In சினிமா

அப்பாஸ் கியாரோஸ்டாமி என்னும் திரைக்காதலன்

அபூர்வமான ஒரு சமயம் ஒன்றில் நான் தேர்ந்தெடுத்த தொடர்ச்சியான நான்கு அப்பாஸ் கியாரோஸ்டாமியின்(Abbas Kiarostami) படங்கள், திரைப்படங்கள் பற்றி எனக்கிருந்த எண்ணங்களை வெகுவாக மாற்றியது. எதையெல்லாம் திரைப்படமாக எடுக்கலாம் எப்படியெல்லாம் திரைப்படங்கள் எடுக்க முடியும் என்பதைப் பற்றிய என் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாக்கியது அவரின் படங்கள்.



Ten, Close-up, The wind will carry us மற்றும் Where is my friends home படங்கள் தான் நான் பார்த்தவை. ஏற்கனவே Mohsen Makhmalbaf, Majid Majidi, Samira Makhmalbaf, Bahman Ghobadi என்று பார்த்துவிட்டு, குர்திஸ்தானெல்லாம் பக்கத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டிருந்தேன். சினிமா படம் எடுப்பதின் சிற்பிகள் ஈரானிய இயக்குநர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இவர்கள் படங்களில் எது முக்கியம் என்று நான் கருதுகிறேன் என்றால் அந்தப் படங்கள் வெளிப்படுத்தும் சாத்தியக்கூறுகள் தான். Ten போல் ஒரு படம் பார்த்தால் தான் இப்படியும் படமெடுக்க முடியும் என்ற போல என்ற எண்ணம் வருகிறது. எதையும் வலிந்து சொல்லாமல் அதுவாகச் சொல்லச் செய்வது ஈரானியப் படங்களின் மேல் எனக்கு இன்னமும் ஆர்வம் எழச் செய்த ஒரு விஷயம். அகிரா குரோசொவா சொன்ன "Words cannot describe my feelings about them(அப்பாஸின் படங்கள்)" தான் எனக்கும் தோன்றுகிறது. இந்தப் படங்களைப் பற்றி நாலு வரிகள் எழுதுவோம் என்று நினைக்கும் பொழுது.

பிறகென்ன எழுது வந்துக்கிட்டு என்று கேட்கலாம், ஆசைதான். வெளிப்படுத்திவிடமுடியாது ஏக்கங்களை வார்த்தைப் படுத்த முயற்சியாவது செய்யலாமே என்று தான். இன்னும் நாலு பேர் என்னால் இந்தப் படங்களைப் பார்ப்பார்களோ இல்லை தெரிந்து கொள்வார்களோவானால் அதைவிட நான் எதிர்பார்த்துவிடமுடியும் நான் எழுதும் எழுத்திலிருந்து.

Ten

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வண்டி ஓட்டும் ஒரு பெண் சந்திக்கும் பத்து உரையாடல்களை உள்ளடக்கியது இந்தப் படம். நானறிந்த வரையில் பெண்ணியம் பேசும் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இதைப் பார்க்கிறேன். உரையாடல்களை மட்டும் வைத்து இயக்குநர் சொல்ல வரும் விஷயத்தை ரசிகர்கள் மனதில் ஆழமாய்ப் பதிய வைக்கிறார். விவாகரத்து செய்துவிட்ட தன் கணவரிடமிருந்து மகனை வீட்டிற்கு அழைத்து வரும் பொழுது திரும்ப கொண்டு விடப்போகும் பொழுதும் அவர்கள் இருவரிடம் நடக்கும் உரையாடல் நிச்சயமாய் நாம் சினிமா ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே வராத அளவிற்கு வைத்திருக்கும். அந்த குட்டிப் பையனாகட்டும் உரையாடலின் பொழுது வண்டி ஓட்டிக் கொண்டு வரும் அம்மா மீது கோபப்படுவது சில சமயங்களில் விரக்தியடைவது காட்டுக் கூச்சல் போடுவது என தேர்ச்சியான நடிப்பு. அதே போல் வண்டி ஓட்டும் பெண்ணாக நடித்த Mania Akbari ஆகட்டும் எங்கோ ஒரு வண்டியில் அவர்களுக்கு தெரியாமல் வைத்துவிட்ட காமராவின் வழியாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வரும் வகையில் அத்தனை இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் தன் தங்கையுடனும், ஒரு செக்ஸ் வொர்க்கர் உடனும் மசூதிக்கு சென்று வரும் ஒரு பெண்ணுடனும் கொள்ளும் உரையாடல் ஈரான் நாட்டின் தற்சமய நிலையை அழகாக வெளிப்படுத்துகிறது. ஒரு சமகால வரலாற்றை அப்பாஸின் காமரா அழகாக படமாக்கிச் செல்கிறது. மொத்த படமுமே அந்த வண்டிக்குள்ளேயே வைத்து படமாக்கப்பட்டிருக்கிறது, நமக்கு ஒரு அலுப்பு வருவதில்லை ஏனென்றால் வண்டிக்கு வெளியில் மாறும் ஈரானின் நகர்ப்புறம் இரவு நேரம் என காமெரா தன் இன்னொரு பரிமாணத்தையும் அழுத்தமாக பதிவு செய்தபடியே நகர்கிறது.



