகள் தெலுங்கில் நல்லாயிருந்தது - நானிக்கும் சமந்தாவுக்கும் ரியல் லைஃபில் லவ்ஸா - சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன்ஸ்களில் நானி அருமையாக கையாள்கிறார்.
நீதானே எந்தன் பொன் வசந்தம்
Mohandoss
Friday, December 14, 2012
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
ஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற...
-
"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?" இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய ...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
மனசுல பட்ட்தை எழுதியிருக்கிறீங்க! நல்லது பாஸ். பார்த்துடலாம். முதல் நிலையில் பாஸ் என புரிந்துகொள்கிறேன்.
ReplyDeleteஇசை இளையராஜா பாஸ். தெலுங்கு என்பதால் உங்களுக்கு புரியல என நினைக்கிறேன்.
குமரன்,
ReplyDeleteபின்னணி இசையில் மொழி எங்கேயிருந்து வருது! படம் பாருங்க நான் சொல்ல் வர்றது புரியும்.
ilayraja waste
ReplyDeletev t v மாதி தான் இருக்கும்னு நினைக்கிறேன்
ReplyDeleteஅனானி - இந்தப் படத்துக்கு மட்டுமே நான் சொன்னது. அதுவும் அவர் முயற்சி செய்திருப்பதும் தோற்றிருப்பதும் பார்க்க கஷ்டமாகயிருந்தது. இசை மட்டும் தனித்துத் தெரிகிறது :(
ReplyDeletePrem Kumar,
ஒரு மாதிரிக்கு ஆமாம், ஆனால் காம்ப்ளஸிட்டி வேற.
நீதானே எந்தன் பொன் வசந்தம் இன்றுதான் தமிழில் பார்த்தேன் படம் எனக்குப்பிடித்திருந்தது ஆனால் இளையராஜாவின் இசையால் தலைவலியுடன் வீடு சென்றதுமட்டும் உண்மை
ReplyDeleteஹிட்ஸ் வருகிறது என்பதற்காக அடிக்கடி எழுதி உங்கள் தரத்தை குறைத்துக் கொள்ளாதிர்கள். சுவாரஸ்யம் போய் விடும்.
ReplyDeleteதமிழ் மணமே, ஒரு மொக்கையான விஷயம். இதில் கட்டண சேவை வேறு!!! சீக்கிரம் மொக்கை பதிவர் ஆகி விடாதிர்கள். அபாய மணி!
ReplyDeleteஅனானிமஸ்,
ReplyDeleteகவனிக்கிறேன். கருத்தில் எடுத்துக் கொள்கிறேன்.