In மரப்பசு

Like a Virgin

“Genius is finding the invisible link between things.” ― Vladimir Nabokov

ஒரு முறை ‘மரப்பசு’ பற்றி எழுதிய பொழுது - நான் அந்தக் கதையைப் புரிந்து கொண்ட விதத்தைப் பற்றி சித்தார்த் ‘கருப்பு/வெள்ளை’ யாக விஷயத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது என்று சொன்ன நினைவு. நான் இதைப் பற்றி ஒரு தனிப்பதிவெழுத வேண்டும் என்று நினைத்து அப்பொழுது விட்டிருந்தேன். django unchained பார்த்தப் பிறகான இன்னொரு முறை பார்க்கலாம் என்று ஆரம்பித்துப் பார்த்த Quentin படங்களின் தொடர்ச்சியாய் ‘Reservoir Dogs' ஆரம்பக் காட்சி மீண்டும் மரப்பசு பக்கம் என்னைத் தள்ளியது.


என் கருப்பு/வெள்ளை கருத்திற்கு இது காரணமாக இருந்திருக்க முடியுமா தெரியாது, ஆனால் Quentin சொல்லும் ‘Like a virgin' கதை தான், நான் ‘மரப்பசு’ படித்ததும் உணர்ந்தது. Madonna, Quentin இடம் Its not dick its love என்று சொல்லியிருந்தாலுமே, அட நம்மள மாதிரியே யோசிக்கிற ஒரு ஆள் என்று நினைக்க வைத்தது. ஆன்டன் செக்காவ், ஒரு முறை டால்ஸ்டாய் சொன்ன ‘worse than Shakespeare’ க்கு சந்தோஷப்பட்டதாய் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் அப்படித்தான். 'Worse like Quentin' ;)
 
MR. BROWN
Ok, let me tell ya what "Like a Virgin"'s about. Its all about this cooze who's a regular fuck machine. I'm talking, morning, day, night, afternoon.

Dick, dick, dick, dick, dick, dick, dick, dick, dick. 

Then one day she meets a John Holmes motherfucker, and it's like, whoa baby. 

I mean this cat is like Charles Bronson in "The Great Escape." He's diggin tunnels. 

Now she's gettin this serious dick action, She's feelin something she ain't felt since forever. Pain. Pain.

It hurts. It hurts her. It shouldn't hurt. You know, her pussy should be Bubble-Yum by now. But when this cat fucks her, it hurts. It hurts like it did the first time. You see the pain is reminding a fuck machine what is once like to be a virgin. Hence, "Like a Virgin."

மரப்பசுவில் அம்மணி ஏறக்குறைய க்வென்டின் சொன்ன 'Like a virgin' பாடலில் வரும் Cooze போலத்தான். Dick dick dick dick என்று வாழ்பவள். இப்படி ஒரு வகையில் dick தேடி பிக்காடிலி சதுக்கத்தில் ஒரு நாள் 'இரவு ராணிகள்' போல் எக்ஸ்பிரிமென்ட் செய்யும் பொழுது அம்மணி ப்ரூஸ் என்றொரு முரட்டு இளைஞனான முன்னால் சோல்ஜரை அழைத்துச் செல்கிறாள். மேற்சொன்ன க்வென்டின் வரிகளில் வரும் John Homes போல்.

பதினைந்து நாள் அவனோடு சுற்றிக் கொண்டிருக்கிறாள், பர்மிங்ஹாம், ஆக்ஸ்போர்ட், மான்செஸ்டர் வேல்ஸ் - ஸ்ட்ராட்போர்ட்குப்போய் இரண்டு நாள் தங்கி, ஷேக்ஸ்பியர் நாடகங்கள், பார்க்கிறார்கள். போன இடங்களில் எல்லாம் ஒரே அறையில் தங்கல், படுக்கையில் ஓரமாக ப்ரூஸ் படுக்கிறான். ஒரு சாகசமும் ஒரு வெற்றுக்காலும் பலிக்கவில்லை.

