குளித்துவிட்டு வந்து பார்த்தால், அவன் லேப்டாப்பை மடியில் வைத்து என்னமோ பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவரை சுத்த சைவம் அந்த லாப்டாப். சொல்லப்போனால் அதுவரை அவன் அக்காவைக் கூட தொடவிட்டதில்லை, ஆனால் வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் நினைப்பதைப் போல் நடப்பதில்லை, இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவன் இவளைச் சந்தித்த நாளில், சத்தியமாய் நினைக்கவில்லை, ஒரு நாள் இவள் அவன் ரூமில் தனியாக அவன் லாப்டாப்பை மடியில் வைத்து பார்த்துக் கொண்டிப்பாள் என்று.
"என்னங்க இது, ஒரு கேம் கூட இல்லை, வெறும் சாப்டுவேரா இருக்கு" விரக்தியாகக் கேட்டாள்
"நான் விளையாட கம்ப்யூட்டர் வாங்கவில்லைன்னு நினைக்கிறேன், சரி சிலபஸ் இருக்கா. நாம வரிசையா பார்ப்போமா."
சொல்லப்போனால் அடுத்த ஐந்து மணிநேரம் அவளுக்கு சி லேங்குவேஜ் பற்றி அவள் தேர்வுக்கு தேவைப்படும் எல்லாமும் சொல்லிக் கொடுத்திருந்தான், அவளும் சும்மா சொல்லக்கூடாது ரொம்ப ஆர்வமாய் கற்றுக் கொண்டிருந்தாள். பாடங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டதும் அது மட்டுமல்லாமல் அவளுமாய் படிக்கத் துவங்கியிருந்ததும் அவள் புரிந்து கொண்ட வேகத்திலேயும் கேட்ட கேள்விகளிலும் அது தெரிந்தது. எங்கெல்லாம் உதாரணம் காட்ட முடியுமே அங்கெல்லாம் லேப்டாப்பில் உதாரணங்கள் எழுதிக்காட்டினான். அவனைப் பொறுத்தவரை கணிணி சம்பந்தப்பட்ட எந்தப் படிப்பும் ப்ராக்டிகலாக இருந்தால் தான் சுவைக்கும். கடைசியில் அவள் முகம் சுருங்குவது போல் இருந்தது உடனே,
"என்னா போர் அடிக்குதா?" அவள் ஆர்வம் மங்கி கண்கள் அலைபாய்ந்த பொழுது கேட்டான்.
"போர் எல்லாம் அடிக்கலை, பசிக்குது. நான் காலையில் இருந்து சாப்பிடலை சரி இங்க வந்தா உங்ககூட சாப்பிடலாம்னு பார்த்தா, எனக்கு சாப்பாடு போடாம சி சொல்லித்தந்து கொன்னுறுவீங்க போலிருக்கு, நல்லா சொன்னாரு வள்ளுவர், செவிக்குணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈய்யப்படும்னு. உங்கக்கூட வந்தா வயிற்றுக்கு உணவு கிடையாது போலிருக்கு, வெறும் செவிக்கு மட்டும் தானோ?" சிரித்தாள்.
"ஏய் சொல்லலாம்ல, சாரிம்மா! நானும் இன்னும் சாப்பிடலை. பசிக்கவேயில்லை, சரி உட்கார்ந்திரு, ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வர்றேன்." அவளை அங்கேயே உட்கார வைத்துவிட்டு அருகில் இருந்த கடையொன்றில் சாப்பாடு வாங்கிவந்தான். பொறுமையாக குறைந்த அளவே சாப்பிட்டாள், அவள் சாப்பிடுவதற்கும் அவள் உடல் எடைக்குமான கேள்வி இதனால் இல்லாமல் போனது.
நாங்கள் சாப்பிட்டு முடித்ததும், "சரி நான் வரலையின்னா, எப்ப சாப்பிடுவீங்க?"
"சில சமயம் சாப்பிடவேமாட்டேன், இராத்திரி எல்லாத்தையும் சேர்த்து ஒன்னா சாப்பிடுவேன். சரி படிப்போமா?"
