நான் எழுதும் பதிவுகளை என்னைத்தவிர யாரும் ரொம்ப சீரியஸா எல்லாத்தையும் படிப்பாங்களான்னு எனக்கு எப்பவுமே ஒரு டவுட் உண்டு; ஏன்னா நான் அப்படி படிக்கும் பதிவுகளின் எண்ணிக்கையை வைத்தும். என் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கவுன்டர் சொல்லும் உண்மைகளை வைத்தும் தான்.
"...பின்னர் சிவக்குமாரிடம் நீங்கள் பங்குவணிகத்தில் ஈடுபடுகிறீர்களா என்று கேட்டு பின்னர் அதைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். முகுந்த் நான் பங்குச்சந்தைப் பற்றி தெரிந்துகொள்ள சோம. வள்ளியப்பனின் "அள்ள அள்ளப் பணம்" நன்றாகயிருக்கும் என்றார். தான் முதலில் கொஞ்ச காலம் நேரடி பங்கு வர்த்தகத்தில் இருந்தாலும் இப்பொழுதெல்லாம் மியூட்சுவல் பண்ட் தான் என்று சொல்லி கொஞ்சம் பயப்படவைத்தார். நான் பருப்பு மாதிரி வாழ்க்கையில் எப்பவும் தான் ரிஸ்க் எடுத்துக் கொண்டேயிருக்கிறோமே இதிலும் எடுப்போம் என்று கூறினேன். மா. சிவக்குமார் தன்னுடைய பாயாசத்தை என்னிடம் கொடுத்ததற்கு என்னுடைய ரம்பம் தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை..."
என்று கோவை வலைபதிவர் சந்திப்பின் பின் எழுதி நான்கு மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அள்ள அள்ளப் பணத்தை கைகளில் பார்க்க இத்தனை நாட்கள் ஆனதற்கு நானொருவனே தனிப்பட்டமுறையில் காரணமாகயிருக்கமுடியும். பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்னர் சட்டென்று சனியனாய் முளைத்த இன்னொரு பிரச்சனை. பிரச்சனைகள் முடிந்து ஆராம்சேயாய் உட்கார்ந்த நேரம் பங்குச்சந்தை மீண்டும் இன்னொரு உச்சத்தை எட்டியிருந்தத்து 19,000 BSE.
என் கியூபிக்கில் அமர்ந்திருக்கும் மற்ற இரு நபர்களுமே பங்குச்சந்தையில் கொட்டை போட்டவர்கள் என்று சொல்லலாம் - ஒரு நபர் ஏறக்குறைய 5 லட்சங்களுக்கு இன்வெஸ்ட் செய்துவிட்டு எப்பொழுதும் ICICI Directன் பக்கத்தை திறந்து உட்கார்ந்திருப்பார்(10.30 - 3.30) பின்னர் அன்றைய நாளுக்கான Analysis நடக்கும் 3.30க்குப் பின்னர். இப்படி நாளொன்றுக்கு சரியான அளவிளான நேரத்தை பங்குவணிகத்தில் செலவிட்டால் மாதம் பிறந்தால் சம்பளம் தந்து தனக்கு மூன்றுவேளை சோறுபோடும் தன் முதலாளிக்காவது நேர்மையாக இருக்கிறாரார்களா என்று கொஞ்சம் சுயநேர்மையைக் கேள்வி கேட்கும் புண்ணியவான்களுக்கு(!!!) பதில் என்னிடம் இல்லை வேண்டுமானால் உண்மையில் எங்கள் முதலாளியிடம் இருக்கலாம். ஆனால் எங்கள் வேலையில் மீது திருப்தி இல்லாவிட்டால் மாதாமாதம் சம்பளமும் கொடுத்து வருடக்கடைசியில் போனஸும்/அப்ரைசலும் கொடுப்பது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம் தான். ஒருவேளை 'கோடி'களில் புலங்குபவர்கள் முட்டாள்களாக இருப்பார்களோ! ம்ம்ம் இருக்கலாம் ஏனென்றால் அவர்கள் பதிவெழுதுவதில்லையே!
