இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு நிச்சயம் செய்யணுமா என்று தான் நான் முதலில் நினைத்தேன். ஆனால் என்னை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகத்தான் இந்த அறிவிப்பு.
தமிழ்மணமும் அதன் வாசகர்களும் ஒரு திணிப்பை அளித்திருப்பதாகவே பல சமயம் நினைத்திருக்கிறேன். எப்படி என்றால் உண்மையான வலைப்பதிவென்பது நாள்தவறாது எழுதப்படும் டைரி போல் இல்லாமல், சுவாரசியமாகவும் நிறைய பேர் படிப்பதற்காகவும் எழுதப்படும் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கைப் போல் மாற்றப்பட்டுவிட்டதாகவேப் படுகிறது எனக்கு.
இதில் நிறைய அட்வான்டேஜ்கள் இருந்தாலும் பல டிஸ் அட்வான்டேஜ்களும் இருப்பதாகப் படுகிறது. என்னைப்போன்ற ஒரு நாளைக்கு பதினெட்டு மணிநேரமும் கணிணியையே பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பத்து வரி அன்றைய நாளைப்பற்றி எழுதுவது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலை கிடையாது தான்.
ஆனால் தினம் தினம் புதிதாகவும், வித்தியாசமாகவும், அனைவரையும் கவரும் விதத்திலும் பதிவிடுவதென்பது முற்றிலும் இயலாத ஒன்றாகிவிட்டது. எதுக்கு இந்த பில்டப் என்றால். இன்னும் சிறிது நாட்களில்(இரண்டு நாட்களில்) எனக்கு கொஞ்சம் வேலைப்பளூ குறையும் வாய்ப்பு இருப்பதால், 2005ன் ஆரம்பத்தில் இருந்த உத்வேகத்துடன் பதிவெழுதும் வேகத்தை அதிகரிக்கலாம் என்று நினைக்கிறேன்.
குறைந்த பட்சம் நாளைக்கு ஒரு பதிவாவது(!), எல்லோரும் அவரவர்களுடைய வாழ்க்கையை இனிதாக்கிக்கொள்ள பதிவெழுதுவதையே விட்டு வெளியே போகும் பொழுது நான் அதிகப்பதிவெழுதப்போகிறேன் என்று ஒரு அறிவிப்பை விடுப்பதற்கு மேற்சொன்ன காரணம் மட்டும் தான் உண்டு. அதனால் மக்களே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும் என்பதை சொல்லிக் கொள்ளவே இந்தப் பதிவு.
நான் சிறுகதைகள் எழுதுவதை அடியோடு சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்திருப்பதால் தைரியமாக இருக்கலாம் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.
ஒரு அறிவிப்பு
பூனைக்குட்டி
Wednesday, December 20, 2006

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
It was late 2010, Chennai drowning in 2G rumors and the sticky heat of a city faking it wasn’t falling apart. I’d been plotting this night f...
-
பெங்களூர் வலைபதிவர் சந்திப்பைப் பற்றி ராம் எழுதியதுமே அங்கே போவதென்பது முடிவாகியிருந்தது. ஆசீப் அண்ணாச்சி அதற்கு ஒரு வாரம் முன்பு தமிழகம் வர...
-
ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் - மிகவும் மனநிறைவைத் தந்த சந்திப்பு. ஆர்கனைஸ் செய்தவர்களுக்கு நன்றிகள்.
ஆஹா..வாங்க..வாங்க..!
ReplyDelete//. அதனால் மக்களே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும் என்பதை சொல்லிக் கொள்ளவே இந்தப் பதிவு//
ReplyDeleteசரி தல.. ஜாக்கிரதையா இருந்துக்கிடறோம்...
வித்தியாசமான, இனிமையான அறிவிப்பா இருக்கே இது..
புதுமையான புதுவருட சபதம்.. அப்படியே கதைகள் என்ன பாவம் பண்ணிச்சு? அதுலயும் ரெண்ட எழுதிப் போடுறது...
வாங்க..வந்து அட்ச்சு ஆடுங்க...
ReplyDeleteசீக்கிரமா வாங்க சார்,
ReplyDeleteசென்ஷி
Dear Mohandoss...
ReplyDeleteWelcome.. I'am also from Trichy. Chinthamani!
Try to write the Puna day to day life.. and the people whoom so interested and avoided by u.
anbudan
sivaparkavi
Trichy
சந்தனமுல்லை, பொன்ஸ், சுதர்ஸன் கோபால், சென்ஷி, சிவபார்கவி - நன்றிகள். ஏண்டா இவனை வாழ்த்தினோம் நினைக்காத அளவிற்கு எழுத முற்படுகிறேன்.
ReplyDeleteபொன்ஸ் - இனிமே நாங்க சிறுகதை எழுதினா இலக்கியத்தரம் வரணுமாக்கும், வருமான்னு கேட்டா தெரியாது. அதனாலத்தான் அடக்கி வாசிக்கிறது.
எழுதக் கூடாதுன்னு தான் இப்ப வரைக்கும் நினைக்கிறேன். ஆனால் எதுவும் சொல்ல முடியாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
Welcome Back!!!
ReplyDelete// நான் சிறுகதைகள் எழுதுவதை அடியோடு சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்திருப்பதால் தைரியமாக இருக்கலாம் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். //
ReplyDeleteசிறுகதையையாவது கொஞ்சம் பல்லைக் கடிச்சிட்டுப் படிச்சு முடிச்சிடலாம். :-)) அதை நிறுத்திட்டு என்னென்ன எழுதப் போகிறீர்களோ. பயமாய்த்தான் இருக்கிறது. :-))
- பி.கே. சிவகுமார்
வாய்யா தாஸு, என்னடா ஆளை காணோமேன்னு பார்த்தேன், தீவிரமா பதிவு எழுதும், படிக்க ஆவல்!
ReplyDeleteசிறில் அண்ணாச்சி வெல்கம் பேக் சொல்ற அளவுக்கு நான் எங்கேயும் போய்விடவில்லைன்னு நினைக்கிறேன். என்ன கொஞ்சம் தீவிரமா பதியிறதில்லை அவ்வளவுதான்.
ReplyDeleteபிகேஎஸ், நீங்கள் சொன்னதை என் கதைகளுக்கான முழு அங்கீகாரமாக எடுத்துக்கொள்கிறேன். மற்றபடிக்கு மொத்தமா ஜல்லியோ ஜல்லி அவ்வளவுதான் இப்போதைக்கு.
ஆரம்பத்தில் இருந்தே என் பதிவுகளுக்கு நல்ல ஆதரவினை நல்கிவரும் வெளிக்கண்டவரே, உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை.
வாங்க வாங்க...
ReplyDeleteபை பை சொல்ற காலத்துல தொடர்ந்து விகரஸா எழுதப்போறேன்னு பதிவா? வித்தியாசம்தான்..
பை தி வே, நான் கேட்டது என்னாச்சு?? இந்த சுதியிலேயே அதையும் கொஞ்சம் கவனிக்கிறது???? :)
Happy to hear...
ReplyDeleteஆர்வத்துடன் காத்திருக்கிறேன்