அகிலா வேகமா அவனருகில் வந்து லாப்டாப்பை மூடி கையில் எடுத்துக் கொண்டாள்.
"ஏய் என்னாடி பண்ணுற?" மெதுவாகக் கத்தினான்.
"ஒன்னும் பேசாதீங்கண்ணே, நேத்திக்கு அம்மாவும் அக்காவும் ஹாஸ்டலுக்கு வந்திருந்தாங்க. அம்மா ஒரே அழுகை, உங்களை அப்படிப் பார்க்கவே முடியலையாம். என்னைத்தான் திட்டினாங்க. நீங்கல்லாம் இருக்கீங்க தான. அவன் சாப்பிடுறதேயில்லை, கேட்கிறதில்லையான்னு?" இது கனிமொழி.
"உங்கக்கா என்கிட்ட வந்து, என்னாடி அவனை காதலிக்கிறேன்னு சொன்னே, அவனோ லூசு மாதிரி கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கிட்டிருக்கான். நீ அவனை தினமும் பார்க்கிறியான்னு கேட்கிறாங்க. நான் என்னத்த சொல்றது, நான் உங்களை பார்த்தே பத்து நாள் இருக்கும். சார்லஸ் கூட வண்டியில் வறீங்க, காலேஜ் முடிஞ்சதும் போயிர்றீங்க. இனிமே உங்க இரண்டு பேருக்கும் மதியம் சாப்பாடு எங்ககூடத்தான்." அவளிடம் கவலை தெரிந்தது.
"சொல்லியாச்சுல்ல, கொடு அதை. உங்ககூட சாப்பிட்டா தப்பா நினைக்காமாட்டாங்களா. லூசுங்களா"
"சரி எங்ககூட சாப்பிட வேண்டாம், நான் கேன்டீனில் சொல்லிடுறேன் சாப்பாட்டுக்கு நீங்க சாப்பிடலைன்னா வந்து லாப்டாப்பை தூக்கிட்டு போயிருவேன், சரி இப்ப போய் சாப்பிட்டு வந்து வாங்கிக்கங்க." லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டு போயேவிட்டாள்.
ஆனால் சிறிது நாள்களில் எங்களுக்கு எல்லா ரெக்வெய்ர்மண்டுகளும் வந்து சேர்ந்துவிட்டது, டிசைனும் முழுதாய் முடிந்திருந்தது. இனிமேல் வெறும் டெவலப்மெண்ட் மட்டும் தான் மீதமிருந்தது. அதனால் மூச்சு வாங்க முடிந்ததால் தினமும் அவனும் சார்லசும் சாப்பிடத்தொடங்கியிருந்தார்கள். செங்குட்டுவன் சார் கூப்பிடுறதா சொல்லி அட்டெண்டர் வந்து சொன்னார். போய்ப் பார்த்தேன்.
"மோகன், பார்ட் பெஸ்ட்க்கு அழைப்பு வந்தாச்சு, சேர்மன் உன்னைக் கூப்பிட்டு கொடுக்கச்சொன்னார். நான் அவரிடம் சொல்லிவிட்டேன் நீ கொஞ்சம் பிஸியா இருக்கன்னு இந்த வருஷம் வேறு யாரையாவது வைத்து செஞ்சுக்கலாம்ன்னு. ஆனால் அவருக்கு இதில கொஞ்சம் கோபம். அதனால நீ சின்னதா ஏதாச்சும் பண்ணிக் கொடுத்துறேன். ப்ரைஸ் கிடைக்கலன்னாலும் பரவாயில்லை. எப்பிடியிருந்தாலும் எலொக்கேஷன்ல நீதான் வருவ. என்ன?" அவரிடம் சுயபச்சாதாபம் மேலிட்டது.
"சார் பரவாயில்லை, நான் நாடகம் பண்ணித்தரேன், ஆனா நான் இந்த வருடம் பேசலை, வேறு யாரையாவது பேசவைக்கலாம்."
"யாராவது மனசில் இருக்காங்களா?" பெரும்பாலும் அவனை மறுக்கமாட்டார் என்பதால் கேட்டார்.
"அதெல்லாம் இல்லை சார், காம்படீஷன் நடத்துங்க, ஜெயிக்கிறவங்க கலந்துக்கிட்டும்." அகிலா மனதில் இருந்தாலும் இதுதான் சரிவரும் என்று சொல்லியிருந்தான்.
