வாங்க சார்! நீங்களே சொல்லுங்க சார், இவ பண்ணுறது சரியான்னு. யாரப்பத்தி பேசுறேன்னு கேக்குறீங்களா? இவதான் சார் கார்ல, என் பக்கத்தில் உட்கார்ந்து வர்றாலே என் பொண்டாட்டி இவளைப் பத்தித்தான் சார் சொல்றேன். கல்யாணம் ஆகி ஒரு ஆறுமாசம் ஆகியிருக்கும் சார். அப்பப்ப சண்டை போட்டுக்குவம்னாலும் இரண்டு நாளெல்லாம் பேசாமயிருந்ததில்லை. அப்படி நான் என்ன தப்பு பண்ணேன்னு கேட்டு சொல்லுங்க சார்.
ஒன்னுமில்ல சார், இரண்டுநாளைக்கு முன்னாடி நாங்க இரண்டுபேரும் வேலை பார்க்கிற அலுவலகத்தின் 10ம் ஆண்டுவிழா பார்ட்டி நடந்துது, எல்லாரும் தண்ணியடிச்சிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டிருந்தாங்க. நமக்கு தண்ணியடிக்கிற பழக்கமில்லாததால சும்மாத்தான் சார் உட்கார்ந்திருந்தேன், எம்மேல தப்பு கிடையாது, நான் இவக்கிட்ட அப்பவே கேட்டேன் நாம இரண்டுபேரும் சேர்ந்து டான்ஸ் ஆடலாமான்னு, முடியாதுன்னுட்டா சார் இவ. பரவாயில்லை தமிழ்நாட்டுல படிச்ச பொண்ணாச்சே வெக்கப்படுவாள்னு நானும் சும்மா விட்டுட்டேன்.
அப்ப அங்க ஏற்கனவே தண்ணியடிச்சிட்டு ஆடிக்கிட்டிருந்த ஒரு பொண்ணு, எனக்கு கீழ வேலைசெய்றவதான் சார், கொஞ்சம் அழகாயிருப்பா அது என்தப்பா. நேரா என்கிட்ட வந்து ஆடவரீங்களான்னு கேட்டா, நானும் இல்லை வொய்ப் இருக்காங்க முடியாதுன்னு தான் சார் சொன்னேன். இவத்தான் பெரிய இவமாதிரி போய்ட்டுவாங்கன்னு சொன்னா. சரி நானும் நம்ம பொண்டாட்டி ஆறுமாசத்திலேயே நம்மல நல்லா புரிஞ்சிக்கிட்டான்னு நினைச்சிக்கிட்டே ஆடப்போனேன் சார். அங்க புடிச்சதுசார் வேதாளம். அன்னிலேர்ந்து என்கிட்ட பேசுறதில்லை. நானா பேசினாலும் பதில் மட்டும் சொல்லிட்டு நகர்ந்துர்றா சார்.
ஆனா இன்னிக்கு காலைல பாருங்க சார், என்னோட பேவரைட் சட்டை சலவை பண்ணாம இருந்ததால் குளிச்சிட்டு சலவை பண்ணிக்கலாம்னு எடுத்துவச்சிட்டு குளிச்சிட்டு வந்துப்பார்த்தா, சட்டை கிட்ட இவ சுகிதாரும் உக்காந்திருக்கு. நான் அதையும் சலவை பண்ணித்தரணுமாம். தரதப்பத்தி ஒன்னுமில்லை சார், அவசர ஆத்திரத்துக்கு ஆறுமாசத்தில பலதடவை பண்ணிக் கொடுத்துருக்கேன். ஆனா எப்பவும் நான் சலவை பண்ணுரப்ப பின்னாடியே நிப்பா சார், அப்பப்ப ஒம்பிழுத்துக்கிட்டே, நிறைய ப்ளீஸ், நிறைய தாங்க்ஸ், சில சமயம் கிஸ்ஸெல்லாம் கூட கிடைக்கும் சார். ஆனா இன்னிக்கு பாருங்க ஆளையே பார்க்க முடியலை, நாம இதெல்லாம் கிடைக்கும்னா சார் சலவை பண்ணித்தர்றது. ஏதோ நம்ம பெண்டாட்டி உதவலாமேன்னு தானே. நானும் பண்ணி அங்கையே வைச்சிட்டேன் சார்.