Close-up

ஒரு உண்மைக்கதையை மய்யமாக்கி எடுக்கப்பட்ட திரைப்படம் இது, வறுமையில் வாடும் ஒரு இளைஞன் ஈரானின் இன்னொரு புகழ்பெற்ற இயக்குநரான Mohsen Makhmalbaf நான் தான் என்று கூறு ஒரு குடும்பத்தில் நுழைகிறான் இதனால் நடந்த விஷயங்களை அப்பாஸ் படமாக்க்யிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் உண்மையாக இருந்தவர்களையே வைத்து படமாக்கியிருக்கிறார். அந்தப் பையன் கெட்ட எண்ணம் எதுவும் இல்லாதவனாக அதே சமயம் தான் மிகவும் விரும்பும் இயக்குநராக இருக்கும் Makhmalbaf ஆக மாறக் கிடைக்கும் வாய்ப்பை உபயோகித்து அந்த ஐடெண்டிடி மீதான தன் காதலை இப்படி வெளிப்படுத்திவிடுகிறான் என்பது தொடர்ச்சியாக நடக்கும் விசாரணையின் பொழுது தெரிகிறது. கடைசியில் Makhmalbaf அந்தப் பையனைச் சந்தித்து ஒரு பூத்தொட்டியை அந்த பையன் ஏமாற்றிய குடும்பத்தாரின் வீட்டில் சென்று வைப்பதில் முடிகிறது படம். மனிதனின் ஐடெண்டிடியைப் பற்றி நிறைய விஷயங்களைப் பேசுகிறது இந்தப் படம், அதே போல் ஈரானின் சமகால இருப்பையும் கூட.



தொடரும் ------

Related Articles

4 comments:

  1. மஜித் படங்கள ரொம்ப விரும்பி தாத்தேன் ஆனா இவரோட படங்கள பாக்கமுடியல.காட்சிகள் ரொம்ப மெதுவா நகருதுங்க.நான் இவரோட இயக்குத்துல முழுசா பாத்த படம் Taste of cherry,இதுவும் படம் பூரா கார்லையே எடுத்திருப்பாரு படத்துல வர்ர பாத்திரங்களும் நடிக்குர மாதிரியே தெரியாது அவ்வளவு இயல்பா நடிச்சிருப்பாங்க.அத தொடர்ந்து Closeup பாத்தேன் பாதிவரைக்கும் தான் பாக்க முடிஞ்சிது அதுக்கப்புறம் இன்னும் பாக்கவே இல்லை.Wind will carry us தான் பாக்கணும்.

    ReplyDelete
  2. பகிர்விற்கு நன்றி மோகன் தாஸ்..

    ReplyDelete
  3. ஈரானிய படங்கள் மீது எனக்கும் நல்ல அபிமானக்கள் உண்டு. திரையை அலங்கரிக்க எந்தவித பகட்டு அபத்தங்களும் இன்றி வெறும் யதார்த்த அழகியலைக் கொண்டு படமாக்கும் நுட்பம் ஈரான் திரைப்படங்களில் உண்டு. மேலும் சமக்கால நடைமுறை வாழ்வையும் அதிகார பேரழிவையும் பல ஈரானிய படங்கள் தனது கதைக்களமாகக் கொண்டுள்ளன.

    நான் பார்த்தவரையில், ஓசாமா, சில்ட்ரன் ஓப் ஹேவன், போன்ற படங்கள் தனித்துவமானவை.

    கே.பாலமுருகன்
    மலேசியா

    ReplyDelete
  4. பகிர்விற்கு நன்றி.

    அருமை.

    ReplyDelete

Popular Posts