"அப்ப ஒரு ப்ரைஸ் போயிருச்சு, நாடகத்துக்கு கிடைக்குமா?" அவர் முகத்திலேயே அந்தக் கேள்வி இருந்தது.
"அப்படியெல்லாம் இல்லை சார், பேச்சுலயும் நான் வாங்க வைக்கிறேன். இந்த வருஷம் நாடகம் நமக்குத்தான், சார் அப்ப நான் ஆரம்பிக்கிறேன். ரிகர்ஸல் எப்ப பார்க்கிறீங்க."
"ரிகர்ஸல் எல்லாம் வேண்டாம், உனக்கு நம்பிக்கையிருந்தா போதும், பேச்சுப்போட்டிக்கு நீயே ஆளை செலக்ட் பண்ணிரு" தட்டிக்கழிக்கப் பார்த்தார்.
"இல்லை சார், அது நல்லாயிருக்காது. இந்த வாரம் சனிக்கிழமை நடத்தி நீங்களே செலக்ட் பண்ணிடுங்க" சொல்லிவிட்டு நேராக முதலாம் ஆண்டு வகுப்பிற்கு வந்தான். பேசுவேன்னு சொன்ன பையனை செங்குட்டுவனை பார்க்கச் சொல்லிவிட்டு கனிமொழியையும் அகிலாவையும் கேன்டீனுக்கு கூப்பிட்டான்.
"அகிலா, இந்த வருஷம் பேச்சுப்போட்டியில் நான் கலந்துக்கலைன்னு சொல்லிட்டேன். அதனால இந்த சனிக்கிழமை காலேஜில் ஒரு போட்டியிருக்கும். ஜெயிச்சா நீ கலந்துக்கலாம்"
"நான் கலந்துக்கலை..." தலையைக் குனிந்தபடியே சொன்னாள்.
"ஏன்?"
"கலந்துக்கலைன்னா கலந்துக்கலை, இதுக்கு என்ன காரணம் சொல்ல?" காரணம் அவள் முகத்தில் தெரிந்தது.
"உதை வாங்குவ, உனக்காகத்தான் நான் பேசலைன்னு சொன்னேன், இப்ப நீ இப்பிடி சொன்னாயெப்படி?" கேட்டேன்.
"தெரியும் எனக்கு, அதனாலத்தான் சொல்றேன் நீங்களே கலந்துக்கோங்க, நான் கலந்துக்கிட்டாலும் தோத்திடுவேன்." அவளிடம் பயம் தெரிந்தது.
"அப்பிடியெல்லாம் உன்ன தோக்க விடுவேனா, நான் எழுதி தரேன நீ போய் பேசு. அப்புறம் ஒரு நாடகம் நானும் கனிமொழியும் இன்னும் கொஞ்சம் பேர், தேவையிருந்தா நீயும். என்ன கனிமொழி?"
"அண்ணே, இதுக்கு முன்னாடி யாரும் வரமாட்டாங்க அதனால நான் நடிச்சேன். இப்பத்தான் இவ நடிப்பாளே இருந்தும் நான் நடிக்கணுமா?" கனிமொழி அகிலாவிற்காகப் பேசினாள்.
"இங்கபாரு இதுல கொஞ்சம் மெச்சூர்டான பெண்ணு வேணும், அதுக்கு நீதான் சரியாயிருப்ப. அதுவும் இல்லாம இந்த நாடகத்தில் பெண்களுக்கு காலம் காலமா நடக்கும் கொடுமைகளைக் காட்ட வேண்டியிருக்கும், சில இடத்தில் பெண் கேரக்டரை அடிக்கிற மாதிரி கதையிருக்கும்..." முடிக்காமல் நழுவினான்.
"அதானே பார்த்தேன். சோழியன் குடுமி சும்மா ஆடுமா. இவளை அடிக்க மாட்டீங்க, என்னை அடிப்பீங்க அப்பிடித்தானே?" கனிமொழி சீண்டினாள்.
"ஏம்மா ஏறுக்குமாறா பேசுனா எப்படி, பதில்தான் வேணும்னா, ஆமாம்னு வைச்சுக்கோயேன்." சொல்லி விட்டு அகிலாவைப் பார்த்தான், அவளுக்கு இதில் விருப்பம் இல்லையென்று தெரிந்தது. ஆனாலும் அவன் முடிவை மாற்றுவதாக இல்லை. கடைசியில் நாடகத்திலும் அவள்தான் நடித்தாள்.