அப்படிப்பட்ட ஒரு நல்லநாளில் தான் நானும் ICICIல் Demat அக்கவுன்ட்டும் ட்ரேடிங் அக்கவுன்ட்டும் தேவைகளுக்காக ஒரு சேவிங் அக்கவுன்ட்டும்(Shaving இல்லை saving) திறந்தேன். அதற்கு நாட்கள் அதிகமானதாலும் மார்க்கெட் இன்வெஸ்ட் செய்யும் நிலையில் இருந்ததாலும் நண்பருக்கு 10,000 ரூபாய் அனுப்பி ஷேர் வாங்கச் சொல்லி என்னுடைய ட்ரேடிங் வாழ்க்கையைத் தொடங்கினேன். உண்மையில் ரிஸ்க் எடுப்பதில் எனக்கிருக்கும் இயல்பான விருப்பம் தான் என்னை இதில் இறங்கச் சொன்னாலும் சோம. வள்ளியப்பனின் அள்ள அள்ளப் பணம் I & II அதற்கான தைரியத்தை எனக்குக் கொடுத்தது என்று சொல்லலாம்.
உண்மையில் நான் என்ன விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேனோ அதைத் தெளிவாக விளக்கியது அள்ள அள்ளப் பணம் புத்தகம். ஏற்கனவே ஆங்கிலத்தில் கட்டுரைகளாகவும் நண்பர்களுடன் இந்தி/ஆங்கிலத்தில் உரையாடல்களாகவும் என் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பியிருந்தேன் என்பதால் என்னுடைய தேடல் எது என்று எனக்குச் சரியாகத் தெரிந்திருந்தது ஆனால் இப்படி புதிதாய் ஷேர் மார்கெட்டில் இன்வெஸ்ட் செய்யப்போகும் ஒருவர் எதிர்பார்ப்பது என்ன என்பது தெரிந்து எழுதப்பட்டிருப்பது அதிசயம் என்று தான் சொல்வேன் நான்.
ஓவராய் தியரியாகச் சொல்லி போரடிக்காமல் அதே சமயம் வெறும் ப்ராக்டிக்கல் அப்ரோச்சாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து எழுதப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் வெற்றியின் முக்கிய காரணம். கூட வேலை செய்யும் டிரேடிங் புலிகளிடம் இப்படி ஒரு விஷயம் செய்யத் துணிந்திருக்கிறேன் என்று சொன்னதும் அப்படி ஒன்றும் ஆதரவு அலைகள் எதுவும் எழவில்லைதான். சொல்லப்போனால் மிரட்டியவர்கள் தான் அதிகம் - அதிலும் இன்வெஸ்ட் செய்யும் நண்பர்களே கூட! ஆச்சர்யமாயிருக்கிறதா - எனக்கு இல்லை.
சரிதான் என்று நினைத்தவனாய் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி Reliance Energy ஒரு ஷேர் 1475 க்கு என்று 10,000 ரூபாய்க்கு 6 ஷேர் வாங்கிப் போட்டேன் வெள்ளிக்கிழமை(19/10/2007). சாயங்காலம் 1350ல் நின்றுகொண்டிருந்தது. சோம.வள்ளியப்பன் புத்தகத்தில் சொல்லியிருப்பது போல் இரவு - பகல் லாஜிக் என்று நினைத்து நான் ஒன்றும் பெரிசாய் கவலைப்படவில்லை. என் மனதில் ஒரு கணக்கு இருந்தது 20% அதிகம் அவ்வளவே. அது இரண்டு நாளில் கிடைத்தாலும் சரி - ஒரு வருடத்தில் கிடைத்தாலும் சரி என்று. மார்கெட், நண்பர் சொன்னது போலவே அடுத்த ட்ரேடிங் நாள் முன்னோக்கி நகர நான் காத்திருந்தேன் அடுத்த செவ்வாய் கழிந்து புதன்(24/10/2007) வரை என் கணக்கு 20% க்கு மேல் வந்த நிலையில் 1670 ரூபாய்க்கு சட்டென்று அவரிடம் விற்கச் சொல்லிவிட்டேன். மூன்று நாட்களில் 20% லாபம் சொல்லப்போனால் 2000 ரூபாய். இதை இங்கே சொல்ல வந்ததன் காரணம் என்னவாய் இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
என் மாமா என்னிடம் ஷேர் மார்கெட்டைப் பற்றி படித்துக் கொண்டு விசாரித்துக் கொண்டோ இரு என்று சொன்ன பொழுது என் வயது 16 - 17 இருக்கும். நான் உண்மையில் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது வயது 24 சொல்லப்போனால் 7 ஆண்டுகள் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. ஆனால் என்னுடைய பைனான்சியல் பொஸிஷன் அப்படி என்று வைத்துக் கொண்டாலும் பைனான்ஸியலி நான் ஸ்ட்ராங்கான கடைசி மூன்று வருடங்களில் கூட நான் அதைச் செய்யவில்லை. இப்பொழுது தான் செய்யத் தொடங்கியிருக்கிறேன். இன்று நான் லாபம் சம்பாதித்ததைப் பற்றி பெருமை பேச இதைச் சொல்லவில்லை, பணம் தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு ஒரு ஆலோசனையாய் டிரேடிங்க் செய்யச் சொல்லவும் இதை எழுதவில்லை. எனக்குத் தெரிந்து அள்ள அள்ளப் பணம் புத்தகத்தை வாங்கி ஒரு முறை புரட்டிப் பாருங்கள் அவ்வளவே.