இப்பக்கூட பாருங்க சார் நான் சலவை பண்ணின சுகியைத்தான் போட்டிருக்கா, என் பக்கத்திலேத்தான் உட்கார்ந்திருக்கா ஆனா அந்நியமா தெரியறா, சாதாரணமா எங்க வீட்டில் இருந்து ஒரு ஏழு கிலோமீட்டர் இருக்கும் சார் அலுவலகம். ஒழுங்கா காரை ஓட்டவிடமாட்டா சார் என்னை, ஈசிக்கிட்டே உக்காந்திருப்பா அப்பப்ப ஸ்டேரிங்கை திருப்புறேன்னு ஒரே வம்புவேற. இன்னிக்கு பாருங்க இன்னும் ஒரு இஞ்ச் தள்ளி உக்காந்தான்னா காரிலிருந்து கீழே விழுந்துடுவாங்க்ற மாதிரி உக்காந்திருக்கா, மனசு கஷ்டமாயிருக்கு சார். நான் இன்னிக்கு விட்டுக்கொடுத்திரலாம்னு இருக்கேன் சார். நைட்டு பேசாம நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுடலாம்னு இருக்கேன்.
ஆனா சார் எனக்கென்னமோ அந்தச் சம்பவத்துக்கு முன்னாடிலேர்ந்தே ஒரு வாரமாவே அவ கொஞ்சம் சரியாயில்லாதது மாதிரி தோணுச்சு, பின்னாடி அது பிரமைன்னு நானே முடிவு பண்ணிக்கிட்டேன். என்ன சார் பிரச்சனையிருக்க முடியும், சுத்தமா வரதட்சணையே வாங்கலை, நான் வேற இவளை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன், இவ சொன்னாங்கறதுக்காக, அமேரிக்க வேலையெல்லாம் விட்டுட்டு இவளுக்காகவும் இவங்க குடும்பத்துக்காகவும் தான் சார் இந்தியாவுல இருக்குறதே; ஒரே பெண்ணா விட்டுட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டா. எங்கம்மா ஆரம்பத்திலேயே நீ பெண்டாட்டி தாசன் ஆய்ட்ட உன்கிட்ட இனிமேல் இருக்க முடியாதுன்னு அவங்க கட்டுன வீட்டுக்கு போய்ட்டாங்க சார். இவ பேர்ல தப்பில்லை, அம்மாத்தான் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க.
சார் நீங்க அவள தப்பா நினைக்கக்கூடாது, நாங்க தனியா இருக்கணும்தான் அம்மா விட்டுட்டு போனாங்கன்னு நினைக்கிறேன். இப்பையும் தினமும் இரண்டு மணிநேரம் அங்கப்போய் அம்மா அப்பாவை பார்த்துட்டுத்தான் சார் வருவா. போனாப்போறா யார் சார் அவ எப்பிடிப்பாத்தாலும் எம்பெண்டாட்டிதானே. இன்னிக்கு நைட்டு ஒருவழியா சரி பண்ணிறணும் சார்.
------------------------------
ஆச்சு சார் ஒருவழியா பிரச்சனையை பேசித்தீத்தாச்சு சார். நான் ஏற்கனவே அன்னிக்கி நைட்டு அவக்கிட்ட பேசுறதா தீர்மானம் பண்ணியிருந்தனா, அம்மாவை பார்க்க போன இடத்திலேயே சாப்டுட்டோம் சார், அம்மாக்கிட்ட ரொம்பநேரம் என்னாத்தையோ தனியா பேசிக்கிட்டிருந்தா சார். ஒன்னுமே புரியலை, வீட்டுக்கு வந்ததுமே என்கிட்ட என்னவோ பேசணும்ங்கிற மாதிரியே நடந்துக்கிட்டிருந்தா ஆனா பேசலை சார், நைட் டிரெஸ் போட்டுக்கிட்டு கட்டிலில் நான் வந்து உட்கார்ந்ததுமே,
"நான் உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்" அப்படின்னு ஆரம்பிச்சா சார். நானும் அப்படியே, "நானும் தான்." சொல்லிட்டு மனசிலயிருந்ததையெல்லாம் கொட்டிட்டேன் சார்.
