In

பிக் பாஸின் பாப்பார புத்தி

காயத்ரியின் புத்தியா, கமலஹாசனின் புத்தியா இல்லை ஒட்டுமொத்த பிக்பாஸின் புத்தியா என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது.

காயத்ரிதான் சேரிபுத்தி என்று சொன்னது, ஓவியாவைச் சொன்னதாக ப்ரோமோ மட்டும் காட்டியவர்கள், நிகழ்ச்சியின் பொழுது அந்த சம்பவத்தைக் காட்டவில்லை. ப்ரோமோவுக்கும் நிகழ்ச்சிக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். சொல்ல முடியாது, நிறைய நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் ப்ரோமோவில் காட்டியதில் பிக்பாஸின் புத்தி தெரிகிறது, அதற்காக தார்மீக மன்னிப்பு கேட்காத கமலஹாசனிடம் புத்தி தெரிகிறது. காயத்ரியைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை பாப்பார புத்தியின் மூட்டை இவதான். ஜூலியை இவள் ட்ரீட் செய்யும் விதத்தில் இவளின் சினிமா சீனியர் என்கிற அகம்பாவம் மட்டுமில்லாமல் ஜாதித்திமிரு தொடர்ந்து தெரிகிறது. வாழ்க்கை முழுதும் இப்படிப்பட்ட புத்தியுடனே இருந்து இறந்தும் போய்விடும் நபர்கள் போலத்தான் காயத்ரியும். ஒரே வித்தியாசம் இவள் பிக்பாஸில் பங்குபெறுவது. உங்களில் எத்தனை பேர் இப்படிப்பட்டவர்களை தனிப்பட்ட முறையில் அறிவீர்கள்.

நான் இன்னமும் காயத்ரியை சாக்லேட் மில்க்கிற்காக பொய் சொன்னாள் என்ற கேட்டகிரியில் வைக்கலை, அவள் வெளியில் வந்து எனக்கு கால்சியம் குறைவாக இருக்கிறது என்று சொன்ன பொழுது அதிர்ச்சியடைந்தேன் தான். ஆனால் கமல் சொன்னதும் செய்து காட்டியதும் உண்மையாகத்தான் இருப்பதாய் நினைக்கிறேன். அவள் வெளியில் வந்து சினேகனிடம் சொன்ன பொழுதும் அவள் பொய் சொல்கிறாள் என்று நினைக்கவில்லை, அவள் உடல்மொழி அதை வழிமொழியவில்லை. பாப்பான்னு டிவிப்பொட்டி நிகழ்ச்சியில் சொல்லிட்டாங்கன்னு பிஜேபி கர்ராபுர்ரான்னு கத்திக் கொண்டிருந்த சூழ்நிலையில் இவ சேரி புத்தின்னு சொன்னதுக்கான எதிர்வினை சரியா இருந்ததாத்தான் ஊகிக்கிறேன். ஆனால் விஜய்டிவியோ கமலஹாசனோ இதைச் சரியாகக் கையாளவில்லை.

ப்ரோமோவில் காட்டிவிட்டு ஏன் நிகழ்ச்சியில் காட்டவில்லை என்பதில் தான் பதில் இருக்கிறது. அவர்கள் அதைச் சொல்லப்போவதில்லை, நெவர்த்லெஸ் விஜய் டிவி ஒழுக்கமானவனுங்க இல்லை என்கிற எண்ணம் இப்பொழுது ஏற்பட்ட ஒன்றில்லை. அதனால் தான் இதை காயத்ரியை விடவும், கமலஹாசனைவிடவும் விஜய் டிவியைக் குற்றம் சொல்லவேண்டியிருக்கிறது. பிக்பாஸில் ஆயிரம் விஷயங்களை மறைக்கிறார்கள். கஞ்சா கருப்பு, பரணி பற்றி சொல்லிய விஷயம் எதையும் காட்டவில்லை. இது போல் நிறைய சொல்லலாம். இந்த சேரி புத்திக் கதையையும் ஏறக்கட்டியிருக்கலாம். தெரிந்தே தான் அவர்கள் அதை ப்ரோமோவில் ஒளிபரப்பியிருக்க வேண்டும், கன்டென்ட் கட் செய்யும் ஆள் இத்தனை ஏமாளி அவருக்கு சேரி புத்தியின் பின் இருக்கும் அரசியல் தெரியாது என்பதில்லை. நன்றாகத் தெரியும், இதன் காரணமாய் இணையம் அட் லீஸ்ட் பற்றி எரியும் என்று தெரியும். ஆனாலும் செய்ததன் பின்னால் இருக்கும் புத்தி, அரசியல் சார்ந்தது, பாப்பாரத்தனமானது.

