வாழ்க்கையில் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டதாக வருந்துகிறேன்.
ஒழுங்கு மரியாதையா இந்தி, இங்கிலீஸ் படங்களை மட்டும் தியேட்டர்களில் பார்த்துக்கொண்டிருந்த நான் திருவிளையாடல் ஆரம்பம் என்ற தனுஷின் படத்திற்கு சென்றதைத்தான் சொல்கிறேன்.
ஒவ்வொரு முறையும் இந்த தனுஷ் படங்களால் நான் மிகவும் வெறுப்படைகிறேன். இதுக்கு முன்னாடி இப்படித்தான் ஒரு படம் பேரு நினைவில் இல்லை(அவங்க அப்பா இயக்கியிருந்தாரு - துள்ளுவதோ இளமையில்லை). சரியான கடி. அதுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை இந்தப் படம். ஏண்டா படத்திற்கு போனோம் என்று ஆகிவிட்டது.
இந்த புண்பட்ட மனதை இன்னும் சில இந்தி ஆங்கில படம் பார்த்துத்தான் ஆற்ற வேண்டுமென்று நினைக்கிறேன். இதன் காரணமாக சில படங்களின் விமர்சனங்களை எதிர்பார்க்கலாம். இந்தப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்கவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.
திருவிளையாடல் ஆரம்பம் - ரொம்ப முக்கியம்
பூனைக்குட்டி
Wednesday, December 27, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
சிறு வயதிலேயே தோன்றிய ஆசை இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது. அது தமிழில் ஒரு வளைத்தலம் அமைக்க வேண்டுமென்பது. பல முறைகளiல் முயன்று இப்பொழுது...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
இது நல்ல பொழுது போக்குப் படம் என்றும் கட்டாயம் திரையரங்கு சென்று பார்க்கலாமென்றும் யாரோ நேற்று வலைப்பதிவில் சொல்லியிருந்தார்கள்.
ReplyDeleteஅப்போதே ஓர் உறுத்தல், நான் மட்டுந்தான் நொந் போயிருக்கிறோமோ என்று. நல்லவேளை நீங்களாவது கூட்டுச் சேர்ந்தீர்கள்.
இவற்றை வெறும் பொழுதுபோக்கு என்று பார்க்காது சமூகத்தில் இப்படங்களின் தாக்கம் எத்தகையது என்று பார்க்க வேண்டிய நேரத்தில் இருக்கிறோம்.
பெண்ணைக் கட்டாயப்படுத்தித் துன்புறுத்திக் காதலிக்க வைக்கும் நாயகர்களைக் கொண்டு நிறையப்படங்கள் வெளிவருகின்றன. அவை வெற்றிப் படங்களாயும் அமைகின்றன. இப்படமும் அவ்வகையில் சேர்த்திதான். தொல்லைதாங்காமலே நாயகி காதலிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். (இதற்கு என்ன சப்பைக்கட்டுச் சொல்லியும் சமாளிக்க முடியாது)
பெண்ணை இம்சை செய்து அவள் காதலைப் பெறுவதை இன்றைய இளைஞரிடம் நியாயப்படுத்தி, அதையே முக்கிய தந்திரமாகப் போதிக்கின்றன இப்படங்கள். எமது சமூகத்தில் இதன் விளைவு விபரீதமாகவே இருக்கும்.
சன் டி.வில் முதல் இடத்தில் இருக்கு திருவிளையாடல் ஆரம்பம் படத்தை பற்றியா சொல்லறீங்க. ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்
ReplyDelete;)))))))
:-)))
ReplyDeleteஆகா, நான் மட்டும் தான் என்று நினைத்தேன், நீங்களுமா? விடுங்க விடுங்க என்ன பண்றது...
ReplyDeleteசார், பதிவுக்கு கீழே post a comment என்னும் சுட்டியை தொடவே முடியவில்லை, இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருக்கிறது, கொஞ்சம் சரி பாருங்கள்.
எச்சரிக்கைக்கு நன்னீ..அப்புறம் இன்னமுமா புனேவில இருக்கீங்க???
ReplyDeleteஉங்க ப்ரொஃபைலை அப்டேட் செய்யலாமே??
This movie is the worst. I think prakashraj is the hero in this movie because he was trying to protect his sister like any brother. As i was watching the film i wanted get up and beat the crap out danush.
ReplyDeleteநல்ல படங்கல் நாலே நாளில் அரங்கை விட்டு அகற்றப்படுவதும்,
ReplyDeleteஇது போன்ற பொழுதுபோக்கு படங்கள் என்னும் வகைப் படங்கள் அமோகமாக ஓடுவதும்........
என்னே தமிழர் பண்பாடு!
அந்த டப்பா படம் பேரு ட்ரீம்ஸ்...
ReplyDeleteஇப்ப அதே அப்பன் இன்னொரு படத்த எடுத்துருக்காரு. படம் பேரு "இது காதம் வரும் பருவம்". கண்டிப்பா நீங்க பாக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்.
அப்பாலிகா இன்னொரு மேட்டரு. உங்களோட "ஒரு காதல் கதை", கதைய மரத்தடிலப் படிச்சிட்டுத்தான் நான் எழுதவே ஆரம்பிச்சேன். இப்ப ப்ளாக் எழுதுற வளந்திட்டேனா, அதுக்கு உங்களோட கதையும் ஒரு முக்கிய காரணம். ரொம்ப டாங்கிஸ்...
என்னாச்சு உங்க உண்மைப் பேரு. குந்தவை வந்தியதேவன் :)
அநானிமஸ், வீ த பீப்பிள், கானா பிரபா, நான், சுதர்ஸன் கோபால், மற்றுமொறு அனானி, எஸ்கே, ஜி நன்றிகள்.
ReplyDeleteசில பார்த்திருப்பீர்கள் போலிருக்கு, சிலரையாவது தடுத்த புண்ணியம் எனக்கு கிடைக்கட்டும். (அதுதான் தினம் தினம் நிறைய பாவம் பண்ணுறேனே).
ஜி சந்தோஷமா இருக்குங்க இதைக்கேட்டுகும் போது. அது என்னுடைய புனைப்பெயர்(பூனைப்பெயர் ;)) எப்பவாவது தனிப்பட்ட முறையில் கதைஎழுதும் பொழுது அந்த பெயரில் எழுதுவது தான் இன்னமும் வழக்கம். என்ன ப்ளாக் உலகத்தில் அந்த பெயர் பரிச்சயம் ஆகவில்லையென்று நினைக்கிறேன்.
சுதர்ஸன் - இப்ப சரியாயிருச்சுன்னு நினைக்கிறேன்.