ஏன் என்றால் ட்ரேடிங்க் செய்வதென்பது பணத்துடன் சம்மந்தப்பட்டது இன்னமும் பணத்தை லக்ஷ்மிகரமான விஷயமாக நினைத்து வேடிக்கைக்கான ஒன்றாக விளையாட்டாக பயன்படுத்த நிறைய பேருக்கு பயம் இருக்கும். என் அப்பாவிடம் இதைப்பற்றிச் சொன்னால் ஒரு மணி நேரம் வேறெதாவது விஷயத்தைச் சுத்திச் சுத்தி பேசி கடைசி ஐந்தாவது நிமிடத்தில் இங்கே வந்து நின்று கேட்பார் இது தேவையா என்று! ஆனால் நான் சொல்வதெல்லாம் ஒருமுறை படித்துப் பாருங்கள் என்பதுதான்.
----------------------------------
இந்த வருடம் பெங்களூர் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய பெரிய அளவிலான பதிவுகள் வெளிவரவில்லை காரணம் தெரியாது; பத்ரி ப்ராங்க்போர்ட் சென்றிருந்தது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாகவே நினைக்கிறேன். மனுஷ்யபுத்திரனும் வரலை(நினைக்கிறேன் - கடைசி நாள் வந்தாரா தெரியாது). நான் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வரவே நேரம் போதலை! மழை கொட்டியதால் ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாமல் காமெரா கொண்டு போகவில்லை. ஆனால் நிறைய நல்ல படங்களை மிஸ் செய்தேன். ராம் எனக்கு காலையில் ஃபோன் செய்து என்னை அழைத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய்வந்துவிட்டார்(சொல்லப்போனால் நான் தான் அவரை மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லணும் - சனிக்கிழமை காலை தூக்கம் வராததால் காலையிலேயே கிளம்பி புத்தகக் கண்காட்சிக்குப் போய்ட்டு வந்துட்டேன்). நான் சாட்டிங்கில் அன்றிரவு, என்னை அழைத்துச் செல்லாததற்காக நல்லப்புள்ளை போல் திட்டினேன் வாங்கிக் கொண்டார்.
வழக்கம் போல் காலச்சுவடு - உயிர்மை - கிழக்கு தான் என் நோக்கமாகயிருந்தது. மூன்றிலும் இந்த முறை கொஞ்சம் அதிக புத்தகம் அள்ளினேன் என்று நினைக்கிறேன். ஆனால் வாரநாட்களில் மழை பெய்ததால் இரண்டாம் நாள் சனிக்கிழமையும் ஒன்பதாம் நாள் சனிக்கிழமை மட்டுமே புத்தக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். கிழக்கில் ரெகுலர் கஸ்டமர்னு சொல்லி 15% டிஸ்கவுண்ட் கொடுத்ததை இங்கே குறிப்பிட வேண்டும் என்னை மீண்டும் நினைவில் வைத்திருந்தவரின் பெயர் நினைவில் இல்லை; போன தடவை பெங்களூர் புத்தகச் சந்தைக்கு வந்திருந்தீங்க இல்லையா என்று கேட்டார்! என்னை சென்னை புத்தக சந்தையிலும் அவர் பார்த்திருக்க வாய்ப்புண்டு. போன தடவை போல் பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தோ என்னமோ இந்த முறை கிழக்கே கிரடிட் கார்ட் ட்ரான்ஷாக்ஷன் செய்யும் வசதியுடன் வந்திருந்தார்கள். ஆனால் நான் பொய் ஒன்றும் சொல்லவில்லை என்னுடன் வந்திருந்த நண்பர் ஒருவரிடம் இந்த முறையும் அதே கி.மு - கி.பி மதன் புத்தகத்தைக் காண்பித்து அருமையான புத்தகம் சார் வாங்கிக்கோங்க என்று மற்றொரு விற்பனைப் பிரெதிநிதி சொன்னார். மதன் எதுவும் காசுகொடுத்து ஆள் செட்டப் பண்ணியிருக்காரா கிழக்கில் தெரியாது!