காயத்ரியின் முகமுடி இதில் கிளிந்தது என்பதில் எந்த சந்தோஷமும் இல்லை. அவள் முகம் ஏற்கனவே கிழிந்து தான் தொங்கிக் கொண்டிருக்கிறது, இதில் சந்தோஷப்படும் நபர் காயத்ரியின் டிவர்ஸ்ட் கணவனாகயிருக்க முடியும். நமக்கில்லை ஆனால் இந்த நிகழ்ச்சி அவள் தற்பொழுது பயப்படுவதைப் போல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கக் கூடும். ஆனால் ஆணாதிக்க தமிழ் சினிமாவில் காயத்ரி ரகுராமிற்கான எதிர்காலமென்று என்ன இருக்கிறது. பெரிதாய். சின்னத்திரையில் நடனத்தை மதிப்பிட்டுக் கொண்டு இருக்கலாம். அதற்கும் அவள் விஜய்டிவிக்குத்தான் வந்தாக வேண்டும். சன்டிவிக்கு என்று ஒரு மரியாதை இன்னமும் இருப்பதாய் நினைக்கிறேன், இந்த பாப்பாரபுத்தி காயத்ரியை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதைத் தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம். பாப்பாரபுத்தி கொண்டு நிறைய பேர் இன்னமும் சன்டிவியில் இருக்கக்கூடும் ஆனால் இப்படி பிக்பாஸில் முகம் கிழிந்து நிற்கும் காயத்ரியை ஏற்கும் நிலைக்கு வரமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இன்று சோசியல் மீடியா இருக்கும் உச்சத்தில், காயத்ரி இன்னும் சிறிதுநாள் தலைமறைவாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.

சுஜாதா மேல் எத்தனை மதிப்பு வைத்திருந்தேன் என்று என்னைப் படித்துவரும் ஆட்களுக்குத் தெரியும், ஆனால் இன்று சுஜாதா என்று சொன்னால் மனதில் தோன்றும் படிமம், டாம்ப்ராஸுக்காக குரல் கொடுத்த பாப்பார சுஜாதா தான். அவர் எப்பொழுது அப்படிச் சொல்லவில்லை என்ற கேள்வி எழலாம், ஆனால் நான் அவரைப் படிக்க ஆரம்பித்தப் பிறகு அந்த பொதுவில் பாப்பார புத்தியை அவர் காட்டியதில்லை, எத்தனையோ பேர் என்னிடம் நான் சுஜாதாவைப் பற்றி பாராட்டிப் பேசும் பொழுது சொல்லியிருக்கிறார்கள். பாப்பாரபுத்தி கொண்டவர் என்று, ஆனால் டாம்ப்ராஸ் தான் அவரிடம் இருந்து என்னைக் காப்பாற்றியது. ஜெமோ, பாலகுமாரன், சுஜாதா என்று எல்லோரிடமும் அவர்களைப் படிக்கும் காலத்தில் ஒரு மயக்கநிலை, மாயக்கயிறைக் கழற்றிவிடும் ஒன்று எப்பொழுதும் கிடைத்தது. அது பதின்மத்தின் பிரச்சனை இருபதுகளின் பிரச்சனை இப்பொழுது அந்த மயக்கநிலை பெரும்பாலும் உருவாவதில்லை. எப்படியும் ஏதோ ஒரு குறை இருக்கும் என்று தோன்றத்தொடங்கி விடுகிறது. தராசுத்தட்டு ஒன்றுடன் தான் எவரையும் அணுக முடிகிறது. காலாம் விந்தையானது. கொடூரமானது. எவரையும் நம்பாத மனம் அல்ல பிரச்சனை ஓவியா போன்று உற்சாகம் இல்லாதது தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். அந்தப் பெண் இந்த நிலைக்கு வரை என்ன நடந்திருக்கும் என்றே யோசிக்கிறேன். அவள் அம்மாவைப் பற்றி கேன்சர் பற்றி கேள்விப்படுகிறேன், மரணம் தான் எத்தனை எத்தனை தத்துவ விசாரத்தைக் கொடுக்கக் கூடும்.

