அடித்துச் சாத்திய கதவின் ஒலியலைகள்
மிதந்தபடி சொல்லிச் செல்கிறது
முன்னம் சாத்தப்பட்ட தருணங்களை
வார்த்தைகளின் தேவையில்லை உனக்கு
எனக்கும் கூடத்தான்
உன் நிராகரிப்பின் என் வெறுமை
வார்த்தைகளைத் தொக்கி நிற்பதில்லை
காலம் இன்னிசையோடு அள்ளித் தெறித்து
வரைந்து செல்லும் ஓவியத்தினுள்
தூக்கத்தை தொலைத்தபடி
நம் பிம்பங்களுக்குள் கரைந்து போகிறேன்
உன் இருப்பு ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தையும்
மன்னிப்பின் சாத்தியக்கூறுகளையும்
ஒன்றாய்ப் புறக்கணித்தபடி
இன்னொரு நாளுக்கான தேவையில்லை
உள்ளிருந்து உருக்கும் நினைவுகளை
உன்னிடம் கொட்டிக் கவிழ்க்க
ப்ரார்த்தனைகளுடனே தொடர்கிறேன்
ஆறுதல்படுத்த முடியாதபடி அலையும்
உன் பிரிவின் சோகம்
வார்த்தைகளாய் மொழிபெயர்க்கப்படவேண்டி
புனைவின் நீளமாய் நம்மிடையே சுவர்
விளிம்பளவு ஏறியபின்னும்
தோல்வியின் சுவடறிந்து தவிர்த்துவிடுகிறேன்
நாம் பிரியும் சாத்தியக்கூறுகளை
முன்பொருமுறை மறுத்தளித்ததைப் போல்
உபயோகமில்லாத உன் முகவரியைப் போல்
----------------------------------------------------
இதை Backstreet Boysன் லேட்டஸ்ட் வெளியீடான Inconsolable ன் தாக்கத்தில் எழுதியது. தாக்கம் தெரிகிறதா? இன்னும் பிரகாசமாக இதில் தெரியும் என்று நினைக்கிறேன். இது தான் முதல் முறை மனதில் தோன்றியதை அப்படியே எழுதியது. மேலேயிருப்பது மாற்றங்களுக்கு உள்ளானது.
எத்தனையோமுறை சாத்திய நினைவுகளை
மீண்டும் எழுப்பியது இன்று இன்னுமொறுமுறை சாத்தப்பட்ட கதவு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நீ என்னைப் பிரிந்த பிறகான வெறுமையால்
வெட்டி எறியப்பட்ட காட்சியொன்றின் நிராகரிப்பின் வலியை நான் உணர்கிறேன்
உறங்க நினைக்கும் என்னை மீட்டெழுப்புகிறது காலம்
உன்னுடனான என் நினைவுகளை இசைத்தபடி
ஆயிரக்கணக்கான என் தவறுகளுக்கான மன்னிப்பை
உணர்ந்திருக்கும் இன்று, கேட்டிருப்பேன்
நிச்சயம் நீ இருந்திருந்தால்
உள்ளிருந்து உருக்கும் நினைவுகளை
உன்னிடம் கொட்ட
இன்னொரு நாளுக்கான பொறுமையில்லை என்னிடம்
உன்னைப் பிரிந்ததும் ஆறுதலடையவே முடியாதவனாகிற சோகம்
உன்னிடம் வார்த்தைகளாகி சரணடையவேண்டும்
என்ற ப்ரார்த்தனையுடன் நான்
நமக்கிடையேயான சுவரின் விளிம்பளவு ஏறிவிட்டாலும்
தோல்வியினால் விழப்போகும் உயரமறிந்து
இயலாமல் போய்விடுகிறது என் முயற்சிகள்
தெரிந்தேயிருக்கும் உன் முகவரியின் தேவையைப்போல
எல்லா சமயங்களிலும் நீ என்னுடன் இருந்துவிடுவாய் என்ற நம்பிக்கையைப் போல
---------- உண்மையான வரிகள் ------------
I close the door
Like so many times, so many times before
Felt like a scene on the cutting room floor
When I let you walk away tonight
Without a word
I try to sleep, yeah
But the clock is stuck on thoughts of you and me
A thousand more regrets unraveling, ohh
If you were here right now, I swear,
I'd tell you this
CHORUS:
Baby I don't want to waste another day
Keeping it inside it's killing me
Cause all i ever want, it comes right down to you (to you)
I wish that I could find the words to say
Baby I would tell you every time you leave
I'm inconsolable
I climb the walls
I can see the edge but I can't take the fall, no.
I've memorized the number
So why can't I make the call?
Maybe 'cause I know you'll always be with me
In the possibility
CHORUS:
Baby I don't want to waste another day
Keeping it inside it's killing me
Cause all I ever want, it comes right down to you
I wish that I could find the words to say
Baby I would tell you every time you leave
I'm inconsolable
I don't want to be like this,
I just want to let you know,
Everything that I'm holding,
Is everything I can't let go, can't let go.
CHORUS:
Baby I don't want to waste another day
Keeping it inside it's killing me
Cause all I ever want, it comes right down to you
I wish that I could find the words to say
Baby I would tell you every time you leave
I'm inconsolable
Don't you know it baby
I don't want to waste another day
I wish that I could find the words to say
Baby I would tell you every time you leave
I'm inconsolable
------------------------------------------------------------------
இன்னொரு ஓவியம்...(பெரிதாய்ப் பார்க்க படத்தின் மேல் கிளிக்கவும்...)
ஆறுதல்படுத்த முடியாதபடி அலையும் சோகம்
பூனைக்குட்டி
Friday, October 12, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
மேலேயுள்ள கவிதையை விட நீங்கள் முதலிலே எழுதிய கீழேயுள்ள கவிதை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteசந்திரவதனா - வாங்க ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.
ReplyDeleteமேலேயுள்ளதை விட மட்டும் தானா இல்லை கவிதைன்னு சொல்லலாமா நான் எழுதியதை?
எனக்கும் கீழே எழுதியதை முதலில் பிடித்திருந்ததால் தான் மரத்தடிக்கு அதை அனுப்பினேன். ஆனால் சொற்களின் விரயம் அதில் அதிகமாகவும் இன்னும் நன்றாகவும் எழுத நினைத்து எழுதியது மேலேஉள்ளது.
ஆனால் மேலே உள்ளதை எழுதிய பிறகு எனக்கு அது தான் மிகவும் பிடித்திருக்கிறது.
மனதை உருக்கிய ஒரு மனதின் குரல் இது. ஒரு நிமிடம் என்னை கலங்க அடித்து விட்டது. எந்த சோகத்திற்கும் காலமே மருந்து. எல்லாம் கடவுள் செயல்.
ReplyDelete