நண்பர்கள் சிலர் மீள்நட்சத்திரமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு போட்டிருந்தார்கள் என்று சென்ஷி சொல்லிக் கேள்விப்பட்டேன். முன்பே சொன்னது போல் இது தொடர்வதில் எனக்கு இருக்கும் பிரச்சனையே. இசை போட்ட பதிவை நான் ரீடரில் பார்ப்பதற்கு முன்பே சென்ஷி சொன்ன காரணத்தால் போய்ப் பார்த்தேன்.
நட்சத்திரமாக என்னை மறுமுறை தேர்ந்தெடுத்தற்குக் காரணம் தமிழ்மணம் தான் சொல்ல வேண்டும். ஆனால் என்பக்கத்தில் கிளப்பப்பட்டிருந்த அவதூறை மட்டும் இங்கே சரி செய்து கொள்கிறேன். தமிழ்மணம் நீங்கள் முன்னமே நட்சத்திரமாகியிருந்தீர்களா என்று கேட்டிருந்தார்கள் தான். அதற்கு பதிலாக நான் அனுப்பியதை மட்டும் இங்கே பிரசுரித்துக் கொள்கிறேன். இதற்கு தமிழ்மணம் அளித்த பதிலை நான் வெளிவிட முடியாது. அவர்கள் வேண்டுமானால் வெளிவிடலாம்.
அன்புள்ள தமிழ்மண நட்சத்திர நிர்வாகிக்கு,
நான் முன்னமே நட்சத்திரமாக இருந்திருக்கிறேன். இரண்டாம் முறை இருப்பதில் எனக்கெதுவும் வருத்தமில்லை என்பதை நாசூக்காக சொல்லிவிடுகிறேன், நீங்கள் குறிப்பிட்ட தேதி கூட பிரச்சனையில்லை. இனி உங்கள் விருப்பம்.
மோகன்தாஸ்
இதுதான் நான் அனுப்பிய பதில், நான் ஏன் சம்மதம் தெரிவித்தேன் என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது. இதை வைத்து பின்னூட்ட ஜல்லி அடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று மட்டும் "ரொம்ப நாள் கழிச்சு ரசித்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்".
நட்சத்திரக் கேள்விகள்
Mohandoss
Tuesday, June 16, 2009

Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் ...
-
"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?" இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய ...
அன்பு மோகன்தாஸ்,
ReplyDelete\\என்பக்கத்தில் கிளப்பப்பட்டிருந்த அவதூறை மட்டும் இங்கே சரி செய்து கொள்கிறேன்\\
வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்குங்களேன் என்ற ஆதங்கத்தில் தமிழ்மணத்தை நோக்கி கேட்கப்பட்ட கேள்விதான் இது. இனி பந்து தமிழ்மணம் பக்கம்.
ஆனாலும் உங்களையும் அண்ணாச்சியையும் நட்சத்திரமா மீள செய்ததுல இருக்குற நுண்ணரசியல் என்னவா இருக்கும் தலைவா :)))
ReplyDelete//http://priyamudanvasanth.blogspot.com/2009/06/blog-post_15.html//
ReplyDeleteஇங்கு தங்கள் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளுங்கள் சார்
//என்பக்கத்தில் கிளப்பப்பட்டிருந்த அவதூறை மட்டும் இங்கே சரி செய்து கொள்கிறேன்//
ReplyDeleteமோகன்!
முரளிகண்ணன் அவதூறு எதையும் கிளப்பியதாக தெரியவில்லை. அவர் எழுப்பியிருப்பது ஜனநாயக உரிமைக்குரல் என்பதாக நினைக்கிறேன் :-)
மற்றபடி, ஏற்கனவே நட்சத்திரமான என்னை மறுபடியும் தமிழ்மணம் கூப்பிட்டால் பயன்படுத்திக் கொள்ளவே நானும் நினைப்பேன்!
நட்சத்திரம் மீண்டும் மின்னட்டும் ;=)
ReplyDeleteகுறிப்பு: சௌந்தரசுகன் இலக்கிய இதழின் சில பக்கங்கள்... இப்போதைக்கு கவிதைகள்...
இங்கே
அன்புள்ள லக்கிலுக்,
ReplyDeleteஉங்கப் பெயரை எழுதுறதுன்னாலே இப்பல்லாம் கை காலெல்லாம் நடுங்குது. என்னான்னு தெரியலை.
நான் அவதூறுன்னு சொன்னது இதைத்தான்.
//நான் நட்சத்திரம் ஆனபின்னர் தற்போது மோகன்தாஸ் நட்சத்திரம் ஆகியிருக்கிறார். இந்தக் கேள்வியை நீங்கள் அவரிடம் கேட்கவில்லையா? இல்லை அவர் உங்களுக்கு தவறான தகவலை தந்தாரா?//
அதற்கான பதிலை மட்டும் தான் நான் தந்திருக்கிறேன்.