அடுத்த நாள், கனிமொழி என் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.
"என்னம்மா?"
"நான் நடிக்கலை அந்த நாடகத்தில்?"
"ஏன் என்னாச்சு?"
"நேத்திக்கு பூரா அகிலா மூஞ்சிய தூக்கிவச்சுகிட்டு இருந்தா, நான் அவளை டிஃபண்ட் பண்ணலையாம். நான் சொன்னா நீங்க கேப்பீங்களாம். ஆனா நான் சொல்லலைன்னு சொல்லிட்டு அதுக்கு பிறகு என்கூட பேசவேயில்லை. எங்க இரண்டுபேருக்கு இடையில் சண்டை மூட்டி விடாதீங்கண்ணே. அவளே நடிக்கட்டும்." புலம்பினாள்.
"அப்பிடியா, சரி அவளே நடிக்கட்டும். ஆனால் நான் கதையை மாத்திருறேன். சீதை, திரௌபதி, இவங்களை மாதிரி பொண்ணுங்களையெல்லாம் வித்தியாசமா காட்டி, பெண்ணுங்களை தெய்வமா பாக்காதீங்க, பெண்ணா பாருங்க அதுபோறும்னு சொல்லலாம்னு நினைச்சேன். இப்ப அதை மாத்திவிட்டு சுதந்திர போராட்டத்த வித்தியாசமா காட்டப்போறேன். நீ அவக்கிட்டையும் இதைச் சொல்லிறு."
கல்லூரியில் நடந்த பேச்சுப்போட்டியில் அவள் தான் ஜெயித்தாள். அவர்கள், குமரனையும், கப்பலோட்டிய தமிழனையும் வித்தியாசமாகக் காட்டி நாடகம் போட்டோம் - பக்கத்தில் கொடி பிடிக்கிற கதாப்பாத்திரம் அகிலாவுக்கு. அவளுக்கு முதலில் கோபம்தான். பின்னர் நடித்துக் கொடுத்தாள். அவளுக்கு பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசும், நாடகத்திற்கு அவர்களுக்கு முதல் பரிசும் கிடைத்தது. அந்தச் சமயத்தில் கொஞ்சம் அவளுடம் பழக வாய்ப்புக் கிடைத்தாலும் எப்பொழுதும் சுற்றி மூன்று நான்கு பேர் நின்று கொண்டே இருந்ததால் அவ்வளவு பர்ஸனலாய் பேசி முடிந்திருக்கவில்லை அவனுக்கு.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொள்வது சிரமமானது. மோகன் புரோஜக்டிலும் அவர்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான நேரம் அது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இருவரும் வருவார்கள். கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போய்விடுவார்கள். செமஸ்டர் பரிட்சை வந்தது, மிகவும் கஷ்டமான காலங்கள். ப்ராஜக்ட் முடியும் தருவாயில் இருந்தது. எக்ஸாமுக்குப் படிக்கவும் வேண்டும் ப்ராஜக்ட் வேலையும் செய்ய வேண்டும். எக்ஸாம் ஒருவழியாக முடிந்தது. ஒருநாள் கனிமொழியும், அகிலாவும் வந்தார்கள்.
"நாங்கள் ஊருக்குப் போகிறோம், நீங்க வரீங்களா?" என்று கேட்டாள் கனிமொழி. அகிலா முகத்தில் நான் வரமாட்டேன் என்று தெரிந்தாலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
"உங்களை மாதிரி வேலை வெட்டியில்லாதவனா நான், ஊர் சுத்துவதற்கு? எனக்கு ஆயிரம் வேலையிருக்கு. நீங்க போய்ட்டுவாங்க" சொன்னேன்.
"நீங்க வேலையைக் கட்டிக்கிட்டு அழுங்க, நாங்க போய்ட்டு வர்றோம்" - இருவரும் பழிப்பு வேறு காட்டிவிட்டுப் போனார்கள்.