"இல்ல தலைக்கு மேல ஒரே ப்ளென்சரா போய்க்கிட்டிருக்கு, வேற எதாச்சும் பேசுவோமே?"
"எதைப்பத்தி?"
"ஏன் வாழ்க்கையில 'சி'யையும், கம்ப்யூட்டரையும் தவிர வேறு ஒன்றும் இல்லையா?"
"சரி எதைப்பத்தி பேசலாம் நீயே சொல்லு?" சிரித்தபடியே கேட்டான்.
"வாழ்க்கையைப் பத்தி..." தெளிவாகச் சொன்னாள்.
"உனக்கு இன்னும் அந்த அளவுக்கு வயது வரலைன்னு நான் நினைக்கிறேன்." சீண்டினான்.
"இங்கப்பாருங்க, நான் ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது. வயசாகலையே தவிர எனக்கும் சில விஷயங்கள் தெரியும், எங்கம்மா இறந்தப்ப எனக்கு மூணுவயசு, அப்புறம் நானும் அப்பாவும் தான். நான் சமைக்க ஆரம்பிச்சப்ப வயசு எட்டு, அப்பாவை பார்க்க கஷ்டமா இருக்கும், ஆனா அவரு எனக்காகத்தான் வாழ்கிறார். அவருகிட்ட நான் இன்னிக்கு போய் நான் இப்பிடி மோகன்னு ஒரு பையனை காதலிக்கிறேன்னு சொன்னால். சத்தம் போடமாட்டார், உட்கார்ந்து யோசிப்பார். நான் செலக்ட் பண்ணியிருக்கேன்னா தப்பாயிருக்காதுன்னு நினைப்பார். உங்களைப் பத்தி விசாரிப்பார். பிடிச்சிருந்தா நிச்சயம் கல்யாணம் பண்ணிவைப்பார். எனக்கும் எங்கப்பாவுக்கும் ஈகோ பிராப்பளம் கிடையாது; நான் நல்ல பையனையே பார்த்திருந்தாலும், அவருக்கு தெரியாம பண்ணிட்டேன்னு எகிறி குதிக்க. உங்களமாதிரியே அவரும் ஒரு நல்ல மனிதர்."
"சரி உங்கப்பா நல்ல மனிதராகவே இருக்கட்டும், நான் நல்ல பையன்னு நீ எப்படி கணக்கு போடலாம். நான் பெண்ணுங்க கூட பேசறதில்லை என்பதால் நல்ல பையனாதான் இருப்பேன்னு நினைக்கிறியா?" அவன் கண்களில் விளையாட்டுத்தனம் அவளுக்கும் தெரிந்திருக்கும்.
கேட்டதும் சிரித்தாள் பிறகு,
"தனியா ஒரு ரூம், தன்னைக் காதலிக்கும் பதினெட்டு வயது, சுமாரான அழகுள்ள ஒரு பொண்ணு, ஆனா உங்களால ஐந்து மணிநேரம் வேறு எதையும் பத்தி யோசிக்காம, உங்க பார்வை கூட மாறாம, சி சொல்லித்தர முடியும்னா நீங்க நல்ல பையன்தான். அது மட்டுமில்லாம நீங்க சிகரெட் குடிக்க மாட்டீங்க, தண்ணியடிக்க மாட்டீங்க, இதுவே போதும். நான் இரண்டு வருஷம் பொறுத்துக்கூட என் காதலைச் சொல்லியிருப்பேன். ஆனா ஒன்னுமே தெரியாத இந்தப் புள்ளையை வேறு யாராவது, எதையாவது காட்டி மயக்கிட்டா, அதனாலத்தான் நான் அவ்வளவு சீக்கிரம் சொன்னது. நீங்கத்தான் இப்படி, உங்கக்கா எமகாதகி, நான் நினைச்சதை எவ்வளவு அழகா சொன்னாங்க தெரியுமா, 'இங்கப்பாரு அவன் உன்னை குழந்தைம்பான்; ஆனா அவன்தான் குழந்தை, கம்ப்யூட்டரையும், பேச்சுப்போட்டியையும் தவிர வேறு ஒன்னும் தெரியாது. உன்னைப் பார்த்தால் அவனுக்கு ஏத்த பெண்ணா இருக்கு, நான் அம்மாகிட்ட பேசுறேன். ஆண்டவன் தான் எங்க அப்பாகிட்ட பேசணும். அவனை பத்திரமா பார்த்துக்கோ' னு சொன்னாங்க அன்னிக்கே. நான் வேறு எதாவது சொல்லணுமா இதைப்பத்தி."