ப்ரூஸுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. அவன் வியட்நாம் போரில் பன்னிரெண்டு பேரைக் கொன்றிருக்கிறான். அவனைக் கண்டு முகத்தில் கிலி படர்ந்து ஓடின பெண்களைப் பார்த்திருக்கிறான். அப்படி ஒரு நாள் ஒரு வீட்டிற்குச் சென்ற பொழுது பெண்ணும் மகனும், பையனை பின்பக்கம் தள்ளி மறைத்துக்கொண்டு நிற்கிறாள் பெண். அவனை வெறித்துப் பார்க்கிறாள் பின் என்னவோ சொல்லி வாயை அசைத்து, ஒரு சின்னப் பழ அளவிற்கு எச்சிலை திரட்டி அவன் சட்டையில் உமிழ்கிறாள். அதிலிருந்து அவனுக்கு 'இரவு ராணிகளை' அழைத்துச் சென்றாலும் உட்கார்ந்து குடித்து பேசிக் கொண்டிருந்துவிட்டு உறங்கிவிடும் வழமை. அவனால் உடலுறவு கொள்ள முடிவதில்லை, அவனுக்கு எச்சில் மட்டும் தான் நினைவில் வருகிறது.

அம்மணி ப்ரூஸின் சிநேகிதம் சண்டை போட்டுக் கொள்கிற அளவுக்கு நெருங்கி விடுகிறது. ப்ரூஸ் அம்மணியிடம் 'ஐந்நூறு அறுநூறு ஆண்களுக்கு மேல் முத்தமிட்டிருக்கிறேன் என்று சொல்கிறாய் அதில் பாதிப் பேரோடாவது படுத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறாய். சரி - முந்நூறு பேர் கொடுக்காததை முந்நூற்றோராவது ஆள் கொடுத்துவிடப்போகிறானா? அந்த முந்நூற்றோராவது ஆள் நானாக இருக்க வேண்டும் என்றும் ஒரு காட்டு ஆசை கூட இல்லையா' என்று கேட்கிறான் அதற்கு அம்மணி ப்ரூஸை 'நீதான் காயடித்த மாடாயிற்றே' என்கிறாள்.

ப்ரூஸ் அம்மணியிடம் 'அதிபோகத்தினால் உன் கன்ன எலும்புக்கு மேல் சதை தடித்திருக்கிறதே - அதுவும் பெரிய தடிப்பாக ஆகி உனக்கு நானும் ஒரு அறிவுதான் என்று ஆச்வாசப்படுத்தப் போகிறதோ' என்கிறான். பின்னர் ப்ரூஸ் அம்மணி அருகே வருகிறான், அவள் கன்னத்தை இரண்டு கைகளாலும் தடவுகிறான், இமை ரப்பைகளை விரலால் வெகுநேரம் தடவுகிறான். கை, துடை, முதுகு எல்லாம் தடவுகிறான்.

அம்மணி ப்ரூஸ் நெருங்கிவிட்டான் என்கிறாள். மேலும் சொல்கிறாள்,

வெளியே சுவர்க்கோழி கத்திற்று - ப்ராகாவோ, புடாபெஸ்ட்டோ, மாம்பலமோ, அன்னவாசலோ - எங்கும் கத்துகிற சுவர்க் கோழிதான் இங்கும் ஸ்ட்ராட்ஃபோர்ட்லும் இரைந்தது. அறைக்குள்ளேயே எங்கோ, ஈரக்குரலுடன் இரவின் குரலாக, கூதலின் குரலாக இரைந்தது. பயங்க இரவாக இரைந்தது. தாள முடியாத இரவாக இரைந்தது. ப்ரூஸ் சோல்ஜர் தான். அவனும் யாரோடோ இப்போது போரிட்டுக் கொண்டிருந்தான். முந்நூற்று ஓராவது வீரனாகப் போரிட்டுக் கொண்டிருந்தான். "உன்னைச் சக்கையாகப் பிழிந்து விடுவேன்" என்று கியோவானியிடமும் பட்டாபியிடமும் நான் சிரித்துச் சீண்டுகிற வழக்கம். ஒரு சவாலாகப் பேச வருகிற நோஞ்சான் காட்டான் இளைஞர்களிடம் எல்லாம் கத்தியிருக்கிறேன். அத்தனை சீண்டல்களுக்குமாகச் சேர்த்து பழி வாங்கிக் கொண்டிருந்தான் அந்த எச்சிலைப் போலப் பட்டணத்துக் கடல் மணலில் அலை விட்டு விட்டுப் போன ஜெல்லியைப் போலக் கிடந்தேன் நான்.

பயங்கரமான இரவு. சுவர்க்கோழி அடங்கிய வீட்டுக் கோழி எங்கோ கத்திற்று. என்னுடைய நோவு பயம் எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துக் கத்திற்கு.  