ஜெயமோகனின் காடு, விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் ஏற்கனவே Anyindian.comன் ஷாப்பிங்க் கார்ட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. சரி இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஆட்டையைப்(காசு கொடுத்துத்தாம்ப்பே) போட்டுடலாம்னு நினைச்சேன் ஆனால் ஜெமோவை யாருமே எடுத்துவரலை(சில புத்தகங்கள் உயிர்மையில் இருந்ததுன்னு நினைக்கிறேன் - அங்கே தான் நினைவின் நதியில் வாங்கினேன்). வேறென்ன செய்ய ஷாப்பிங் கார்ட் காலியாய்டுச்சு இப்ப ;-). காலச்சுவடில் பிரமீள் நினைவோடை - சுந்தர ராமசாமி வாங்கினேன், ஒரே இரவில் அதுவும், நினைவின் நதியில் - ஜெயமோகனும் தொடர்ச்சியாகப் படித்தேன் கொடுத்து வைச்சிருக்கணும் நான்; இப்படி ஒரு காம்பினேஷன் கெடச்சதுக்கு. விமர்சனம் வருது வருது.
பிறகு பெண்ணிய ஜல்லி விமர்சனம் செய்வதற்காக - இந்துமதி - லக்ஷ்மியினுடைய சில புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டேன்(அதுவும் காசுகொடுத்துத்தான்).
என்னுடன் வேலைசெய்யும் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நீயும் என்கூட வாயேன் கொஞ்சம் புஸ்தகம் வாங்கிட்டு வரலாம் என்று சொல்லிக்கொண்டேயிருந்தார் முதல் வாரத்தில் இருந்து முதல் வாரம் எஸ்கேப் ஆகியிருந்தேன். அடுத்தவாரம் மாட்டிக்கொண்டேன்(ஹாஹா) அவர் மனைவி மற்றும் மாமியார் உடன் புஸ்தகம் வாங்க வந்திருந்தார் - ஜாவாவில் Head First Java வாங்கிக்கச் சொல்லிவிட்டு தமிழில் தாயுமானவன் - பாலகுமாரன் மட்டும் சஜஸ்ட் பண்ணினேன்.(பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் பற்றி ஒரு பதிவு வருது வருது வருது). அவர் விகடனில் நுழைந்து 'இவன் தான் பாலா' வாங்கினார் அங்கே அவரைத் திட்டினேன் அதை வாங்குவதற்காக. நான் வாலியின் கிருஷ்ண விஜயம் 1 & 2 வாங்கினேன்(வெறும் மணியம் செல்வம் ஓவியத்திற்காக).
நான் வாங்கிக் குமிப்பதைப் பார்த்த நண்பரின் மாமியார் "தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போலிருக்கே" என்று கேட்டார் எனக்கு முதலில் உள்குத்து புரியலை. நானும் எப்பவும் சொல்றதைப் போல், "இல்லம்மா எனக்கு இன்னும் கல்யாண வயசாகலை, 24 தான் ரன்னிங்..." பாவமேன்னு சொன்னேன். அப்புறம் அந்தப்பக்கமா திரும்பி அவங்க பொண்ணுக்கிட்ட "பொண்டாட்டி வந்து தான் இதையெல்லாம் திருத்தணும்னு" சொல்ல எனக்கு குபீரென்று சிரிப்பு வந்தது. ஆனால் இதெல்லாம் நடந்த உண்மை பதிவு செய்து வைக்கிறேன்(ஹாஹா).