"இங்கப்பாரு அகிலா, நாம இரண்டு பேரும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம, உனக்கும் என்னைப்பத்தி நல்லாவேத்தெரியும். அன்னிக்கு கூட நீ சொன்னதாலத் தான் நான் அவகூட ஆடுனேன். நீ என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டேன்னு நினைச்சுத்தான் அப்பப்ப அவளைப் பத்தி உன்கிட்ட விவரிச்சது, அழகாயிருக்கா, நல்லா டான்ஸ் ஆடுவா அப்பிடினெல்லாம், அதுமட்டுமா சொன்னேன், கோடிங்கே அவளுக்கு எழுதத்தெரியலைன்னு கூடத்தான் உன்கிட்ட சொல்லியிருக்கேன். முன்னாடியே சொல்லிட்டேன் அன்னிக்கு தனீரூமில் அவள் கோடை ரிவ்யூ பண்ணுறேன்னு கூட்டிக்கிட்டு போனதுக்கான காரணத்தை. பாவம் இப்பத்தான் சேர்ந்திருக்கா நாலுபேருக்கு முன்னாடி திட்டினா கஷ்டமாயிருக்கும்னு தான் தனியா கூட்டிட்டு போய்த்திட்டினேன். அந்தச் சமயத்தில நீ வந்துட்டதால நான் பண்ணினது தப்பாயிடாது.
ஒன்னு நல்லாத்தெரிஞ்சிக்க, அவ ரம்பையா இருந்தாலும் ஊர்வசியாயிருந்தாலும் என் அகிலா முன்னாடி தூசிதான். உன்னைத்தவிர இன்னொரு பொண்ணை மனசாலக்கூட நினைக்கமாட்டேன். இவ்வளவுதான் இதுக்குமேலையும் நீ என்னை நம்பமாட்ட, பேசமாத்தான் இருப்பேன்னா அது உன் விருப்பம். ஆனா என்னால நான் சோகமா இல்லாத மாதிரியெல்லாம் நடிக்கமுடியாது. எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு, சொல்லிட்டேன்."
முடிச்சதும் சிரிக்கிறா சார், எனக்கு ஒன்னுமே புரியலை சார், ஆனா கண்ணுல மட்டும் ஒரு சோகம் இருந்துச்சு சார், மெதுவா பக்கத்தில் வந்து உட்கார்ந்தவள் என்கையை அவள் கையில் எடுத்து வைச்சிக்கிட்டா சார்.
"என்னங்கயிது சின்னப்புள்ளத்தனமா, இதையெல்லாம் நினைச்சு குழம்பிக்கிட்டிருந்தீங்களா, உங்களைப்பத்திதான் எனக்கு நல்லாவே தெரியுமே, அவக்கூட டான்ஸ் ஆடினதாப் பிரச்சனை. உண்மையிலே அன்னிக்கு நீங்க டான்ஸா ஆடினீங்க ஏதோ ஆடணுமேன்னு ஆடிக்கிட்டிருந்தீங்க, அதைப்பார்த்து எனக்குக்கூட சிரிப்பு வந்துச்சு. இன்னுமொன்னு கோட் ரிவ்யூ மேட்டரைப்பத்தியும் நான் தப்பா நினைக்கலை. உங்களைப்பத்தி தெரியாதா காதலிச்ச என்னையே தொடமாட்டீங்க, என்ன கொஞ்சம் ஜொள்ளுவுடுவீங்க போட்டோஜெனிக், சிற்பம்னு ஏதாவது சொல்லிக்கிட்டு, அவளே எலிக்குஞ்சு மாதிரியிருக்குறா, அவ எனக்கு போட்டியா, சான்ஸே கிடையாது."