அவள் சொன்னதைப் பற்றி சிறிது நேரம் யோசித்திருப்பான், அவன் அக்கா அப்படிச் சொல்லியிருக்கக் கூடியவள் தான். அகிலாவை அவளுக்குப் பிடிக்கும் என்று அவனுக்குத் தெரிந்துதானிருந்தது ஆனால் இத்தனை தூரம் பிடித்திருக்கும் என்று நினைத்திருக்கவில்லை. அகிலாவைப் பற்றி அத்தனை தூரம் அவனுக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாததால் அவளுடைய முதிர்ச்சி தெரியாதது, அவனை அவ்வளவு சீக்கிரம் காதலிக்கத் தொடங்கியதால் அவன் அவளை வெறும் விடலையாகவே பார்த்தேன். ஆனால் அவள் அதற்குப் பின்னால் இருந்த காரணங்களை அடுக்கிய பொழுது அகிலா அப்படிச் செய்தது நியாயமாகவே பட்டதவனுக்கு. அவளைப் பற்றி இன்னமும் நிறைய தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான்.
"சரி முதல் நாள் நான் உன்னை அடிச்சப்ப நீ என்ன நினைச்ச?"
"உங்களுக்கு ஒன்னு தெரியுமா, பேச்சுப்போட்டியில் நீங்க ஆரம்பிச்ச தமிழ் வாழ்த்துப் பாட்டு, முடிச்சப்ப சொன்ன சிலவரிகள்னு எல்லாமே நான் வழக்கமா சொல்றது. எனக்கு ஆச்சர்யமாயிருந்தது, இதுல கூட ஒருத்தரோட ஒற்றுமையிருக்குமான்னு, ஆனா உங்களைப்பத்தி அன்னிக்கு சொன்னதுல கோபமாவீங்கன்னு நினைக்கலை. பேச்சுப்போட்டியில பேசுறவங்க பெரும்பாலும் இந்த மாதிரி எதிர்ப்புக்களைச் சந்திச்சிருப்பாங்க. ஒரு வேளை நான் - ஒரு பெண்ணு - உங்களை இப்படி சொன்னது தான் பிரச்சனைன்னு நினைச்சேன் அவ்வளவுதான்."
அவன் பேச்சை மாற்ற விரும்பினான், "சரி கனிமொழி இங்க வரவேண்டியது தானே, வேறு எதும் பிரச்சனையா?"
"அதெல்லாம் ஒன்னுமில்லை, நான்தான் வரவேண்டாம்னு சொன்னேன். அக்காவுக்கு கோபம், உங்ககிட்ட தனியா பேசணும்னு தான் முக்கியமா வந்தேன் பேசிட்டேன். உங்களுக்கு ஒன்னும் கோபம் இல்லையே?"
"கோபமெல்லாம் ஒன்னுமில்லை, வந்தவுடனேயே இதை நீ சொல்லியிருக்கலாம், அவளுக்கும் சேர்த்து சி சொல்லித் தந்திருப்பேன். அவளுக்குச் சொந்தமா இல்லைன்னா நீ என்னை நெருங்கியிருக்கவே முடியாது. அதுதான் உண்மை." அவன் நேர்மையாகச் சொன்னான்.
"நல்லாவே தெரியும். இதுதான் ஃபர்ஸ்ட் அண்டு லாஸ்ட், எனக்கு அக்கா முன்னாடி உங்ககிட்ட இப்பிடிப் பர்ஸனலாய்ப் பேசமுடியாது அதான். மத்தபடி அவங்களை தவிர்க்கணும்னுங்கிறது என்னோட எண்ணம் கிடையாது." அவள் கண்களில் உண்மை இருந்தது.
