ஒரு வழியாக டெல்லி வரை வந்தாகி விட்டது. அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணம் தொடங்கணும். இது வரை அத்தனைக் கடியாகலை. பெஙளூரில் இருந்து நேராய் ஆக்ராவிற்கு வந்துவிட்டேன். இங்கேயே என் திட்டத்தின் முதல் மாற்றம் நடந்துவிட்டது. ஆனால் நல்ல மாற்றம், பைசா அதிகம் செலவாகாமல் தாஜ்மகால் பார்த்துவிட்டு தில்லிக்கு வந்தாகிவிட்டது.
கர்நாடகா எக்ஸ்பிரஸ் பயணத்தில் 'குறட்டைச் சுதந்திரம்' என்றொரு கதையொன்று எழுதும் ஐடியா தோன்றியது. அதனால் அந்தத் தலைப்பை பதிவு செய்து வைக்கிறேன். ஆக்ராவில் கர்நாடகா எக்ஸ்பிரஸ் சென்று சேர்த்த பொழுது மணி 7.20 போல, நான் நேராய் ஹோட்டலுக்கு போகலாமா இல்லை தாஜுக்கே போய்விடலாமா என்று யோசனை செய்தேன். என்னவோ நினைத்தவனாய் தாஜிற்கு சென்றேன் நல்லதாய்ப் போனது. என்னால் மிக எளிதாய் உள்ளே செல்ல முடிந்தது. நான் தாஜில் இருந்து வெளியில் வரும் பொழுது 2 அல்லது 3 கிலோமீட்டருக்கு கியூ.
அதிகமாய் இல்லாமல் கொஞ்சம் புகைப்படம் எடுத்தேன். என்னை தாஜ் மகாலுடன் சேர்த்து பார்க்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றாலும் ஒருவரை தொந்தரவு செய்து படம் ஒன்று எடுத்துக் கொண்டேன். ஆக்ரா கோட்டை போகும் எண்ணம் எதுவும் இல்லை, முன்னமே இரண்டு முறையோ என்னமோ பார்த்திருக்கிறேன். ஷாஜகான் அங்க படுத்தார் இங்க உருண்டார் எல்லாம் ஏகப்பட்ட தடவை கேட்டாகிவிட்டது, பயணிகள் தொடர்ச்சியாகச் செல்லும் இடங்களுக்குச் செல்ல இப்பொழுதெல்லாம் அலர்ஜியாக உள்ளது. என்ன செய்ய சொல்லுங்கள். ஆனாலும் கொடுமையே கொடுமை என்று இன்னுமொறு முறை என் காமெராவிற்காக சென்று வந்தேன்.
ஆக்ராவில் இருந்து மீண்டும் திலிக்குச் செல்ல தாஜ் எக்ஸ்பிரஸ் பிடித்துக் கொள்ள, டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை கடைசிவரையில் வெயிட்டிங் லிஸ்ட் 350 எல்லாம் ரொம்ப ஓவர் என்று எனக்கே தெரியும். தில்லிக்கு வந்து ஹோட்டலில் படுத்து தூங்கிவிட்டு கிளம்பி பழைய இடங்களைப் பார்த்துவிட்டு வந்தேன். பின்னர் இந்தியா கேட்டுக்கு சென்று வந்து இப்ப தூங்கப் போகிறேன் அதற்கு முன் சும்மா வந்த இன்டர்நெட் பூத்தில் என் காமெரா வொர்க் ஆக சரி பதிவொன்னு எழுதுவோம் என்று உட்கார்ந்துவிட்டேன்.
கடைசியில் இருக்கும் ரோடு ராஜ்பத் என்றழைக்கப்படும் ஜனவரி 26ல் இந்திய ராணுவத்தின் பரேட் நடக்கும் ரோடு. சிங்கிள் ஸ்ட்ரெயிட்டா இந்த ரோடுதான் இந்தியாவிலேயே பெரிசு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
PS1: என் புகைப்படங்கள் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று ரோமிங்கில் இருக்கும் எனக்கு போன் போட்டுச் சொன்ன நண்பருக்கு நன்றிகள்.(உட்கார்ந்து யோசிப்பாங்க்யளோ???)
PS2: பைக்கில் ஜம்மு வரும் நண்பரை இங்கே டெல்லியில் சந்திக்க வேண்டியது, நண்பர் ஜெய்சல்மர் நன்றாகயிருக்கும் அங்கே போகாமல் இருக்காதீர்கள் என்று நண்பர்கள் சொல்லப்போய் அவர் ஜெய்சல்மர் சென்று விட, இப்போதைக்கு ஜம்முவில் சந்திப்பதாக உத்தேசம் நான் Srinagar சென்று விடுவேன் என்றாலும் பார்த்துக் கொண்டாலும் கொள்வோம்.