சொன்னா நம்புங்க சார் எனக்கு யாரோ நெஞ்சுமுழுக்க பால் ஊத்துறமாதிரியிருந்துச்சு, சாதாரண சமயமாயிருந்தா ஜொள்ளுவுடுவீங்கன்னு சொன்னதுக்கே பிரச்சனை பண்ணியிருப்பேன். ஆனா இன்னிக்கு முடியுமா அதான்,
"அப்ப ஏண்டி இரண்டு நாளா முறைச்சிக்கிட்டே இருந்த, என்ன தான் பிரச்சனை." நான் கேட்டதும் கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக்கிட்டிருந்தா சார். அப்புறம்,
"நான் இனிமேல் வேலைக்கு போகலை, ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன்." சொன்னதும் உண்மையிலேயே ஒன்னும் புரியலை சார், அவ வேலைக்கு போகணும்னு அவசியமே கிடையாது, எங்க அம்மா அப்பா கவர்மெண்ட் வேலையில இருந்தவங்க, நானும் ஒரே பையன், காசுக்கு பிரச்சனையே கிடையாது, ஏன் இவங்க வீட்டிலையுமே நிறைய பணம்தான். இவத்தான் பிடிவாதமா வேலைக்கு போவேன்னு ஒத்தக்காலில் நின்னா, அதனாலத்தான் குழந்தை பெத்துக்கிறதக்கூட தள்ளிப்போட்டோம். இப்ப வந்து போகலைன்னு சொல்றா சார். நானும் ஏதாவது கேட்கணுமேன்னு,
"ஏன் போகலைங்கிற?" கேட்டேன் சார். இன்னும் நல்லா பக்கத்திலே உட்கார்ந்துக்கிட்டு,
"நான் சொல்லப்போற விஷயத்தை கேட்டு நீங்க டென்ஷன் ஆகக்கூடாது, நான் சொல்றத அமைதியா கேட்கணும்" அப்படீன்னு பெரிய பீடிகையெல்லாம் போட்டா சார், உண்மையிலேயே ஒன்னும் புரியலை சார்.
"இங்கப்பாருங்க அன்னிக்கு பார்டியில என்னோட பி.எம் இருக்கானே கிரிஷ் கிமானி, நல்லா தண்ணியடிச்சிட்டு ஆடிக்கிட்டிருந்தானா. கொஞ்சம் நேரம் கழிச்சு நீங்க பக்கத்தில் இல்லாததப்பார்த்துட்டு வந்து பக்கத்தில் உட்காரந்தவன், மேலக்கையை வச்சான், எனக்கு வந்ததே கோபம் பளீருன்னு கன்னத்தில் அறைஞ்சிட்டேன். உடனேயே அங்கேர்ந்து போய்ட்டான்." சொல்லிவிட்டு என்னையே பார்க்கிறா சார், பொய்சொல்லமாட்டா சார் அவ, நிச்சயமா கிரிஷ் அப்படி நடந்திருந்தா அறைஞ்சிருப்பாத்தான் அவ, எனக்கு நம்பிக்கையிருந்தது. ஆனால் கோபமும் வந்தது,
"அதை ஏண்டி அன்னைக்கே சொல்லலை." நான் கோபமாய்க் கேட்க,
"இல்லை நீங்க என்னைத் தப்பா புரிஞ்சிக்க மாட்டீங்கன்னு தெரியும் ஆனா கிரிஷ் விஷயத்தில என்ன முடிவு எடுப்பீங்கன்னு சுத்தமா தெரியலை அதான் சொல்லலை. கிரிஷ் ரொம்ப நல்லவன் அன்னிக்கு தண்ணியடிச்சிருந்ததால அப்படி நடந்துக்கிட்டான். அடுத்தநாளே என்கிட்ட மன்னிப்பும் கேட்டான். ப்ளீஸ்ங்க புரிஞ்சிக்கோங்க அவனைப்பார்த்தால் ரொம்ப பாவமாயிருக்கு, தப்பை உணர்ந்துட்டான். தினமும் என் மூஞ்சில முழிக்கிறதுக்கு வெட்கப்படுறான். பாவம், எனக்கு இந்த விஷயத்தை உங்கக்கிட்ட சொல்றதப்பத்தி பயமே கிடையாது நீங்க என்ன நம்புவீங்கன்னு தெரியும். ஆனால் கிரிஷ் விஷயமாத்தான் ஒரு முடிவு எடுக்கமுடியாம இருந்துச்சு, உங்கக்கிட்ட ஒரு விஷயத்தை மறைக்கிறோம்னதுமே என்னால சாதாரணமா பேசமுடியலை. உங்களை ஏமாத்துறதா ஒரு கில்டி ஃபீலிங்வேற. ப்ளீஸ்ங்க நான் இனிமேல் வேலைக்கு போகலை. அவன்கிட்ட ஒன்னும் கேட்காதீங்க, ரொம்ப பயப்படுறான் அவன், நீங்க ஒரு மெய்ல் அனுப்புனா, ஹாரஸ்மண்ட் கேஸ்ல அவனை நிச்சயமா தூக்கிறுவாங்க. ஆனா வேணாங்க." சொல்லிவிட்டு பாவமாய்ப் பார்த்தாள் சார்.