சிறிது நேரம் இருவரும் ஒன்றையும் பேசாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய தெளிவும் முதிர்ச்சியும் இயல்பான அழகும் அவளை நோக்கி அவனை இழுக்கவே செய்தன. அத்தனை தைரியமாய் அவளால் அவன் முன்னால் தனியாக இருக்க முடிந்தது ஆச்சர்யத்தைக் கிளப்பியது அவளை வம்பிழுக்க நினைத்தவனாய்.
"அது இருக்கட்டும், நான் படிச்ச காதல் கதைகளில் எல்லாம் முத்தம் இல்லாத கதையே கிடையாது. நீயோ காதல்ங்கற, காதலிங்கிற, ஆனா அந்த விஷயத்தை பத்தி சத்தமே இல்லை?"
"சரி ரூட் மாறுது, நானே நல்ல புள்ளையை கிளப்பி விட்டுட்டேன் போலிருக்கு, நான் கிளம்புறேன்." அவள் அழகாய்ச் சிரித்தாள்.
"இங்கப்பாருங்க இங்கே கிளம்பி வரும் பொழுது நான் இன்றைக்குப் பொழுது இப்படித்தான் போகும் என்று கற்பனை செய்திருக்கவில்லை என்னதான் நல்லவராயிருந்தாலும் 18 வயதுப் பெண்ணொருத்தி பக்கத்தில் இருந்தால் சபலம் கிளம்பும் என்று நினைத்தேன். நானே கூட உங்களிடம் 'நீங்க என்னை எதுவும் செய்யலை' என்று சொல்லாமல் இருந்திருந்தால் இந்த முத்தம் பற்றிய பேச்சைக் கூட நீங்க கிளப்பியிருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். நானாய்க் காதலித்து நானாய்ச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண்டு தனியாய் வந்து உங்களைச் சீண்டினேன். சொல்லப்போனால் முத்தமென்ன நீங்க கேட்டால் கொடுக்காமல் மறைத்து எடுத்துச் செல்ல என்னிடம் எதுவுமே இல்லை. புரிஞ்சிக்கோங்க, ஆனால் வேண்டாம் ப்ளீஸ் இன்றைக்கு ஒரு அற்புதமான நாள் என்னைப் பொறுத்தவரை அப்படியே இருந்துட்டுப் போகட்டும் தப்பா நினைக்காதீங்க. முத்தம் அதை மாத்திடும்னு நினைக்கலை ஆனால் வேண்டாமே." கெஞ்சினாள்.
அவன் பதில் எதுவும் சொல்லலை.
"நான் கிளம்புறேன்னு சொன்னேன், நீங்க பதில் சொல்லலைன்னா எனக்கு இதுதான் மனசிலே ஓடும். அதுனால ஏதாவது பேசுங்க."
விளையாட்டாய்த் தான் அவளிடம் முத்தம் கேட்டேன் அவளிடம் நான் மனமொன்றத் தொடங்கி நாட்களாகியிருக்காது. அவள் தருவாளா மாட்டாளா என்று நினைத்துக் கூட அப்படிக் கேட்கவில்லை. ஆனால் அவள் என்னை உயர்த்தி வைத்திருந்த இடம் கொஞ்சம் அதிகம் என்று மனதிற்குப்பட்டது.
சிரித்தபடியே, "சரி ஒழிஞ்சிப் போ. முத்தம் தான் கொடுக்கலை. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிட்டுப்போ."
"தன்யனானேன் பிரபு, கேளுங்க." என்றாள் மகிழ்ச்சியுடன்.
"ஆமாம் உன் சைஸுக்கு எல்லாம் பிரா தயாரிக்கிறாங்களா. என்ன ஸைஸ் உனக்கு" என்றான், கண்களை அவர் மார் மீது ஓட்டியபடி.
அவள் முகம் சிவந்தது அப்படியொரு கேள்வியை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தெரிந்தது. பின்னர் நான் கேட்ட கேள்வியை உணர்ந்ததும் கொஞ்சம் முறுவளித்தாள்.
