In இருத்தலியநவீனம் கவிதைகள்

கனசதுரங்களை உடைத்தெறியும் பயணம்

என் எல்லைகளைப் பற்றிய கேள்வி
ஒரு நாளைப் போலில்லாவிட்டாலும்
எல்லா நாட்களிலும் இருக்கிறது
நீள அகலமாய் குட்டை நெட்டையாய்
அவரவர்களுக்கென்று எனக்கான
எல்லை கனசதுரமாய்

சுருங்கத்தான் போகிறதென்றாலும்
நீண்டு கொண்டேயிருக்கும் வெளியின்
சாத்தியக்கூறுகளுடன் எனக்கான
எல்லை ஒளி ஆண்டுகளாய் நீள்கிறது

கனசதுரத்திற்கு வெளியில்
என் நிழலின் நடமாட்டம்
தடுமாற்றங்களுடன் முகத்தில் அறைந்து
கணங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது
 
தவிர்க்கமுடியாததாயும்
ஒப்புக்கொள்ள முடியாததாயும்
நகரும் நாளின் ஒவ்வொரு பக்கத்திலும்
உடைத்தெரியப்பட்ட கனசதுரத்தின்
தெறிக்கும் ஒலியுடனும் சிரிக்கும் ஒளியுடனும்
வெளிகளைக் கடந்து நீளூம் என் பயணத்தின் குறிப்பு
நிரப்பப்படுகிறது
நிரப்பப்படாத பக்கங்களைப்
பற்றிய பயமில்லாமல்

Related Articles

4 comments:

  1. இந்தக் கவிதை நல்லாயில்லை. ஆனால் அது அவ்வளவு முக்கியமானதில்லை.~))

    ஏன் இவ்வ‌ள‌வு க‌ன‌ ச‌துர‌ம்.???

    எல்லைக‌ளைப் ப‌ற்றிய‌ சி.ம‌ணியின் க‌விதையைப் ப‌டித்திருக்கிறீர்க‌ளா.?

    ReplyDelete
  2. ஜ்யோவ்ராம் சுந்தர்,

    உங்கள் எளிமையான விமர்சனத்திற்கு நன்றி.

    என்னைப் பொறுத்தவரை ஒரு டப்பாவிற்குள் என்னை அடைத்த விட முயல்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன். அந்த டப்பா என் வரையில் கனசதுர வடிவில் இருப்பதாகவே படுகிறது.

    கவிதையில் விதிமுறைகளைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை. எத்தனை முறை கனசதுரம் வருகிறது என்று திரும்பிப் பார்த்து தட்டி நிமிர்த்தவில்லை. குட்டையானதாக தட்டி நிறுத்தப்படாததாக கவிதை உங்களுக்கு நிச்சயம் ஒரு பக்கத்தை திறந்து காட்டியிருக்கலாம் தான் :)

    கவிதை நான் ஏன் எழுத ஆரம்பித்தேன் என்று எழுதியிருக்கிறேன் படித்திருக்கிறீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் நான் கவிதைகள் படிப்பதில்லை. அதில் நீங்கள் சொன்னதும் அடக்கம்.

    ReplyDelete
  3. இதுவும் ஒரு கஷ்மீர் பயணக்கட்டுரையாக இருக்கும் என நினைத்து திறந்தால் ... கவிதை என சொல்லப்படும் ஒரு வஸ்துவாக இருக்கிறது.

    உண்மையில் இப்படி தான் இந்த கவிதை வர வேண்டும் என்ற முன்கூட்டிய திட்டமிடல் உங்கள் கவிதையில்(?) தெரிகிறது. ஏன் எனில் தற்செயலாக என் கண்ணில் படும் சிலக்கவிதைகளில்(அவற்றை நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்கிறார்கள், சில சமயம் கட்டணக்கழிப்பறைகளில் கண்டிருக்கிறேன் நவீன கழிப்பறை என்ற அறிவிப்பினை, ஆனால் அதுக்குள்ளே என்ன நவீனம் இருந்தது என்பது எனக்கு புரிவதாயில்லை) வரும் டிரேட் மார்க் வார்த்தைகள் அதிகம் இருக்கிறது. ஒரு வேளை எனக்கு கவிதையை ரசிக்கும் திறன் இல்லாதிருக்கலாம்.

    ஏன் எனில் வழக்கமாக கவிதைகளைப்படிப்பதில்லை( பின்னூட்டத்தில் நீங்களும் அப்படியே சொல்லி இருக்கிறீர்கள், ஆனால் வார்த்தைகள் அப்படி தெரியவில்லை, எனக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று கேட்கக்கூடும் நான் அகஸ்து மஸ்தாக பார்த்ததில் வருவதை வைத்தே சொல்கிறேன்)

    //எல்லை கனசதுரமாய் சுருங்கத்தான் போகிறதென்றாலும்
    நீண்டு கொண்டேயிருக்கும் வெளியின்
    சாத்தியக்கூறுகளுடன் எனக்கான
    எல்லை ஒளி ஆண்டுகளாய் நீள்கிறது//
    நீங்கள் பின்னாளில் வேறு எதற்காகவோ புகழ் பெற்றாலும் கூட கவிதையிலேயே பிக் பேங்க் தியரியை சொன்னவர் என்ற புகழ் ஆரம் கிடைக்கக்கூடும்! :-))
    (சுஜாதாவிற்கு இக்கவிதையை நீங்கள் மெயில் செய்து கேட்டால் ஆழ்வார்கள் அப்போதே பிக் பேங்க் பற்றி பாடி இருக்கிறார்கள் என்று உங்களை நவீன ஆழ்வார் ஆக்கக்கூடும்)

    //சிரிக்கும் ஒளியுடனும்//

    பற்பசை விளம்ப்பரத்தில் மட்டுமே நான் சிரிக்கும் போது வரும் மின்னல் ஒளியைக்கண்டிருக்கிறேன் :-))

    ReplyDelete
  4. I am generic blog reader. I see few of your blogs are protected by password. I sent you an email to get the password. I am not sure whether you read them or not. Can you please let me know if those are protected or forbidden for generic readers?

    ReplyDelete

Popular Posts