தொடர்ச்சியாக இந்தப் படத்தின் ட்ரைலரை இந்த மாதம் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன். டாம் க்ரூஸிற்காக இந்தப் படத்தை நிச்சயம் பார்த்திருப்பேனாயிருக்கும் என்றாலும் கொஞ்சம் சுவாரசியத்தையும் ட்ரைலர் கொடுத்தது. பன்னிரெண்டு மணி ராவுக்கு இந்தப் படத்திற்குச் சென்றிருந்தேன்.
இடையில் பத்திரிக்கைகளில், லெட்டர்மேனின் லேட் நைட் ஷோவில் என இந்தப் படத்தின் கதையை எடுத்திருக்கும் புத்தகம் மொத்தம் 17 பாகம் என்று கேள்விப்பட்டேன், லெட்டர்மேனிடமும் டாம் இந்தப் படத்திற்கு கிடைக்கும் சக்ஸஸ் வைத்து இதைத் தொடர்வதாகச் சொல்லியிருந்தார். அப்படிப் பார்த்தால் நல்ல தொடக்கம் என்றே சொல்லவேண்டும்.
படத்தின் கதை ஆரம்பத்தில் இருந்தே ஊகிக்க முடிந்ததாய் இருந்தது, சில சீன்களைக் கூட - ஜெயிலில் டாம் ‘Cop’-ஐ நிறுத்தும் பொழுதே எனக்குத் தெரிந்தது துப்பாக்கியின் சீரியல் தான் சொல்லப்போகிறார் என்று, படத்தின் ஆரம்பக் கொலைகளின் பொழுதே ஊகிக்க முடிந்தது, ரான்டம் கொலைகளின் மத்தியில் பழிவாங்கும் உத்தியென்று, கறுப்பு காப், வெள்ளை அட்டர்னி என்பதில் நாம் ஸ்ட்ரீயோடைப்பாக(கறுப்பரை தவறாக காண்பிக்க மாட்டார்கள்) நினைப்போம் என்றும் அதற்கு மாறாக இருக்குமென்றும். இத்தனைக்கும் பிறகும் எனக்கு இந்தப் படம் பிடித்தேயிருந்தது. இரண்டு மணிநேர என்டர்டெய்னர் சின்னச்சின்ன ஜோக்ஸ் என கோர்த்திருந்தனர்.
17 புத்தகம் என்பதில் இருக்கும் விஷயம் ட்ரை லாஜியாக மூன்று பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று புரிகிறது, அப்படியே விட்டுச் செல்லும் புள்ளிகளும். ரொம்பவும் அதிகமாய் விஷயத்தைக் கொடுத்து கஷ்டப்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள், CSI போன்ற சீரியல்களில் இருக்கும் சுவாரசியத்தை விட கொஞ்சம் அதிகம் தான் இருக்கிறது என்றாலும், ஸ்டைலிஷான படமாய் எடுத்த விதத்தில் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது. எப்படியிருந்தாலும் இன்னும் இரண்டு பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல படமாய் கிரிப்பாய் எடுக்கலாம்.
கார் சேஸ் நன்றாக வந்துள்ளது, இப்பொழுது நான் ஓட்டிக்கொண்டிருக்கும் BMW சட்டென்று தரும் பவர், ஏற்கனவே கார்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கார்களின் மீதும் குறிப்பாய் muscle கார்கள் மீதும் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது Fast and Furious லிருந்து தொடங்கியது. படத்தில் டாம் ஓட்டும் ‘70 Chevelle SS’ கார் பார்த்து ஜொள்ளுவிட்டுக் கொண்டிருந்தேன். இது போன்ற படங்களில் கார் இருக்கும் என்பதைப் போல இன்னொன்றும் நிச்சயம் இருக்கும், அது cleavage காண்பிக்கும் ஹீரோயின் :) இந்தப் படத்திலும் உண்டு. பாண்ட் கேர்ள் - சொன்னால் கோவித்துக் கொள்வாரா கூடயிருக்கும் - ரொஸமொன்ட் பய்க். இப்பக் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார், வெறும் செஸ்க் சிம்பலாக மட்டும் இல்லாமல். சட்டென்று டாம் முத்தம் கொடுக்க வருவதாக நினைத்து பின்னர் வழியும் காட்சி ச்ச அக்மார்க் ரமணி சந்திரன். :)
என்னைக் கேட்டால் வெள்ளிக்கிழமை மாலை இரண்டு மணிநேரம் கழிக்க Jack Reacherஐ நிச்சயம் பார்ப்பேனாய்த்தான் இருக்கும். மிஸ் செய்துடாதீங்க என்றெல்லாம் சொல்லமாட்டேன், நேரம் இருந்து பணமும் இருந்தால் பாருங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்.
Jack Reacher - தொடக்கம்
Mohandoss
Friday, December 21, 2012
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
சிறு வயதிலேயே தோன்றிய ஆசை இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது. அது தமிழில் ஒரு வளைத்தலம் அமைக்க வேண்டுமென்பது. பல முறைகளiல் முயன்று இப்பொழுது...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
இந்தப்படம் Lee Child ன் One shot ஐ தழுவி எடுக்கப்பட்டது .கதைகளில் வரும் ஒரிஜினல் Reacherன் உருவ அமைப்பே இக்கதைகளின் அடிநாதம் . டாம், ரீச்சரின் மெண்டெல் ஸ்ட்ரெந்தின் மூலம் இதை பின்னுக்குத் தள்ளியிருப்பார் என நம்புகிறேன் .
ReplyDeleteஅனானிமஸ்,
ReplyDeleteஆமாம். இடைப்பட்ட நேரத்தில் படித்த பொழுது Jack Reacher ஆறரையடி உயரம் என்றும், எக்காரணம் கொண்டும் காரை உபயோகப்படுத்த மாட்டார் என்றும் பஸ்ஸில் தான் போய்வருவார் என்றும் படித்திருந்தேன்.
அதற்காக டாம் ஆறடி வளர முடியுமா? :) ஆனாலும் சமாளித்திருக்கிறார்.
நான் முதன் முதலில் படித்த ஆங்கில நாவலே one shot தான். படம் எனக்கு ஏமாற்றத்தையே தந்தது .James Barr ஐ காப்பாற்ற போராடும் சகோதரி , பெண்டகன் லாயர் , ரீச்சருக்கு உதவும் டி.வி. ஆன்க்கர் கதாபாத்திரங்களை காணவில்லை . The screen play didn't establish reason/at least cause behind Barr's defense. There is no suspense because Dist.Attorney and Zak's Russian Origin never elaborated.The climax was better in book. May be another 15 mins in screen play would have done better job. நேரம் இருந்தால் Lee Child's One Shot , Killing Floor படித்துப் பாருங்கள் (ஜஸ்ட் டைம் பாஸ் ஸ்டோரீஸ் )
ReplyDeleteதாஸ்