எனக்கு அவகிட்ட உண்மையிலேயே என்ன சொல்றதுன்னு தெரியலை, பாத்தீங்களா சார் எம்பொண்டாட்டி எவ்வளவு நல்லவன்னு, தண்ணியடிச்சிட்டு தப்பு பண்ணிட்டான் அதுக்காக வேலையை விட்டு தூக்கவைக்ணும் நினைக்காம, அவனுக்காக என்கிட்டயே பரிஞ்சு பேசறா பாருங்க. எனக்கு கோபமாத்தான் வருது கிரிஷ்மேல, ஆனா அகிலா சொல்ற மாதிரி ரொம்ப நல்லவன்தான் கிரிஷ் எனக்கும் தனிப்பட்ட முறையிலேக்கூட தெரியும் சார். போனாப்போகுது விட்டுடலாம் சார், மன்னிப்பது மனுஷப்பண்பு மறக்குறது தெய்வ குணம் சொல்லுவாங்க சார், நாம் மனுஷனாவாவது இருப்போம் சார்.
"அகிலா இதை நீ என்கிட்ட அப்பயே சொல்லியிருக்கலாம் பரவாயில்லை இப்பவாவது சொன்னியே, பிரச்சனையில்லை. இதுக்காகயெல்லாம் நீ வேலையை விடவேண்டாம் வேணும்னா நான் சொல்லி வேற ப்ரோஜக்ட்ல போட சொல்றேன். என்ன?" அப்பிடின்னு கேட்டேன் சார் நான், பின்ன என்ன சார் எவனோ ஒரு தண்ணியடிக்கிறவன் பண்ணினதுக்காக எம்பெண்டாட்டி வேலைக்கு போகாம இருக்கணுமா சார்.
ஆனா அவள், "இல்லைங்க கிரிஷ்னாலத்தான் வேலைக்கு போகமாட்டேன்னு சொல்றேன்னாலும் அவன் மட்டுமே காரணம் கிடையாதுங்க, எனக்கே வரவர இந்த வேலை போரடிக்குதுங்க, என்கூட படிச்சவளெல்லாம் இடுப்புல ஒன்னு வயித்துல ஒன்னுன்னு நிக்கிறப்ப எனக்கு மட்டும் தலையெழுத்தா, கண்ட கண்ட தண்ணியடிக்கிறவன் கிட்டல்லாம் நிக்கணும்னு. காசுக்கும் ஒன்னும் பிரச்சனைகிடையாது, பின்னாடி திரும்பவும் ஆசைப்பட்டேன்னா நீங்க மறுக்கவா போறீங்க, அப்ப போய்க்கிறேன். என்ன சொல்றீங்க."