பின்னர் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட நண்பர் கால்டாக்ஸி அரேன்ஞ் செய்துகொண்டார். நான் கீர போண்டாவில் புத்தககுவியலுடன் அல்ஸூரை நோக்கிப் பயணித்தேன். என் கம்பெனி கொடுத்த மிக அருமையான ப்ரொடக்ட்டான(என் கம்பெனி ஒரு ப்ரொடக்ட் ஓரியண்ட்டட் கம்பெனி - ஆனால் Bag தயாரிப்பில் இல்லை) Bagன் மீதான நம்பிக்கையில் அடாத மழையிலும் கிளம்பினேன். சுமார் 10 கிலோமீட்டர் இருக்கணும்(கூடவும் இருக்கலாம்) ஒரு சொட்டு தண்ணி கூட பைக்குள்ள வரலை!!!. அருமையான பை ஒன்றைக் கொடுத்த எங்க கம்பெனிக்கு ஒரு ஓ!!!
நண்பர் ஒருவர் புத்தகக் கண்காட்சிக்கு போவதுவும் புத்தகம் வாங்வதும் அதைப் புகைப்படமாய் போடுவதும் விமர்சனம் எழுதுவதும் அறிவாளி என்று சொல்லிக்கொள்ளத்தான் ஆனால் அப்படியெல்லாம் செய்தால் அறிவாளி என்று அர்த்தம் இல்லை என்று சொன்னார். அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். கீழிருக்கும் புகைப்படங்களும் ;-)
பெரிதாய் தெரிய புகைப்படத்தின் மேல் கிளிக்கவும்...
In Only ஜல்லிஸ் சுய சொறிதல் புத்தகங்கள் பெங்களூர்
பெங்களூர் புத்தக கண்காட்சி - அள்ள அள்ளப் பணம் - ஜல்லி
Posted on Monday, October 29, 2007
பெங்களூர் புத்தக கண்காட்சி - அள்ள அள்ளப் பணம் - ஜல்லி
பூனைக்குட்டி
Monday, October 29, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
சிறு வயதிலேயே தோன்றிய ஆசை இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது. அது தமிழில் ஒரு வளைத்தலம் அமைக்க வேண்டுமென்பது. பல முறைகளiல் முயன்று இப்பொழுது...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
//"பொண்டாட்டி வந்து தான் இதையெல்லாம் திருத்தணும்னு"//
ReplyDeleteசரியாத்தான் சொல்லியிருக்காங்க அந்தம்மா
//பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் பற்றி ஒரு பதிவு வருது வருது வருது//
ReplyDeleteசீக்கிரம் சீக்கிரம்.
////"பொண்டாட்டி வந்து தான் இதையெல்லாம் திருத்தணும்னு"//
புக் வாங்கறது அவ்வளவு குத்தமா?
இந்த வாசகங்கள் பின்னே ஒளிந்திருக்கும் நுண்ணரசியலை கண்டு பிடித்து விட்டேன்.
யுவர் ஆனர் இதன் மூலம் எதிர்க்கட்சிக்காரர், பெண்கள் எல்லாருமே புத்தகங்கள் மற்றும் அறிவுசார்ந்த விஷயங்களுக்கு எதிரிகள் என்று மறைமுகமாக ஒரு கருத்தை பரப்ப முயல்கிறார்.
ஆகவே இந்த பதிவின் முலமும் தான் ஒரு ஈயவாதி என்பதை நீருபித்து விட்டார். எனவே இந்த பதிவின் டேக்லைனாக ஈயத்தையும் சேர்க்கச் சொல்லி ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்.
அப்பாடா எப்படியோ ஒரு பிரச்சினையைக் கிளப்பியாச்சு. இனிமே ரெடி ஸ்டார்ட் மியூஜிக்.
சரி மேல இருக்கிற மொக்கை மெசேஜை விடுங்க.
ReplyDeleteஅள்ள அள்ளப் பணம் எப்படி தைரியமாக வாங்கலாமா? இது தொடர்பான வேறு ஏதேனும் புத்தகங்கள் இருக்கின்றதா இதைத் தவிர்த்து?
புத்தகங்களை எல்லாம் பார்த்தா கொஞ்சம் இல்லை நிறைய்ய்ய்ய்ய்ய்யவே பொறாமையா இருன்க்குதூ அதான் கடுப்புல மேல அப்படி ஒரு மெசேஜை போட்டு கிளப்பி விட்டேன்.
உடனடியாக ஒரு 4 புக்கை கூரியரில் அனுப்பி வைத்தால் பின் விளைவுகளைத் தவிர்க்கலாம்.
அனானிமஸ் ஏன் இந்த கொலைவெறி! :(
ReplyDeleteநந்தா பயணிக்கள் கவனிக்கவும் வருது வருது...
ReplyDeleteநுண்ணரசியல் எல்லாம் சரிதான் ஆனால் நடந்ததைத்தான் சொன்னேன் நான்.
