நிறைய படங்களைப் பார்க்கிறோம், சில தமிழ்ப் படங்கள் முதற்கொண்டு பல படங்களைப் பற்றி ஒரு இரண்டு வார்த்தையாவது எழுதிடுவோம் என்று நினைக்கிற படங்கள் நிறைய. ஆனால் கொஞ்சமே கொஞ்சமாவது எழுதுறதுக்கு பிரயோஜனமா விஷயத்தைச் சொல்லணும்னு நினைச்சதும் நான் எழுத நினைக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாய்ட்டே போகுது. சரி இந்தப் படத்திற்கு வருவோம், Pantaleón y las visitadoras.
எப்பொழுது முதல் முறை இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று நினைவில் இல்லை, சோமிதரன் உடைய பதிவொன்றில்(நிர்வாண ராணுவம் என்று நினைக்கிறேன்), கடைசியில் குறிப்பாகச் சொல்லும் பொழுது மகிந்தாவிற்கு, ராணுவத்தினரை குறை சொல்ல முடியாது. நீங்க அவர்களுடைய இந்த செக்ஸ் வெறியை தீர்ப்பதற்கு ஒரு வழி செய்யுங்கள் என்பதான ஒரு தீர்வை சொல்லியிருப்பார். அதே போல் பொடிச்சியின் சமீபகால பதிவொன்றும் கொஞ்ச நாள்களுக்கு முன்னர் வந்த இந்தப் படத்தை மீண்டும் தேடிப் பார்க்க வைத்தது.
படத்தின் கரு என்னவென்றால், இதுமாதிரி ஆண்குறிகளை கையில் பிடித்துக் கொண்டு அலையும் பெரு(Peru) நாட்டு ராணுவத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, அல்லது முடிந்த மட்டும் குறைக்க சிகரெட், தண்ணி, பொண்ணு இப்படி எந்த வித கெட்டப்பழக்கமும்(இது பட இயக்குநரின் கருத்து, இதில் என்னுடைய கருத்து வித்தியாசமாகக் கூட இருக்கக்கூடும் ;-)) இல்லாமல் இராணுவப் பயிற்சியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் ஒருவரிடம் ஒரு சீக்ரெட் மிஷன் ஒப்படைக்கப்படுகிறது.
சீக்ரெட் மிஷன் என்னவென்றால், பாலியல் தொழிலாளிகளை தேர்ந்தெடுத்து, இராணுவ வீரர்களுக்கு அவர்களுடைய பாலியல் தேவைகளை நிவர்த்தி செய்வது. இது தான் அவருடைய சீக்ரெட் மிஷன், சொல்லப்போனால் படத்தை டைரக்டர் செக்ஸுவல் காமெடியாகச் செய்திருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தின் தீவிரம் எனக்கு புரிந்துதான் இருந்தது. உலகம் முழுவதும் வரலாறு முழுக்கவும் இராணுவங்கள் செய்து வந்த விஷயம் தான் இந்தப் பெண்களை பாலியல் கொடுமைக்கும் உள்ளாக்கும் நிகழ்வு. இதற்கான தீர்வென்றில்லாமல், அப்படியாக இருக்க முடியுமோ என்று யோசிக்க வைத்தப் படம்.
ஆரம்பத்தில் ஒரு பழைய பாலியல் தொழிலாளி, தற்சமயம் பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுத்தி வருபவரிடம் வந்து இதுபோல் ஒரு விசிட்டர் சர்வீஸ் நடத்த வேண்டும் என்று பேச்சு கொடுக்கத் தொடங்குதில் சூடுபிடிக்கிறது படம். இந்த விஷயத்தை, ஒரு கார்ப்ரேட் கம்பெனியின் ஒழுங்குடன் அவர் நடத்த நினைப்பது, அதற்கான அச்சாரங்களைச் செய்வது, பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை டேட்டாக்களுடன் சீனியர் அபிஷியல்களுக்கு அனுப்புவது என டைரக்டர் தான் எடுக்க நினைத்த் விஷயத்தை மிகச் சரியாகச் செய்ததாகவே படுகிறது எனக்கு.
பின்னர் இத்தனை நல்லவராக இருக்கும் ஹீரோ, அந்த விசிட்டர் சர்வீஸில்(இராணுவ வீரர்களுக்கான ப்ராத்தல் சர்வீஸை அப்படித்தான் சொல்கிறார் ஹீரோ.) வரும் பெண்ணொருத்தியிடம் மயங்கி பின்னர் அவருடைய காதல், இதன் காரணமாக மனைவியுடன் பிணக்கு, இதை(இந்த விசிட்டர் சர்வீஸ், மற்றும் அவருடைய சீக்ரெட் லைப்) இரண்டையும் சொல்லி ப்ளாக்மெயில் செய்யும் லோக்கல் ரேடியோ அறிவிப்பாளர், என்று மசாலாத் தன்மை கொண்ட படம் தான் இதுவும்.
