In Only ஜல்லிஸ் சுய சொறிதல் சுஜாதா

கடல் குதிரையும் சபிக்கப்பட்ட ஆண் ஜனமும்

வீட்டில் அக்கா உறங்கியதும் அனிமல் ப்ளானட் பார்ப்பது உண்டு. சமீபத்தில் நான் பார்த்த Most Extreme Mom's & Dad's(விலங்குகளில்) ஆச்சர்யப்பட வைத்த ஒன்று. விலங்கினங்களிலேயே குட்டியை வயிற்றில் சுமக்கும் ஆண் விலங்கு(மனிதனையும் சேர்த்துத்தான் - மனிதன் social animalலாமாம்) ஒன்றே ஒன்று தானாம். அதுதான் கடல் குதிரை, அதனால் Most extreme dad என்கிற பெருமை கடல் குதிரைக்குக் கிடைத்தது.

எங்கோ படித்த ஞாபகம் மனித இனத்தின் தொடக்கத்தில் இருந்தே பெண்களைக் கண்டு ஆண்கள் பயந்து வந்ததாக, எதனாலென்றால் பெண்ணால் மட்டும் தான் ஒரு உயிரினத்தை பிறப்பிக்க வைக்க முடிந்ததாகவும் அதனால் தான் அவன் பெண்களை தெய்வமாக வைக்க ஆரம்பித்தான் என்றும் எங்கே என்று நினைவில் இல்லை. கடவுள் மீது நம்பிக்கை இல்லாததால் இயற்கையின் மீது இந்த பழியை சுமத்துவதைத் தவிர வேறுவழியில்லை, ஆண்களிடம் இருந்து பிறப்பிக்கும் பாக்கியத்தை மறைத்துவிட்டதற்காக.

அறிவியல் உலகத்தின் அதிவளர்ச்சின் காரணத்தில் பிற்காலத்தில் ஆண்கள் குழந்தை பெற வைக்கும் சாத்தியம் நிறைவேறும் என்று நம்புவோம். கற்காலத்தில் இருந்த மனிதனால் இன்றைய சாட்டிலைட் உலகத்தை கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது அதைப்போலவே இன்று நாமும் இருக்கிறோம் அறிவியல் உலகம் படைக்கப்போகும் ஆச்சர்யங்களில் இந்த ஆண் பிரசவிக்கும் அதிசயமும் ஒன்றாக இருக்கவேண்டும்.

Men's breasts do have milk ducts

Men's breasts do have milk ducts, and their bodies produce oxytocin and prolactin, the hormones required for milk production. As of yet, there are no proven scientific examples of male breastfeeding, but there are reports of men who were able to produce milk through extensive stimulation of the breast and nipple. Yet this isn't a viable option for feeding babies, especially as no one is certain if male breast milk would be of the same quality and composition as female milk.



கடல் குதிரையில் இருந்து டாபிக் எங்கேயோ ஹைஜாக் செய்யப்பட்டுவிட்டது. ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம் கடல்குதிரைகள் தான்(இந்த ஃபேமிலியும் இன்னும் சிலரையும் சொல்லலாம் - கடல் டிராகன் ஒரு உதாரணம்). நிறைய பேர் அனிமல் ப்ளானட்டின் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். Most extreme mom's ம் கூட ஒரு நல்ல நிகழ்ச்சி தான் நான் மறுக்கவில்லை; ஆனால் எனக்கு இயல்பாகவே மற்றையது பிடித்திருந்தது.

ஆண்களாலும் பிள்ளை பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டால் உலகம் எப்படியிருக்கும் நிச்சயமாய் ஒரு சைன்ஸ் பிக்ஷன் கதை எழுத முடியும். சைன்ஸ் பிக்ஷன் என்றதும் நினைவிற்கு வரும் சுஜாதா ஐயாவை என்னால் ஒரு தீவிரமான ஆணாதிக்கவாதி என்று சொல்லமுடிந்தாலும் அந்த வம்பை இங்கே இழுக்கவில்லை. அதேபோல் சமீபத்தில் ஒரு நபர் நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு குங்குமத்தில் 'பெண்களை சுலபமாக ஏமாற்ற முடியும்' என்பதை திரும்பவும் நிரூபித்திருக்கிறார் என்ற அவருடைய பதிலை தூக்கியெறிந்துவிட்டு மற்றொரு கேள்வியான பெண்கள் இல்லாத உலகம் பற்றிய கேள்விக்கான பதிலை எடுத்துக் கொள்ளலாம்.

