எழுத்து என்பது ஒரு வகையில் குற்றச்செயலாக உள்ளது. தான் எழுதும் பகுக்கும் பிரச்சனை நிகழ்வில் உள்ள பொழுது அதைச் சொல்லாடலாக அறிவதன் மூலமும் அதைப் பற்றிய சொல்லாடலை ஆய்வதன் மூலமும் அதற்கப்பாலான ஒரு வெளியை உற்பத்தி செய்து அதற்குள் அதன் சுதந்திரத்தையும் அதன் மூலம் ஒரு அதிகாரத்தையும் செயல்படுத்துகிறது. எழுதும் தன்னிலை இந்த இடத்தில் தப்பிக்கும் தன்னிலையாகவும் எழுதப்படும் தன்னிலைகளுக்கு எதிரான குற்றத்தை நிகழ்த்துவதாகவும் உள்ளது பிரதிநிதித்துவ சொல்லாடல்களைக் கொண்ட பிரதிகள் இந்த இடத்தில் மிகப்பெரும் வன்முறையாக உள்ளது.
குற்றவியல் என்பது சமூகக் கட்டமைப்பின் மிக மையமான கூறாக இருக்கும் நிலையில் எழுதுதல் என்பது தனது குற்றச்செயலைப்பற்றிய மறு சொல்லாடலை உற்பத்தி செய்வதன் மூலம் குற்றம் மற்றும் அதிகாரம் பற்றிய ஒரு விளக்க நிகழ்த்துதலைச் செய்து, மறு தளத்தில் வாசிப்பு என்பதை அதன் எதிர்வாக மாற்றும் சாத்தியங்களையும் உள்ளடக்கி உள்ளது.
எந்த பொருளும் ஏதோ ஒரு அர்த்தத்தை அடைவதற்காக உள்ளது என்பது கருத்தியலின் அதிகபட்ச வன்முறையாகும். வாழ்க்கை அர்த்தம் சாராம்சம் என்ற அனைத்தும் சூன்யத்தைப் போல் எல்லையற்றதும் எல்லையின்மை போல் சூன்யமுமாகவே உள்ளன.
மொழியின் மூலமாக மட்டுமே கட்டப்பட்ட, சமூகவெளிக்குள் செயல்படும் அனைத்தும் மொழிபுகளாக உள்ளன, இதில் உண்மை பொய்மை என்ற எதிர்மைகள் ஒரே பொருளின் இரண்டு பரிமாணங்கள். பரிமாணங்கள் பெருகிவிட்ட நம் காலத்தில் உண்மை என்பது இனி பொய்மையான ஒன்றே.
இவைகள் ரமேஷ் பிரேமின் இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள் என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள். எனக்கு பெரும்பாலும் இவர்களின் எழுத்துக்களைப் பற்றிய நல்ல அறிமுகம் கிடைக்கவில்லை. ஆனாலும் எனி இந்தியனால் புனேவில் இறக்கி படித்த பொழுது. எனக்காய் தோன்றியது ஒரு நல்ல அறிமுகம். பின்னர் கஷ்டப்பட்டு படித்து புரிந்துகொள்ளத் தொடங்கினேன், மனுஷ்ய புத்திரனால் காலச்சுவட்டின் பதிப்பகத்திற்கு பரிந்துரைக்கப் படமுடியாதவையாக இந்த நாவல்கள் இருந்தன என்னும் முன்னுரையும். தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமார் இந்த புத்தகத்துடன்(இன்னும் சரியாகச் சொல்லப்போனால் நாவல்களுடன்) தன்னால் உறவுகொள்ள முடியவில்லை என்று சொல்லி திருப்பியனுப்பப்பட்டவை என்பதையும் படித்தபின் அப்படியென்னத்தான் எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்க படிக்கத் தொடங்கினேன் முதலில்.
சாருவும், தி.கண்ணனும் கூட இந்த நாவல்களை புத்தகவடிவமாக்க நினைத்தார்கள் என்றும் படித்தேன். பின்னர் புரிந்தது சாரு ஏன் இதனை 'ஆய்வி'ற்கும், 'ங்' ற்கும் பரிந்துரைத்து தோல்வியடைந்தார் என்பது.