இப்படி கேட்டா நான் என்ன சார் சொல்றது நீங்களே சொல்லுங்க, இல்லை அவக்கேட்டு நான் மறுக்கத்தான் முடியுமா ஊன்னு சொல்லிட்டேன் சார். நீங்களும் அந்த முடிவுக்குத்தானே வந்திருப்பீங்க. சரி சார் கதைகேட்டதுக்கு நன்றிசார் போய்ட்டு அப்புறம் வாங்க சார்.
நீங்களே சொல்லுங்க சார்!!!
பூனைக்குட்டி
Tuesday, July 11, 2017
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
நீங்களே சொல்லுங்க சார்..இவ்ளோ திறமையை வெச்சுக்கிட்டு இவர் ஏன் சார் அடிக்கடி ஜல்லியடிக்க போறார்?
ReplyDeleteநல்லா இருக்கு மோகன்தாஸ்...கதை சொன்ன முறை
பரவாயில்லை சார், நல்லாதான் இருக்கு! ஆமா, ஊடல் கதைகளா எழுதுறீங்களே, கற்பனை வேற இல்லங்கிறீங்க. ஏதும் டாவு வுட்டுட்டு இருக்கீங்களா?
ReplyDeleteயோவ் தாஸு.. கதை கலக்கலா இருக்க்ய்யா.. இருந்தாலும் கற்பனையா இல்ல நிஜமான்னு சந்தேகமாத்தான் இருக்கு.. எதா இருந்தாலும் நல்லா விறுவிறுப்பாதான்யா எழுதுறீங்க.. தொடர்ந்து கலக்குங்க :-)
ReplyDelete****
Hacking பதிவுக்கு பின்னூட்டம்:
யோவ் சும்மா வரலாறு எழுதுனோமா, கதை எழுதுனோமான்னு இல்லாம எதுக்குய்யா இந்த வம்பு.. வம்பை விலைகுடுத்து வாங்காதய்யா.. சுவாரஸ்யமாக இருக்க வாய்ப்பிருந்தாலும் சட்ட சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதுன்னு நினைக்கிறேன்...
முத்து சார், புரியலைங்கோ உண்மையிலேயே, நான் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பத்தியும், கிரிப்டோகிராபி பத்தியும் தான் ஜல்லியடித்தேன் அதில் என்ன தவறிருக்கிறதுன்னு தெரியலை சார். ஜல்லியடிப்பதற்கு நல்ல அர்த்தம் உண்டு சார், மரவண்டு கணேஷ்ஷை கேளுங்கள் வேண்டுமானால். ஏதோ என்னால் முடிந்த intro வைக்கொடுக்கிறேன் சார். உங்கள் கதைபற்றிய விமரிசனத்திற்கு நன்றி.
ReplyDeleteவெளிக்கண்ட நாதரே, தவறாக புரிந்து கொண்டீர்கள், நான் எழுதும் கதை அனைத்தும் கற்பனையே. எங்கே கற்பனையில்லைன்னு சொன்னேன் தெரியலை. சார் எனக்கும் டாவடிக்கிறதுக்கும் ரொம்பத்தூரம் சார். பரவாயில்லைன்னு சொன்னீங்க பாருங்க உண்மையிலேயே சந்தோஷம் சார். :-)
ReplyDeleteசோம்பேறிப்பையன் சார் நன்றிங்கோ, ஏதோ என்னால் முடிந்தது. கதை கற்பனையே. இவ்வளவு எதிர்ப்பு இருக்கும்னு நினைக்கலை சார். பல காரணங்களால் நானும் எழுதலாமான்னு யோசித்துக்கொண்டுதான் சார் இருக்கிறேன்.
ReplyDeleteஎப்படிய்யா... ஒமக்கு எல்லாம் நல்லா வருது... பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்லாருக்கா அன்பு நன்றிங்க.
ReplyDeleteதாஸ், கதை சூப்பரோ சூப்பர்!அந்த "hacking" மேட்டரையும் போட்டீங்கனா புண்ணியமாப் போகும்!
ReplyDelete//அண்ணாத்த என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பீருவாரு//
ReplyDeleteநீங்களே சொல்லுங்க சார் இப்படி காசி சாரை வம்பிழுக்கலாமா... அவர் பாட்டுக்கு அவர் வேலையைப் பார்த்திட்டு இருக்கார்.