"ரொம்ப கஷ்டப்பட்டு உங்களை கெட்டவனாக்கிக்காதீங்க..." என்று சொல்லிச் சிரித்தவள் "கேட்டுட்டீங்க சொல்றேன். வயசுக்கு வந்ததில் இருந்து அம்மா இல்லாததால் பக்கத்து வீட்டு மாமியைக் கூட்டிக்கொண்டு போய் நானா தான் வாங்கியிருக்கேன். என் ஸைஸுக்கும் பிரா கிடைக்கும். ஸைஸெல்லாம் சொல்லி பிரா வாங்கிறதில்ல நான், போனால் அவங்களே உடம்ப பார்த்து எடுத்து கொடுத்துடுவாங்க. இல்லை அன்டர் பஸ்ட் சைஸ், ஓவர் பஸ்ட் சைஸ் எல்லாம் தெரியணும்னா சொல்லுங்க அளந்து பார்த்துச் சொல்றேன்." சொல்லிவிட்டு கண்களைச் சிமிட்டிக் காட்டினாள்.
"ஏய் சும்மாத்தான் கேட்டேன், போய்ட்டு வா தாயே." என்றான் இரண்டு கைகளையும் கூப்பியபடி.
"கோபமில்லையே?"
"நிச்சயமாய் இல்லை." அவளை பக்கத்திலிருந்த ஆட்டோஸ்டாண்ட் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு வந்தான்.
அடுத்த நாள் கல்லுரிக்கு போனதும் HOD வந்து,
"மோகன் நேத்திக்கு லெக்சரர் வராததால லேப் அட்டெண்டர, பர்ஸ்ட் இயர் கிளாசுக்கு அனுப்பினேன். அங்க ஒருத்தன் ரொம்ப பருப்புமாதிரி அவங்ககிட்ட பண்ணியிருக்கான். புதுபையன் கொஞ்சம் படிச்சவன் போலிருக்கு. நான் நேரடியா தலையிட விரும்பலை. நீ கொஞ்சம் இன்னிக்கு கிளாசுக்குப் போய் அவனை தட்டிவையேன்."
அவரே சொன்னதுக்கு பிறகு போகலைன்னா எப்பிடி?
"பசங்களா, இன்னிக்கு லெக்சரர் வரலை. அதான் நான் வந்திருக்கேன். ஒரு மணிநேரம் ஜாலியா ஏதாவது பேசலாம். என்ன பேசலாம், ஏதாவது விளையாடலாம்னாலும் விளையாடலாம்."
சொல்லிமுடிந்ததும் அந்தப் பையன் தான் எழுந்தான்.
"எக்ஸ்கயூஸ் மீ, நாங்க இங்க படிக்க வந்திருக்கோம். விளையாட இல்லை, நாலு நாளா லெக்சரர் வரலை. எங்க படிப்புத்தான் வீணாகுது. நேத்திக்கு லேப் அட்டண்டர் வந்தாங்க, அதுகூட பரவாயில்லை, இன்னிக்கு ஒரு ஸீனியர் ஸ்டுடண்ட் வந்திருக்கீங்க. என்ன நடக்குதேன்னே புரியலை. நான் உங்களைத் தப்பா நினைக்கலை, இந்த ஒரு மணிநேரமும் வேஸ்ட்" சொல்லிவிட்டு அவன் உட்கார்ந்ததும். சரியா மாட்டிக்கிட்ட மகனேன்னு நினைத்துக்கொண்டவனாய், "ஐயோ, சூப்பர் தம்பி உங்க பேரு என்ன சொல்லமுடியுமா?" கேட்டான்.
"விஸ்வநாதன்..."
"விசு, எனக்கும் இதுதான் பிராப்ளம். எனக்கு விளையாடவோ, சும்மா ஜாலியா இருக்கவே பிடிக்கவே பிடிக்காது. ஃபர்ஸ்ட் இயர் பையன்கள் சீரியஸா இருக்கமாட்டாங்கன்னு தப்பா கணக்குப் போட்டுட்டேன். சொல்லுங்க இந்த ஒரு மணிநேரம் உபயோகமா போகணும்னா என்ன பண்ணலாம்."