நான் ஜூலிக்கு இந்த விசாலமான மனம் இருக்கக்கூடும் என்று ஊகித்தேன், ஆனால் இப்பொழுது நடந்து கொள்ளும் விதம்,  அவள் வயது சம்மந்தப்பட்ட ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்று இப்பொழுது நினைக்கிறேன்,  இல்லாவிட்டாலும் கூட இத்தனை புகழுக்காக தன் மீது மண்ணை வாறித்தூற்றிக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கலாம். அதில் உண்மையும் இருக்கிறது. யாருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும், அவள் இன்று பிக்பாஸில் இருந்து வெளியேறினால் அவளை யாருக்குத் தெரியும்.

ஆரவ் நமீதாவை ஐட்டம் கேர்ள் என்று சொன்னால் என்ன நினைப்பாள் என்று கேட்டது ஒரு சரியான கேள்வி, ஆனால் மகனே நீ நடந்து கொள்வதைப் பார்த்து தான் அவள் அப்படி அழைக்கிறாள். நமீதா, ஆரவ் தனக்கு கேர்ள் ப்ரண்டு இருப்பதை காயத்ரியிடன் சொல்லும் பொழுது கேட்டுவிட்டு பின்னர் அவன் ஜூலியுடனும் ஓவியாவுடனும் பழகியதை வைத்துச் சொல்கிறாள். ஆனால் நமீதா இப்பொழுது இறங்கியிருக்கும் இந்த ஆன்மீகப் பயணம் ஏற்கனவே பலர் முயன்றது தான். ரஜினிகாந்த், பாலகுமாரன் பின்னர் தற்காலங்களில் சிம்பு என்று ஐட்டம் பாய் இமேஜில் இருந்து யோக்கியன் இமேஜிற்கு மாறி உத்தி எல்லோரும் பார்த்தது தான். ஆனால் அவள் நினைத்த அந்த இமேஜை கமலஹாசன் அவள் பிக் பாஸ் வீட்டுக்குச் செல்லும் முன்பே உடைத்தது தான் கொடூரம்.

சிநேகன் அவன் அளவிற்கு நியாயமாக நடந்து கொள்கிறானா என்றால் அதுவும் இல்லை, அயோக்கியன். ஓவியாவை, ஜூலியைக் கட்டிப்பிடிக்கிறேன் பேர்வழி என்று அவன் நடந்து கொள்வது பிரச்சனையில்லை. அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு ஹக் செய்கிறான் அயோக்கியப்பயல் என்று சொல்வது நியாயமாகாது, ஆனால் அவன் ஒரு ஆண் ஜூலி போல் நடந்து கொள்கிறான் என்பதுதான் பிரச்சனை. பரணியை இவன் நடத்திய விதம் அநாகரீகமானது, ஏன் ஓவியாவைத் தவிர எல்லோரும் பரணியை நடத்திய விதம் அசிங்கமானது. கமலஹாசனின் பரணி பேட்டி இதை எந்த விதத்திலும் குறைத்ததாய் நான் நினைக்கவில்லை. ஆனால் கஞ்சா கருப்பின் முகம் இன்னும் பலருக்கு தெரிந்திருக்கும். சமுத்திரகனியாவது பாலாவது எதுவும் சொல்வார்கள் என்று இன்னமும் மண்டுகம் போல் நினைத்திருக்கிறேன்.

கணேஷை இந்த முறை ஒழித்துக்கட்ட முடியாது, நமீதா தான் அவுட்டு எப்படியும். சாப்பாட்டுப் பிரச்சனையில் கணேஷ் எப்படி நடந்துக்குறார்னு விஜய் டிவி காட்டாமல் நமக்குப் புரியாது. அவர்கள் காட்டப்போவதில்லை. சாப்பாட்டுப் பிரச்சனைக்கு மக்கள் வெளியில் அனுப்ப மாட்டார்கள் என்றே ஊகிக்கிறேன். ரைசா முன்னமே சொன்னது போல் மூளையைக் கழட்டிவிட்டு வந்திருக்கும் மாடல், அவள் வாய்விட்டு எதுவும் சொல்லப்போவதில்லை. வையாபுரி நாமினேட் செய்யப்படும் அடுத்த முறை தப்ப முடியாது. ஆர்த்தியின் சுபாவம் அவர்கள் நாமினேட் செய்ததும் அப்படியே மாறியது, ஆனால் கடைசிவரை அவள் எதையுமே உணரலை, கத்துக்கலைங்கிறது இவளுக்கு மட்டும் இல்லை ஒட்டுமொத்த பிக்பாஸுக்கும் தான்.