பதினைந்து நாள் விடுமுறை, அவனுக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு. செதுக்கிச் செதுக்கி அவனும் சார்லசும் அந்த புரோஜக்டை முடித்தார்கள். நாள்களும் முடிந்திருந்தது. நாளை கல்லூரி தொடங்கும் நாள். சார்லஸ் வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். அவன் மேனுவல் டெஸ்டிங் மற்றும் சில டெஸ்டிங்க டூல் எல்லாம் வைத்து எல்லாம் ஒழுங்காப் போகுதான்னு பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது மணி காலை பதினொன்று இருக்கும். பசித்தது. எதாவது சாப்பிட்டுவிட்டு வரலாமேன்னு நினைத்து வெளியே கிளம்பினான். அகிலா வந்து கொண்டிருந்தாள், சுடிதார் அணிந்திருந்தாள் இப்பொழுதுகளில் முளைத்திருக்கும் மஞ்சள் ரோஜாவும் இருந்தது கண்களில் களைப்பு தெரிந்தது.
"என்னாடி ஊரெல்லாம் சுத்திட்டு வந்தாச்சா?"
"ம்ம்ம், முடிஞ்சிருச்சு, நீங்க சாப்பிட்டீங்களா?"
"அதுக்குத்தான் கிளம்பிட்டுருக்கேன்!"
"நான் நினைச்சேன், அதனாலத்தான் உங்களுக்கு சாப்பாடு வாங்கி வந்தேன், சாப்பிடுங்க. எனக்கு ரொம்பக் களைப்பா இருக்கு. சரி உங்களை பார்த்துட்டு ஹாஸ்டல் போகலாம்னு வந்தேன். ம்ஹூம் முடியலை. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். சாயந்திரமா எழுப்பிவிடுங்க. என்ன?"
"சரி தூங்கு, கனிமொழி எங்க?"
"நான் வீட்டில் இருந்து நேரா இங்க வந்திட்டேன். அக்கா வீட்டுக்கு போயிருக்கு; நாளைக்கு வரும். புரோஜக்ட் முடிஞ்சிருச்சா?"
"சூப்பரா முடிஞ்சிருச்சு, பார்க்கிறியா?"
"ஆமாம் அதைவிட்டா வேற வேலையில்லை பாருங்க, உங்களைமாதிரி," சொல்லிவிட்டுப் போய் கட்டிலில் படுத்துத் தூங்கத் தொடங்கினாள்.
அவன் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள டெஸ்டிங் பண்ணிக் கொண்டிருந்தான்.
"என்னங்க மணியென்ன, ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலிருக்கு?"
"மணி பத்தரை" சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்தான்.
"என்னங்க இது, பத்தரையா நான் எப்படி ஹாஸ்டல் போறது? நான் உங்களை எழுப்பிவிடச் சொன்னேன்ல?"
"அசந்து தூங்கிட்டிருந்த, அதான் எழுப்ப மனமே வரலை..."
அகிலா அன்று இரவு ஹாஸ்டல் போகவில்லை.
(தொடரும்...)
உங்க டேம்ப்லடே எனக்கு ரொம்போ புடுச்சு இருக்கு ...
ReplyDeleteஅப்புறம் இது மீள் பதிவு மாதிரி தெரிது சார் .
ஒவ்வொரு பாகம் படித்து முடிக்கும் போதும்,அடுத்த பாகம் எப்ப வரும் என்று மிகவும் ஆர்வமாக இருக்கிறது.பொதுவாக துப்பறியும் கதைகளில் இருக்கும் பரபரப்பை,உங்களால் காதல் கதையிலும் கொண்டு வர முடிந்திருக்கின்றது.
ReplyDeletemythees,
ReplyDeleteஆமாம் இல்லை உங்கள் கேள்விக்கான பதில். டெம்ப்ளேட் எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு ;)
மோகன்,
ReplyDeleteநன்றி தொடர்ந்து படிங்க.
Boss Superb express speed :) next please :)
ReplyDeleteகென்,
ReplyDeleteநன்றிகள். ;)
// அகிலா அன்று இரவு ஹாஸ்டல் போகவில்லை // இந்த வரியோட முடிச்சாலும் முடிச்சீங்க.. ஒருத்தர் பரபரப்பா இருக்குங்குறார்..இன்னொருத்தர் எக்ஸ்பிரஸ் ஸ்பீட்ல இருக்குங்குறார்.. எனக்கென்னமோ அவுங்க உங்க கிட்ட வேற வேற மாதிரி எதிர்பார்க்குராங்கனு நினைக்குறேன்!! ஹி ஹி..
ReplyDeleteஅப்புறம்.. template super ...
என்னால் முடிந்ததைச் செய்யக் காத்திருக்கிறேன் அருண்.
ReplyDeleteடெம்ப்ளேட் நல்லாயிருக்கா, எனக்கும் பிடித்திருந்தது