அள்ள அள்ளப் பணம் அருமையான புக் நான் கியாரண்டி வாங்குங்க. ஆனால் ட்ரேடிங்க் மீது தனிப்பட்ட ஆர்வம் முக்கியம் அதைவிட முக்கியம் உங்கக்கிட்ட தூங்குற அளவுக்கு பணம் இருக்கிறது!
ஆனால் எல்லோரும் படிக்கவேண்டிய புத்தகம் அது. நம்மைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கவாவது படிக்கணுங்கிறேன்.
//சில சமயங்களில், ப்ரொஜக்ட் டெலிவரியின் பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக பதினோரு மணிவரை வேலைபார்க்க வேண்டிவரும். உங்களுக்கு சாப்ட்வேர் பற்றித் தெரிந்திருந்தல், சில சமயம் பில்டுகள் ஊற்றிக் கொள்ளும், உங்களால் தான் என்றில்லை என்றாலும் சுத்தி வளைச்சு உங்க பேர்ல வந்து ஊத்திக்கும்.
ReplyDeleteஅப்பல்லாம் அந்தப் பொண்ணுங்க காணாமப் போயிருப்பாங்க, திரும்பவும் அந்தம்மாக்கள் அடுத்த நாள் வந்து சரிசெய்து தரும் வரைக்கும் வேலை உட்கார்ந்திருக்க முடியாது. // இப்படி பாதில விட்டுட்டு ஓடிப்போற பொண்ணுங்களுக்கு சம்பளமும், வருஷா வருஷம் அப்பரைசலில் நல்ல ரேங்கும் அதுக்காக சம்பள உயர்வும் கொடுக்கறவங்க வேணும்னா முட்டாளாயிருக்கலாம்(என்னதான் கோடில புழங்கினாலும், பதிவெழுதாம இருந்தாலும் கூடத்தான்). ஆனா நாள் முழுக்க பங்கு வணிகமோ பதிவோ எதோ ஒரு விதத்துல எழவு கொட்டினாலும் ஆம்பிளை சிங்கங்களுக்குப் படியளக்கற புண்ணியாத்மாக்களையெல்லாம் யாராச்சும் நாக்கு மேல பல்லு (அல்லது பல்லு மேல நாக்கோ - ஏதோ ஒன்னை) போட்டு முட்டாள்னெல்லாம் சொல்லிட முடியுங்களா?
//இந்த வருடம் பெங்களூர் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய பெரிய அளவிலான பதிவுகள் வெளிவரவில்லை காரணம் தெரியாது; பத்ரி ப்ராங்க்போர்ட் சென்றிருந்தது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாகவே நினைக்கிறேன். மனுஷ்யபுத்திரனும் வரலை(நினைக்கிறேன் - கடைசி நாள் வந்தாரா தெரியாது). நான் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வரவே நேரம் போதலை! மழை கொட்டியதால் ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாமல் காமெரா கொண்டு போகவில்லை. ஆனால் நிறைய நல்ல படங்களை மிஸ் செய்தேன். ராம் எனக்கு காலையில் ஃபோன் செய்து என்னை அழைத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய்வந்துவிட்டார்(சொல்லப்போனால் நான் தான் அவரை மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லணும் - சனிக்கிழமை காலை தூக்கம் வராததால் காலையிலேயே கிளம்பி புத்தகக் கண்காட்சிக்குப் போய்ட்டு வந்துட்டேன்). நான் சாட்டிங்கில் அன்றிரவு, என்னை அழைத்துச் செல்லாததற்காக நல்லப்புள்ளை போல் திட்டினேன் வாங்கிக் கொண்டார்.