கடைசியில் ஹீரோவுடைய காதலி, ஒரு விபத்தில் - இராணுவத்திற்கு மட்டும் செய்யக்கூடாது நாங்களும் காடுகளில் வசிக்கிறேம் எங்களுக்கும் இந்த விசிட்டர் சர்வீஸ் வேண்டும் என விரும்பும் அதற்காக இராணுவ மேஜர் வரை பேசும் ஒரு லோக்கல் குருப், இந்த விசிட்டர் சர்வீஸ் மக்களை அவர்களுடைய தேவைகளுக்காக கட்டாயப்படுத்தும் ஒரு சூழ்நிலையில் நடக்கும் விபத்தில் - இறந்துவிடுகிறார்.
இந்தச் சமயத்தில் தான் ஹீரோ அந்த பாலியல் பெண்ணிற்கு இராணுவ மரியாதையுடனாக இறுதிமரியாதை தரப்போக அது இராணுவத்தில் பிரச்சனையைக் கிளப்பிவிடுகிறது. பின்னர் இதற்காக அவரை வேலையிலிருந்து தூக்கிவிட நினைக்கும் இராணுவத்திடம் ஹீரோ இல்லை தான் இராணுவத்தில் தான் இருக்க விரும்புவதாக உறுதியாகச் சொல்ல, குளிர்ப்பிரதேசத்திற்கு தூக்கியடிக்கப் படுகிறார். கடைசியில் அவர் இந்த முன்னால் இராணுவத்தினரின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்த பெண்களுக்கும் அவர்களுடைய தலைவிக்கும் கடிதம் எழுதுவதாய் படம் முடிவடைகிறது.
படத்தில் விசிட்டிங், ரெண்டரிங், ஆபீஸ் என்று கொஞ்சம் போல் ஹீரோ ஆரம்பிக்கும் பொது தொடங்கும் காமெடி, தலைவர் பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் அனுப்பும் பொழுதும் அதனுடன் அவர் தான் எதற்காக இந்த முடிவிற்கு வந்தார் என்றும் சொல்லும் பொழுதும் அளவாய் இருக்கிறது. இராணுவ வீரர்களின் மெண்ட்டாலிட்டியைக் கூட சொல்லியிருப்பார் இயக்குநர், கடைசியில் பிரச்சனை ஆன பிறகு அந்த பாலியல் தொழிலாளர்களின் தலைவி, ஹீரோவை, இராணுவ சேவையில் இருந்து பதவி விலகுமாறும், பின்னர் இப்பொழுது இராணுவத்தினருக்கு செய்ததைப் போலவே பாலியல் தொழிலை - கார்ப்பரேட் தொழில் போல செய்யலாம் என்றும், ஹீரோ தங்களுக்கு பாஸாகயிருக்க வேண்டும் என்றும் கேட்கும் பொழுது, ஹீரோ சொல்கிறார்.
எனக்கு நிச்சயம் பாஸ்கள் வேண்டும், அவர்கள் போடும் கட்டளையை நிறைவேற்றுபவனாகவே நான் பழகிவிட்டேன், என்னால் பாஸாகயிருக்க முடியாது என்று சொல்லும் பொழுது சிந்திக்க வைக்கிறார் இயக்குநர். இது அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பொருந்தும். இத்தனைக்கும் ஹீரோவிற்கு அற்புதமான மேனேஜ்மெண்ட் ஸ்கில்கள் இருக்கும். என்ன சொல்வது அருமையான படம், எத்தனை பேருக்கு இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. பெரு நாட்டின் படம், ஸ்பானிஷ் மொழி, சப்டைட்டில் உண்டு, கொஞ்சம் செக்ஸ் சீன்கள் உண்டு.(Obvious இல்லையா???)
ஹீரோயின் பற்றி
படம் பற்றி
இராணுவத்தினருக்கான பாலியல் சேவை
பூனைக்குட்டி
Thursday, December 13, 2012
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
ஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற...
-
"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?" இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய ...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
இந்த படத்தை நேற்று பார்த்தேன்.. செம காமெடி. அறிமுகப்படுத்தி எழுதியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteமற்ற பதிவுகளெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன்.. அப்பப்போ எனக்கு ஏதாவது தோணுச்சுன்னா மறுமொழிப் பொட்டியில் போடுறேன்.