அவர் சொல்லியிருந்த பதில் எவ்வளவு காலம் அப்படியிருக்க முடியும் ஒரு நூற்றாண்டுக்குள் உலகம் மடிந்துபோய்விடும்(Exact ஆன வரிகள் கிடையாது நினைவில் இருந்து சொல்கிறேன்) என்று சொன்னார். ஆனால் அறிவியல் இந்த அதிசயத்தைச் சாதித்தால் ஒருவேளை அந்த நபர் கேட்டிருந்த கேள்விக்கான பதிலாக சுஜாதா மற்றொன்றை சொல்லியிருப்பார் என்று நம்பலாம்.

ஆனால் உயிரினங்களில் சில அரியவகை உயிரினங்கள் அழியும் பொழுதே அவற்றைக் காப்பாற்ற பெரிய இயக்கங்கள் வரும்பொழுது இத்தனை நூற்றாண்டுகளாய் உலக இயக்கத்திற்கு வழி செய்த பெண்களை ஒழித்துவிடுவதும் கூட சைன்ஸ் பிக்ஷனிலேயே சாத்தியமாகலாம்.

Related Articles

10 comments:

  1. ஏனிந்த கொலவெறி சுஜாதாவை ஏன் உங்கள் விளையாட்டில் இழுக்குறீங்க.

    ReplyDelete
  2. இந்த வாரம் விகடனில் கூட சுஜாதா பெண்கள் பற்றிய கேள்வியொன்றிற்கு பதில் அளித்திருந்தார். ஞாபம் வரமாட்டேன் என்கிறது வீட்டிற்குப் போய் தேடிப்பிடிச்சு அப்டேட் செய்றேன்.

    ReplyDelete
  3. கடல் குதிரைப்பற்றி சொல்லும் இடத்தில் ஏன் சபிக்கப்பட்ட ஆண்கள் என்று உங்களின் வழக்கமான சித்தாந்தத்தை இழுத்து வந்து விட்டீர்கள் :-))(ஒரு வேளை அனிமல் பிளானெட்ப்பார்க்க உங்கள் அக்கா தூங்கும் வரை காத்திருக்க வேண்டிய கடுப்பா?)

    நல்ல வேளைப்பெண்ணியவாதிகள் அறிவியல்ப்பூர்வமான செய்திகளின் மீது அதிகம் ஆர்வம் காட்டிப்படிப்பதில்லை போலும் இல்லை என்றால் உங்களுக்கு டின் கட்டி இருப்பார்கள் :-))

    இந்த சீ ஹார்ஸ் மட்டும் எனக்கு மறக்கவே மறக்காது உயர்நிலைபள்ளிப்படிக்கும் போது ஒரு குயிஸ்ப்போட்டில் இந்த கேள்விக்கு நான் மட்டும் தான் பதில் சொன்னேன். போட்டி முடிந்ததும் அதை நடத்தியவரே வந்து இந்த கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை, சொல்ல மாட்டார்கள் என நினைத்தேன் என பாராட்டினார்.

    நத்தையில் ஆண் பெண் என தனியே உண்டு, அதே சமயம் பெண் இல்லாத சமத்தில் ஆணே சுய கருவுருதல் முறையில் குஞ்சுப்பொறிக்கும் (நத்தைப்பற்றி பதிவும் போட்டுள்ளேன்)

    மண்புழுக்களும் அப்படித்தான் சுய இனப்பெருக்கம் செய்யவல்லவை. ஹெர்மா புராடக்ட்(hermaphrodite)

    சீஹார்ஸ் அவற்றை விட வித்தியாசமானது தான்!