PS3: பின்னூட்டங்கள் அவ்வளவு சீக்கிரம் வராதாயிருக்கும் நண்பர்கள் பொறுத்தருள்க.
காஷ்மீர் பயணம்
Mohandoss
Monday, December 24, 2007
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
மோஹன்,
ReplyDeleteஏற்கனவே டெல்லில டெண்ட் அடிச்சு இருக்கிங்கனுல நினைத்தேன். இப்போதான் அங்கே போய் சேர்ந்திங்களா? அங்கேலாம் ஓவர் குளிராம், (எதுக்கும் கைல ஒரு முழுப்புட்டி வயதான துறவியை வைத்துக்கொள்வது உசிதம்)
டிஸ்கவரி சேனலில் குளோபல் டிரோட்டர்னு ஒரு புரோக்கிராம் போடுவாங்க ...ஊர் ஊரா சுத்துவான் ஒருத்தன் ..அங்கே அங்கே நடப்பதை அப்படியே டீவில காட்டுவாங்க, இந்தியாவில வரவன் எல்லாம் பானி பூரி, சென்னா தின்னுறதயே காட்டுறாங்க ஏன்யா இப்படி, அதுலவும் கண்டிப்பா ரிக்ஷா சவாரி வரும், என்னமோ இந்தியா முழுக்க ரிக்ஷா மட்டும் ஓடுறாப்போல, அப்புறம் ஒரு சாமியார்னு(எனக்கு பிடித்த நிகழ்ச்சி அது,ஆங்கிலம் அரைகுறை என்றாலும் சும்மாச்சுக்கும் பார்ப்பேன்)!அது போல ... பதிவோட சுற்றுலாவா ..பலே!
1. வந்துவிட்டேன்.
ReplyDelete2. என் திட்டத்தின்
3. பதிவு செய்து வைக்கிறேன்.
4. யோசனை செய்தேன்.
5. புகைப்படம் எடுத்தேன்.
6. என்னை தாஜ் மகாலுடன்
7. எடுத்துக் கொண்டேன்.
8. பார்த்திருக்கிறேன்.
9. என் காமெராவிற்காக சென்று வந்தேன்.
10. ரொம்ப ஓவர் என்று எனக்கே தெரியும்.
11. பார்த்துவிட்டு வந்தேன்.
12. தூங்கப் போகிறேன்
13. எழுதுவோம் என்று உட்கார்ந்துவிட்டேன்.
14. கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒண்ணுமில்லை மோகன். நேற்று சென்னையில் சில பதிவர்களை சந்தித்தபோது 'மோகன் தற்பெருமைவாதி, தன்னைப் பற்றியே எப்பவும் பேசிக்கொண்டிருப்பார்' என்றார்.
‘அப்படியெல்லாம் இல்லையே?' என்றேன்.
நான் சொன்னதை நிரூபிக்கும் விதமாக இந்தப் பதிவில் உங்களைப் பற்றி எத்தனைமுறை சொன்னீர்கள் என்று அந்தப் பதிவருக்கு எடுத்துக் காட்டியிருக்கிறேன். மொத்தமாக 14 முறை. மற்ற பதிவர்களை ஒப்பிடும்போது இது குறைவாகத் தான் இருக்கும் :-)))))
லக்கி நாம் பதிவுகள் தவிர்த்தும் பலருடன் தனிப்பட்ட முறையில் பேசுகிறோம் இல்லையா யார் யாரோ என்னென்னமோ சொல்கிறார்கள் அதையெல்லாம் பொதுவில் சொல்ல முடியும் என்று நினைக்கிறார்கள்.
ReplyDeleteஉதாரணத்திற்கு ரூபாய்க்கு ப்ரயோஜனம் இல்லாத பதிவெழுதுவதில் லக்கிக்கே முதலிடம் என்று என்னிடமும் கூட ஒருவர் சொன்னார். இதையெல்லாம் கண்டுக்க முடியுமா? :-)))))))))))))) உங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்னு போய்க்கிட்டேயிருக்க வேண்டியது தான்.
உங்களை விடவும் ரூபாய்க்கு ப்ரயோஜனம் இல்லாமல் எழுதுபவர்கள் ஏகம் இருக்கத்தானே செய்கிறார்கள்.
வவ்வால் எனக்குமே கூட தொடர்ச்சியாய் படங்கள் எடுத்து பதிவெழுதணும் என்று ஆசை தான். ஆனால் சென்றுகொண்டிருக்கும் இடம் அதற்கான சாத்தியக்கூறுகளை மறுத்தளிக்கிறது என்ன செய்ய சொல்லுங்கள்!
ReplyDeleteமுடிந்தவரை எழுத முயல்கிறேன்.