சக்தி அவன் பெண்டாட்டியை ஆஸ்பத்திரியில் விட்டுட்டு பிரசவ காலத்தில் வீட்டுக்கு வந்தானாம். ச்சை. வாழ்க்கை அளிக்கும் மிகப்பெரிய பேறில் ஒன்று தன் குழந்தை இந்த உலகத்தைப் பார்ப்பதை நேரில் பார்த்து உணர்வது. என் மகன் பிறந்த பொழுது - இந்தியாவில் - நான் கேட்டும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அவனுக்கு இருக்கும் பணத்துக்கு ஒத்துக் கொண்டிருப்பார்கள் தானே. அதைக்கூட செய்யாத முழுமூடன்.

Related Articles

7 comments:

  1. இதில் ஜாதி எங்க வந்துச்சு லூசு

    ReplyDelete
  2. பிக்பாஸ்Tuesday, July 18, 2017

    ரொம்ப மொக்கையா இருக்கு.

    ReplyDelete


  3. கிட்டத்தட்ட​ 4 வருடங்களுக்கு முன் சென்னை திருவேற்காட்டில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள​ என் உறவினரின் Flat-க்கு சென்ற​ போது அதே அடுக்குமாடி குடியிருப்பில் இன்னொரு flat-ல் ஒவியா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தாயோடு வாடகைக்கு தங்கியிருந்தார்.

    அந்த​ அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் ஒவியா தன் தாயாரை கவனித்து கொள்ளும் விதத்தை பாராட்டினார்கள்.

    மருத்துவச்சிகிச்சைக்கு தன் தாயாரை கூட்டிச் சென்றது, அவருக்கு பணிவிடை செய்தது, சிகிச்சைக்காக​ பணம் செலவு செய்தது என்று தன் தாயாருக்கு சகலவற்றையும் கவனித்து கொண்டது ஒவியா தான்.

    அம்மாவின் சிகிச்சைக்குத் தேவைக்கான பணத்துக்காக சினிமாவில் நடிக்க வந்தவர் சிகிச்சைக்கான பணத்தேவைக்காக​ அச்சமயங்களில் பல​​ படங்களில் முக்கியத்துவம் இல்லாத​ வேடங்களில் நடிக்கவும் செய்தார் (உதாரணம் : புலிவால் படம்).

    அவரது தாயார் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்திருப்பார் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அவரது தாயார் புற்றுநோயுடன் போராடி இறந்து விட்ட​ செய்தியை ஒவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் சொன்ன பிறகுதான் அறிந்தேன்.

    ReplyDelete
  4. அனானிகள் இருவருக்கும் சிவா உங்களுக்கும் நன்றிகள்.

    இதைப் பற்றி முன்னமே படித்தேன்.

    ReplyDelete
  5. சூப்பர் ஜி...அருமை எப்படி எப்படி கருத்துக்கள் கங்கையை போல் வருது
    அருமையாக களமாடி உள்ளூர்

    ReplyDelete
  6. நன்றி நாச்சியப்பன்.

    ReplyDelete
  7. ஒருவர் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே பார்ப்பன ஆதிக்க எண்ணம் இருக்கும் என்ற கட்டாயம் இல்லை.
    இதற்கு நல்ல உதாரணம் பாரதியார்.
    “பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே”
    என்று வெளுத்து வாங்கியவர்.
    அதேவேளையில் எல்லோருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லி தந்து பூணூல் அணுவித்தால் போதும் சாதீய ஏற்ற தாழ்வுகள் நீங்கிவிடும் என்ற பாரதியின் கூற்று, என்னளவில் நகைப்பிற்குரியது மற்றும் பிராமணீய ஆதிக்கத்திற்கு
    முட்டு கொடுப்பது
    இதையெல்லாம் குறிப்பிடும் இவ்வேளையில்,
    சுஜாதாவும், பாலகுமாரனும் நீங்கள் குறிப்பிட்டதை போல பிராமண ஆதிக்க சார்பு கொண்டவர்களே.
    ஜெயமோகன் பிராமண வகுப்பை சேர்ந்தவர் அல்ல.
    அதே நேரத்தில் அவரின் எழுத்து அரசியல் பிராமண மற்றும் ஹிந்துத்துவ அரசியலே.

    நாங்கள் பிராமணர்களை எதிர்க்கவில்லை பிரமணீயத்தைத்தான் எதிர்க்கிறோம் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கை விளக்கம்
    இங்கே நினைவுகூறத்தக்கது.

    ReplyDelete

Popular Posts