"பின்நவீனத்துவம், இன்று தமிழிலக்கியப் போக்கில் ஏற்பட்டிருக்கும் தவிர்க்கமுடியாத வளர்ச்சி, இவ்வித வளர்ச்சிக்கு முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர்கள் ரமேஷ்-பிரேம். இவர்கள் இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கை அலசி ஆராய்ந்து சரியான பாதையில் தமிழிலக்கியம் வளர தங்கள் பங்களிப்பை அளித்து வருபவர்கள். இன்று ஏற்பட்டிருக்கும் பின்நவீனத்துவ படைப்பிலக்கியத்தின் தேவையை இக்குறுநாவல்களின் தொகுதி மூலமாக பூர்த்தி செய்கிறார்கள்". என்ற புதுப்புனல் குறிப்புடன் வெளிவந்திருக்கும் இந்த "கனவில் பெய்த மழைக்குறிப்பைப் பற்றிய இசைக் குறிப்புகள்" புத்தகம் சொல்லப்போனால் என் படிப்புலக வரலாற்றில் ஒரு பகுதியாகப் பார்க்கிறேன்.
புரியாமல் எழுதுவது பின் நவீனத்துவம் என்றும் இல்லாவிட்டால் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் எழுதுவது தான் பின் நவீனத்துவம் என்று சொல்பவர்களுக்கான பதில் என்னிடம் கிடையாது.
பிரச்சனைகளைப் பற்றி ப்ளாக்குகளின் நடக்கும் பலவிவாதங்களை பார்த்திருக்கிறேன், அதைப் பற்றி நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்தவைகளை ரமேஷ்-பிரேமின் இந்த வார்த்தைகளின் பின்னால் நான் உணர்ந்தேன். என் சாப்ட்வேர் வாழ்வில் அடிக்கடி இந்த வார்த்தைப் பிரயோகங்கள் உபயோகப்படுத்தப்ப்டும். "Why you are trying to invend the wheel once again." அதே போல் என் எண்ணத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள் கிடைத்த பிறகும் அதை உற்பத்தி செய்ய மனம்வராததால் இப்படி.
கருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும்
பூனைக்குட்டி
Monday, May 25, 2009

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
ஏந்து பேர் அல்குல் நின்றும் கற்றை மேகலைகள் நீங்கி படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவி...
-
Chennai buzzing with that sticky night heat, the kind that made you want to drown the world in booze and fuck it all off. I’d been itching t...
-
"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?" இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய ...
//எழுத்து என்பது ஒரு வகையில் குற்றச்செயலாக உள்ளது. தான் எழுதும் பகுக்கும் பிரச்சனை நிகழ்வில் உள்ள பொழுது அதைச் சொல்லாடலாக அறிவதன் மூலமும் அதைப் பற்றிய சொல்லாடலை ஆய்வதன் மூலமும் அதற்கப்பாலான ஒரு வெளியை உற்பத்தி செய்து அதற்குள் அதன் சுதந்திரத்தையும் அதன் மூலம் ஒரு அதிகாரத்தையும் செயல்படுத்துகிறது. எழுதும் தன்னிலை இந்த இடத்தில் தப்பிக்கும் தன்னிலையாகவும் எழுதப்படும் தன்னிலைகளுக்கு எதிரான குற்றத்தை நிகழ்த்துவதாகவும் உள்ளது பிரதிநிதித்துவ சொல்லாடல்களைக் கொண்ட பிரதிகள் இந்த இடத்தில் மிகப்பெரும் வன்முறையாக உள்ளது//
ReplyDeleteஒன்னுமே பிரியல.....
அசுரன்
//பிரதிநிதித்துவ சொல்லாடல்களைக் கொண்ட பிரதிகள் இந்த இடத்தில் மிகப்பெரும் வன்முறையாக உள்ளது.//
ReplyDeleteஉங்கள் கணினியில் நிகழ்வுகளைக் கட்டளைகளாக எழுதுகிறீர்களா?அவை எந்த வன்முறையின்-குற்றவியலின் மறுவார்ப்பு?
சும்மா சும்மா சுத்திக்கொண்டிருக்கும் பின் நவீனத்துவப் புரட்டல்களை நவீனமே அடையாத இந்தியக் கிராமங்களுக்குள் இழுத்து வந்து படம் காட்டும் வேலையை இவர்கள் செய்யும்போது நீங்கள்வேற ஆ...ஊ...என்றபடி...
ஒன்னுமே புரியல ........
ReplyDeleteenable followers option by using the gadget...
ReplyDelete