ஆனால் மோகன் என்னை நீங்க இத்தனை சார் போட்டு கூப்பிட்டிருக்க வேண்டாம். நான் உங்களை விட ரொம்ப சின்ன பையன் :-)
போட்டீக்கட கதை நல்லாயிருந்துதா, நன்றி. அதைப்பத்தி நான் இன்னும் தீர்மானிக்கலை. பார்ப்போம்.
ReplyDeleteகணேஷ் இப்படி போட்டுகுடுக்குறீங்க பார்த்தீங்களா!!!
மோகன்தாஸ், கதையின் நடை மிக அழகு. நல்ல எழுத்து கை வந்திருக்கிறது. நிறைய எழுதுங்கள்.
ReplyDeleteகதையின் முடிவு குறித்து...எனக்குக் கொஞ்சம் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், கதையின் நடைக்காக பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறேன். நிறைய எழுதுங்கள்.
ராகவன் என்ன சொல்லவரீங்க முடிவப்பத்தி, நீங்கள் நிச்சயமா சொல்லலாம். காசியப்பத்தி சொன்னதை சொல்றீங்கன்னா, அது சும்மா விளையாட்டுக்கு சொன்னது, கோச்சுக்காதீங்க. மற்றதைப்பத்தின்ன நிச்சயம் சொல்லுங்க தெரிஞ்சிக்க ஆர்வமாயிருக்கேன்.
ReplyDeleteஇல்லை இல்லை. காசியைப் பற்றி இல்லை. நான் சொல்ல வந்தது கதை சொல்ல வந்த மையக் கருத்தைப் பற்றி.
ReplyDeleteபெண்ணென்றால் பிள்ளை பெறத்தான் என்று வருகிறதே. அதைச் சொன்னேன்.
மற்றபடி உங்கள் எழுத்து நடை மிகவும் அருமை.
புதுப்பிரச்சனையை கிளப்புறீங்க சார். இருந்தாலும் உங்கள் கருத்தை ஒப்புக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் வேறுவிதமாக மாற்ற முயல்கிறேன்.
ReplyDeleteமையக்கருத்து, மனைவியை முழுமையாக நம்பும் கணவனைப்பற்றியதே ஒழிய குழந்தை பெறுவது கிடையாது.
நீங்களே சொல்லுங்க சார். இந்தக்கத ரொம்ப நல்லா இருக்குல்ல?
ReplyDeleteநீங்களே சொல்லுங்க சார். இந்த வாழ்க்கை ரொம்ப நல்ல இருக்கும்ல?
ஏன்னா ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது நம்பிக்கை; ஓர் ஆண் பெண்ணிடம் எதிர்பார்ப்பது பாதுகாப்பு. இரண்டும் கிடைக்கும் இதுபோன்ற வாழ்க்கை கண்டிப்பாக கல்யாணம் ஆன புதிதில்தான் கிடைத்திருக்கும், உங்கள் கதைப்படி ஆறுமாசம். நீங்களே சொல்லுங்க சார், சரிதானே?
அருமை. வாழ்த்துக்கள். நன்றி.
-ஞானசேகர்
உங்கள் கதைபற்றிய விமரிசனத்திற்கு நன்றி ஞானசேகர்.
ReplyDeleteகதை அருமை ... உண்மையாக இருந்ததாலும் !
ReplyDeleteஉங்கள் எழுத்து நடைக்கு ஒரு ஒ! போடாலாம் ! பாராட்டுக்கள்
மீள்பதிவுதானே ?
ReplyDeleteநல்ல நடை.. உங்க வாத்தியாரோட சாயல்..
ஆனா பெண்ணீயவாதிகளுக்கு பிடிக்காதே :-)))
// போய்ட்டு அப்புறம் வாங்க சார்.//
ReplyDeleteநல்லாருக்கு மோகன் சார்.