    ReplyDelete
  4. //ஒரு வேளை அனிமல் பிளானெட்ப்பார்க்க உங்கள் அக்கா தூங்கும் வரை காத்திருக்க வேண்டிய கடுப்பா?//

    குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணாதிகப்பே! கடல்குதிரை பத்தி நான் சாதாரணமா எழுதணும்னா விக்கிபீடியா கட்டுரைக்கு லிங்க் கொடுத்துட்டு கம்முன்னு இருக்க வேண்டியது தான். இது தான் என் மொழி ;).

    ஜல்லியடிக்காமல் பதிவெழுதினா வாத்தியார் கோச்சுப்பார்.

    ReplyDelete
  5. ஹூம் ஆரம்பிச்சாச்சா ??? குளோனிங்ல ஆண் உதவியே தேவையில்லைலே, ஒரு பெண் கர்பமாக :-))))

    ReplyDelete
  6. இன்னிக்கு எனக்கு தூக்கம் வந்திடும் ஹாஹாஹா.

    சொல்லப்போனால்

    //குளோனிங்ல ஆண் உதவியே தேவையில்லைலே, ஒரு பெண் கர்பமாக :-))))//

    இதுக்காக எழுதினதுதான்னே கூட நீங்க வைச்சிக்கலாம். மேற்சொன்ன பதிவை தப்பே இல்லை.

    //ஆனால் உயிரினங்களில் சில அரியவகை உயிரினங்கள் அழியும் பொழுதே அவற்றைக் காப்பாற்ற பெரிய இயக்கங்கள் வரும்பொழுது இத்தனை நூற்றாண்டுகளாய் உலக இயக்கத்திற்கு வழி செய்த பெண்களை ஒழித்துவிடுவதும் கூட சைன்ஸ் பிக்ஷனிலேயே சாத்தியமாகலாம்.//

    இதை எழுதிய நான் சொல்கிறேன். உலகில் ஆண்களே இல்லாமல் போகும் நிலை வந்தால் - எக்ஸ்கியூஸ் மி - இங்க பூமி இருக்காது உஷாக்கா.

    நீங்க வேறு கிரகத்துக்குப் போய் தான் அதைச் செய்யவேண்டிவரும். இதற்கு வேண்டுமானால் அமேரிக்கப் பிரஜை(ஓக்கே ஓக்கே இந்திய வம்சாவளி) சுனிதா வில்லியம்ஸ் உதவக்கூடும். ;)

    ReplyDelete
  7. தாசு, எந்த ஒருபால் முற்றிலும் இல்லாமல் போனால் மற்றவர்களுக்கு வாழ்க்கை சுவார்சியம் இழந்துவிடும். அப்புறம் யாருடன் சண்டை போடுவது :-)

    ReplyDelete
  8. எங்கெல்லாம் பெண் ஈயம் காச்சி ஊத்தப்படுகிறதோ அங்கெல்லாம் ஏகாம்பரி சாரி சாரி உஷாக்கா இருப்பாங்க என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது!! :))

    தல, கொஞ்ச நாள் முன்னாடி படிச்சேன். எதோ ஒரு மிருகக்காட்சி சாலை (ஆமாம், இதை ஏன் இப்போ உயிரியல் பூங்கான்னு சொல்லறதுதான் பொலிட்டிக்கலி கரெக்ட்?) ஒன்றில் ஆண் சுறா மீன்கள் இல்லாத இடத்தில் பெண் சுறா மீன் ஒன்று கருவுற்று இருக்கிறதாமே.

    இதைப் பற்றி சில பதிவுகளில் விலாவாரியாக வரும் பாருங்கள்! :-)

    ReplyDelete
  9. உஷாக்கா என்னால் அதை முழுவதுமாக புரிந்துகொள்ள முடிகிறது. சண்டை என்பதைவிடவும் சுவாரசியம் போய்விடும் நிச்சயமாய்.

    ReplyDelete
  10. இலவசக் கொத்தனார் - அப்படியா!

    கருவுற்று இருக்கிறதா? குழந்தை பிறந்துவிட்டதா! ஏன் கேட்கிறேன் என்றால் ஏதும் ஏலியனின் வேலையாயிருக்குமா என்று தான் ;-)

    ReplyDelete

Popular Posts