"எது வேண்டுமானாலும் ஆனால் உபயோகமாய்!"
"சரி புரோஜக்ட் பத்தி பேசலாம், நாம படிக்கிறதே அதுக்குத்தானே," சொல்லிவிட்டு புரோஜக்ட் பத்தி எல்லாவற்றையும் சொன்னான். அப்பப்ப அவனையும் எழுப்பி ஒரு கருத்தைக் கேட்டு அவன் சரியான கருத்தே சொல்லியிருந்தாலும் இல்லையென்றும் அவனை மட்டம் தட்டியும் பேசினான். சிலசமயம் அவன் சொன்ன கருத்து எல்லோருக்குமே முரணாக இருந்ததால் மற்ற மாணவர்களிடமும் கேட்டு அவனை முட்டாளாக்கினான். முடிவில் அவன் அப்பொழுது செய்துகொண்டிருக்கும் புரோஜக்ட் பத்தி சொல்லி கையில் வைத்திருந்த லாப்டாப்பில் இருந்து எடுத்துக்காட்டுகளைக் காட்டினான்.
ஒரு மணிநேரம் முடிந்திருக்கும் அவனை எழுப்பி, "உபயோகமாக இருந்ததா?"
"ம்ம்ம், மிகவும் உபயோகமாக இருந்தது!"
"தெரியுமா, நான் இந்த ஒரு மணிநேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன். இந்த நேரத்தில் புரோஜக்ட் பண்ணியிருந்தால் சம்பாதித்து இருப்பேன். பரவாயில்லை இந்தப் பையனுக்காக இல்லை. மற்ற மாணவர்களுக்காவும்தான் நான் சொன்னது. அதானால் சந்தோஷம்." சொல்லிவிட்டு வகுப்பறைக்கு வந்துவிட்டான்.
மதியம் கேன்டீனில் அவன் உட்கார்ந்திருக்கும் பொழுது அங்கு வந்தனர் அகிலாவும் கனிமொழியும்.
"அண்ணே, இன்னிக்கு ஜூனியர் ஒருத்தனை போட்டு வாங்கிட்டீங்களாமே?"
"ஆமாங்கா அவன் அழாத குறைதான். எனக்கு ஆச்சர்யம் நம்மாளுக்கு இவ்வளவு தெரியுமான்னு, சும்மா பிசிறு கிளப்பிட்டார். நேத்திக்கு அவர் கேட்டதுக்கும் அதுக்கும், இவர் பேசி முடித்ததும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துடலாம்னு பார்த்தேன். ஆனா உண்மையிலே நானே பயந்திட்டேன்."
"இல்லை கனி, லேப் அட்டண்டரை தப்பா பேசியிருக்கான். HOD புலம்புறார். அதான் என்னை விட்டு அடக்கச் சொன்னார்."
"அப்பிடியா, வேணும்னே பழிவாங்குனதா இது. நான் அப்பவே நினைச்சேன். என்னடா இது இப்படி நடந்துக்கிற ஆளில்லையேன்னு. இதுக்கு பின்னாடி இவ்வளவு கதையிருக்கா?" - அகிலா.
"சரி அது போகட்டும் என்னவோ குடுக்கிறேன்னு சொன்னியே, பரவாயில்லை இப்ப கொடு."
"அண்ணே என்ன இது, நான் இங்க இருக்கேன் மறந்திட்டு இரண்டு பேரும் பேசிக்கிட்டிருக்கீங்க." கனிமொழி வேண்டுமென்றே முகத்தை தூக்கிவைத்துக் கொண்டாள்.
(தொடரும்...)
உள்ளம் உடைக்கும் காதல் 7
Mohandoss
Thursday, July 06, 2017
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!" எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்ற...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
//சரி அது போகட்டும் என்னவோ குடுக்கிறேன்னு சொன்னியே, பரவாயில்லை இப்ப கொடு.//
ReplyDeletevery yummy please continue
நிச்சயம் செய்கிறேன் அன்பரே, நீங்கள் என் கதையைப் புசிக்கிறீர்களோ?
ReplyDelete