எல்லாப் படங்களும் எல்லோருக்குமல்ல என்பதை இன்னொரு முறை சொல்கிறது உத்தம வில்லன். மணிரத்னம் எடுத்த குப்பை OKK போலில்லாமல் புதிய முயற்சி. அதற்குள்ளும் இணையத்தில் வெளியாகிவிட்டது உத்தம வில்லன். அமெரிக்காவில் நான் இருக்கும் ஊரில் இல்லாமல் ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கும் ஊரில் வெளியாகியிருந்தது. நான் எங்கே பார்த்தேன் என்பதற்குள் போகவிரும்பவில்லை. இணையம் கதறித்தீர்த்திருந்தது அதற்குள், பார்ப்பதா வேண்டாமா என்பதைப்பற்றிய கேள்விகள் இல்லை. கதை தெரிந்திருக்கும்...
In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை பெண்ணியம்
பெண்ணியமும் சில புடலங்காய்களும்
Posted on Saturday, May 02, 2015
ஆரம்பத்தில் இருந்தே திருமணத்தைப் பற்றியதும் பின்னர் வரப்போகும் பெண்ணைப் பற்றிய எண்ணங்களும் ஓடிக்கொண்டேயிருந்திருக்கின்றன. எப்படிப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தைப் பற்றி சிந்திக்காத நாட்களே, நான் வயசுக்கு வந்த பிறகு இருக்காதென்று நினைக்கின்றேன். அந்தப் பெண் அழகாய் இருக்கலாமா? என்னைவிட அதிகம் படித்தவளாய் இருக்கலாமா? ஆங்கில மீடியத்தில் படித்தவளாக இருக்கலாமா ஏனென்றால் நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். கட்டாயமாய் இந்த விஷயங்கள் எதிலுமே...
"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற? நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா?" வெடித்துச் சிதறிய வார்த்தைகளில் அகிலா கொஞ்சம் நொறுங்கியிருக்க வேண்டும். ஒரு மாதமாகவே ஜாலி மூடில் இருக்கும் பொழுதெல்லாம் "நீங்க குறட்டை விடுறீங்க" என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். நான் "நீ சும்மா புருடா விடுற, நானாவது குறட்டை விடுறதாவது. அதெல்லாம் எங்க பரம்பரைக்கே கிடையாது."...
In இந்து இப்படியும் ஒரு தொடர்கதை சிஐஏ சிறுகதை
இந்துயிஸமும் சில சிஐஏ உளவாளிகளும்
Posted on Thursday, April 30, 2015
ஒரு வருடம் போல் நாங்கள் பிரிந்திருந்துவிட்டு, காலம் எங்களைச் சேர்த்ததும் முதன் முதலில் இருவர் குடும்பத்தில் இருந்தும் எங்களுக்கு வந்த ஆலோசனை, 'குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்' என்பதுதான். இவ்வளவு அன்யோன்யமான தம்பதிகள் பிரிந்திருந்ததற்கான காரணங்களில் ஒன்றாக எங்கள் குடும்பங்கள் பார்த்தது நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாததைத்தான். ஆனாளப்பட்ட ஹாலிவுட் நட்சத்திரங்களே தங்கள் திருமண உறவு பிரிந்து போகாமல் இருக்க திருமணம் செய்து கொண்டு ஒன்றிரண்டு வருடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பொழுது,...
In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை
சிம்மேந்திரமத்யமமா? கீரவாணியா?
Posted on Wednesday, April 29, 2015
சொந்தக்காரர்கள் முதற்கொண்டு எங்களைப் பார்க்கிறவர்களெல்லாம் எப்பொழுதும் சொல்லும் ஒன்று உண்டு, எங்கள் இருவருக்கும் சரியான ஜோடிப் பொருத்தம் என்று. ஆனால் எங்கள் இரண்டு பேருக்கும் எல்லா விஷயத்திலும் எதிர் எதிர் கருத்துக்கள் தான், இருவருடைய அணுகுமுறையும் முற்றிலும் வேறுவேறாய் இருக்கும். நான் அகிலாவை பொண் பார்க்கப் போயிருந்த பொழுதில் நடந்தது இன்றைக்கு நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கத் தூண்டும் ஒரு நிகழ்ச்சி. அம்மா 'அகிலான்னு ஒரு பிராமணப்...
"தேவிடியாத்தனம் பண்றவங்களுக்குத்தான் இப்பல்லாம் மதிப்பு என்ன?" அம்மா என்னிடம் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி கேட்கிறார் என்பது புரிவதுபோல் இருந்தாலும் சின்னப்பிள்ளையை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதையெதை பேசுவதென்பதை மறந்தா போய்விட்டார் என நினைத்து கோபம் தான் வந்தது. "அம்மா என்ன இது பவானி இருக்குறப்பவே இப்படியெல்லாம் பேச ஆரம்பிக்கிற, வயசாக ஆக உனக்கு புத்தி பேதலிச்சுக்கிட்டே வருதுன்னு நினைக்கிறேன்." அம்மாவிடம் கத்திவிட்டு, பவானியிடம், "டேய் உள்ளப்போய்...
சிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் பற்றிய எண்ணம் தோன்றி மறைந்தது. என் மூளையின் நரம்புகள் கொஞ்சம் மாற்றி இணைக்கப்பட்டிருக்கிறதா தெரியாது, என்னால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இருவேறு விஷயங்களை இணைக்க முடிந்திருக்கிறது. அன்றைக்கும் அப்படித்தான், ஆண்டாளையும் எமினெமையும் இணைத்தது மனது. எல்லாவற்றையும் மீறி ஒரு அதீத அன்பென்றால் தமிழ்க்கவிதைகளில் ஆண்டாள்...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
It was late 2010, Chennai drowning in 2G rumors and the sticky heat of a city faking it wasn’t falling apart. I’d been plotting this night f...
-
பெங்களூர் வலைபதிவர் சந்திப்பைப் பற்றி ராம் எழுதியதுமே அங்கே போவதென்பது முடிவாகியிருந்தது. ஆசீப் அண்ணாச்சி அதற்கு ஒரு வாரம் முன்பு தமிழகம் வர...
-
ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் - மிகவும் மனநிறைவைத் தந்த சந்திப்பு. ஆர்கனைஸ் செய்தவர்களுக்கு நன்றிகள்.