அருமையான வலைப்பதிவு இது.. நன்றி.
நன்றிகள் சரவணன், படத்தைப் பார்த்துட்டு என் பதிவு வந்தப்ப இந்த லிங்கைப் பார்த்து பின்னூட்டம் போட்டீங்களோ...
ReplyDeleteநன்றி மோகன். இதுபோன்ற வேற்றுமொழி படங்களை அறிமுகப்படுத்தி தொலைத்தீர்கள் என்றால் அப்படியே நம்மூர் ஆட்கள் அடித்துவிடும் வாய்ப்புண்டு.
ReplyDeleteக்ரிஸ்டொபர் நோலனுக்கு தெரியாமல் மொமண்டோவை கஜனியாக்கி, ஆஹா மிக சிறந்த இயக்குனர் என்று சல்மான் பாலிவுட்டு வரை கொண்டுசென்ற கதையை நெனைச்சால் சிப்பு வருகிறது சிப்பு. மொமண்டோ தான் கஜனியின் மூலக்கதை என்று சல்மானுக்கும் பாலிவுட் காரவுகளுக்கு தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.
திருடுவதை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்வதை பற்றி என்ன நினைக்கிறாய் ?
:))
ReplyDelete@செந்தழல்
ReplyDeleteபார் யுவர் கைன்ட் இன்பர்மேசன்.. அது சல்மான் இல்லை அமீர்கான்
senthalal, avaru AAMIR ya- salman illa
ReplyDeletenalla kodukkaraangayya detailu
சல்மானோ அமீரோ, தமிழனுக்கு மும்மெய்த் கான், சனா கான் தவிற மற்ற எந்த எழவு கானாக இருந்தாலும், எல்லாமே ஒண்ணுதான்.
ReplyDeleteராணுவமே இல்லாத சமூகம் சாத்தியமே இல்லையா?
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/List_of_countries_without_armed_forces
ReplyDelete//ராணுவமே இல்லாத சமூகம் சாத்தியமே இல்லையா//
ReplyDeleteஇல்லீங்கோ
நம்ம ஊர்காரங்க இது மாதிரி படமெல்லாம் சுட மாட்டாங்களா?? சுட்டாலும் வானத்தை போல மாதிரியே எடுக்கிறாங்கயா..
ReplyDeleteவாழ்த்துக்களுடன்
www.narumugai.com
வலையுல ஆணாதிக்கவாதி யாருன்னு தேடிக்கிட்டு இருக்கீக அல்லாரும், வந்தாரய்யாயா வந்தாரய்யா மோகந்தாசு
ReplyDeleteவேல இல்லாத வெட்டிஆவிசருக இத்த யாராவது உள்குத்தோட குத்திகாட்டுவாக அதில அப்படியே கொஞ்சம் நனைஞ்சிட்டு (சிட்டு !) போகலாம்ன்னு வந்த மோகனா, நல்லாயிரு. இருப்ப நிருப்பீக்கனுமா இல்லியா அப்பாடா பின்னாடிநவீனத்துவமாவும் சொல்லியாச்சு பிதாமகனுக்க்கு
காளிகள் வந்து அப்படியே கும்மட்டும், அது நமக்கு சுகந்தானே
[[[சல்மானோ அமீரோ, தமிழனுக்கு மும்மெய்த் கான், சனா கான் தவிற மற்ற எந்த எழவு கானாக இருந்தாலும், எல்லாமே ஒண்ணுதான்.]]
ReplyDeleteஉண்மை தான்; இது தாண்டா தமிழன்...!
Dirty Dozen படத்தில் பெண்களை ஹெலிகாப்ட்டரில் கொண்டு வந்து இறக்குவார்கள்; எதுக்கு என்று தெரியவில்ல்லை!
நமது ராணுவத்திலும் காம்பை விட்டு வெளியில் போகும் பொது வெறும் கையுடன் அனுப்ப மாட்டார்கள்; பொட்டலத்தைக் கையில் கொடுத்து தான் அனுப்புவார்கள்...!
அது என்ன போட்ட்டலம்; ரூபாய்க்கு மூணு கொடுப்பாங்களே அந்த பொட்டலம.
நமது ராணுவத்திலும் ஆணாதிக்கம் அதிகம். ஆம்! காம்பை விட்டு வெளியில் செல்லும் woman soldiers-க்கு ஒரு பொட்டலமும் கொடுப்பதில்லை! ஆணுக்கு ஒரு நீதி; பெண்ணுக்கு ஒரு நீதி....!