ReplyDelete//
அடபாவி... எங்களுக்கு முன்னாடியே போயிட்டு வந்துட்டுதான் அன்னிக்கு அவ்வளோ பேச்சா???? ஹிம் ஒன்கூட நாங்க ஹோட்டலுக்கு வந்தோப்பவே தயிர்சாதத்தை கூட நார்த்-இண்டியன் ஐயிட்டமின்னு சொல்லி இல்லேன்னு சொன்னானுக..... இதிலே
புத்தககண்காட்சி'லே என்னான்னால்லாம் நடக்குமோன்னு தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா போன் பண்ணலையான்னு கேட்கக்கூடாது.... :)
ஏன்னா அதுதான் உண்மை.... ;)
/பிறகு பெண்ணிய ஜல்லி விமர்சனம் செய்வதற்காக - இந்துமதி - லக்ஷ்மியினுடைய சில புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டேன்(அதுவும் காசுகொடுத்துத்தான்).//
தானா போயி மண்டைய கொடுத்து குட்டு வாங்கிறதிலே அப்பிடியொரு சொகம் போலே... :)
லக்ஷ்மி,
ReplyDeleteநான் நீங்கள் வெட்டி ஒட்டியிருக்கும் விஷயத்தை எழுதியதும் நினைவில் இருந்தாலும் எதற்காக எங்கே எழுதினேன் என்பது நினைவில் இல்லை, வாயை எதுவும் லூஸா விட்டிருந்தேனா என்று வெரிஃபை செய்வதற்காகத்தான் உங்களிடம் உரல் கேட்டேன் உரலை கொடுத்ததற்கு நன்றி.
நான் உங்களிடம் அந்தப் பதிவில் சொன்னது போல் திருமணம் ஆன/ஆகாத பெண்கள் கம்பெனியின் அலுவல் நேரத்திற்குப் பிறகு வேலை செய்யாமல் இருப்பது என்பது அவர்களுக்கு(பெண்களுக்கு) கம்பெனி கொடுக்கும் ஒரு சலுகை அவ்வளவே.
மற்றவற்றைப்/மற்றவர்களைப் பற்றித் தெரியாது ஆனால் நான் சில பெண்கள் சீக்கிரம் செல்வதால் நான் பிக்ஸ் செய்த Bug களின் எண்ணிக்கையைச் சொல்லி அப்ரைஸல் வாங்கியிருக்கிறேன். அப்ரைஸல் மீட்டிங்கில் நான் இதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை ஏனென்றால் பெரும்பான்மையான சமயங்களில் PM என்னுடன் இருந்திருக்கிறார்.
இதைப் பற்றி சண்டை போடும் பொழுதுகளில் you cant explain this to the client என்று சொல்லி வாயை மூடிவிடுவார். அங்கே மூடப்பட்ட வாய் அப்ரைஸல் பொழுது இன்னும் விரிவாகத் திறந்து வாங்கிக்கொண்டிருந்திருக்கிறது(அப்ரைஸலை).
-------------------
என்னைப் பொறுத்தவரை தேவையாக இருக்கும் பொழுதும் லேட்டாக வேலை செய்யாமல் பெண்கள் வீட்டிற்குச் செல்வதென்பது அவர்களுக்கு Software Industry கொடுக்கும் சலுகை தான்.
ராம் அண்ணே,
ReplyDeleteதயிர்சாத மேட்டர் இன்னிக்கு நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கக் கூடிய ஒன்றுதான். ம்ம்ம்.
ஆனாலும் நீங்கள் ஃபோன் செய்யாதது குற்றமே!
If you have not done the following already, do it:
ReplyDelete1. Go to http://www.morningstar.com and read the investment tutorial (lessons & exercises) there. Very good and very simple.
2. Read the following two books: Investment for Dummies and Mutual Funds for Dummies.
3. Day Trading (or frequent trading) will be interested at the beginning. Once you get used (read as "incurred some heavy losses"), you will switch into "buy & hold" more. For all your retirement investments, go with mutual funds. Thats my suggestion. And for ur satisfaction of playing the stock market, have a separate investment for stocks. Once you have no time for following up stock market on daily basis, you will automatically switch into mutual funds. If you choose proper funds, you can buy it once and forget it for many years. Look for 5 year and 10 year returns on the funds before u get into long time investing on them.
4. Other way of playing in stock market is buying whole life insurance and investing that monthly premiums into stock market. This feature is available in USA and i am not sure if its there in India. But, its very risky and I dont recommend it. The thing is all your cash value for the insurance could become zero theoritically if stock market crashes.
5. Believe me, I have friends who lost a fortune in stock markets. So, the rule of thumb is, you cant beat the market :-). The worry free option would be going for index funds and then forget about it. Your idea of selling with 20% profit is a good one. If u make your thresold margin (my thresold margin to sell is 10% only) on profits, run with it happily. Greediness will get into trouble.
Thanks and regards, PK Sivakumar
பிகேஎஸ் கருத்தில் எடுத்துக் கொள்கிறேன் நீங்கள் சொன்ன விஷயங்களை ;)
ReplyDelete