அடடே இன்னும் அகிலா படம் தான் ஓடுதா!!!!! கதை வழமை போல் நல்ல நடை, உங்களையும் அகிலாவையும் பக்கத்துலே இருந்து பார்த்தாச்சு. :)
ReplyDelete(என்னடா வழமை பழமைன்னு வருதேன்னு யோசிச்சீங்கன்னா, சில பல வருடங்களுக்கு முன்னால் எந்நேரம் ப்லாக்கர்ல இருந்தப்போ அகிலாவை நல்லா துரத்தி இருக்கேன்.. ஆனா ஏதாவது கமெண்ட் போட்டேனா இல்லையான்னு இப்போ தெரியலை.. கடைசில இப்போ உங்க ப்லாக்குக்கு எப்படி வந்தேன்னு தனியா ஒரு மொக்கை போஸ்டே போடலாம்!)
போடுங்களேன் பொற்கொடி, படிக்கத் தயாராய் இருக்கிறேன்.
ReplyDeleteசரி இதுல என்ன வெட்டியா வெயிட்டிங், இங்கயே சொல்லறேனே.. உங்க ப்லாக் 2006லயே ஃபாலோ பண்ணி இருந்தேன்.. அப்புறம் ஒரு 2008 போல ப்லாக்கர் பக்கம் வர்றது குறையவும், உங்க பக்கமும் வரலை. ஆடிக்கொரு தரம் வரும் போது பார்த்ததுல சில பெரிய தலைகள் ஃபீடர்ல வரும் போது ஏன் உங்க போஸ்ட் ஒண்ணும் வரலை, உங்களுக்கும் போர் அடிச்சுடுச்சு போலன்னு யோசிச்சுட்டு கிளம்பிடுவேன். நான் தான் ஃபாலோ பண்ணியிருந்தேனே அது என்னாச்சுன்னு பார்த்தா Mல அங்கயும் காணோம். அப்புறம் அப்பப்போ "mohandoss" "செப்புப்பட்டயம்" pune ஏதாவது term ஒண்ணு நினைவுக்கு வரும், ஆனாலும் சரியா கண்டுபிடிக்க முடியலை. எல்லாம் ஒருசேர நினைவு வராது, தனித்தனியா தான் தோணும்! ஹீரோயின் பொண்ணு ஒருத்தங்க வருவாங்களேன்னு ரூம் எல்லாம் போட்டு யோசிச்சா அது "சுமா"ன்னே தோணும்! (சுமா வெட்டிப்பயல் கதைல வந்த தெலுங்கு ஹிரோயின்.. இங்கயும் பாவா வருமா க்ராஸ் கனெக்ஸன்!) சுமா இல்லியேன்னு தலையை பிச்சுப்பேன். நேத்து உடம்பு சரியில்லன்னு தூங்கும் போது திடீர்னு முழிச்சா தோணினது "அகிலா". தாஸ் அகிலான்னா கரெக்டா வழி சொல்லிட்டாங்க!!! கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச அப்புறம் பார்த்தா, தாளிக்கும் ஓசைல உங்க கமெண்ட் பார்க்கறேன். அப்புறம் வேற 2-3 இடத்துல கூட உங்க கமெண்ட் பெப்பரப்பேன்னு சிரிக்குது. அவ்வளவு ஏன், இந்த ப்லாக்கே பார்த்துருக்கேன், ஆனா "செப்புப்பட்டயம்"னு இல்லாததால் வேற யாரோன்னு போயிருக்கேன்.. கடைசியா, search ரிசல்ட்ல என்னோட ப்லாக்கர் ப்ரொஃபைலே இருக்கவும், பார்த்தா நான் இன்னும் உங்களை ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கேன். ஆனா, உங்க ப்லாக் Mல இல்லை, மேலேயே Bல "being mohandoss"னு இருக்கு.
ReplyDeleteஇப்ப "நீங்களே சொல்லுங்க சார்!"
ReplyDeleteசரிதான். ஒரு நாள் சட்டென்று நான், செப்புப்பட்டயத்திலிருந்து, Being Mohandossஆக மாறிய பொழுது இப்படியெல்லாம் சிக்கல் வருமென்று நினைக்கவில்லை. :) Any way enjoy reading.
ReplyDelete