மரகதம் மட்டும் இல்லை. மற்றப் பெண்களும் என்னுள் இருந்தார்கள் . கறுப்பு, சிகப்பு, மஞ்சள், மாநிறம், வெள்ளை அழகு, பாந்தம், கோரம், அன்னவாசல், பட்டணம், ஸ்ட்ராட்ஃபோர்ட், டோக்கியோ - இன்னும் எங்கும் உள்ள எல்லா பெண்களும் என்னுள் கிடந்தார்கள். எல்லோருக்குமாகச் சேர்த்து, உச்சமான இன்பத்தை, உச்சமான நோவை நான் பட்டுக் கொண்டது போல்தோன்றியது. 

அதே க்வென்டின் சொன்ன பெய்ன். லைக் அ வெர்ஜின் போல் பெய்ன். அம்மணியே சொல்வது போல் ப்ரூஸ் அவளை சக்கையாகப் பிழிந்துவிட்டான். இப்பொழுது நான் முன்னம் கூகுள் பஸ்ஸில் எழுதியதைப் படித்தால் நான் சொல்லவரும் கருப்பு-வெள்ளை விஷயம் விளங்கும்.


நான் மரப்பசு பற்றிப் புரிந்துகொண்டதை அத்தனை பொதுவில் போடமுடியாதென்று நினைத்து வந்திருக்கிறேன். நான் மரப்பசு படித்த பொழுது மோகமுள் படித்திருக்கவில்லை, அதனால் எனக்கு உங்களுக்கு வந்த குழப்பம் இல்லை. 
ரொம்ப ராவா நான் உணர்ந்ததைச் சொல்லணும்னா, அவள் உச்சத்தைத் தேடி அலைபவளாய் இருக்கிறாள் என்றே நான் நினைத்தேன். அவளுக்கு அதுவரை கிடைத்திடாத ஒன்று கிடைத்ததும்(ஆப்பிரிக்கனுடான உறவு) எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவள் தான் தேடியது கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் முடிக்கிறாள் என்று நினைக்கிறேன். அம்மணி கடைசியில் இந்தியா வந்து செட்டில் ஆவதுடன் கதை முடியும் என்று நினைக்கிறேன். 
ஜெமோவுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த பொழுது இந்தக் கதைக்கான இன்னொரு திறப்பு கிடைத்தது. வெளியில் சொல்ல முடியாததற்கு வருந்துகிறேன் ;)


XXX, இல்லை எனக்குமே கூட அப்படிப் பொதுவில் சொல்ல கூச்சமாக இருந்தது, ஆனால் தற்சமயங்களில் இத்தகைய ஸ்டாண்ட்களில் இருந்து நானே விலகிக் கொள்ள யத்தனிக்கிறேன் அதன் விளைவே மேற்சொன்ன பத்தி. 
கோபாலி அம்மணியை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார், ஆனால் அம்மணியின் திருப்தி இங்கே கேள்விக்குரியானது. சிஷ்யனான பட்டாபியுடன் அவள் தங்கிவிடுகிறாள் ஆமாம் அவளுடைய தேடல் முடிவடைந்தது அதனால் அவள் அவனுடன் தங்கிவிடுகிறாள், கதையைப் படித்தாள் அவள் பட்டாபியுடன் தங்குவதற்கு வேறு எந்த காரணமும் இருக்க முடியாது. அவன் அவளை நன்றாய்ப் பார்த்துக் கொள்வான் அவளுக்கென்று ஒரு சொந்தம் என்பதைத் தவிர. அவள் Sexually satisfied என்ற நிலைமை வந்ததும் அவளுக்கு உறவு பற்றிய ஒரு பயம் அவளை பட்டாபியுடன் இருக்க விடுகிறது என்று படுகிறது.
ஐரோப்பியனா என்பது நினைவில் இல்லை, படித்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவனுடன் அம்மணி கொஞ்சம் நாள் இருப்பாள், ஆனால் அந்த நிகழ்வு - அவனுடனான உடலுறவு - நிகழ்ந்ததும் அவள் சொல்லும் வசனங்கள் தான் நான் இந்த முடிவுக்கு வர வசதியாய் இருந்தது. இன்னொரு தரம் படித்துவிட்டு விளக்கமாய் எழுதுகிறேன். அந்த உறவு அவளே விரும்பி எடுத்துக்கொண்ட கற்பழிப்பு போல் அமையும் என்று நினைக்கிறேன். 
ப்ளாக் அண்ட் வொயிட்டாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அப்படிச் சொல்லவில்லை, ஆனால் நான் உணர்ந்ததை அது ப்ளாக் அண்ட் வொயிட்டாக இருந்தாலும் சொல்கிறேன்னு வைச்சுக்கோங்களேன் ;)

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts